திருக்குறள் அதிகாரம் 117. படர்மெலிந் திரங்கல் CHAPTER 117. BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 117.
படர்மெலிந் திரங்கல்
CHAPTER 117.
BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊற்று நீர் இறைக்க இறைக்க தானே மேலும் ஊறும். அது போல, எம் காதலை மறைக்க மறைக்க தான் அது மிகுதியாகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if water is secreted more and more in the well when the water is pulled out often, our love too gets strengthened more and more when it is suppressed strongly.
- MAHENDIRAN V
------------------
குறள் 1162:
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலின் உக்கிரத்தை  மறைக்க வழியும் தெரியவில்லை, அவரிடம் அதை கூற நான் முயலும்பொழுது எனக்கு வரும் நாணத்தை மீறவும் முடியவில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I could neither find the way to hide my love on him nor I could dominate the shy that I get when I try to say this matter to him.
- MAHENDIRAN V
------------------
குறள் 1163:
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதல் தரும் இன்ப வலியை எடுத்து கூற இயலாத துன்ப நிலை ஒரு புறம்; மறுபுறம் அதிக அளவு வெட்க்கம். என் இவ்வுடம்பின் அகஉயிர் ஒரு காவடி போல் அப்புறமும் இப்புறமும் ஆடுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
My soul in this body is dangling here and there like a Cavadi-bar  because I have weight on both side. I get shy one side because of love. I feel misery because of the same love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1164:
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எம் காதல்நோய் கடலினும் பெரிது. அதை கடக்க பாதுகாப்பான படகு என்னிடம் இல்லையென்பதே இங்கு செய்தி.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The pleasant disease of our love is bigger than sea. The matter is that I couldn't avail a safety boat to cross that sea.
- MAHENDIRAN V
------------------
குறள் 1165:
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதல்-இன்ப பயணத்தில் இனிமை என்கிற துன்பத்தை தரக்கூடிய என்னவர், பகை வந்தால் எனை காக்க  என்ன செய்வாரென்று தெரியவில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
My man can bring a pleasant pain during our lush travel. But I am not sure what he would take decision if we meet eneminess.
- MAHENDIRAN V
------------------
குறள் 1166:
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காமத்தில் இணைந்து லயித்திருக்கும்பொழுது ஏற்படும் இன்பம் கடல் போன்றதாக உணர்கிறேன். அது ஏற்படுத்தும் துன்பத்தின் அளவோ அக்கடலை விட பெரிதானதாகும் என்பதும் எனக்கு தெரியும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I feel the pleasance like sea when we travel on lush. I know well that the misery caused by the same lush would be larger than the sea.
- MAHENDIRAN V
------------------
குறள் 1167:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காமக்கடலில் நீந்தி கரைகண்டவர் எவரும் இல்லை. அதனால் தான் இரவு முழுதும் விழித்திருக்கிறேனோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
None has found the shore on swimming on the lush sea. So that Am not I sleeping throughout  the nights?
- MAHENDIRAN V
------------------
குறள் 1168:
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எல்லோரையும் தூங்க வைத்துவிட்டு தான் மட்டும் விழித்திருக்கும் இந்த இரவு-க்கு  நான் மட்டுமே துணை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only I am the assistant to the Night that is not sleeping but it makes all sleep.
- MAHENDIRAN V
------------------
குறள் 1169:
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இந்த இரவு என்கிற காலம், தான்  எடுத்துக் கொள்ளும் நெடு நேர பயணம், காதலர்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் துன்பத்தை விட மோசமாக உள்ளதே?
- வை.மகேந்திரன்

Explanation in English:
The very long time taken by the one namely Night is worse than the misery of separation of love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1170:
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் மனம் சொல்வது போல் என்னவர் இருக்கும் இடத்தை தேடிச் சென்று நான் அவரை கண்டிருந்தால், என் கண்கள் வெள்ளமாய்  நீரை கொட்டியிருக்காது!
- வை.மகேந்திரன்

Explanation in English:
As my mind said if I had reached my lover's spot by meeting a deep search, my eyes wouldn't have sppilled out this amount of flood of tears.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

To read all couplets, visit 

https://mahendiranglobalenglish.blogspot.com/?m=1

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS