திருக்குறள். அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 108. கயமை
CHAPTER 108. TURPITUDE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உள்ளத்தில் கயமை தனமும் உருவத்தில் இனிமையாகவும் தோன்றும் தன்மையை மனித இனத்தில் தவிர வேறு உயிரினத்தில் காணமுடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One cannot see this status at any living beings as it is seen in human habits that is the turpitude trait inside but sweety behaviour out side.
- MAHENDIRAN V
------------------
குறள் 1072:
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லவர் நன்மை தீமையை ஆராய்ந்து வாழ்வதாலும், கயவரோ எது பற்றியும் (நீதி நேர்மை) கவலைப்படாது வாழ்வதாலும் கயவர்கள் செல்வந்தர்களாக காணப்படுகிறார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituder looks always wealthy because they do not bother about justice at any situation whereas good people are afraid of justice.
- MAHENDIRAN V
------------------
குறள் 1073:
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கயவரும் தேவரும் ஒரு விதத்தில் ஒன்றே. காரணம், கயவர்கள் யாதொரு  கட்டுப்பாடுமின்றி வாழ்வதால் விரும்பியவற்றுடன்  தேவர்களை போல் வாழும் நிலை ஏற்படுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
At an angle, turpituders can be compared to the gods since they can live with all their needs because of running an unconditional life.
- MAHENDIRAN V
------------------
குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பண்பாடு கருதி அடங்கி வாழும் மக்களை கண்டால், கயவர் எது பற்றியும் கவலைப்படாததால், தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற இருமாப்புக் கொள்வர் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders get arrogance and dominance as they don't bother about anything when they look at people who live with justice because of fear to society.
- MAHENDIRAN V
------------------
குறள் 1075:
அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அச்சம் என்றொன்று கயவரிடம் இருந்தால் ஒழுக்கம் இருந்திருக்கும். இச்சை கொள்ளும் பொருள் கிடைக்கும்வரை ஒழுக்கம் நிறைந்தவர் போல் காட்டி கொள்வர் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If turpituders had fear to God, they would be disciplined in life. They would pretend like disciplined persons till they obtain things which they desire.
- MAHENDIRAN V
------------------
குறள் 1076:
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கேட்டறிந்த செய்திகளை ரகசியம் காக்கத் தெரியாத கயவர்கள் உடனே பிறர்க்கு தெரிவிப்பதால் பறை என்ற வாத்தியத்திற்கு ஒப்பானவர்கள் ஆவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders are equallent to the Indian traditional instrument that is used for announcement since they suddenly reveal the matter whatever they hear.
- MAHENDIRAN V
------------------
குறள் 1077:
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஓங்கும் கையில்லாத எளியோருக்கு (முரடரல்லாதவர்க்கு) எச்சில் கையால் கூட ஈகை செய்யமாட்டார்கள் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders wouldn't ready to helping even with their eating hand to weakers who aren't rude in living style and who don't do arrogant activities.
- MAHENDIRAN V
------------------
குறள் 1078:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சான்றோர் எளியோருக்கு எளிதில் உதவுவர் ஆனால் கரும்பை பிழிவது போல் பிரயத்தனம் செய்தால் மட்டுமே கயவரிடமிருந்து உதவி பெறமுடியும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Well Literates would frequently help to ones who are weak in finance but it would be hard as if twisting sugarcane to get the help from turpituders.
- MAHENDIRAN V
------------------
குறள் 1079:
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறர் உடுத்துவதிலும் உண்பதிலும் பொறாமை கொண்டு குற்றம் கண்டு செய்தியாக்குவார்கள் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders would be jealous and make blame when they look at ones who are eating good and dressing rich.
- MAHENDIRAN V
------------------
குறள் 1080:
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தமக்கு துன்பம் என்று ஒன்று வந்து விட்டால், தன்னையே விரைந்து விற்பதற்கும் தயங்க மாட்டார்கள் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders would not hesitate to sell even themselves if they get any big misery in life.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS