அதிகாரம் 43 அறிவுடைமை CHAPTER 43 POSSESSION OF KNOWLEDGE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
அதிகாரம் 43 அறிவுடைமை CHAPTER 43 POSSESSION OF KNOWLEDGE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவனாலும் அழிக்க முடியாத கோட்டை போன்றது அறிவு. அழிவிலிருந்து காப்பாற்றும் கருவி ஆகும் அறிவு. - வை.மகேந்திரன் Explanation in English: Knowledge is power like a fort. It is a strong weapon to protect from destroyal - Mahendiran V --------------------------- குறள் 422: சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: மனம்போன போக்கில் போக விடாமல், தீய வழியை தகர்த்து நல்வழிக்கு இட்டுச் செல்வதே அறிவு ஆகு...