அதிகாரம் 54 பொச்சாவாமை CHAPTER 54 NON-OBLIVION 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 54 பொச்சாவாமை CHAPTER 54 NON-OBLIVION 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: கடுஞ்சினத்தால் விளையும் கெடுதலை விட களிப்புற இருக்கும்பொழுது ஏற்படும் மறதியே கொடுமையானது. வை.மகேந்திரன் Explanation in English: Evil caused due to forgetting during pleasure is more miserable than the evil caused due to very much anger. MAHENDIRAN V ------------------ குறள் 532: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமையால் தினமும் அறிவு குன்றுவதுப...