தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல் Chapter 127. YEARNING OF HER FOR HIS ARRIVAL ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.

அதிகாரம் 127.
அவர்வயின் விதும்பல்
Chapter 127.
YEARNING OF HER FOR HIS ARRIVAL
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவர் வருவார் என வழிமேல் விழிவைத்து கண்களும் ஒளி இழந்ததோடு அவர் வரும் நாளை சுவற்றில் குறித்து குறித்து விரல்களும் தேய்ந்தன.
வை.மகேந்திரன்

Explanation in English:
Not only my eyes have lost their light because of putting them on the way of his arrival, but also my fingers have worn-out due to marking the days of his arrival on the wall.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1262:
இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரை மறவாது இருந்து துயரம் கொள்ளும் நான் அவரை மறந்து துறந்தால், அணிகலன்கள் அதுவாய் கழன்று விழும் அளவிற்கு என் தோள்கள் இளைத்து போகுமடி என் தோழி.
வை.மகேந்திரன்

Explanation in English:
If I, who is worried out due to being unforgetting him, forget him, my arms will become so leaned as if my bangles would fall out easily.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1263:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கம் அது துணையாக வெற்றி வேண்டி வெளிச்சென்ற என் அவர் திரும்பவும் எனை பார்க்க வருவார் என்றெண்ணியே உயிர்வாழ்கிறேன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Of course still I am alive only because my man who has gone out to get victory with his own energy as an assistance will come back surely to meet me.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1264:
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலும் களிப்புமாய் என்னுடன் இருந்து பிரிந்தவர் வருகிறார் என்பதறிந்ததும் என் மனம் மர உச்சி ஏறிச் சென்று அவரை காண விழைகிறது.
வை.மகேந்திரன்

Explanation in English:
My heart climbs up and sits on the branch of a tree and looking for his arrival as soon as I come to know that he who was being with me love and affection in the past days is coming to meet me.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1265:
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் அவர் வந்ததும் கண் நிறைய காண்பேன் நான் அவரை. கண்டதும் என் தோள்கள் பசலைப்பிணி நீங்கி குணம் பெறும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
As soon as he arrives I will see him full of my eyes. Then, the PASALAI disease that I have due to parted of love will go away.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1266:
வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் அவர் வருவார் ஒரு நாள் எனை அணைக்க. அணைத்ததும் தீருமாம் என் அனைத்து துன்பங்களும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One day my man will come and hug me. After that, all of miseries tending so far will fly away.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1267:
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் கண்மணியான காதலர் என்னிடம் வந்தால், விட்டு சென்றதால் அவருடன் சண்டை செய்வேனா, பிரிந்த ஏக்கத்தில் அவரை கட்டித் தழுவுவேனா அல்லது இரண்டையும் செய்வேனா என்ன செய்வேன் என்று தெரியவில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Surely I am not aware of what I am going to do as soon as the arrival of my man who is equallent to my eyes. Whether I would quarrel with him or hug him affectionately or doing both.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1268:
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வேந்தன் அவன் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி பெறட்டும். அன்று இரவு பிரிந்தவர் வந்து மனையுடன் கலந்து உறவாடி விருந்துணணட்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
May the king win in the battle with full of his efforts! Later, May the couple who have met after a long parted hug with each other as a feast in the night!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1269:
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்தவர் வருவார் என்றெண்ணி வருந்தும் மனையாளுக்கு ஒரு நாள் கழிவது ஏழு நாள் கழிவது போன்ற உணர்வை தரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The parted spouse would feel as passing one day is like passing seven days when she counts the days of the arrival of her man.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1270:
பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலரை பிரிந்ததன் துயரத்தால் மனம் உடைந்து மதி போய் விட்டால், அவன் திரும்பி வந்து தான் என்ன பயன்? கூடி ஊடி இருந்து தான் ஏது பயன்?
வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing is gain of his arrival and hugging her if she becomes mad since she has lost her mind because of parted of love.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS