Skip to main content

திருக்குறள் அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல் CHAPTER 121. LAMENTATION ABOUT THOUGHTS OF LOVE (SAD MEMORIES OF LOVE AFFAIRS) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 121.
நினைந்தவர் புலம்பல்
CHAPTER 121.
LAMENTATION ABOUT THOUGHTS OF LOVE
(SAD MEMORIES OF LOVE AFFAIRS)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1201:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கள்ளுண்டு களிப்புறுவதை காட்டிலும், நினைத்தாலே இனிக்கக் கூடிய காதலால் வரும் இன்பமமே உயரியதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The Mirth caused through thinking the memories of love is greater than the mirth is caused of drinking liquor.
- MAHENDIRAN V
------------------
குறள் 1202:
எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிவிலும் கூட ஒரு வித இன்பத்தை தருவது காதல். ஆகையால் எவ்வகையிலும் காதலால் துன்பமேதுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even the separation of love too is offering a kind of pleasance a lot. So there wouldn't be any misery from love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1203:
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தும்மல் வருவது போல் வந்து வராமல் போகிறதே.... காரணம், என்னை அவர் நினைக்க முயற்சித்து நினைக்காமல் விட்டாரோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
I feel sneezing but I don't sneeze. Is it reason because he started to think about me and then he stopped?
- MAHENDIRAN V
------------------
குறள் 1204:
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் இதயத்தில் அவர் குடிகாண்டுள்ளார். அவர் இதயத்தில் நான் இருக்கிறேனா என்பதை நான் அறியேன்
- வை.மகேந்திரன்

Explanation in English:
I'm sure that he is dwelling in my heart but I am not sure whether he allows me or not to I dwell in his heart.
- MAHENDIRAN V
------------------
குறள் 1205:
தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவர் இதயத்தில் என்னை இருக்க விடாமல் செய்யும் அவருக்கு என் இதயத்தில் மட்டும் நிலைத்து நிற்பதற்கு வெட்கப்படாமல் இருப்பதன் காரணம் தான் தெரியவில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I don't know why he doesn't shy to live in my heart stably while he restricts me to live in his heart.
- MAHENDIRAN V
------------------
குறள் 1206:
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவருடன் நான் காதலில் திளைத்த நாட்களை நினைப்பதால் தான் நான் உயிர் வாழ்கிறேன். இல்லேல் நான் வாழ்வதில் அர்த்தமில்லாமல் போயிருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only because of our love memories blinking in my mind I am being alive. Otherwise what I am living here is meaningless.
- MAHENDIRAN V
------------------
குறள் 1207:
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரை நினைத்து நினைத்து உருகுவதால் என் நெஞ்சம் துன்பத்தில்  கனக்கிறதே.. நினைக்காமல் போனால் என்னவாகும்...?
- வை.மகேந்திரன்

Explanation in English:
While I feel so sad when I am thinking about him, if I don't think about him what will happen?
- MAHENDIRAN V
------------------
குறள் 1208:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நான் அவரை எவ்வளவு தான் நினைத்தாலும் என் மேல் சினம் கொள்ள மாட்டார். அதுவே அவர் என் மீது கொள்ளும் காதலின் அடையாளம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if I merge with him a lot about love thoughts though it seems to be a bit disturbance to him he wouldn't get anger. That's the witness that he is still loving me so much.
- MAHENDIRAN V
------------------
குறள் 1209:
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நம் ஈருயிரும் ஓருயிரே எனக் கூறிய என்னவர் இப்பொழுது என் மீது காதல் காட்டாமல் இருப்பதை நினைத்தால் என் உயிர் என்னை விட்டு பிரிவது போல் உணர்கிறேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I feel that my live is passing away when  my lover is not showing love on me while he has promised me earlier that our lives aren't two but merged as a single.
- MAHENDIRAN V
------------------
குறள் 1210:
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மதியெனும் நிலவே நீ வாழ்க..... கண்ணில் படாமல் எங்கோ இருக்கும் என் அவரை கண்டுபிடித்து என்னிடம் சேர்க்கும் வரை நீ மறையாமல் இருக்கவேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh the Moon, I praise you. You shouldn't vanish ever till you retrieve my lover wherever he is and handing over him to me.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?