திருக்குறள் அதிகாரம் 122. கனவுநிலை உரைத்தல் CHAPTER 122. THE WORDS ABOUT DREAM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்

அதிகாரம் 122.

கனவுநிலை உரைத்தல்

CHAPTER 122.
THE WORDS ABOUT DREAM
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிவால் வருந்தி கிடந்த எனக்கு அவரிடமிருந்து தூது வருவது போல் வந்த கனவுக்கு என்ன விருந்து வைத்து நன்றி செய்வேன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh! How would I treat back the messanger who brought the pleasant news about my lover to me who was worried out of separation, when I was dreaming?
- MAHENDIRAN V
------------------
குறள் 1212:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் கயல் கண்கள் விரும்புவது போல் எனக்கு தூக்கத்தில் கனவு வந்தால், என் காதலரை அக்கனவில் கண்டு நான் நலமுடன் இருப்பதைச் சொல்வேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I get dream as my fishing eyes wishes during my sweet sleep, I would convey to my lover on such dream that I am being well.
- MAHENDIRAN V
------------------
குறள் 1213:
நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நனவில் தான் அவரின் அன்பை பெறவில்லை. கனவில் அவருடன் களிப்புறுவதால் தான் என் உயிர் இன்னும் இருக்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Though I couldn't get the love words from my lover in person, I am getting them much during my dream.That is why I am alive.
- MAHENDIRAN V
------------------
குறள் 1214:
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நனவில் கிடைக்காத அவரை கனவில் தேடிப் பிடித்து அழைத்து வந்து நான் செய்யும் காதல் அளப்பரியது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
My lover whom I couldn't get in person is retrieved by me during my dream and I am loving him infinitely.
- MAHENDIRAN V
------------------
குறள் 1215:
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்று அவருடன் நனவில் கொண்ட காதலால் கிடைத்த இன்பமும் இன்று நான் கனவில் அவருடன் களிப்புறும் இன்பமும் ஒன்றானதாகவே உணர்கிறேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I feel that the pleasance that I enjoyed with my lover in person and the pleasance that I enjoy now with him on dream are similar.
- MAHENDIRAN V
------------------
குறள் 1216:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவருடன் கனவில் நான் கலந்திருக்கும்பொழுது பாவியாம் அந்த நனவு வரவில்லையென்றால் அவர் என்னை விட்டு (கனவிலாவது) பிரிந்திருக்கமாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I hadn't woken up suddenly when I was loving with my man on dreaming, he wouldn't have left out from me atleast on dream.
- MAHENDIRAN V
------------------
குறள் 1217:
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நனவில் வந்து களிப்பு காட்டாத கொடிய என்னவர் கனவில் மட்டும் வந்து களிப்புற்று ஹிம்சிப்பது என்ன நியாயம்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
What is justice herein...? My lover who doesn't show his love on me in person disturbs me by loving me so much only on dream.
- MAHENDIRAN V
------------------
குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தூக்கத்தில் என் தோள் மீது சாய்ந்து கிடப்பவர், நான் விழித்ததும் விரைந்து போய் என் இதயத்தில் புகுந்து கொள்கிறார். ஓ... இது கனவா?
- வை.மகேந்திரன்

Explanation in English:
My man who lays on my arms on sleeping is hiding himself by going inside of my heart when I wake up. Oh.. Is it dream?
- MAHENDIRAN V
------------------
குறள் 1219:
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கனவில் காதலரை கண்டு களிப்புற தெரியாத மகளிர் தான் நனவில் அவர் வந்து அன்புகாட்டுவார் என ஏங்குகின்றனர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the women who don't love their lovers by dreaming are yearning that they would come in person to love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1220:
நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நேரில் வரவில்லை என்று காதலரை தூற்றும் ஊரார், கனவு என்று ஒன்று உண்டு அதில் அவர் தினமும் வருவார் என்பதை அறியாதது ஏனோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Why don't the ones who are scolding at the lover for his not coming in person know that there is one namely dream to meet him?
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS