Motivation to work at any job IN TAMIL (MAHENDIRAN.V)
எங்கே போவது, யாரிடம் கேட்பது, வெட்கம் பிடித்து தின்கின்றது. பணம் காசுக்கல்ல...! சம்பாதிக்க ஒரு வேலை வேண்டி...! வேலையின்றி தவிப்போரின் புலம்பல் இது. என்ன வேலையோ யார்வேண்டினும் செய்யலாம் என்ற நிலைப்பாடு வாழ்வியல் கலாச்சாரத்தால் தடைப்படுவதால், வேலையும் இல்லையாம்; வேலை செய்ய ஆளும் இல்லையாம். தனியார்துறை வேலைவாய்ப்பு கட்டுப்பாட்டறையின் ஆய்வறிக்கை இது. சென்னையில் வேலையின்றி சுற்றித்திரிவோர் பத்தாயிரம் பேர் என்றால், பணிக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் சிறு பெரு நிறுவனங்களின் எண்ணிக்கை இருபதினாயிரம். என்ன வேலையோ... செய்யத் தயார் எனும் மனோநிலையில் வெளிநாடு செல்லத் துணியும் இளைஞர்கள் உள் நாட்டில் செய்ய தயங்க காரணம் TO PROTECT SELF RESPECT என்ற பாழாய்ப்போன சுயமரியாதை. உன்னை தெரியாதா... பரமசிவம் கடையில் பண்ணு விற்றவன் தானே நீ..? தில்லையம்பலம் கடையில் டீ ஆற்றினவன் தானே? பெங்களூரில் பெஞ்ச் துடைத்த உனக்கு என்ன கெத்து வேண்டிக்கிடக்கு..? என்ற சம்பாஷனைகளே சுயமரியாதை காக்கவேண்டியுள்ளது என்கிறார்கள் வேலை தேடுவோர். பிரதமரை டீ விற்றவர், கலாம் பேப்பர் போட்டு வயிற்றை கழுவியர் என்று இந்திய சமுதாய...