திருக்குறள். அதிகாரம் 110. குறிப்பறிதல் CHAPTER 110. RECOGNISING THE SIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)


திருக்குறள்.
அதிகாரம் 110.
குறிப்பறிதல்
CHAPTER 110.
RECOGNISING THE SIGN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இவளது பார்வை இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று, ஏதோ ஒரு துன்பத்தை தர இருக்கிறாள். மற்றொன்று அத்துன்பத்தின் மூலம் இன்பம் என்கிற மருந்தை வழங்க இருக்கிறாள்
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her sight is signalling two things. One is that she is to offer a misery. The another one is that she is to offer a medicine namely pleasance through such misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 1092:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது அந்த கள்ளப் பார்வை நிச்சயம் காமத்தின் உச்சத்தை தராமல் பாதியில் நிறுத்துவதாக தெரியவில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I predict that she would not stop in half of the way without offering the top most lust. Because her stealing sight is saying like that.
- MAHENDIRAN V
------------------
குறள் 1093:
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என்னை பார்த்ததும் நாணம் வந்து தலைகவிழ்ந்தாள். இதற்கு என்ன அர்த்தம்?  நிச்சயம் அது என் மீதான காதலுக்கு நீரூற்றுகிறாள். வேறென்ன?
- வை.மகேந்திரன்

Explanation in English:
When she looks at me she gets shy and bowed her head. Surely it means that she is watering for loving me, doesn't it?
- MAHENDIRAN V
------------------
குறள் 1094:
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நான் பார்த்தால், நிலத்தை பார்க்கிறாள். பார்க்காத பொழுது என்னை நாணம் மிகுந்த நகைப்புடன் பார்த்து மகிழ்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When I see her she looks at the land. She looks at me with a shyfull pleasant smile when I don't see her.
- MAHENDIRAN V
------------------
குறள் 1095:
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் என்னை குறிவைத்து பார்க்காமல் ஆனால் நன்கு பார்த்து மகிழ்கிறாள் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I clearly know that she flows her sight on me cheerfully but she pretends as if she doesn't see me  as a target.
- MAHENDIRAN V
------------------
குறள் 1096:
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என்னிடம் அவள் பேசினாள். யாரோ எவரோ என்றாள். அது அவள் என் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்படைத்தன்மை என்பது மட்டும் நிச்சயம் தெரியும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She talked to me like a stranger. She said that she was somebody else to me. But I realise that it is a transparent signal for love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1097:
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது பகை போன்ற பேச்சும் சினம் போன்ற பார்வையும் தோற்றத்திற்கு தான். உள்ளபடி அன்புக்காக ஏங்குகிறாள் என்பது தெரிகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her eneminess talk and angered sight are just an attire. But it really seems that she is yearning for love from me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1098:
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அயலார் போல் அவள் பேசினாலும் பார்த்தாலும் நான் மீண்டும் அவளை பார்க்கும்பொழுது அவளது அக சிரிப்பு புறத்தில் அழகூட்டுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though she sees and talks like a stranger, when I see her again, her intensive smiling beautifies her full attire.
- MAHENDIRAN V
------------------
குறள் 1099:
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் என்னை அந்நியர் போல் பார்க்கும் தன்மை நாணமிகுதியால் ஏற்பட்டதாகும். நேர்மையான காதலின் வெளிப்பாடு இதுதான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of her strangerous looking style is caused of her shyness. In fact, this is the out put of the true love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1100:
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளும் நானும் கண்களாலேயே அனைத்தையும் பேசி முடித்துவிட்ட பிறகு வாய்ச் சொல் வார்த்தைகள் எதற்கு?
- வை.மகேந்திரன்

Explanation in English:
While she and I have finished up all our communication over our eyes, Is it necessary to talk verbally?
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS