அதிகாரம் 8 அன்புடைமை CHAPTER 8 LOVELYNESS (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)
அதிகாரம் 8 அன்பு டைமை CHAPTER 8 LOVELYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் விளக்கம்: ஒருவர்மீது வைத்துள்ள அன்பை அடைத்து வைக்க முடியாது. அன்புக்குறியோர் துயரத்தில் இருக்கும்பொழுது கண்ணீர் பெருகி அன்பை வெளிக்காட்டுவர் அல்லவா? Explanation in English: Love put on one can't be blocked. Tears will have shown the loveliness when your beloved person being on suffer. ------------------------ குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு விளக்கம்: அன்புள்ளம் கொண்டோர் தன் உடைமைகளை பிரதிபலன் எதிர்பாராது பிறர்க்கு வழங்குவர். அன்பி...