Posts

Showing posts from October 15, 2017

நம் நாட்டின் கல்வித் தரம்

நம் நாட்டின் கல்வித் தரம் ஆங்கிலத்தில் இதைச் சொல்லவேண்டுமென்றால் , 'No error in script but in distributing and in-taking" என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஒட்டுமொத்தமாக அனைத்து கல்வி நிறுவனங்களையும் , ஆசிரியர்களையும் குறை சொல்லிவிட முடியாது , ஆனாலும் எண்ணிக்கை குறைவாக உள்ளதென்பது உண்மை. மதிப்பெண் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கில் , பல கல்வி நிறுவனங்கள் செயல்படுவதால் , FULFILLED மாணவர்களை உருவாக்க முடியாமல் போவது எதார்த்தமாகிவிட்டது. சமீபத்திய NEET EXAM - ல் நிகழ்ந்த தேர்ச்சி விகிதாச்சாரமே இதற்கு சான்று. ஒரு மாணவன் , தன் சார்ந்த பாடத்திலேயே நிறைக்கல்வி பெற முடியாத பட்சத்தில் , மற்ற துறைகளில் எப்படி சிறந்து விளங்குவான் ? கல்வி முறைகளில் மாற்றம் வருவது மட்டுமே இதற்கு தீர்வாகி விடாது.! கல்வி போதிக்கும் நிறுவனங்கள் , மற்றும் ஆசிரியர்கள் தன் பணியை கடமையே என்று மட்டும் செய்யாது , ஆத்மார்த்தமாக செய்தால் தான் பலன் கிட்டும். மாணவர்களின் ஒத்துழைப்பு தரம் தாழ்ந்துள்ளது என்பதை எந்த மாணவனும் மறுக்கமுடியாது. தங்களை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்ற நோக்கில் மாணவர்களும் வகுப்