திருக்குறள் அதிகாரம் 117. படர்மெலிந் திரங்கல் CHAPTER 117. BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள் அதிகாரம் 117. படர்மெலிந் திரங்கல் CHAPTER 117. BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊற்று நீர் இறைக்க இறைக்க தானே மேலும் ஊறும். அது போல, எம் காதலை மறைக்க மறைக்க தான் அது மிகுதியாகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: As if water is secreted more and more in the well when the water is pulled out often, our love too gets strengthened more and more when it is suppressed strongly. - MAHENDIRAN V ------------------ குறள...