Skip to main content

திருக்குறள் அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல் CHAPTER 115. RUMOURS POPULARISE THE LOVE MATTER 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 115.
அலர் அறிவுறுத்தல்
CHAPTER 115.
RUMOURS POPULARISE THE LOVE MATTER
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1141:
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்கள் எங்கள் காதலை அவதூறாக  பேசுவதால் தான் எங்கள் காதல் நிலைத்து நிற்கிறது. பேசுபவர்களுக்கு இது தெரியாது என்பது என் பாக்யம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only because of the rumourers, our love is getting strength. They aren't aware of it is my virtue of course.
- MAHENDIRAN V
------------------
குறள் 1142:
மலரன்ன கண்ணாள் அருமை அறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மலர் போன்ற விழியுடைய என்னவளின் பெருமையறியாது எங்கள் காதலை அவதூறு பேசுவது ஒரு வகையில் எனக்கு நல்லதாய் போயிற்று. பேசப்பேசத்தானே காதல் வலுக்கும்!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Anyway, the speech done by the backbiters without knowing the prides of my lover who has eyes like flowers is my goodness, because the love would flame more and more due to this type of talk.
- MAHENDIRAN V
------------------
குறள் 1143:
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எம் காதல் கதையை ஊரார் அசைபோடாமல் போனால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்காது. பேசட்டும், பெறமுடியா நன்மை பெற்றதுபோல் உணர்வை அது ஏற்படுத்தும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Surely I wouldn't get happiness if the society didn't chew our love story. I am letting them chew, because I can realise that I have gotten some good thing that is not so easy to get.
- MAHENDIRAN V
------------------
குறள் 1144:
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊராரின் அலரால் (தூற்றுதலால்) தான் எம் காதல் வளமடைகிறது. இல்லேல் எம் காதல் அதன் தனித்தன்மையை இழந்திருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
My love is strengthened well and good only because of the rumour spread by people. Otherwise my love would have lost its dignity.
- MAHENDIRAN V
------------------
குறள் 1145:
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தூற்றுதலால் எம் காதல் மேலும் மேலும் வளமடைவது, கள்ளுண்போர் உண்டு உண்டு களிப்புற்று கள்ளையே காதலிப்பது போலுள்ளது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
What my love is getting growth a lot due to rumours of people is like the drunkers are sinking on dizzy at most owing to continual drinking.
- MAHENDIRAN V
------------------
குறள் 1146:
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலர்கள் கண்டதும் பேசியதும் ஒரு நாள் தான், ஆனால் மக்களின் பேச்சோ  "நிலவதனை பாம்பு விழுங்கிற்று" என்று கிரஹணத்தை பற்றி பேசுவது போல் காட்டு தீ போல் பரவிற்று.
- வை.மகேந்திரன்

Explanation in English:
In fact, the lovers met with each other only one day. But the rumour spread across the town like a talk of eclipse as if the snake has swallowed the Moon.
- MAHENDIRAN V
------------------
குறள் 1147:
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊராரின் அலர் பேச்சு எருவாயிற்று. அன்னையின் கண்டிப்போ நீராயிற்று. எம் காதல் பயிர் நீண்டு வளர இவைதான் காரணம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The rumour spread by people has been like fertilizer; my mother's oppose has been like water. These are the cores for the strength of my love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1148:
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊராரின் அலர் (தூற்று) பேச்சு எம் காதலை கட்டுப்படுத்தும் என்பது எப்படி இருக்கிறது என்றால், நெய்யினை ஊற்றி நெருப்பை அணைப்பது போலுள்ளது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People expect that their rumours would contoll our love. Do you know how it is ? It's like that the action of putting off fire by pouring Ghee a lot on fire.
- MAHENDIRAN V
------------------
குறள் 1149:
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தூற்றுபவர்கள் நாணும்படி என்னவர் என்னிடம்  அஞ்சவேண்டாம் என்றுரைத்து சென்றிருக்கும்பொழுது, நான் எதற்கு ஊரார் முன் நாணவேண்டும்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
While my lover had promised me by encouraging not to fear for anything as far as people have to shy, why should I shy for these people's talk?
- MAHENDIRAN V
------------------
குறள் 1150:
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்குமிவ் வூர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊராரின் தூற்றுப் பேச்சை நான் விரும்பும் பொழுது என்னவரும் விரும்பிவந்து எனை ஏற்றுக்கொள்வார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
While I am not bothering the rumours of these people and I like that very much, my lover too would like to accept me and would bring me with him.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?