தெய்வப்புலவரின் திருக்குறள் அதிகாரம் 128 . குறிப்பறிவுறுத்தல் CHAPTER 128. INDICATION OF SIGNS (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

தெய்வப்புலவரின் திருக்குறள்
அதிகாரம் 128 .
குறிப்பறிவுறுத்தல்
CHAPTER 128.
INDICATION OF SIGNS
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிவை விரும்பவில்லை என்பதை சொல்ல மறைக்க உன் மனம் முயன்றாலும் உன்விழிகள் அழகாய் சொல்லிவிடும் அதனை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if you try to suppress your unwilling the parting, your eyes would emit that beautifully.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1272:
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் அழகு நிறை கண்களும் மூங்கில் போன்ற தோள்களும் உடையவள். ஆதலால் அவளுக்கு பெண்ணியத்தின் பண்பு நிறைவாய் உண்டு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She has the most beautiful eyes, and arms like bamboo branches. So, she has the infinite femininity.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1273:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மணிமாலையில் வெளிப்படும் நூலைப் போல அவளின் அழகினுள் உள்ள அற்புதம் ஒரு குறிப்பாக  வெளிப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The marvelness would be overflowing from her beauty as if the thread comes out from the garland of pearls.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1274:
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளின் புண்ணகை அறிவிக்கும் குறிப்பு, அரும்பு தோன்றும் பொழுது வெளிப்படும் நறுமனத்திற்கு ஒப்பானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her beautiful smile is revealing as a signal as if an infant flower emits its fragrance.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1275:
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிங்காரமாய் இருக்கும் என் அழகுப்பதுமையின் அந்த கள்ளப் பார்வை என் மீளாத் துயரத்தையும் போக்கவல்ல மருந்தாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her fantastic sight delivered from the edge of her eyes will surely cure the disease of parting as the best medicine.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1276:
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்து கூடியதால் அவர் என்னை அணைக்க விரும்புவது இன்பம் தந்தாலும் அது மீண்டும் அன்பிலா தன்மையுடன் அவர் என்னைப் பிரியப்போகிறார் என்பதற்கான அறிகுறியாகவே தெரிகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Though His beloved hugging causes a pleased chears a lot, it signs mildly that he is to be parted by letting me be alone.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1277:
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குளிர் நீரைப் போன்ற என் காதலர் உடலால் என்னை பிணைந்திருந்தாலும் உள்ளளவில் என்னை பிரியப்போகிறார் என்பதை கழன்று விழும் என் வளையல்கள் சொல்கின்றன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although my cool man is spinning me with love a lot, my bangles that are to come out are signifying that he is to be parted shortly.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1278:
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவர் என்னை பிரிந்தது நேற்று தான் என்றாலும், அது பல நாட்களுக்கு சமமானது என்று என் மேனியின் பசலை நிறம் சொல்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Though it is true that my man has left me last day, the PASALAI issue that shows on full of my skin says that it is long days.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1279:
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலரை பிரிவதால் மனம் வாடிப்போய் அவள் கழன்று விழப்போகும் தன் வளையல்களையும் பார்க்கிறாள். மெலியப் போகும் தன் தோள்களையும் பார்க்கிறாள். இவற்றை தவிர்க்க அவரைப்பின்தொடர்ந்தால் என்ன என்பது போல் தன் பாதங்களையும் பார்க்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
What a beautiful sense it is! Because her man is to be parted, with worries a lot, She looks at her bangles that are to come out from her hands. She looks at her arms that become leaned. To avoid these, she looks at her feet that why she doesn't follow the way that her man walks out.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1280:
பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிவால் ஏற்படும் துயரம் தாங்கிக் கொள்ள முடியாதது என்பதை கண்களாலேயே  அவள் தெரிவிக்கும் அந்த தன்மையே  பெண்மையின் தலையாய இலக்கணமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her significance showed through her eyes that the parting of love is misery one is the prime status of the femininity.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS