அதிகாரம் 33 கொல்லாமை CHAPTER 33 NOT TO SLAUGHTER/KILL 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
அதிகாரம் 33 கொல்லாமை CHAPTER 33 NOT TO SLAUGHTER/KILL 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் விளக்கம்: அறங்களிலேயே முதன்மையான அறம் எது என்றால் உயிர்களை வதை செய்யாதிருத்தல்தான். இவ்வறம் பிற நல்வினைகள் எல்லாவற்றையும் தரும். Explanation in English: The prime Morality is that not to kill any living being. Being so, all goodness would reach them. ------------------------- குறள் 322: பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை விளக்கம்: கிடைத்ததை மற்றோர்க்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வதே சிறந்த அறம் என்று சான்றோர் நூல்களில் குறிப்பிடுகிறார்கள். Explanation in Engl...