திருக்குறள் "அதிகாரம் 17 அழுக்காறாமை" "CHAPTER 17 NOT TO BEING JEALOUS" (Explanation in Tamil and English is written by Mahendiran.V Northpoigainallur)
அதிகாரம் 17 அழுக்காறாமை CHAPTER 17 NOT TO BEING JEALOUS 📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V Northpoigainallur) ------------------------- குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு தமிழ் விளக்கம்: ஒருவர் ஒழுக்கமான வாழ்க்கைக்காக யார் மீதும் பொறாமை கொள்ளாத குணத்தை வழக்கமாக்கிகொள்ள வேண்டும். Explanation in English: One should make a habitual activity not to having jealousy on any one for his moralitised life. ------------------------- குறள் 162: விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் தமிழ் விளக்கம்: பொறாமை கொள்ளாத குணத்தை காட்டிலும் மிகப்பெரிய சொத்து இவ்வுலகில் எதுவும் இல்லை. Explanation in English: No any other property is as big one as ones' having characteristic not to be jealous on others life. ------------------------- குறள் 163: அறனாக்கம் வேண்ட...