அதிகாரம் 48 வலியறிதல் CHAPTER 48 TO KNOW THE STRENGTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 471: வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்யத் துணியும் முன்பு, தனது வலிமை, செயலின் வீரியம், எதிரியின் பலம், தனக்கும் எதிரிக்கும் துணை வருவோரின் வலிமை இவை நான்கையும் ஆராய்ந்த பின்பே துணியவேண்டும். வை. மகேந்திரன் Explanation in English: Before daring to take an action, one should dare to examine his strength, the vigor of the action, the strength of the enemy, and the strength of himself and the adversary's companions...