அதிகாரம் 59 ஒற்றாடல் CHAPTER 59 MANAGING SPIES 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 59 ஒற்றாடல் CHAPTER 59 MANAGING SPIES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த அரசனின் ஆளுமைக்கு, ஒற்றர்களை கையாளுதல், நூல்களை பயில்வதனால் பெறும் அறிவு ஆகிய இரண்டும் இரு கண்களை போன்றதாம். வை.மகேந்திரன் Explanation in English: Governing spies' activities, gathering knowledge through books are like two eyes to a king. MAHENDIRAN V ------------------ குறள் 582: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் - தெய்வப்புலவர் விளக்கம்: நாட்டின் அனைத்து இடங்களிலும் ...