தெய்வப்புலவரின் திருக்குறள். அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல் CHAPTER 129. DESIRE FOR COPULATION (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

தெய்வப்புலவரின் திருக்குறள்.
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
CHAPTER 129. DESIRE FOR COPULATION
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நினைத்த மாத்திரத்தில் களிப்படையும் தன்மையும்  கண்ணால் கண்டு இன்புறும் தன்மையும் கள்ளுக்கில்லை காமத்திற்கு தான் உண்டு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No even the liquor is causing exultation and pleasure as if the love causes the same even when just by thinking and looking at the lover.

குறள் 1282:
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துணையுடன் இணையும்கால் தினையளவும் பிணக்கு இல்லாமல் இருப்பின், காமம் பனை அளவு பெருகி ஓடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one doesn't clash even a bit with spouse during copulate an infinite pleasure would cause like flood.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1283:
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எனை விரும்பி ஏதும் செய்யா எதனையோ அவர் செய்தாலும் அவரைத் தான் என் கண்கள் காதலுடன் பார்க்கின்றன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if he doesn't care about me to love and concentrating at somewhere, my bloody eyes are zooming only on him.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1284:
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவருடன் தர்க்கம் செய்ய என் மனம் விழைந்தாலும் அவரைக் கண்டவுடன் பரவசம் கூடி வாரி அணைக்கவே மனம் துடிக்கிறதடி என் தோழி.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She hisses to her friend that even if she wants to clash with her man her mind blows more and more to hug him tightly as soon as she sees him.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1285:
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மை தீட்டும்பொழுது தீட்டும் கோல் காணாமல் போய் விடுவது போல் குற்ற நெஞ்சன் என் அவனை கண்டதும் அவன் மீதுள்ள கோபம் மறைந்துபோய் விடுகிறதே, என்ன மாயம்!
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if the eyebrow pencil is missing when I need to draw eyebrow, the entire anger on my lover is flying away when I see him. Isn't it miracle?
- MAHENDIRAN V
------------------------
குறள் 1286:
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலர் கண்ணருகில் இருக்கும்பொழுது அவர் செய்த தவறுகள் என் நினைவுக்கு வருவதில்லை. அவரை நான் காணாமல் இருக்கும் பொழுது அவர் செய்த தவறுகள் தவிர எதுவும் என் நினைவுக்கு வருவதில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I am not bothering about his faults when he is being near me. Likewise I am not bothering anything except his faults when he is away from me.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெள்ளம் இழுத்துப்போகும் என்று அறிந்தும் பாயத்துணியும் அவருக்கு என்னுடன் கூடலின் பொழுது நான் ஊடல் செய்வதால் என்ன பயன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing is gain even if I try to clash with him during our copulation whereas he can dare jump into water despite knowing that the flood would pull in.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1288:
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கள்ளுண்டால் இழிவு வரும் என்று அறிந்தும் கள்ளின் மேல் தீரா காதல் வருகிறதே அது போல் தான் உன் படர்ந்த மார்பு, உன் மீது நான் கோபம்  கொண்டாலும் எனை மயக்கி கள்வனாகிய உன் மீது விழவைக்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if desiring liquor more and more despite knowing that it is devil one, even if I get anger on you, your broad chest interacts me and pulls me on it.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1289:
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மலரை விட மென்மையான இன்பச் செயலாம் காமம். அதை மென்மையாய் செய்து பன்மையாய் இன்பம் பெறத் தெரிந்தவர் மிகச்சிலரே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The lush and love is the softer than flower. Only a few knows to enjoy it infinitely by practicing so softly.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1290:
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடல் என்ற பெயரில் கண்களால் கோபக்கணல் காட்டிய என் வீரமங்கை கூடலின் பொழுது எனையும் வீழ்த்தி விரைந்து வந்து அணைக்கிறாளே என்ன விந்தை!
- வை.மகேந்திரன்

Explanation in English:
My brave woman who showed fired anger on me through eyes namely clash is hugging me lovingly faster than me. What a surprise one it is!
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS