திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 118.
கண் விதுப்பழிதல்
CHAPTER 118.
EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1171:
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again?
- MAHENDIRAN V
------------------
குறள் 1172:
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பம் வரும் என அறியாது இன்பத்துடன் காதலில் வீழ்ந்த இந்த கண்கள் தன்னால் தான் இத்தனை துயரம் என்பதை உணராது துன்பம் கொள்வது நியாமாகுமா?
- வை.மகேந்திரன்

Explanation in English:
The eyes that fell down in love without knowing that miseries would be caused due to the love is worried out of those miseries, how is it justicious?
- MAHENDIRAN V
------------------
குறள் 1173:
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முன்னேச் சென்று முதல் ஆளாய் நோக்கி காதல் செய்த இந்த கண்கள் அதே காதலை நினைத்து அழுவது நகைப்பிற்குரியது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
What the eyes which had forwarded fast as the first person and fell down in love are crying due to the same love is laughable one.
- MAHENDIRAN V
------------------
குறள் 1174:
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதல் என்ற பெயரில்  துயரம் தந்த என் கண்கள், என்னை தம்பிக்கவும் விடாமல் கண்ணீர் வற்றிப் போய்  தானும் அழ முடியாமல் தவிக்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The eyes that had gifted me  sadness a lot namely love is not providing me a way to escape and they are also unable to cry due to scarcity of tears.
- MAHENDIRAN V
------------------
குறள் 1175:
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடலினும் பெரிதாம் காதல் எனக் கூறி துன்பத்தை வாங்கிய கண்கள் இன்று உறங்க முடியாமல்  வருந்துகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The eyes which got wantonly the misery by thinking that the love is greater than the ocean is saddening today due to not able to sleep.
- MAHENDIRAN V
------------------
குறள் 1176:
ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு வகையில் இனிதாய் நான் உணர்கிறேன் ஏனெனில், எனை இக்காதல்-துன்பத்தில் விழவைத்து  துவளவைத்த என் கண்களும் துன்பப்பட்டு வருந்துகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Anyway I feel a bit happy because the eyes which made me to fall in this love misery for suffering a lot is also meeting out a big misery and crying.
- MAHENDIRAN V
------------------
குறள் 1177:
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்று விரும்பி விரும்பி காதலித்து இன்புற்ற கண்களே இன்று அவரை பிரிந்து பிரிந்து பேதலித்து உன் கண்ணீர் வற்றி போகட்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my eyes who was willingly loving deeply for being pleasant on that day, May you sink in the sadness by crying atmost till the tears dries out today!
- MAHENDIRAN V
------------------
குறள் 1178:
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உவந்து முகர்ந்து விரும்பாமல் வெறுமனே என்னை காதலித்த அவரை பிரிந்து என் கண்கள் நிலை கொள்ளாமல் உளதே ஏன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Why do my eyes unnecessarily not in stable for this separation of love while my man had just merely loved me without showing any soulful benevolence in the past?
- MAHENDIRAN V
------------------
குறள் 1179:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வாரா சமயத்தில் எப்பொழுது வருவாரோ என கண்கள் தூங்காமல் காத்திருந்தன. வந்தவர் பிரித்து விடக்கூடாதே என கண்கள் விழித்திருக்கின்றன. இது தான் துன்பத்தில் ஒரு இன்பமோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
My eyes got stabled in the entrance to looking for his arrival without even a drop of sleep when he didn't visit often then days. Now the same eyes aren't sleeping due to a kind of fear that he should not leave from me. Is it the pleasance caused by the misery?
- MAHENDIRAN V
------------------
குறள் 1180:
மறைபெறல் ஊராக் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பறை ஒலியால் ஊர் விழிப்பதுபோல் என் கண்கள் அழுவதால் அவ்வொலி கேட்டு ஊரார் விழித்து எம் காதலை எளிதில் அறிந்து கொள்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The people are easily noticing the depth of my love due to my loud cry as if people are waking up owing to hearing the traditional drums sound.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS