தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் அனைத்து குறள்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரை எழுதியவர்: வை.மகேந்திரன் M.A., M.A., ELT., ஆங்கிலத்துறை வருகைப் பேராசிரியர் வடக்குப்பொய்கைநல்லூர் நாகப்பட்டினம்

தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் அனைத்து குறள்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரை எழுதியவர்: வை.மகேந்திரன் M.A., M.A., ELT., ஆங்கிலத்துறை வருகைப் பேராசிரியர் வடக்குப்பொய்கைநல்லூர் நாகப்பட்டினம் MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR (Post) NAGAPATTINAM MOBILE: 9842490745, 6380406625 பகுதி - 1 அறத்துப்பால் MORALITY OF VIRTUE அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து CHAPTER 1 Praising the God ---------------------- குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - தெய்வப்புலவர் விளக்கவுரை: சொற்கள், வார்த்தைகள் எழுத்துக்களில் துவங்குவதுபோல் இவ்வுலகிற்கு ஆதியாய் விளங்குவது இறைவன். - வை.மகேந்திரன் Explanation in English: The world begins by God as if the texts are done by alphabet. - MAHENDIRAN V ---------------------- குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: கடவுளின் பொற்பாதங்களை வணங்காதோர் எவ்வளவுதான் கற்றறிந்து அறிஞராயிருந்தாலும் அவர்கள் மதிப்பற்றவர்கள் - வை.மகேந்திரன் Explanation in English: However you are literate in all respects, it's invalid if you don't worship the feet of God. - MAHENDIRAN V ---------------------- குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் - தெய்வப்புலவர் விளக்கவுரை: இதயத்தில் மலராய் இறைவன் இருக்கிறான் என்றெண்ணி வாழ்வோரின் வாழ்க்கை ஈடில்லா இன்பத்தை பெறும். - வை.மகேந்திரன் Explanation in English: One will have been pleasant infinitely if he thinks that God places in his flowered heart. - MAHENDIRAN V ---------------------- குறள் 4: வேண்டுதல்வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல - தெய்வப்புலவர் விளக்கவுரை: அனைவருக்கும் பொதுவுடையவனான இறைவனையே நினைத்திருப்போருக்கு துன்பம் விலகிச்செல்லும். - வை.மகேந்திரன் Explanation in English: Sadness will fly away if one merges him with God who is common for all. - MAHENDIRAN V ---------------------- குறள் 5: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - தெய்வப்புலவர் விளக்கவுரை: இறைவனின் உண்மையான புகழை நம்புவோர் அனைத்து பாவங்களிலிருந்தும் விலகி நிற்பர். - வை.மகேந்திரன் Explanation in English: If the true fame of God is believed by one, he will be away from all of his sins. - MAHENDIRAN V ---------------------- குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் - தெய்வப்புலவர் விளக்கவுரை: ஐம்புலன்களையும் அடக்கியாளும் வித்தை கற்றவன் குறைவின்றி நீண்ட நாட்கள் வாழ்வான். - வை.மகேந்திரன் Explanation in English: One who can control Evil desires raised from five objects of sense will have been alive for long time. - MAHENDIRAN V ---------------------- குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது - தெய்வப்புலவர் விளக்கவுரை: கடவுளுக்கு இணை ஏதுமில்லை என்று நினைத்தாலொழிய துன்பத்தை தவிர்ப்பது அரிதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Unless one deserves that no parellel to God, hardly to give up sadness. - MAHENDIRAN V ---------------------- குறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது - தெய்வப்புலவர் விளக்கவுரை: கருணையின் கடலான இறைவனின் பாதத்தை வணங்கினாலொழிய துன்பம் எனும் கடலை கடக்க முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: Hardly to cross the sea of sadness unless praying the feet of sea of graces of God. - MAHENDIRAN V ---------------------- குறள் 9: கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை - தெய்வப்புலவர் விளக்கவுரை: இறைநம்பிக்கையில்லை என்பது ஒருவனின் தலையில் அதன் இராஜ உறுப்புகள் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும். - வை.மகேந்திரன் Explanation in English: One doesn't worship God means that his head doesn't have its organs. - MAHENDIRAN V ---------------------- குறள் 10: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் - தெய்வப்புலவர் விளக்கவுரை: கடவுளை நம்புவோர் மட்டுமே வாழ்க்கையெனும் பிறவி கடலை மகிழ்வுடன் கடந்து செல்வர். நம்பாதவர்களால் அப்படி செய்ய முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: Only the persons who fear to God will cross the sea of entire life, others can't do. - MAHENDIRAN V ----------------------- Explanation in Tamil and English written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) ----------------------------- அதிகாரம் 2. வான்சிறப்பு CHAPTER 2. FEATURES OF THE SKY/ RAIN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று - தெய்வப்புலவர் விளக்கம்: விண்ணிலிருந்து தோன்றிய இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களும் வாழும் வண்ணம், அவ்விண்ணே தரும் மழையே முதல் அமிர்தம் ஆகிறது. வை.மகேந்திரன் Explanation in English: The rain that is offered by the sky for all living beings in the earth that too was offered by the sky is the first nectar. MAHENDIRAN V ------------------------ குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. - தெய்வப்புலவர் விளக்கம்: மழையினால் தான் குடிநீர் கிடைக்கிறது என்பது ஒரு புறம். உணவளிக்கும் அனைத்து தாவரவகைகள் வளர்வதற்கு மழை தான் காரணம். - வை.