Skip to main content

திருக்குறள். அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 107.
இரவச்சம்
CHAPTER 107.
FEAR TO SEEK HELP (FEAR TO BEG)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1061:
கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒளிவு மறைவு இல்லாத நல்லுள்ளம் படைத்தோர் ஈகை செய்ய காத்திருந்தாலும், பொருள் வேண்டி அவரிடத்தில் போய் கேட்காத நிலை கோடி நன்மையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one who is transparent and good hearted is ready to help, if one doesn't ask for money despite being poverty, that state is crore times better.
- MAHENDIRAN V
------------------
குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இரந்து மட்டும் தான் ஒருவர் உயிர் வாழமுடியும் என்றொருச் சூழல் இருக்குமானால், இவ்வுலகை படைத்தவன் இரப்பவர் படும் வேதனையை விட அதிகம் வேதனைப்பட்டு கெட்டொழியட்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is situation that one can survive in this world only by the way of begging, May the lord who created this world suffer multi times more than the suffering of help seekers.
- MAHENDIRAN V
------------------
குறள் 1063:
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழைப்பதற்கு பதிலாக இரந்துண்டு வாழ்வதே மேல் என்று நினைத்து வாழும் வாழ்க்கையை காட்டிலும் கொடுமையானது யாதொன்றும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one thinks that he can manage his life only by seeking help from others instead of earning by working hard, there is no any other misery as it is.
- MAHENDIRAN V
------------------
குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையில் உழன்றாலும் பிறரிடம் உதவி கேளா மான்பைப் போல் இவ்வுலகத்தில் வேறெதும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if being atmost poverty, the state of not asking help to others is the biggest honour in this world. No any other pride can be equallent to this.
- MAHENDIRAN V
------------------
குறள் 1065:
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழைப்பில் கிட்டும் நீர் நிறைந்த கஞ்சியை பருகும் பொழுது கிடைக்கும் இன்பத்திற்கு இணையென்று கூற எதுவுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no pleasant from anything else than eating watery kanji that is obtained by own earning.
- MAHENDIRAN V
------------------
குறள் 1066:
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் பசுவிற்கு தண்ணீர் வேண்டும் என்று மற்றவரிடம் கேட்பது கூட கேட்பவரின் நாவிற்கு இழிவானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if asking to others even water for one's cow too is  degraceful to the tongue of one who asks.
- MAHENDIRAN V
------------------
குறள் 1067:
இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருள் வைத்திருந்து அதை மறைத்து, கொடுக்க மறுப்போரிடம் பொருள் வேண்டி நிற்றல் கூடவே கூடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One must not stand for help infront of one who denies to aid despite having a lot but suppressing it.
- MAHENDIRAN V
------------------
குறள் 1068:
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருள் இருந்து அதை தந்து உதவ மறுப்போரின் இரும்பு பாறையில் இல்லாதோரின் மரத்தோணி மோதினால் நொறுங்கித்தான் போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a wooden boat of state of poverty dashes on the iron rock of cunning wealthier, the wooden boat of povertier would be smashed.
- MAHENDIRAN V
------------------
குறள் 1069:
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இரப்பவரின் நிலையை கண்டு உள்ளம் தான் உருகும். பொருள் இருந்து ஈகை செய்ய மறுப்போரை நினைத்தால் உருக உள்ளமே இல்லாமல் போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If we see the state of poverty of one, our heart would melt but if we just think about one who denies to help though having a lot but suppress it, we can't find  heart to melt.
- MAHENDIRAN V
------------------
குறள் 1070:
கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருள் கேட்டு, இல்லை என்று பிறர் சொன்னால் இரப்போருக்கு உயிரே போகிறது ஆனால் இல்லை என்று சொல்பவருக்கு போவதற்கு உயிர் இல்லையோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Help seekers are feeling that they have lost their lives when they heard the word of denying. But those who deny to help do not have live to lose it, do they?
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்க...