திருக்குறள் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் CHAPTER 114. CONDEMNING THE OPPOSERS OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 114.
நாணுத் துறவுரைத்தல்
CHAPTER 114.
CONDEMNING THE OPPOSERS OF LOVE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலின் மிகுதியால், காதல் கைகூடாமல் போய் வருந்துபவர் துறவிபோல் சாம்பல் பூசித் திரிந்து தன் துயரத்தை போக்குவதைவிட  வலிமையானச் செயல் வேறெதுவுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Because of mad passion on love, there is no any other strong protest against opposers of love like the lover does the protest by applying ash on whole body and roaming here and there.
- MAHENDIRAN V
------------------
குறள் 1132:
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலின் பிரிவின் துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாத இந்த உடலும் உயிரும் மடலேறும் நிலை அடைய துணிகின்றன.
(குறிப்பு: மடலேறுதல் என்பது, காதலி தன்னை விரும்பியும்கூட, ஏதோ காரணத்தால் அவளை அடையமுடியாத சூழ்நிலையில், காதலன் பித்து பிடித்தவன் போல் உடலில் சாம்பலைப் பூசிக்கொண்டு கிரீடம் போல் பனை ஓலைகளை குதிரைகளின் தலையில் கட்டி அக்குதிரையில் அமர்ந்து அங்கும் இங்கும் சுற்றி வருவது. இது ஒரு விதமான எதிர்ப்பு. தன்னை வருத்தி கொள்வது)
- வை.மகேந்திரன்

Explanation in English:
Because of not able to realise the grief of the separation of love, this body and soul dare to reach the level of maladaptation.
(Note: MADALERUTHAL means, when a girl loves a man, but for some reason, the man is unable to reach her so he wraps his body in ashes like a mad and wraps palm leaves around the head of horse. He rides the horse around here and there. This is a kind of condemn activity. Self punishing act.)
- MAHENDIRAN V
------------------
குறள் 1133:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்று வெட்க்கமும் ஆண்மையும் உள்ள நல்ல ஆண்மகனாக இருந்தேன். இன்றோ காமப்பிடியில் அகப்பட்டு பட்டுணர்ந்து மடலேறும் நிலையை உணர்கிறேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I was a good man with shame and masculinity that day. Today, I feel caught in a state of misery of love, and feel doing some mad act to retrieve my love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1134:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலின் உச்சக் கட்டம் வெள்ளம் போன்றது. அது வெட்க்கம் ஆண்மை ஆகிய படகுகளை விழுங்கிவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The summit of love is like a flood. It will swallow the boats of shame and masculinity.
- MAHENDIRAN V
------------------
குறள் 1135:
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வளையல்கள் அணிந்த இந்த இளம் குமரி, காதல் எனும் நோயை பரிசாக தந்ததோடு மடல் ஏறும் நிலையையும் உருவாக்கி விட்டாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The young lady who is wearing beautiful bangles has not only gifted me a disease of love but also made a situation that I have to protest with some mad acts.
- MAHENDIRAN V
------------------
குறள் 1136:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இந்த அழகுப்பெண்ணின் காதலினால் தூக்கம் பறிபோய்விட்டது. மடலேறும் நினைவே அடிக்கடி வருகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I lost my sleep due to the love of this pretty woman. Only the memory that I get sage attire and protesting comes up ofetn.
- MAHENDIRAN V
------------------
குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதல் நோய் அவளை வருத்தியும் கூட மடலேறும் முடிவை அவள் மேற்கொள்ளாததிலிருந்தே தெரிகிறது பெண்மை உறுதியானது பெருமைக்குரியது என்று!
- வை.மகேந்திரன்

Explanation in English:
It comes to know that feminism is so strong and proud of, because even if she suffered a lot due to love, she hasn't decided to climb on sage status.
- MAHENDIRAN V
------------------
குறள் 1138:
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலின் தாக்கம் விசித்திரமானது. ரகசியம் காக்கும் தன்மையை உடைத்துவிடும். இரக்கப்படவைத்து விடும். அனைவரும் அறியும் வண்ணம் செய்துவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The impact of love is something different. It would break the secrecy. It would make one be pitied. It would make everyone know the secrecy.
- MAHENDIRAN V
------------------
குறள் 1139:
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள்பால் நான் கொண்டிருந்த காதலை இது நாள் வரை நான் மட்டுமே அறிந்திருந்தேன். (என் மடலேறும் நிலையால்) இப்பொழுது இவ்வூரே அறியப்போகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
So far, Only I have known about my love put on her. Because of my decision of protesting with mad attire, this town is going to know it.
- MAHENDIRAN V
------------------
குறள் 1140:
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதல்வயப்பட்டு காதலை அடைய முடியாமல் துன்பப்படுவோரை பார்த்து  அத்தகைய துன்பத்தை அனுபவிக்காத அறிவிலிகளே ஏளனமாக நகைப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the utter fool guys who haven't experienced with the misery of love would giggle at those who are suffering from love disease.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS