திருக்குறள் அதிகாரம் 132. புலவி நுணுக்கம் CHAPTER 132. TECHNIQUES OF PLEASANT CLASHES (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 132.
புலவி நுணுக்கம்
CHAPTER 132.
TECHNIQUES OF PLEASANT CLASHES
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உனை பார்த்த பெண்ணினத்தார் வியந்து போய் உன் அகன்ற மார்புகளை கண்டு களிப்புற்றதனால் அவற்றை தழுவ என் மனம் தயங்குகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Sorry my dear, whereas all women surprisingly have gazed your broad boobs, I wouldn't like to hug you henceforth.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1312:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நான் அவருடன் ஊடலில் இருந்தபொழுது அவர் தும்மியதற்கு காரணம் நான் ஊடலை நிறுத்தி அவரை நீடூழி வாழ்க என வாழ்த்துவேன் என்பதற்காகத்தான் என்பதை நான் அறிவேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I notice well that the reason of his sneezing during our clash is that he expect that I would stop the clash on him and I would greet him for his sneeze.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1313:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொடிகளில் பூத்தமலர்களை நான் அணிந்துவிட்டால் போதும், யாரோ ஒருத்திக்கு சைகை தெரிவிப்பதற்காக தான் நான் அப்படி செய்கிறேன் என்று ஊடல் செய்வாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if I adore some flowers taken from plants, she would start a clash by means of that I am signalling to someone through such flowers.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1314:
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எக்காதலை காட்டிலும் நம் காதலே உயர்ந்தது என்று நான் சொன்னால், எனையல்லாது யாருடன் செய்த காதலை காட்டிலும்... யாருடன் செய்த காதலை காட்டிலும்... என்று ஊடலை ஆரம்பிக்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I say that only our love is better than any other, she starts a clash by asking with whose love I am comparing and for what.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இப்பிறவியில் நாம் பிரியவேமாட்டோம் என்று காதலுடன் அவளிடம் கூறினேன். ஒகோ.... அடுத்த பிறவியில் நாம் பிரிந்துவிடுவோம் என்கிறார்களா? என்று கூறி கண்ணீர்விட்டாள் அவள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When I say to her that we won't be parted in this birth, suddenly she tears whether I mean that we will be parted in the future birth!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1316:
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தழுவலின்பொழுது உனைத்தான் அனுதினமும் நினைக்கிறேன் என்று நான் கூறினால், ஓகோ.. மறந்ததினால் தானே எனை நினைக்கிறீர்கள்.... எனை உங்களால் மறக்கவும் முடிகிறதா? என தழுவலை விட்டு வம்புக்கிழுக்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
During love, if I say that I am always thinking her, suddenly she starts a clash by means of that I am forgetting her that's why I start to think her and she asks how I could forget her.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1317:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தழுவலின் பொழுது தும்மினேன். ஆயுசு நூறு என்று வாழ்த்தினாள். சிறிது நேரத்தில், அது சரி.... நீங்கள் தும்மும் அளவுக்கு உங்களை நினைத்தது யார் என்று வம்பு செய்தாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One day, I sneezed during hugging her. She greeted me that I would be living for hundred years. After a few minutes she asked me who did think me so that I sneezed.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1318:
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தும்மினால் ஊடல் வருகிறதே என்றெண்ணி நான் தும்மலை அடக்க முயன்றால், யாரோ ஒருத்தி உங்களை நினைக்கிறாள் அதை நான் அறிந்துவிடக்கூடாது என்பதற்காகதான் தும்மலை அடக்குகிறீர்கள் என்று ஒரு புதுவித ஊடலை ஆரம்பிக்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I forcibly control my sneeze feeling due to avoiding the clash, suddenly she starts a new type of clash that I suppress my sneeze that is raised because some other woman has thought me that's what I feel sneezing and I control it that she should not know that matter!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1319:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடலை நிறுத்தி அவளை நான் அன்புடன் மகிழ்விக்க முயன்றாலும் இந்த கலையை நீங்கள் யாரிடம் கற்றுக்கொண்டீர் என்றொரு ஊடலை ஆரம்பிக்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I convince her for avoiding clash and lovingly start to hug her, she starts a clash by asking from whom I learnt this skill!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1320:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் அழகைக் கண்டு வியந்து  பொறுமையாக ரசித்தாலும், என் அழகை யாருடன் ஒப்பிட்டு அளவு பார்க்கிறீர் என்று புதுமையாய் ஒரு வம்பை செய்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I lovingly admire her beautiful structure by gazing her, suddenly she starts a new type of clash with whose structure I am comparing her and I am measuring!
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS