திருக்குறள் அதிகாரம் 131. புலவி Chapter 131. THE PLEASANT CLASH. Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V
திருக்குறள் அதிகாரம் 131. புலவி Chapter 131. THE PLEASANT CLASH ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடல் (பிணக்கு) செய்து அவரை தழுவாது இருப்பதால் அவர் படும் அந்த வேதனையை கண்டு ரசிப்பதும் ஒரு இன்பம் தான். - வை.மகேந்திரன் Explanation in English: Enjoying his sadness caused because of being without copulating him even after the pleasant clash is also a kind of pleasance. - MAHENDIRAN V ------------------------ குறள் 1302: உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் - தெய்வப...