திருக்குறள். மூன்றாம் பகுதி. அதிகாரம் 109. தகை அணங்குறுத்தல் CHAPTER 109. THE PRE-MATURED LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
மூன்றாம் பகுதி. 

அதிகாரம் 109.

தகை அணங்குறுத்தல்
CHAPTER 109.
THE PRE-MATURED LOVE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
யார் இவள்? கம்மலும் மயக்கும் அழகும்! தெய்வமா மயிலா அல்லது பெண்ணா? மயக்கம் வருகிறது!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Who is she..? Has worn ear rings to mesmerize me? Is she Angel or peacock? She causes kiddiness!
- MAHENDIRAN V
------------------
குறள் 1082:
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நான் பார்க்கும் பொழுதே அவள் பார்த்து வீசிடும் அந்த பார்வை அதீத சேனைக்கு சமம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her sharpening sight when I see her is not alone. I predict that her sight is equallent to a numerous troops!
- MAHENDIRAN V
------------------
குறள் 1083:
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நமனை நான் கண்டறியேன். ஆனால் இவளது கூரிய பார்வையை கண்டபின்பே அறிந்தேன். பெண்ணுருவில் அவள் மயக்கும் கண்களால் என் உயிரை பறிக்காமல் பறிக்கும் பொழுது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I have never seen the god of death Yama. But now I'm seeing him by her attractive appearance that kills me without weapons but her sharpening eyes.
- MAHENDIRAN V
------------------
குறள் 1084:
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உருவத்தில் பெண்ணாக இருக்கிறாள். அவள் காணும் வியூகமோ உயிரை பறிப்பது போலுள்ளதே. என்ன ஒரு முரண்பாடு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She looks like a pretty woman but her style of eye sight seems to be killing me. What a state of controversy it is!
- MAHENDIRAN V
------------------
குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இவள் நமனா அல்லது கயல் விழியாலா அல்லது அழகு பதுமையா? குழப்பம் இல்லை. மூன்றும் தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Is she the god of death or she who has the eyes like fish or a pretty angel? No more second thought... She is all of those.
- MAHENDIRAN V
------------------
குறள் 1086:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது புருவம் மீனைப்போல் வளைந்திருப்பதால் தான் வினை. அது வளையாமல் நேராக அமைந்திருந்தால் என்னை நேர் கொண்டு கொன்றிருந்திருக்கமாட்டாள்- வை.மகேந்திரன்

Explanation in English:
The problem is her eyebrows because they really kill me. It they weren't bowed and being straightened she would never kill me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1087:
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது நிமிர்ந்து நிற்கும் மார்பின் மேல் படர்ந்திருக்கும் பட்டாடை மதம் கொண்ட யானையின் முகப்படாம் போலுள்ளது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The cloths covered on her pretty boobs are looking like the cover-cloth of forehead of rutting elephant.
- MAHENDIRAN V
------------------
குறள் 1088:
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
படைகளத்தில் பகைவர்களை அஞ்சவைக்கும் என்னை, அவளது நெற்றியின் அழகு என்னை தோற்கவைக்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her prettiest forehead is defeating me who has scared almost all troops in the battle.
- MAHENDIRAN V
------------------
குறள் 1089:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது பார்வையும் நாணமும் தான் விலையுயர்ந்த ஆபரணங்கள். செயற்கையாய் எதற்கு இவளுக்கு நகையலங்காரம்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Already she has worn the expensive ornaments such as her sharpened sight and shyness of her. Then why does she need to wear the artificial ornament namely jewels?
- MAHENDIRAN V
------------------
குறள் 1090:
உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உண்ட பின் தான் காய்ச்சிய கள் போதை தரும். கண்டாலே போதை தரும் மருந்து காதலைத் தவிர வேறென்ன?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Liquor would lay one only after drinking it. But the love would lay down one just by the pretty sights.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS