Skip to main content

திருக்குறள் அதிகாரம் 133. ஊடலுவகை CHAPTER 133. THE PLEASURES OF FEIGNED CLASHES BETWEEN LOVERS (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 133.
ஊடலுவகை
CHAPTER 133.
THE PLEASURES OF FEIGNED CLASHES BETWEEN LOVERS
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1321:
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலர்களிடத்தில் தவறே இல்லாவிடினும், ஒருவருக்கொருவர் ஊடல் செய்து இளைப்பாறுவது போன்று ஒரு சுகம் ஏதும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if there is no mistake on either of lovers, some kind of pleasant quarrel should be there. because, nothing could pay the most pleasure as if a kind of clash gives.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடல் சற்றே அன்பை வாடச் செய்து வருத்தம் தந்தாலும் காதலர்களுக்கு அது பெருமை தரக்கூடிய விஷயமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Of course, even if the pleasant clash between lovers causes a kind of pain, it is the most prideful to them.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1323:
புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலத்தில் நீர் ஒன்றியிருப்பதுபோல்  இணைந்துள்ள காதலர்களிடத்தில் காணப்படும் ஊடலால் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The immeasurable pleasure caused of the pleasant-clash of the lovers who have merged as if the water is merged with the Earth can never be found even in the world of the lord.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1324:
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரை தழுவி இன்பம் காணுவதற்கு காரணம் ஊடலே. சமயத்தில் அவ்வூடலில் தான் என்  மன உறுதி வீழ்ந்து போகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The reason of my availing the most amount of pleasure during our pleasant time is our pleasant clash we did earlier. I assume only that cracks the strength of my mind.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1325:
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தவறே இல்லாமல் போனாலும் அவளுடன் ஊடல் செய்து அவளை . தழுவாதிருப்பதும்கூட ஒருவித இன்பம் தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if I haven't found any fault on her, being without hugging her by having a small clash is also the most pleasure.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1326:
உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
புதிய உணவு உண்பதற்கு முன் முன்பு உண்ட உணவு செரிப்பதே இன்பம். அதுபோல காதலர்கள் கூடுவதில் காணும் இன்பத்தை விட ஊடுவதில் காணும் இன்பமே சுகம் தரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is healthy only if the past food is digested before eating new food. Likewise sometimes, the pleasant quarrel would offer more pleasure than an intercourse.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1327:
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடலில் தோற்பவரே வெற்றிகண்டவராவார் என்கிற உண்மை ஊடலுக்கு பின்பு நடக்கும் கூடலின் பொழுது கிடைக்கும் இன்பத்தின்பொழுதுதான் விளங்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The fact of only the one (of the lovers) who gets failed during clash of talk is the winner would be known after getting the pleasure through the intercourse that is done after the clash.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1328:
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கூடி களித்து வியர்க்கும் அளவுக்கு கிடைக்கப்பெற்ற இன்பத்தை மீண்டும் பெறவேண்டுமாயின் அவளுடன் ஊடலொன்று செய்து பெறலாம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If wants to get the pleasure that was obtained as far as sweating a lot through the intercourse, again, the only way is that starting a pleasant clash with her.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1329:
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒளி நிறைந்த என் அவளின் ஊடல் நீடிக்கட்டும்; அதை தணிக்க நான் இரங்கும் நிலையும் நீடிக்கட்டும்; இச்செயல்களால் இரவுப் பொழுதும் நீடித்து எங்களுக்கு இன்பம் தரட்டும்!
- வை.மகேந்திரன்

Explanation in English:
May the pleasant clash of her lasting; May the stance of my tackling her too would be lasting; Due to that, May this night would be prolonging more, and would offer more pleasure to us!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1330:
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடிக் களைப்படைந்து பின் கூடிக்களிப்படைந்தால் தான் காமத்தின் முழு உருவத்தை உணர முடியும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the lovers doing intercourse after they meet out some pleasant quarrel with one and another, the perfect pleasure can be obtained.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?