திருக்குறள். அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல் CHAPTER 88. KNOWING THE STRENGTH OF ENEMY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள். அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல் CHAPTER 88. KNOWING THE STRENGTH OF ENEMY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: பகையுணர்வு பண்பற்றது. விளையாட்டாக கூட அதை விரும்பும் எண்ணம் வந்து விடக் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: The sense of hatred is immoral. One should not want this thought even playfully. - MAHENDIRAN V ------------------ குறள் 872: வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை - தெய்வப்புலவர் விளக்கம்: வில் கொண்டு போராடும் வீரனிடம் பகைகொள்வதில் தவறில்லை. ஆனால் சொல்ல...