அதிகாரம் 1, 2, 3 திருக்குறள் (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
CHAPTER 1
PRAISING GOD
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------------
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
சொற்கள், வார்த்தைகள் எழுத்துக்களில் துவங்குவதுபோல் இவ்வுலகிற்கு ஆதியாய் விளங்குவது இறைவன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The world begins by God as if the texts are done by alphabet
- MAHENDIRAN V
------------------------
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
கடவுளின் பொற்பாதங்களை வணங்காதோர் எவ்வளவுதான் கற்றறிந்து அறிஞராயிருந்தாலும் அவர்கள் மதிப்பற்றவர்கள்
- வை.மகேந்திரன்

Explanation in English:
However you are literate in all respects, it's invalid if you dont worship the feet of God.
- MAHENDIRAN V
------------------------
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
இதயத்தில் மலராய் இறைவன் இருக்கிறான் என்றெண்ணி வாழ்வோரின் வாழ்க்கை ஈடில்லா இன்பத்தை பெறும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One will have been pleasant infinitely if he thinks that God places in his flowered heart.
- MAHENDIRAN V
------------------------
குறள் 4:
வேண்டுதல்வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
அனைவருக்கும் பொதுவுடையவனான இறைவனையே நினைத்திருப்போருக்கு துன்பம் விலகிச்செல்லும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Sadness will fly away if one merges him with God who is common for all.
- MAHENDIRAN V
------------------------
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
- தெய்வப்புலவர்
விளக்கவுரை:
இறைவனின் உண்மையான புகழை நம்புவோர் அனைத்து பாவங்களிலிருந்தும் விலகி நிற்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the true fame of God is  believed by one, he will be away from all of his sins.
- MAHENDIRAN V
------------------------
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
- தெய்வப்புலவர்
விளக்கவுரை:
ஐம்புலன்களையும் அடக்கியாளும் வித்தை கற்றவன் குறைவின்றி நீண்ட நாட்கள் வாழ்வான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who can control Evil desires raised from five objects of sense will have been alive for long time.
- MAHENDIRAN V
------------------------
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
கடவுளுக்கு இணை ஏதுமில்லை என்று நினைத்தாலொழிய துன்பத்தை தவிர்ப்பது அரிதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Unless one deserves that no parellal to God, hardly to give up sadness.
- MAHENDIRAN V
------------------------
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
- தெய்வப்புலவர்
விளக்கவுரை:
கருணையின் கடலான இறைவனின் பாதத்தை வணங்கினாலொழிய துன்பம் எனும் கடலை கடக்க முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Hardly to cross the sea of sadness unless praying the feet of sea of graces of God
- MAHENDIRAN V
------------------------
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
இறைநம்பிக்கையில்லை என்பது ஒருவனின் தலையில் அதன் இராஜ உறுப்புகள் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One doesn't worship God means that his head doesn't have its organs.
- MAHENDIRAN V
------------------------
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
கடவுளை நம்புவோர் மட்டுமே வாழ்க்கையெனும் பிறவி கடலை மகிழ்வுடன் கடந்து செல்வர். நம்பாதவர்களால் அப்படி செய்ய முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the ones who fear to God would cross the sea of entire life pleasantly, others can't do so.
- MAHENDIRAN V

------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,

👇👇👇👇👇👇

அதிகாரம் 2.
வான்சிறப்பு
CHAPTER 2.
FEATURES OF THE SKY/ RAIN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------

அதிகாரம் 2.
வான்சிறப்பு
CHAPTER 2.
FEATURES OF THE SKY/ RAIN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விண்ணிலிருந்து தோன்றிய இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களும் வாழும் வண்ணம், அவ்விண்ணே தரும் மழையே முதல் அமிர்தம் ஆகிறது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The rain that is offered by the sky for all living beings in the earth that too was offered by the sky is the first nectar.
MAHENDIRAN V
------------------------
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழையினால் தான் குடிநீர் கிடைக்கிறது என்பது ஒரு புறம். உணவளிக்கும் அனைத்து தாவரவகைகள் வளர்வதற்கு மழை தான் காரணம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Besides rain is being a main source of drinking water, that is the base for growing all plants for food.
- MAHENDIRAN V
------------------------
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பசிதீர்க்க கடல் நீரை பருக முடியுமா? நேரத்திற்கு மழை பொழியவில்லையென்றால் அனைத்து ஜீவராசிகளும் பசியால் துவளும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no rain timely, all living beings shall get hunger vastly since the sea water can't be used for drinking .
- MAHENDIRAN V
------------------------
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழை இப்புவிக்கு இடைவிடாது பொழியும் தன் பணியை செய்ய தவறுங்கால், புவியில் உழவும் தன் பணியை செய்ய தானே நிறுத்திக் கொள்ளும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If  rain stops its routine work to the earth, ploughing too would stop its work in the earth.
- MAHENDIRAN V
------------------------
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடுமையாய் பொழிந்து புவியை மிரள வைப்பதும் மழைதான், பொழியா நிலை காட்டி புவியை வறண்டுபோக வைப்பதும்  மழை தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is the rain which threatens the earth by its over rain. It is also the rain which makes the earth drought by its no rain.
- MAHENDIRAN V
------------------------
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழையென்று ஒன்று இல்லையென்றால் இப்புவியில் புற்களை கூட பார்க்கமுடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If it doesn't rain, even a bit of grass too can't be seen on the earth.
- MAHENDIRAN V
------------------------
குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மேகங்கள் மூலம் கடலிலிருந்து நீரை எடுத்து மழை பொழிந்தாலும், மழை பெய்யாவிட்டால் கடலும் வறண்டுபோகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The oceans too would get dried out if there is no rain fall even though rain gets water from oceans through clouds.
- MAHENDIRAN V
------------------------
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழையில்லையேல், பூஜை புனஸ்காரம் தியானம் போன்ற இறைச்செயல்கள் எதையும் செய்ய இயலாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If rain fails to fall, none can perform even pooja, meditation and other spiritual services.
- MAHENDIRAN V
------------------------
குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழைபொழிவு இல்லையானால் தானம் தர்மம் அறநெறி செய்பாடுகளை கூட செய்ய இயலாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the sky doesn't offer rain, no moralities can be done by human to others, and virtual practices too shall be off.
- MAHENDIRAN V
------------------------
குறள் 20:
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழைபொழிவு தடைபட்டால் வாழ்வியல் முறைகளில் உள்ள ஒழுக்கம் கெட்டு எதுவும் இல்லா நிலை ஏற்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The world means nothing, and disciplines of people shall be vanished  if there is no water source that rain offers.
- MAHENDIRAN V