மகேந்திரன் Explanation in English: Besides rain is being a main source of drinking water, that is the base for growing all plants for food. - MAHENDIRAN V ------------------------ குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. - தெய்வப்புலவர் விளக்கம்: பசிதீர்க்க கடல் நீரை பருக முடியுமா? நேரத்திற்கு மழை பொழியவில்லையென்றால் அனைத்து ஜீவராசிகளும் பசியால் துவளும். - வை.மகேந்திரன் Explanation in English: If there is no rain timely, all living beings shall get hunger vastly since the sea water can't be used for drinking . - MAHENDIRAN V ------------------------ குறள் 14: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். - தெய்வப்புலவர் விளக்கம்: மழை இப்புவிக்கு இடைவிடாது பொழியும் தன் பணியை செய்ய தவறுங்கால், புவியில் உழவும் தன் பணியை செய்ய தானே நிறுத்திக் கொள்ளும். - வை.மகேந்திரன் Explanation in English: If rain stops its routine work to the earth, ploughing too would stop its work in the earth. - MAHENDIRAN V ------------------------ குறள் 15: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை - தெய்வப்புலவர் விளக்கம்: கடுமையாய் பொழிந்து புவியை மிரள வைப்பதும் மழைதான், பொழியா நிலை காட்டி புவியை வறண்டுபோக வைப்பதும் மழை தான். - வை.மகேந்திரன் Explanation in English: It is the rain which threatens the earth by its over rain. It is also the rain which makes the earth drought by its no rain. - MAHENDIRAN V ------------------------ குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது - தெய்வப்புலவர் விளக்கம்: மழையென்று ஒன்று இல்லையென்றால் இப்புவியில் புற்களை கூட பார்க்கமுடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: If it doesn't rain, even a bit of grass too can't be seen on the earth. - MAHENDIRAN V ------------------------ குறள் 17: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் - தெய்வப்புலவர் விளக்கம்: மேகங்கள் மூலம் கடலிலிருந்து நீரை எடுத்து மழை பொழிந்தாலும், மழை பெய்யாவிட்டால் கடலும் வறண்டுபோகும். - வை.மகேந்திரன் Explanation in English: The oceans too would get dried out if there is no rain fall even though rain gets water from oceans through clouds. - MAHENDIRAN V ------------------------ குறள் 18: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: மழையில்லையேல், பூஜை புனஸ்காரம் தியானம் போன்ற இறைச்செயல்கள் எதையும் செய்ய இயலாது. - வை.மகேந்திரன் Explanation in English: If rain fails to fall, none can perform even pooja, meditation and other spiritual services. - MAHENDIRAN V ------------------------ குறள் 19: தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் - தெய்வப்புலவர் விளக்கம்: மழைபொழிவு இல்லையானால் தானம் தர்மம் அறநெறி செய்பாடுகளை கூட செய்ய இயலாது. - வை.மகேந்திரன் Explanation in English: If the sky doesn't offer rain, no moralities can be done by human to others, and virtual practiced too shall be off. - MAHENDIRAN V ------------------------ குறள் 20: நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: மழைபொழிவு தடைபட்டால் வாழ்வியல் முறைகளில் உள்ள ஒழுக்கம் கெட்டு எதுவும் இல்லா நிலை ஏற்படும். - வை.மகேந்திரன் Explanation in English: The world means nothing, and disciplines of people shall be vanished if there is no water source that rain offers. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect will be prohibited. Thanks. MAHENDIRAN V ---------------------------------- அதிகாரம் 3 நீத்தார் பெருமை CHAPTER 3 PRIDE OF GENUINE PEOPLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு நூலின் துணிவு மற்றும் பிரதான பணி என்னவெனில், ஆசைகள் துறந்து, ஒழுக்கநெறிமுறைகளுடன் வாழும், வாழ்ந்த மக்களை போற்றி கூறுவதே! வை. மகேந்திரன் Explanation in English: Bravery of a book is to say the prides of legends who carry all disciplines and their status of giving up all desires! MAHENDIRAN V ------------------------ குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று - தெய்வப்புலவர் விளக்கம்: தியாகம் செய்து வாழ்ந்த முனிவர்களின் பெருமைகளை கூறுவதென்பத எல்லையற்றது. இறந்துபோனவர்களை ஒருவர் விடாமல் எண்ணுவதுபோல. வை. மகேந்திரன் Explanation in English: To explain the prides of sacrifices of sages is like counting persons who had died so far. MAHENDIRAN V ------------------------ குறள் 23: இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லற வாழ்க்கையின் இன்பம் துன்பம் இரண்டையும் அறிந்து ஆராய்ந்து ஈண்டுணர்ந்து அறவாழ்க்கை மேற்கொண்டவர்கள் பெருமைக்குரியவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Those who know and explore both the pleasures and sufferings of home life and are pious are the ones who are proud. - MAHENDIRAN V ------------------------ குறள் 24: உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஐம்புலங்களையும் அடக்கியாள உறுதி என்கிற அங்குசத்தை மனதில் கொள்பவனே நன்மைகளுக்கான வித்தாவான். வை. மகேந்திரன் Explanation in English: Ones who control five objects of senses by having ankush in their mind are seeds of goodness. MAHENDIRAN V ------------------------ குறள் 25: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி - தெய்வப்புலவர் விளக்கம்: ஐந்து புலன்களையும் அடக்கி ஆளும் ஒருவன், இவ்விஷயத்தில் முன்பு பாடம் பெற்று சான்றாக நின்று வானத்தில் வாழும் இந்திரனின் நிலையோடு ஒப்பிட்டு வாழ்பவன் ஆவான். - வை. மகேந்திரன் Explanation in English: One who controls five objects of senses is the one who lives by comparing with the state of Indiran who lives in the sky who was lessoned earlier in this regard. - MAHENDIRAN V ------------------------ குறள் 26: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: சவால் நிறைந்த நற்செயல்களை செய்வோரே பெரியோர் ஆவார்கள்.மற்றோர் சிறியோர்களே. வை. மகேந்திரன் Explanation in English: Ones who can do challenges are known as highly persons others are lowest ever. MAHENDIRAN V ------------------------ குறள் 27: சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் - ஆகிய ஐந்தையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்டவனை உலகம் மெச்சும். வை. மகேந்திரன் Explanation in English: One who is intellectual to distinguish five senses such as taste light touch sound and smell is praised by the world. MAHENDIRAN V ------------------------ குறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவரின் தரம் எப்படி என்பதை அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்தே அளவிட்டு விலாம். வை. மகேந்திரன் Explanation in English: Quality of persons will be identified based on their words addressed by them always. MAHENDIRAN V ------------------------ குறள் 29: குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: மிக உயரிய குணம் நிறைந்த மாமனிதர்கள் ஒரு கணம் வெகுண்டால் அதை காப்பது என்பது அரிதாகும். (வெகுளா மாநிடர் வெகுண்டால் அதை காத்தல் அரிது என்று பொருள்படுகிறது) - வை. மகேந்திரன் Explanation in English: It's hardly to abate the anger of ones who are extremely having good characters if they get angered. (It's meant if ones who basically don't anger are getting anger, it's hardly to tackle such..?) - MAHENDIRAN V ------------------------ குறள் 30: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் விளக்கம்: உண்மையான அந்தனன் யார் என்றால், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி அறநெறி தவறாமல் வாழ்பவனே. வை. மகேந்திரன் Explanation in English: One who shows kindness benevolence to all living beings and performs genuinely in all respects is known as pure brahmin. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited. Thanks. MAHENDIRAN V 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் CHAPTER 4 FEATURES OF MORALITY ---------------------------------- (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) ---------------------------------- தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறை ஒன்றே ஒருவனுக்கு செல்வத்தையும் புகழையும் கொண்டுவர முடியுமேயொழிய வேறெதுவும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: None can offer fames and wealth but the stance of moral help of ones will do. - MAHENDIRAN V ------------------------ குறள் 32: அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கம் அறநெறியை ஒருவர் பெற்றிருத்தல் அவசியம். இல்லேல், உலகிற்கு கேடு விளைவிக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Morality is the prime sense and to be had. Failing which is concerned an evil disease in the world. - MAHENDIRAN V ------------------------ குறள் 33: ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: உதவி செய்யும் நற்குணம் கொண்டோர், உதவுவதற்கு நேரம் காலம் ஆள் பார்க்க மாட்டார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: No time or place to be scheduled by ones if they want to help to others. - MAHENDIRAN V ------------------------ குறள் 34: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற - தெய்வப்புலவர் விளக்கம்: மனதில் குற்ற உணர்வையும், வெறுப்பையும் சுமந்துகொண்டு பிறர்க்கு அறம் செய்யும் நிலை மதிப்பற்றது. - வை.மகேந்திரன் Explanation in English: Having guilty self and being moral to others is not pure morality. Helps done by them are invalid. - MAHENDIRAN V ------------------------ குறள் 35: அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் - தெய்வப்புலவர் விளக்கம்: பேராசை, பொறாமை, கோபம், கொடுமை குணம் கொண்டோர் பிறகுக்கு உதவி செய்யுங்கால், அது அறம் ஆகாது. - வை. மகேந்திரன் Explanation in English: The state of doing helps by having the four dirty senses jealousy, greed, anger and harshness is not virtual. - MAHENDIRAN V ------------------------ குறள் 36: அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: காலம் அறிந்து நேரத்திற்கு செய்யும் உதவியே பிற்காலத்தில் முதுமையில் ஒருவருக்கு கஷ்ட்ட நிலை இல்லாத வாழ்க்கையை தரும். - வை. மகேந்திரன் Explanation in English: To do virtues shouldn't be postponed in early days at any reason. Doing those earlier will save ones from suffers in elderly times. - MAHENDIRAN V ------------------------ குறள் 37: அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை - தெய்வப்புலவர் விளக்கம்: பல்லக்கில் அமர்ந்து பயணிப்பவர்களையும், அதை சுமந்து செல்பவர்களையும் வைத்தே அறத்தின் தன்மையை அறியலாம் என்பதை சொல்ல தேவையில்லை. - வை. மகேந்திரன் Explanation in English: Needless to say that this is cause of morality to ones who sit on the chariot and ones who carry that. - MAHENDIRAN V ------------------------ குறள் 38: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் - தெய்வப்புலவர் விளக்கம்: நிறுத்தாமல் அறம் செய்துகொண்டிருப்பவனுக்கு அச்செயலே அவனது மறுபிறப்புநிலைப்பாட்டை நிறுத்திவைக்கும். - வை. மகேந்திரன் Explanation in English: Doing helps morally without stopping will block ones' rebirth stances. - MAHENDIRAN V ------------------------ குறள் 39: அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல - தெய்வப்புலவர் விளக்கம்: மனமுவந்து செய்யும் அறத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு எதன் மூலமும் பெற முடியாது. - வை. மகேந்திரன் Explanation in English: Nothing will cause the true happiness but ones' doing hearty helps to others will cause it. - MAHENDIRAN V ------------------------ குறள் 40: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி - தெய்வப்புலவர் விளக்கம்: தார்மீக ரீதியில் மற்றவர்களுக்கு உதவுவது ஒருவருக்கு ஒரு பழக்கமான செயலாக மாற வேண்டும் மற்றும் அனைத்து தீமைகளையும் தூக்கி எறிய வேண்டும். - வை. மகேந்திரன் Explanation in English: Aiding others morally should become a habitual activity to ones and all evils to be hurled up. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) ---------------------------------- அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) ------------------------ தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை - தெய்வப்புலவர் விளக்கம்: இல்வாழ்வில் சிறந்து விளங்குபவன் யாரெனில், பெற்றோர், மனைவி, மக்கள் மூவரையும் நல்வழியில் காத்து நிற்பவனே. - வை மகேந்திரன் Explanation in English: Liabilities of a married man is to lead and protect his parents, wife and children in all good respects. MAHENDIRAN V ------------------------ குறள் 42: துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: தன் குடும்பத்திற்கும் அப்பாற்பட்டு ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுபவனே உண்மையான இல்லத்தரசன். - வை மகேந்திரன் Explanation in English: Only the man who protects, respects and helps infinitely (beyond his family) to all poor people and orphaned persons who suffer from poverty is a true married man MAHENDIRAN V ------------------------ குறள் 43: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: இறைவனை, முன்னோர்களை துதிப்பது, விருந்தினர்களை உபசரித்தல், உறவினர்கள் நட்புகளை மதித்தல் இவைகளே ஒருவனின் தலையாய கடமை. - வை மகேந்திரன் Explanation in English: Praying God and ancestors, respecting guests, colleagues and friends is the prime duties of ones. MAHENDIRAN V ------------------------ குறள் 44: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல - தெய்வப்புலவர் விளக்கம்: பழியில்லா முறையில் ஈட்டிய செல்வத்தை மனமுவந்து உறவுகளுக்கு கொடுத்துதவவேண்டும். அப்புண்ணிய செயலின் பலன் காலத்திற்கும் அழியாது. - வை மகேந்திரன் Explanation in English: Earnings done without any sin to be shared with relations fullheartly. Doing such virtues will never be destroyed. MAHENDIRAN V ------------------------ குறள் 45: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பு செலுத்தி அறம் செய்து வாழ்தல் ஒரு குடும்பஸ்த்தனின் வாழ்க்கைக்கு தரத்தையும் பயன்களையும் சேர்க்கும். - வை மகேந்திரன் Explanation in English: Showing love and morality to others will cause a good quality and benifits to ones' married life. MAHENDIRAN V ------------------------ குறள் 46: அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் - தெய்வப்புலவர் விளக்கம்: குடும்ப உறுப்பினர்களிடம் அன்பு செலுத்தி வாழும் வாழ்க்கை தரும் சந்தோஷத்தை ஒருவன் வேறு எது மூலமும் பெறமுடியாது. - வை மகேந்திரன் Explanation in English: One won't get any pleasant on other manners rather than he gets the pleased life by joying with his family. MAHENDIRAN V ------------------------ குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: நல்ல இல்லற வாழ்க்கைக்கு வரைமுறை வகுத்து செயற்கையாக திட்டங்கள் வகுப்பதை காட்டிலும், நற்பண்புகளுடன் இயல்பாக துணைவியுடன் வாழும் வாழ்க்கையே உயர்ந்தது. - வை மகேந்திரன் Explanation in English: One who lives by naturally good activities with his spouse is greater than ones who just seek for formulae to do the same. MAHENDIRAN V ------------------------ குறள் 48: ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: தான் அறம் செய்து ஒழுக்கத்துடன் வாழ்வதை போன்று பிறர் வாழ்க்கையையும் அறம் நிறைந்ததாக செய்வது தவம் செய்து வாழ்வதை விட சிறந்தது. - வை மகேந்திரன் Explanation in English: Bringing others too to virtual way like one's own life is greater than living by a valued prayer. MAHENDIRAN V ------------------------ குறள் 49: அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரின் விமர்சனங்களுக்கு இடம் கொடாது நல்லொழுக்கங்களுடன் வாழ்வதே எல்லாவற்றையும் விட மேன்மையானது. - வை மகேந்திரன் Explanation in English: The stance of living by loving with each other is a real moral life. Living without giving chance to others to criticize your life is greater than all. MAHENDIRAN V ------------------------ குறள் 50: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: நற்பண்புகளுடன் அடுத்தோர் வியக்கும் வண்ணம் வாழ்க்கை நடத்துபவன் இறைத்தன்மைக்கு இணையானவனாவான். - வை மகேந்திரன் Explanation in English: One who moves his life amazingly with enormous attitudes in this world shall be considered parellel to God. MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V ---------------------------------- அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் Chapter 6 COUPLES' SAKE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 51: மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: துணைவனின் சம்பாதித்யத்திற்கு தகுந்தாற்போல் குடும்பத்தை நகர்த்தி செல்பவளே சிறந்த மனைவியாவாள். - வை.மகேந்திரன் Explanation in English: The wisdom spouse is that to know to drive the family amicably based on the volume of her man's earning. - MAHENDIRAN V ------------------------ குறள் 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: மனைவி ஒழுக்கம் தவறி வாழ்ந்தால் குடும்ப கௌரவம், துணைவனின் மதிப்பு, புகழ் அனைத்தும் பாழாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If the spouse fouls at any respect or at any way, the values of her man will fly away even if he has fame tons of. - MAHENDIRAN V ------------------------ குறள் 53: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு குடும்பத்தின் தரம் என்பது மனைவியின் ஆளுமை மற்றும் அவள் தரத்தை பொறுத்தமைந்தாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The quality of a family is depending upon woman. If she is good all is well otherwise worst. - MAHENDIRAN V ------------------------ குறள் 54: பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு பெண்ணின் கற்பே குடும்பத்தின் குலவிளக்காகும். எதையும் இதனுடன் ஒப்பிட முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: Virginity of a woman in a family is the best holy lamp. No any other can be comparable. - MAHENDIRAN V ------------------------ குறள் 55: தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை - தெய்வப்புலவர் விளக்கம்: தன் கணவனை மனதார மதிக்கும் வணங்கும் மனைவியானவள், மழை பெய்யட்டும் என்று சொன்னால் மழை பொழியும். - வை.மகேந்திரன் Explanation in English: If a woman who heartily thinks that her spouse is her god orders to rain, it will rain. - MAHENDIRAN V ------------------------ குறள் 56: தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் - தெய்வப்புலவர் விளக்கம்: எந்த சூழலிலும், தன் கணவனையும் மக்களையும் நன்கு கவனித்து கொள்ளும் மனைவியே சிறந்த மனைவியாக கருதப்படுகிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: One who is taking care of the family and husband at all sitautions is the best and tiredless woman of a family. - MAHENDIRAN V ------------------------ குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை - தெய்வப்புலவர் விளக்கம்: பெண்ணின் கற்பு அவளாகவே பாதுகாத்துகொள்ளும் ஒன்றாகும். பிறர் கவனித்து பாதுகாப்பது அல்ல. - வை.மகேந்திரன் Explanation in English: Woman's virginity is protected herself but not watching by someone else. - MAHENDIRAN V ------------------------ குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: நன்னடத்தை உள்ள கணவனை பெற்ற மனைவியானவள் இவ்வுலகில் புகழில் சிறந்து விளங்குவாள். - வை.மகேந்திரன் Explanation in English: A woman who is having a genuine spouse in all respects will get all fames in the world. - MAHENDIRAN V ------------------------ குறள் 59: புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கநெறியில்லாமல் கணவனோ மனைவியோ நடந்துகொண்டால், உற்றாரின் அவச்சொல்லுக்கு முன் எப்படி தைரியமாக வாழ முடியும்? - வை.மகேந்திரன் Explanation in English: If there is no a moral life either of couple, how can they walk bravely in the presence of blamers? - MAHENDIRAN V ------------------------ குறள் 60: மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு பெண்ணின் நற்பண்புகளுக்கு அடையாளம் அவளது நன்னடத்தைகள். சிறப்பான பிள்ளைகளை பெற்றிருப்பது இன்னும் அவளுக்கு அழகு. - வை.மகேந்திரன் Explanation in English: The true beaty of a woman is her best attitudes, and having good children is the most beautiful. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 7 மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவார்ந்த குழந்தைகளை பெற்றிருப்பதை காட்டிலும் பெருஞ்செல்வம் இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: No any other wealth is the biggest to one in the world but to having intellectual children. - MAHENDIRAN V ------------------------ குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: சமூகத்தில் யாதொரு கலங்கமும் இல்லா அறிவிற்சிறந்த குழந்தைகளை பெற்றிருந்தால் ஏழேழு பிறவியிலும் வருத்தம் வராது. - வை.மகேந்திரன் Explanation in English: One who has wisdom children those without carrying any dirty grade from the society will not meet any sadness ever. - MAHENDIRAN V ------------------------ குறள் 63: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும் - தெய்வப்புலவர் விளக்கம்: தம்பதியினர் என்ன தான் தன் மக்களை புகழாக மெச்சினாலும், மக்களின் (குழந்தைகளின்) நல்லவை கெட்டவை அவர்களின் நன்நடத்தைகளால் பெறக்கூடியவைகளே. - வை.மகேந்திரன் Explanation in English: Though parents say children are their sources, betterment and sadness of children are obtained by their own virtues and sins. - MAHENDIRAN V ------------------------ குறள் 64: அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தெய்வப்புலவர் விளக்கம்: அமிர்தத்தை காட்டிலும், ஒரு பெற்றோருக்கு சுவையான உணவு யாதெனில், தன் குழந்தைகள் தங்கள் கைகளால் பிசைந்து தரும் ஒரு கவளம் கஞ்சியே. - வை.மகேந்திரன் Explanation in English: The top most best food greater than nectar in the world to parents is only the kneaded kanji by hands of their children. - MAHENDIRAN V ------------------------ குறள் 65: மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: பெற்றோரிடன் குழந்தைகள் பெறும் அரவணைப்பும், குழந்தைகளின் இனிமையான மழலை சப்தமும் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை வேறெதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: No any other pleasance is to both child and parent than hugging affectionately, likewise the sweetest sound to parent is to hearing early talks of child. - MAHENDIRAN V ------------------------ குறள் 66: குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: தன் குழந்தைகளின் மழலை சப்தங்களை கேட்காத பெற்றோர்களே குழலும் யாழும் இனிமையாக இருக்கிறது என்பர். - வை.மகேந்திரன் Explanation in English: Parents those who haven't heard the early talks of children may say that the sounds of fluet and veena are sweet. - MAHENDIRAN V ------------------------ குறள் 67: தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு தந்தை மகனுக்கு/மகளுக்கு செய்யக்கூடிய சிறந்த உபகாரம் எது என்றால், அவர்களை சமூகத்தில் ஒழுக்க சீலர்களாக்குவதும் கல்விமான்களாக்குவதும்தான். - வை.மகேந்திரன் Explanation in English: The highest assistance of father that to be done to his son is to make him the best and first in literate. - MAHENDIRAN V ------------------------ குறள் 68: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: பெற்றோரை விட பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலைப்பாடு பெற்றோருக்கு சந்தோஷம் தருவதோடு அனைத்து உயிரினங்களுக்கும் நன்மைபயக்கக்கூடியதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If children are greater in literate than parents, the stance of such is not only happiness of parents but also helpful to all living beings. - MAHENDIRAN V ------------------------ குறள் 69: ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் - தெய்வப்புலவர் விளக்கம்: பெற்றோருக்கு, தன் பிள்ளைகள் சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் உள்ளார்கள் என்று கேட்கும் ஒலியே அவர்களை பெற்றெடுத்த பொழுது கிடைத்த சந்தோஷத்தை விட பெரிதானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The good talks of society about her son will cause more happy to a mother than the happiness felt by here when she had given him birth. - MAHENDIRAN V ------------------------ குறள் 70: மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு மகன் தன் தந்தைக்கு செய்யும் பெரிய உதவி எது என்றால், தன் நன்நடத்தையாலும் தான் பெறும் புகழாலும் 'இவனை பெறுவதற்கு இவன் தந்தை எத்தனை தவம் செய்தானோ' என்று சமூகத்தை புகழவைப்பதுதான். - வை.மகேந்திரன் Explanation in English: The greatest help of a son to his father is by having good attitudes that the society has to applaud his father's prayer for his being born him son. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 8 அன்புடைமை CHAPTER 8 LOVELYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் - தெயவப்புலவர் விளக்கம்: ஒருவர்மீது வைத்துள்ள அன்பை அடைத்து வைக்க முடியாது. அன்புக்குறியோர் துயரத்தில் இருக்கும்பொழுது கண்ணீர் பெருகி அன்பை வெளிக்காட்டுவர் அல்லவா? -வை.மகேந்திரன் Explanation in English: Love put on one can't be blocked. Tears will have shown the loveliness when your beloved person being on suffer. - MAHENDIRAN V ------------------------ குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு - தெயவப்புலவர் விளக்கம்: அன்புள்ளம் கொண்டோர் தன் உடைமைகளை பிரதிபலன் எதிர்பாராது பிறர்க்கு வழங்குவர். அன்பில்லாதோர் அனைத்தையும் தானே அனுபவிப்பர். -வை.மகேந்திரன் Explanation in English: Ones who have loveliness in heart would offer their properties to others. Those who don't have such would be eager to own all. - MAHENDIRAN V ------------------------ குறள் 73: அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு - தெயவப்புலவர் விளக்கம்: உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவின் மதிப்பு உயிர் உடலின் பால் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை பொறுத்ததாகும். -வை.மகேந்திரன் Explanation in English: The relationship between body and soul is determined based on the depth of love of soul put on body. - MAHENDIRAN V ------------------------ குறள் 74: அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு - தெயவப்புலவர் விளக்கம்: அனைவரிடத்திலும் அன்பும் பாசமும் காட்டுவோருக்கு இப்பரந்த உலகத்தில் எல்லையில்லா நட்புகள் வந்துசேரும். -வை.மகேந்திரன் Explanation in English: Showing love and affection to all will bring numerous and enormous friendliness from the broad world. - MAHENDIRAN V ------------------------ குறள் 75: அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு - தெயவப்புலவர் விளக்கம்: பிறருடன் உள்ளார்ந்த மெய்யன்புடன் கூடி நின்றால் மட்டுமே வாழ்வில் ஒருவர் மகிழ்ச்சியை காணமுடியும். -வை.மகேந்திரன் Explanation in English: Only because of having beloved heart to approach all, one can be living cheerfully in life. - MAHENDIRAN V ------------------------ குறள் 76: அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை - தெயவப்புலவர் விளக்கம்: அன்பின் வெளிப்பாடு ஒழுக்கத்தினால் மட்டுமே விளைவதல்ல. ஒருவரின் விவேகமும் துணிச்சலும் கூட அன்பை கொண்டு வரும். -வை.மகேந்திரன் Explanation in English: Love is a cause not only for morality but also for one's bravery. (If one says love is cause only for morality it means his misunderstanding. Love is the big cause for one's bravery!) - MAHENDIRAN V ------------------------ குறள் 77: என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் - தெயவப்புலவர் விளக்கம்: சுட்டெரிக்கும் சூரியன் எலும்பில்லா உயிரியை வெப்பத்தால் சுடுவதுபோல், அன்பில்லாதோரின் இதயத்தை அறம் வெறுத்தொதுக்கும். -வை.மகேந்திரன் Explanation in English: As if the sun is injuring a boneless living being by its hot, morality will severely hate one who doesn't have loveliness. - MAHENDIRAN V ------------------------ குறள் 78: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று - தெயவப்புலவர் விளக்கம்: அன்பில்லாதோரின் வாழ்க்கை என்பது பாலைவனத்தில் வறண்டு நிற்கும் மரம் பூத்துக் குலுங்குவது போலாகும். -வை.மகேந்திரன் Explanation in English: One's life being without hearty loveliness is like a dried tree in desert gets blossomed. - MAHENDIRAN V ------------------------ குறள் 79: புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு - தெயவப்புலவர் விளக்கம்: உள்மனதில் அன்பு பண்பு இல்லாத ஒருவனுக்கு புற உறுப்புகள் அழகாய் ஒழுங்காய் இருந்தும் என்ன பயன்? -வை.மகேந்திரன் Explanation in English: If ones don't have a beloved heart, what can they gain despite having all other prime parts? - MAHENDIRAN V ------------------------ குறள் 80: அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு - தெயவப்புலவர் விளக்கம்: அன்பு நிறைந்த இதயம் இருந்தால் தான் உடம்பில் உள்ள உயிருக்கு மதிப்பு. அன்பில்லை என்றால் அது எலும்புகளால் போர்த்தப்பட்ட வெறும் உடல். -வை.மகேந்திரன் Explanation in English: Only the beloved heart is the soul of the body of one. otherwise it is just a body covered by bones. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 9 விருந்தோம்பல் CHAPTER 9 HOSPITALITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - தெய்வப்புலவர் விளக்கம்: இருந்து உண்டு வாழ்ந்து மகிழ்வது என்பது நாடி வருவோரை விருந்தோம்பி மகிழ்விப்பதை தான் குறிக்கும். - வை. மகேந்திரன் Explanation in English: The stance of one's living pleasant means that the quality of hospitality of him to his guests. - MAHENDIRAN V ------------------------ குறள் 82: விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: விருந்துண்ண வந்தோர் வெளியில் பசியுடன் காத்துகிடக்க, உள்ளே சாகா வரம் தரும் மருந்தாக இருந்தாலும் அதை உண்பது மரபு அல்ல. - வை. மகேந்திரன் Explanation in English: While your guest is waiting outside if you eat food even if such food is a medicine for your undying, that's not humane. - MAHENDIRAN V ------------------------ குறள் 83: வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று - தெய்வப்புலவர் விளக்கம்: விருந்தோம்பல் தொடர்ந்து செய்வதனால் செல்வம் வற்றிவிடும் என்று பயப்பட தேவையில்லை. - வை. மகேந்திரன் Explanation in English: Need not fear by thinking wealth would melt because of one's doing hospitality regularly. - MAHENDIRAN V ------------------------ குறள் 84: அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: மனமுவந்து அகம் மலர்ந்து விருந்தோம்பல் செய்பவரின் வீட்டில், செல்வக் கடவுளான லக்ஷ்மி என்றும் குடியிருப்பாள். - வை. மகேந்திரன் Explanation in English: If one hospitate a guest fullheartly with smiling face, the goddess of wealth will dwell his home. - MAHENDIRAN V ------------------------ குறள் 85: வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் - தெய்வப்புலவர் விளக்கம்: விருந்தளித்து உபசரித்த பின் எஞ்சியிருப்பதை உண்டு மகிழும் நல்லோர் வீட்டில் உணவுக்காக விதைவிதைக்க வேண்டியதில்லை. - வை. மகேந்திரன் Explanation in English: Need not plant a seed for food in the house of one who eats the remaining food after he hospitates his guest. - MAHENDIRAN V ------------------------ குறள் 86: செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: பலருக்கும் உணவளித்து, மேலும் உணவளிக்க பற்பவரையும் எதிர்நோக்கும் நல் விருந்தோம்பியை வானிலிருந்து இவன் உபசரிப்பான். - வை. மகேந்திரன் Explanation in English: One who expects more guests for his home to hospitate despite having already guests at his home will be hospitated by God in the sky. - MAHENDIRAN V ------------------------ குறள் 87: இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் - தெய்வப்புலவர் விளக்கம்: விருந்தோம்பல் என்பது ஒரு யாகத்திற்கு இணையானது. விருந்தேம்பல் செய்வதால் யாகத்தின் பலன் கிடைப்பதால் வேறு பலன் தேடவேண்டியதில்லை. - வை. மகேந்திரன் Explanation in English: Hospitating is also a kind of yagna. As one is blessed graces as far as the strength of yagna, need not seek for any blessing else. - MAHENDIRAN V ------------------------ குறள் 88: பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: விருந்தோம்பல் எனும் யாகம் செய்யாதிருப்போர் செல்வத்தை இழக்கும் போது தான் விருந்தோம்பா தவறை நினைத்து உருகுவர். - வை. மகேந்திரன் Explanation in English: One who fails to sacrifice by hospitality will