நம் நாட்டின் கல்வித் தரம்

நம் நாட்டின் கல்வித் தரம்
ஆங்கிலத்தில் இதைச் சொல்லவேண்டுமென்றால், 'No error in script but in distributing and in-taking" என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.
ஒட்டுமொத்தமாக அனைத்து கல்வி நிறுவனங்களையும், ஆசிரியர்களையும் குறை சொல்லிவிட முடியாது, ஆனாலும் எண்ணிக்கை குறைவாக உள்ளதென்பது உண்மை.
மதிப்பெண் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கில், பல கல்வி நிறுவனங்கள் செயல்படுவதால், FULFILLED மாணவர்களை உருவாக்க முடியாமல் போவது எதார்த்தமாகிவிட்டது.
சமீபத்திய NEET EXAM -ல் நிகழ்ந்த தேர்ச்சி விகிதாச்சாரமே இதற்கு சான்று.
ஒரு மாணவன், தன் சார்ந்த பாடத்திலேயே நிறைக்கல்வி பெற முடியாத பட்சத்தில், மற்ற துறைகளில் எப்படி சிறந்து விளங்குவான்?
கல்வி முறைகளில் மாற்றம் வருவது மட்டுமே இதற்கு தீர்வாகி விடாது.!
கல்வி போதிக்கும் நிறுவனங்கள், மற்றும் ஆசிரியர்கள் தன் பணியை கடமையே என்று மட்டும் செய்யாது, ஆத்மார்த்தமாக செய்தால் தான் பலன் கிட்டும்.
மாணவர்களின் ஒத்துழைப்பு தரம் தாழ்ந்துள்ளது என்பதை எந்த மாணவனும் மறுக்கமுடியாது.
தங்களை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்ற நோக்கில் மாணவர்களும் வகுப்புகளில் செயல்படுவதனால், நன்றாக பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களும் கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார்கள். மாணவர்கள் ஆசிரியர்களையும் பாடத்திட்டங்களையும் குறைக்கூறிவிட்டு, தன் நிலைப்பாட்டிற்கு தான் காரணமில்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.
பிழை எங்கோ இருக்க, நிவர்த்தியை எங்கேயோ போய் தேடிக்கொண்டிருக்கிறோம்.
"We are searching the key in the wrong shelf"
நன்றி.
வை.மகேந்திரன்


Comments

Popular posts from this blog

Need our seminar programme at your college?