திருக்குறள் அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல் CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF) (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்

அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF)
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1291:
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஓ என் நெஞ்சே, அவர் நெஞ்சம் மட்டும் எனை நினையாது அவருக்கே துணையாய் நிற்கும்பொழுது, நீ மட்டும் எனை விலகி அவரையே நினைப்பது தான் ஏனோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, whereas his heart is out of my love, you would like to be with him as a safeguard, Is what you do think always about him right?
- MAHENDIRAN V
------------------------
குறள் 1292:
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் நெஞ்சமே, அவருக்கு என் மீது அன்பு இல்லை என்பதை நீ அறிந்திருந்தும், கோபம் கொள்ளமாட்டார் என்ற துணிவில் அவரிடமே நீ செல்லத் துடிப்பது விந்தை!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, though you know that he doesn't have love on me, what you dare to reach him believing that he wouldn't get anger on you is surprising!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1293:
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் நெஞ்சமே, நீயே விரும்பி அவரை நோக்கிச் செல்ல நீ விழைவது, துன்பத்தால் கெட்டார்க்கு துணை நிற்க யாரும் இருக்கமாட்டார்கள் என்ற நல்லெண்ணத்தில் தானே?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, the reason of your being eager to reach him is that you would like to stand for him because he is miserable without help, right?
- MAHENDIRAN V
------------------------
குறள் 1294:
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சமே, ஊடல் ஒன்று செய்து பிறகு கூடினால் தான் சுவை என்பதை அறியாமல் கூடலுக்கு மட்டும் விழையும் உனக்கு இனிமேலும் அறிவுரை செய்து என்ன பயன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, without knowing the reunion is pleasant only after meeting out clash, what you like only for reunion is foolish. Even I try to advise you in this regard too is waste.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1295:
பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவர் பிரிந்திருக்கும் பொழுது அவர் இல்லா நிலையால் என் நெஞ்சம் வாடும். அதுபோன்று அவர் கூடவே  இருந்தாலும் பிரியப்போகிறாரே என்ற துயரம் வாட்டும். என் நெஞ்சம் வாடி நிற்பது ஒரு தொடர்நிலையோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
My heart would be always worried out even if he is away from me or being near to me because of parting of love. Anyway I feel that my worries is infinite.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1296:
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலரின் அன்பின் அற்புதத்தை பிரிந்தபோதே அறிவர் என்பர். அவரை நான் பிரிந்திருந்து நினைக்கும்கால் என் நினைவுகளே என்னை கொல்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is said that the feature of love would be known by both only when the lovers are parted. The thoughts of me about him is killing me because of being parted.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1297:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரை மறக்க இயலா நெஞ்சத்தை நான் கொண்டதனால், மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்தவளாகிப்போனேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Since I have the heart that is unable to forget about my spouse, I have become a woman throwing shyness that should not be forgotten ever.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1298:
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலே உயிர் என்று இருக்கும் என் நெஞ்சம், அவரை இகழ்ந்தால் எம் காதலுக்கு தான் இழுக்கு என்பதனால் அவரை இகழாதிருந்து புகழ் பாடுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
My heart that always adores love equallent to life is praising him instead of blaming him, because if he is depreciated the love may get bad name.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1299:
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பம் வரும் பொழுது இணையாய்  இருந்து துணையிருப்பது நம் நெஞ்சமேயன்றி வேறு எதுவுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The best assistance and being a good friend during ones being in miseries is only the heart. None can be as it is.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1300:
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி
ஒருவர்க்கு உரிமையாய் இருப்பது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உரிமையான ஒன்றாம் அந்த நெஞ்சத்துடன் பிணக்கேற்பட்டு உறவு இல்லாமலிருக்கும்பொழுது அயலார்களுடன் உறவில்லாமலிருப்பதால் ஒன்றும் குடிமூழ்கி விடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
While being with hatred on our heart because of clash, the stance of being ill healthy relationship with the society is not a matter at all.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS