ஒரு கேள்வி. உண்மையிலேயே ஆங்கில மொழியை ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமா?
ஒரு கேள்வி. உண்மையிலேயே ஆங்கில மொழியை ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமா?
கல்வியில் ஆங்கிலம் ஒரு பாடமாக அமையப் பெற்றதன் காரணமே அம்மொழியை பேச எழுத தெரிந்து கொள்வதற்கு தான்.
ஒரு மாணவனை ஒன்றாம் வகுப்பிலிருந்தே பின் தொடரும் ஆங்கிலம் 17 ஆம் வகுப்பிலும் கூட அனைவரையும் முழுமை பெறவைக்க முடியாமல் போவதற்கு மாணவர்கள் மட்டுமே காரணமில்லை.
கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் முறையில் ஏதோ ஒன்று உதைக்கிறது!
ஆங்கிலத்தில் பேசும் எழுதும் ஆற்றலை வளர்ப்பதற்கு, நம் கல்வி திட்டம் பின்பற்றும் முறை மொழியியல் சார்ந்து அமையவில்லை. இலக்கியத்தை மையமாக வைத்தே பாடத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
பரிட்சையை மையமாக வைத்தே அமைக்கப்படுகின்றன.
மனப்பாடம் செய்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து ஆங்கில அறிவு பெற்றுவிட்டதாக சான்றிதழ் வழங்கப்படுவது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது!
Canterbury Tales, Waste land, Wet land, The history of Indo-Germanic and Scandinavian, பற்றி கேள்விகள் கேட்டால் அருவி போல் பதில்களை கொட்டும் மாணவன், தன்னைப் பற்றி சொல் என்று கேட்டால், எழுதி வைத்து மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்கள், ஒரு தலைப்பை கொடுத்து ஒரு ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசு என்றோமானால், இது எனக்கு அஸ்ஸைன்மென்டில் வரவில்லை என்கிறார்கள்.. காரணம்... கல்வி குழுமம், பாடத்திட்ட அமைப்பில் சில கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவதே !
நோக்கத்திற்கு (இலக்கிற்கு) எதிராக போதிக்கும் முறையை கொண்டு செல்வதே ஒரு மாணவன் தானாக பேசும் எழுதும் ஆற்றலில் வெற்றிபெற முடியாமல் போவதற்கு காரணமாகிறது.
நான் வெளிப்படையாக ஒன்றை சொல்வேன்.
ஆங்கிலம் கற்பிக்க சிறந்த ஆசான்கள் உள்ளனர்.
கல்வி குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கிணங்க பாடத்திட்டத்திட்டத்தில் உள்ளவைகளை மட்டும் நடத்தினால் போதும் என்ற நிலைப்பாடே அந்த ஆசான்களால் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போய்விடுகிறது.
மாணவர்கள் தாங்கள் பெற வேண்டியதை இழக்க நேரிடுகிறது!
ஆங்கிலம் ஒரு மொழி, அது கருத்தை பரிமாற பயன்படுத்தப்படும் ஒரு கருவி - என்ற ரீதியில் உளவியல் முறையில் பயிற்சியளித்தால் மட்டுமே ஒரு மாணவனை ஆங்கிலத்தில் பேச எழுத, (தாய்மொழியில் செய்வது போல்) வைக்க முடியும்!
ஒரு பயிற்சியாளர் தானாக pattern களை உருவாக்கி impromptu முறையில் பயிற்சி அளித்தால் நிச்சயம் இது சாத்தியமாகும்.
LISTENING, SPEAKING பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளிக்க வேண்டும்.
ஒரு பயிற்சியாளர் நடைமுறை தலைப்புகளை கையில் எடுத்துக் கொண்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசி, முதலில் மாணவர்களை கவணிக்க வைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவனின் தன் தினசரி நடவடிக்கைகளை ஆங்கிலத்தில் சொல்ல வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பிடித்த தலைப்பைப் பற்றி பேசச் சொல்லலாம்.
அது பிரியாணி, கிரிக்கெட், உங்கள் வீட்டில் யார் யார் உள்ளார்கள் என்ன செய்கிறார்கள்?, உனக்கு பிடித்த சினிமா எது, ஏன்? பிடித்த ஹீரோ ஹீரோயின் யார்?, காலையிலிருந்து இது நேரம் வரை உன் நடவடிக்கைகள் என்ன?- போன்ற தலைப்புகளாக இருக்கலாம்...
அப்பொழுதுதான் நட்புரீதியில் ஆங்கிலத்தில் பேச ஒருவருக்கு ஆர்வம் பிறக்கும்.
இதை நான் என் வகுப்பில் கண்கூடாக காண்கிறேன்.
நன்றி
By
MAHENDIRAN V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU
Comments
Post a Comment
To call for my visiting class, contact poigaimahi@gmai.com or WhatsApp 9842490745
Thanking you.