ஒரு கேள்வி. உண்மையிலேயே ஆங்கில மொழியை ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமா?
ஒரு கேள்வி. உண்மையிலேயே ஆங்கில மொழியை ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமா? கல்வியில் ஆங்கிலம் ஒரு பாடமாக அமையப் பெற்றதன் காரணமே அம்மொழியை பேச எழுத தெரிந்து கொள்வதற்கு தான். ஒரு மாணவனை ஒன்றாம் வகுப்பிலிருந்தே பின் தொடரும் ஆங்கிலம் 17 ஆம் வகுப்பிலும் கூட அனைவரையும் முழுமை பெறவைக்க முடியாமல் போவதற்கு மாணவர்கள் மட்டுமே காரணமில்லை. கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் முறையில் ஏதோ ஒன்று உதைக்கிறது! ஆங்கிலத்தில் பேசும் எழுதும் ஆற்றலை வளர்ப்பதற்கு, நம் கல்வி திட்டம் பின்பற்றும் முறை மொழியியல் சார்ந்து அமையவில்லை. இலக்கியத்தை மையமாக வைத்தே பாடத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பரிட்சையை மையமாக வைத்தே அமைக்கப்படுகின்றன. மனப்பாடம் செய்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து ஆங்கில அறிவு பெற்றுவிட்டதாக சான்றிதழ் வழங்கப்படுவது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது! Canterbury Tales, Waste land, Wet land, The history of Indo-Germanic and Scandinavian, பற்றி கேள்விகள் கேட்டால் அருவி போல் பதில்களை கொட்டும் மாணவன், தன்னைப் பற்றி சொல் என்று கேட்டால், எழுதி வைத்து மனப்பாடம் செய்து ஒப...