திருக்குறள் அதிகாரம் 126. நிறையழிதல் CHAPTER 126. INABILITY OF KEEPING RESTRAINT ---------------- Thirukkural. Explanation in Tamil and English - written by V. MAHENDIRAN M.A., M.A., ELT.,

திருக்குறள்
அதிகாரம் 126.
நிறையழிதல்
CHAPTER 126.
INABILITY OF KEEPING RESTRAINT
----------------
Thirukkural. Explanation in Tamil and English - 

written by V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1251:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிறை எனும் கதவு வெட்கம் எனும் தாழ்ப்பாளால் பூட்டப்பட்டிருந்தாலும் காமம் எனும் கோடரி அதை உடைத்தெறிந்துவிடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even though there is a big door namely shy to protect feminine, the axe namely lust would crack it easily.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1252:
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காமம் என்கிற தன்மைக்கு கண்களெல்லாம் இல்லையாதலால்தான் நடுஜாமத்திலும் என் நெஞ்சத்தை அலைபாயவைக்கிறது.
வை.மகேந்திரன்

Explanation in English:
There is no eyes to lust at any cost. That's why the mind flies here and there unbalanced at even midnight.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1253:
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குறிப்பில்லாமல் வரும் தும்மலை எப்படி அடக்க முடியாதோ அது போல் தான் காதலும். மறைக்க முயன்றாலும் என்னையும் அறியாமல் வெளிப்படுத்தி விடுகிறேன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
As it is impossible to stop sneezing that is felt without indication, love too can't be suppressed even if I try to suppress it.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1254:
நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ரகசியம் காப்பதில் கைதேர்ந்தவள் நான் என்று தான் இது நாள் வரை எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது காதல் நோயை பிறரிடம் மறைக்க தெரியாத மக்கு நான் என்று !
வை.மகேந்திரன்

Explanation in English:
I have been proud so far that I am strong to protect secrets. Only now I am realising that I am an utter fool since I couldn't suppress my love disease to others.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1255:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்த காதலனின் பின்தொடரா சூழலால் வரும் துயரத்தை தாங்கி நிற்கும் பெருந்தன்மையை காதல் நோய்  பீடித்தவரே நன்கு அறிவர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only the ones who have love disease would feel the real pain of the parted love and the status of being alone.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1256:
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்து சென்றவரை வெறுக்காது அவரை பின்தொடர்ந்து அவருடனே செல்ல வேண்டும் என்று துடிக்க வைக்கும் இந்த காதல் நோய் உண்மையிலேயே கொடுமையானது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The state of mind thinking that to shamelessly follow the lover who parted without caring me is delivering the message that the love disease is crucial one.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1257:
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலின் தாக்கத்தால் அவர் செய்த அன்புச் செயல்களை அதே காதல் தாக்கத்தால் தான் நான் வெட்கப்படாமல் அவற்றை ஏற்றுக்கொண்டேன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
I accepted the all of his loving acts done by him due to the passion of love on me because of the same love affection on him.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1258:
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பண்பிற்குரிய பெண்மையை உடைக்கும் வல்லமை காதலரின் கசிந்துருக்கும் கள்ள வார்த்தைகளுக்கு உண்டு என்பதை அறிந்தேன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
I realised now that only the lusting words pronounced by him cracked the feminine of me protected by me so far days.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1259:
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடல் கொண்டு விலகலாம் என்று வெளி மனம் நினைத்தாலும், உள் மனம் அவரை ஆரத்தழுவி அன்பு காட்டவேண்டும் என்று உள் மனம் உந்துகிறது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if my outer thoughts desires to quarrel with him, my inner thoughts is infinitely eager to have tight hug with him.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1260:
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தீயில் இட்ட கொழுப்பு உருகுவது போல் நிலை காமத்தில் ஈருடலுக்கும்  இருக்கும்பொழுது, இணைந்து களித்து இன்பம் பெற்றபின் ஊடலுக்கு இடம் ஏது?
வை.மகேந்திரன்

Explanation in English:
While the two souls are melting at the time of lusting like meat is burnt on fire, is it meaningful quarrelling with each other after the end of lust?
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS