Motivation to work at any job IN TAMIL (MAHENDIRAN.V)

எங்கே போவது, யாரிடம் கேட்பது, வெட்கம் பிடித்து தின்கின்றது. பணம் காசுக்கல்ல...!
சம்பாதிக்க ஒரு வேலை வேண்டி...!
வேலையின்றி தவிப்போரின் புலம்பல் இது.

என்ன வேலையோ யார்வேண்டினும் செய்யலாம் என்ற நிலைப்பாடு வாழ்வியல் கலாச்சாரத்தால் தடைப்படுவதால், வேலையும் இல்லையாம்; வேலை செய்ய ஆளும் இல்லையாம். தனியார்துறை வேலைவாய்ப்பு கட்டுப்பாட்டறையின் ஆய்வறிக்கை இது.

சென்னையில் வேலையின்றி சுற்றித்திரிவோர் பத்தாயிரம் பேர் என்றால், பணிக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் சிறு பெரு நிறுவனங்களின் எண்ணிக்கை இருபதினாயிரம்.

என்ன வேலையோ... செய்யத் தயார் எனும் மனோநிலையில் வெளிநாடு செல்லத் துணியும் இளைஞர்கள் உள் நாட்டில் செய்ய தயங்க காரணம் TO PROTECT SELF RESPECT என்ற பாழாய்ப்போன சுயமரியாதை.

உன்னை தெரியாதா... பரமசிவம் கடையில் பண்ணு விற்றவன் தானே நீ..?
தில்லையம்பலம் கடையில் டீ ஆற்றினவன் தானே?
பெங்களூரில் பெஞ்ச் துடைத்த உனக்கு என்ன கெத்து வேண்டிக்கிடக்கு..?
என்ற சம்பாஷனைகளே சுயமரியாதை காக்கவேண்டியுள்ளது என்கிறார்கள் வேலை தேடுவோர்.

பிரதமரை டீ விற்றவர், கலாம் பேப்பர் போட்டு வயிற்றை கழுவியர் என்று இந்திய சமுதாயம் தான் தூற்றுகிறது.
வெற்றிபெற்றாலும் தோல்வியுற்றாலும் தூற்றும்.
ஆனால், வெளிநாட்டில் சாக்கடை நோண்டுவதை சிறுமையாக நினைப்பதில்லை இந்த சமூகம்.
இதைத்தான் ஆங்கிலத்தில் NATIVE SELF DIGNITY என்கிறார்கள்.

வளர்ந்த எந்த ஒரு நாட்டிலும் மக்கள் self dignity பார்ப்பதில்லை.

"இங்கிலாந்தில் மக்கள், SELF DIGNITY பார்த்துக்கொண்டு சும்ம உட்கார்ந்துகொண்டிருந்தபொழுது அமெரிக்கர்கள் ஏதோ ஒரு வேலைக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள்" என்ற ஒரு FAMILIAR PHRASE உண்டு.
("While English people were sitting merely in the office, Americans were running for whatever an office")
அமெரிக்கா வெறும் 400 ஆண்டுகளில் அதிவேக முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் அந்த விவேகம் தான்.

இந்த NATIVE SELF DIGNITY பார்ப்பதை ஒட்டுமொத்த சமுதாயமும் தூக்கியெறிந்துவிட்டால், நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இருக்காது..!

மீண்டும் சந்திப்போம்.




Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS