அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் CHAPTER 70 TO CO-OPERATE TO KING 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் CHAPTER 70 TO CO-OPERATE TO KING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: மக்கள் மன்னரிடம் உள்ள தொடர்பு, விலகாமலும் நெருங்கி போய்விடாமலும் நெருப்பில் குளிர் காய்வது போலிருக்க வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: The relationship between people and the king neither should be close nor being far away. It should be like warming up body infront of fire during cold time. MAHENDIRAN V ------------------ குறள் 692: மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும்...