Skip to main content

திருக்குறள் அதிகாரம் 119. பசப்புறு பருவரல் CHAPTER 119. HUE PALLID (HER COLOUR BECOMES PALLID DUE TO SEPARATION OF LOVER) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்

அதிகாரம் 119.
பசப்புறு பருவரல்
CHAPTER 119. HUE PALLID
(HER COLOUR BECOMES PALLID DUE TO SEPARATION OF LOVER)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1181:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரின் விருப்பப்படி பிரிவுக்கு சம்மதித்தேன். பிரிவால் என் மேனி பசலைக் காண்கிறதே (வெளிர்ந்து போகிறதே, எனது இயற்கை நிறம் மாறுகிறதே) அதை நான் யாரிடம் போய் சொல்வேன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
I consented when he had asked me for separation. Being so, My entire body gets a kind of PASALAI status. (PASALAI means that a kind of change of colour from normal to white or brownish on body or skin). Whom can I complain with for this error?
- MAHENDIRAN V
------------------
குறள் 1182:
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் மேனியில் படரும் இந்த பசலை நிறம், உன்னவர் உனை பிரிந்ததால் வந்த பரிசு என என்னிடம் நகைத்துச் சொல்லி ஊர்ந்து படர்வதாக உணர்கிறேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I feel that the PASAL itself blames me  that this status is a gift for me because of the separation of our love, and it joyfully spreads over my body.
- MAHENDIRAN V
------------------
குறள் 1183:
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரது பிரிவால் என் அழகையும் வெட்க்கத்தையும் இழந்து காதல் துன்பத்தையும் பசலை நிறத்தையும் தான் ஈடாகப் பெற்றேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
In fact, What I feel is that I got misery and this PASAL status as a compensation by losing my shyness and my beauty because of the separation of our love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1184:
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவர் நினைவே எனக்கு. அவரது பெருமைப் பற்றிதான் தினமும் பேசுகிறேன். இருந்தும் என் மேனி பசலைநிறம் கண்டது எப்படி? வஞ்சனை அல்லது சாபமாக இருக்குமோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Whereas I am always thinking and talking about the prides of my man, I'm surprised of my getting this PASAL disease on my body. I suspect whether it is a deception or curse done by anybody.
- MAHENDIRAN V
------------------
குறள் 1185:
உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் காதலர் பிரிந்து சென்றது தான் தாமதம், அதற்குள் என் மேனி முழுதும் பசலைநிறம் படர்ந்து போனது தான் ஆச்சரியம்!
- வை.மகேந்திரன்

Explanation in English:
The big surprise is, No sooner my spouse left out from me than the PASAL disease started to  spread over on my body!
- MAHENDIRAN V
------------------
குறள் 1186:
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விளக்கொளியை கண்டதும் இருள் உடனே விலகி ஓடுவிடுவதை போல, அவரது தழுவல் சற்று விலகியதும் என் மேனியில் பசலை நிறம் படர ஆரம்பித்து விடுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if the dark would fly away as soon as getting light of enlightening the lamp, the PASAL would start to spread over my body when my man stops his hugging on me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1187:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரைத் தழுவிக் கிடந்தேன் யாதொரு துன்பமும் இல்லை. கொஞ்சம் தள்ளி நகர்ந்தேன், என் மேனி எங்கும் பசலை படர்ந்தது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When I am hugging my man with love, no any misery is found to be. But when he or I leave out the hugging, PASAL starts to spread over my body.
- MAHENDIRAN V
------------------
குறள் 1188:
பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பசலைப் படர்ந்தாள் இவள்- என்று எள்ளி நகையாடும் இந்த உலகம், இவளை விட்டு பிரிந்து இவளை துன்பத்தில் ஆழ்த்திவிட்டாரே - என்று கூறாதது தான் துயரம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
What the big misery is, 'The world which is  always ready to blame me as I got PASAL on my body would not ready to put sympathy on me for the separation of our love.'
- MAHENDIRAN V
------------------
குறள் 1189:
பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எனை பிரிந்து, எனை அவர் துயரத்தில் ஆழ்த்தியது இருக்கட்டும். பிரிந்தவர் நலமுடன் இருக்கிறார் என்றாலே போதும். என்  மேனி மேலும் பசலைக் கொண்டாலும் மகிழ்ச்சியே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
What I am being worried of our separation of love is not a matter. If my man is healthy and well wherever he is, that is pleasant news to me. I would not bother about the PASAL being over my body.
- MAHENDIRAN V
------------------
குறள் 1190:
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எனை சம்மதிக்க வைத்து பிரிந்து சென்ற என் அவரை உலகம் தூற்றாமல் இருந்தாலே போதும். என் மேனியில் பசலைப் படர்ந்ததை இவ்வூர் மக்கள் ஏசுவதைக் கூட நான் பெரிதாக கருதமாட்டேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the world is not blaming or accusing my man as he leftover me, that's enough. I will never bother the giggling words of this world blaming me for my carrying PASAL over my body.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...