------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

அதிகாரம் 3
நீத்தார் பெருமை
CHAPTER 3
PRIDE OF GENUINE PEOPLE (
THE GREATNESS OF ASCETICS)


📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு நூலின் துணிவு மற்றும் பிரதான பணி என்னவெனில், ஆசைகள் துறந்து, ஒழுக்கநெறிமுறைகளுடன் வாழும், வாழ்ந்த மக்களை போற்றி கூறுவதே!
- வை. மகேந்திரன்

Explanation in English:
Bravery of a book is to say the prides of legends who carry all disciplines and their status of giving up all desires!
- MAHENDIRAN V
------------------------
குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தியாகம் செய்து வாழ்ந்த முனிவர்களின் பெருமைகளை கூறுவதென்பத எல்லையற்றது. இறந்துபோனவர்களை ஒருவர் விடாமல் எண்ணுவதுபோல.
- வை. மகேந்திரன்

Explanation in English:
To explain the prides of sacrifices of sages is like counting persons who had died so far.
- MAHENDIRAN V
------------------------
குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லற வாழ்க்கையின் இன்பம் துன்பம் இரண்டையும் அறிந்து ஆராய்ந்து ஈண்டுணர்ந்து அறவாழ்க்கை மேற்கொண்டவர்கள் பெருமைக்குரியவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who know and explore both the pleasures and sufferings of home life and are pious are the ones who are proud.
- MAHENDIRAN V

------------------------
குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஐம்புலங்களையும் அடக்கியாள உறுதி என்கிற அங்குசத்தை மனதில் கொள்பவனே நன்மைகளுக்கான வித்தாவான்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Ones who control five objects of senses by having ankush in their mind are seeds of goodness.
MAHENDIRAN V
------------------------
கு
றள் 25:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
- தெய்வப்புலவர்

விளக்கம்:

ஐந்து புலன்களையும் அடக்கி ஆளும் ஒருவன், இவ்விஷயத்தில் முன்பு பாடம் பெற்று சான்றாக நின்று வானத்தில் வாழும் இந்திரனின் நிலையோடு ஒப்பிட்டு வாழ்பவன் ஆவான்.

- வை. மகேந்திரன்

Explanation in English:
One who controls five objects of senses is the one who lives by comparing with the state of Indiran who lives in the sky who was lessoned earlier in this regard.

- MAHENDIRAN V

------------------------
குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சவால் நிறைந்த நற்செயல்களை செய்வோரே பெரியோர் ஆவார்கள்.மற்றோர் சிறியோர்களே.
வை. மகேந்திரன்

Explanation in English:
Ones who can do challenges are known as highly persons others are lowest ever.
MAHENDIRAN V
------------------------
குறள் 27:
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் - ஆகிய ஐந்தையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்டவனை உலகம் மெச்சும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
One who is intellectual to distinguish five senses such as taste light touch sound and smell is praised by the world.
MAHENDIRAN V
------------------------
குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவரின் தரம் எப்படி என்பதை அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்தே அளவிட்டு விலாம்.
- வை. மகேந்திரன்

Explanation in English:
The Quality of persons can be identified based on their words addressed by them always.
- MAHENDIRAN V
------------------------
குறள் 29:
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மிக உயரிய குணம் நிறைந்த மாமனிதர்கள் ஒரு கணம் வெகுண்டால் அதை காப்பது என்பது அரிதாகும். (வெகுளா மாநிடர் வெகுண்டால் அதை காத்தல் அரிது என்று பொருள்படுகிறது)
- வை. மகேந்திரன்

Explanation in English:
It's hardly to abate the anger of ones who are extremely having good characters if they get angered. (It's meant if ones who basically don't anger are getting anger, it's hardly to tackle such..?)
- MAHENDIRAN V

------------------------
குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்

- தெய்வப்புலவர்


விளக்கம்:
உண்மையான அந்தனன் யார் என்றால், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி அறநெறி தவறாமல் வாழ்பவனே.
- வை. மகேந்திரன்

Explanation in English:
One who shows kindness benevolence to all living beings and performs genuinely in all respects is known as pure brahmin.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS