திருக்குறள் அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி CHAPTER 120. SOLITARY ANGUISH ( Worries due to being alone) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 120. 
தனிப்படர் மிகுதி
CHAPTER 120. 
SOLITARY ANGUISH ( Worries due to being alone)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH; 
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1191:
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விரும்புபவராலேயே விரும்பப்பட்டு பெரும்பேறு பெற்ற காதலர், விதையிலா கனியை பெற்ற பெருமையும் பெறுகிறார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
He who is loved by her whom he loves and so has gotten the great gift is also getting the pride as if getting seedless fruit.
- MAHENDIRAN V
------------------
குறள் 1192:
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விரும்புவரை விரும்பி ஏற்று வாழும் வாழ்க்கைநிலை என்பது உயிர் வாழும் ஜீவராசிகளுக்கு மேகமாக வந்து மழை தந்து உதவுவது போலாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The love life tends by mutually loving both side is like a life of all living beings living cheerfully since getting rain as a gift from the clouds.
- MAHENDIRAN V
------------------
குறள் 1193:
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விரும்பும் துணையுடன் விரும்பி வாழும் வாழ்க்கையில் பிரிவு சிறிது வந்தாலும் கூட இணைந்தே இன்பமுடன் வாழ்வோம் என்ற செருக்கு உறுதியாய் இருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if there is separation a bit between lovers, if they have love a lot with each other, there will be pride intensively on both that they will be living with pleasance in the future.
- MAHENDIRAN V
------------------
குறள் 1194:
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தான் விரும்பி, ஆனால் துணையால் விரும்பப்படாமல் ஒரு காதல் தொடர்ந்தால், உலகமே தன்னை விரும்பினாலும் தனக்கு துயர நிலையே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If she loves him very much while he doesn't do her, and If she resumes her love, she is of course in misery even though the entire world loves her.
- MAHENDIRAN V
------------------
குறள் 1195:
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் அவனை விரும்பியும் அவன் அவளை விரும்பாவிடில், காதலித்து அவனால் எந்த பயனும் அவளுக்கு வந்து விடப்போவதில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Whereas she loves him if he doesn't love her, she would never get any gain from him for her life.
- MAHENDIRAN V
------------------
குறள் 1196:
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு தலை காதலால் உபயோகம் ஏதும் இருக்காது. காவடியின் நடுத்தண்டில் இரு புறமும் பாரம் சீராய் இருப்பதுபோல் இருவரும் விரும்பும் காதலே இனிமையானது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No pleasance can be seen on the one-sided love. Only the love that is like a balanced dangling scale due to even weight would cause more pleasance in life.
- MAHENDIRAN V
------------------
குறள் 1197:
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காமம் அவள் புறம் மட்டும் நின்று செயல்பட்டு அவன் புறம் கல்லாய் நின்றால் அவள் மேனி நிறம் மாறி பசலை காண்பது திண்ணம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If only she has lust while he is standing like stone, she would surely get the PASALAI disease since the colour on her body changes.
- MAHENDIRAN V
------------------
குறள் 1198:
வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்த அவனிடமிருந்து யாதொரு இனிதான செய்தியும் வராத அவளின் வாழ்க்கையை போன்றதோர் கொடும் நிலை வேறெதுவும் இருக்க முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There would never be a misery stance in the world as if the state of her life hasn't heard any good news from her man who has been separated.
- MAHENDIRAN V
------------------
குறள் 1199:
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்த காதலர் அவள் மீது அன்பு காட்டாவிடினும் கூட பரவாயில்லை. அவனை பற்றிய புகழான வார்த்தைகளை கேட்பது அவளுக்கு இன்பத் தேன் போன்றதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if her man doesn't show even a bit of love on her, it's not a matter. If she hears any pride word about him from anybody, that is the most sweet word to her.
- MAHENDIRAN V
------------------
குறள் 1200:
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சமே வாழ்க. உன் மீது அன்பு காட்டாதவரிடம் நீ ஏன் உன் துன்பத்தை சொல்லி அழ முயற்ச்சிக்கிறாய்? அதற்கு பதிலாக இந்த கடலை நீ துர்க்கலாம். அது உனக்கு எளிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, best wishes to you. Why do you try to share your worries to him while he doesn't care about the love? Instead, it's better you fill in the ocean by sand. This is easier than that.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS