திருக்குறள் அதிகாரம் 122. கனவுநிலை உரைத்தல் CHAPTER 122. THE WORDS ABOUT DREAM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள் அதிகாரம் 122. கனவுநிலை உரைத்தல் CHAPTER 122. THE WORDS ABOUT DREAM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிவால் வருந்தி கிடந்த எனக்கு அவரிடமிருந்து தூது வருவது போல் வந்த கனவுக்கு என்ன விருந்து வைத்து நன்றி செய்வேன்? - வை.மகேந்திரன் Explanation in English: Oh! How would I treat back the messanger who brought the pleasant news about my lover to me who was worried out of separation, when I was dreaming? - MAHENDIRAN V ------------------ குறள் 1212: கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் க...