Posts

Showing posts from January 15, 2023

திருக்குறள் - அதிகாரம் 101-லிருந்து 133-வரை (குறள் 1001 - 1330) விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

அதிகாரம் 101. நன்றியில் செல்வம் CHAPTER 101. THE WEALTH IN GRATITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில் - தெய்வப்புலவர் விளக்கம்: பெரும்பொருள் / செல்வம் நிறைய சேர்த்து வைத்து, வாழும்பொழுது அவற்றை அனுபவிக்க மற்றும் ஈகை செய்யத் தெரியாதவனுக்கு, ஈட்டிய செல்வத்தால் அவனுக்கும் பிறர்க்கும்  பயனில்லையாதலால் அவன் இருந்தும் இறந்தவனே. - வை.மகேந்திரன் Explanation in English: One who has earned wealth a lot and failing to enjoy such and also failing to help to others is considered as a dead man though he is alive. - MAHENDIRAN V ---------------