be worried out when he loses his wealth in the future. - MAHENDIRAN V ------------------------ குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: பொருள் நிறைய இருந்தும் வறுமை வருமோ என்றெண்ணி விருந்தோம்பல் செய்யாதவர் மடையரிலும் மடையர். - வை. மகேந்திரன் Explanation in English: One who is having un measurable wealth and failing to hospitate because of fearing for poverty is absolutely an utter blunder. - MAHENDIRAN V ------------------------ குறள் 90: மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: அனிச்சமலர் முகர்ந்தவுடன் வாடி விடுவதை போல, முகமலர்ச்சியில்லா விருந்தோம்பல் விருந்தினரை வாட வைக்கும். - வை. மகேந்திரன் Explanation in English: As if a scarlet pimpernel dries out when it is smelt, a guest too will get fade up if he gets hospitality by one badly manners. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 10 இனியவை கூறல் Chapter 10 Speaking good ones 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஞானம் பெற்றவர்களால் பேசப்படும் ஆழ்ந்த கருத்துள்ள வஞ்சகமில்லா வார்த்தைகளே இனிய கருத்துரையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The words delivered verdictly from ones who are wisdom are considered as sweet and pleasant words. - MAHENDIRAN V ------------------------ குறள் 92: அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: முகமலர்ச்சியுடன் கூறும் நல்வார்த்தைகளே அகமலர்ச்சியுடன் தரும் பொருளை காட்டிலும் சிறந்த பரிசு. - வை.மகேந்திரன் Explanation in English: The words delivered by one pleasantly with smiling face is more valuable gift than a thing given by one enthusiastically. - MAHENDIRAN V ------------------------ குறள் 93: முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் - தெய்வப்புலவர் விளக்கம்: அகம் புறம் மகிழ முகம் நோக்கி ஆத்மார்த்தமாக கூறப்படும் வார்த்தைகளே முதல் அறம் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: Speaking words prettily in and out fullheartily is the first morality. - MAHENDIRAN V ------------------------ குறள் 94: துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: யாரிடத்திலும் நல்லவற்றை இனிதாக பேசுவர்களுக்கு தீமை எதுவும் வராது. - வை.மகேந்திரன் Explanation in English: No sadness will reach to ones who deliver good and sweet words always to whomever. MAHENDIRAN V ------------------------ குறள் 95: பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற - தெய்வப்புலவர் விளக்கம்: வணக்கத்துடன் இனியவற்றை கூறுவதை விட சிறந்த ஆபரணம் வேறெதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: No one can be a good ornament to one but sweet words spoken by him with good salutations. - MAHENDIRAN V ------------------------ குறள் 96: அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லவற்றை மட்டும் இனிமையாக பேசினால் தீயவை ஒழிந்து அறம் செழிக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Speaking only good matters sweetly shall destroy all evils and Morality will grow up. - MAHENDIRAN V ------------------------ குறள் 97: நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரின் வாழ்க்கைக்கு நன்மைதரும் பண்புமிக்க வார்த்தைகளை கூறுபவர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கும். - வை.மகேந்திரன் Explanation in English: One whose words are causing benefits to others for their moral life will have been having a pleasant life. - MAHENDIRAN V ------------------------ குறள் 98: சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறுமைகள் நீங்கின இனிய வார்த்தைகளை பேசுபவர்கள் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும்கூட இன்பம் பெறுவார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Ones who speak only pleasant words by avoiding narrow senses will get great lives in the present and future birth. - MAHENDIRAN V ------------------------ குறள் 99: இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது - தெய்வப்புலவர் விளக்கம்: இனிய சொற்கள் இன்பம் தருமென்றறிந்தும் கடும் சொற்களை ஒருவர் ஏன் பேசவேண்டும்? - வை.மகேந்திரன் Explanation in English: Though one who could realise that only sweet talks cause pleasance for life, why should he need to talk harsh words? - MAHENDIRAN V ------------------------ குறள் 100: இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: இனிய சொற்கள் ஏராளமாய் குவிந்து கிடக்க, கடுஞ்சொற்களை பேசுதல், பழங்கள் நிறைந்திருக்க காய்களை உண்பதுபோல் ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: Speaking harsh words while being a plenty of sweet words is like eating rather unrip fruits than fruits cumulated a lot. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 11 செய்நன்றியறிதல் CHAPTER 11 KEEPING GRATITUDES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: யாதொரு உதவியும் பிறர்க்கு செய்யாமல் அந்த பிறரால் உபகாரம் அடைந்தோர் இந்த விண்ணுலகம் மண்ணுலகத்தையும் தந்தாலும் அது ஈடாகாது. - வை.மகேந்திரன் Explanation in English: One who has done nothing a help to others but has been helped a lot by others cannot compensate even if he gifts this sky and earth. - MAHENDIRAN V ------------------------ குறள் 102: காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - தெய்வப்புலவர் விளக்கம்: கஷ்ட்ட காலத்திலிருக்கும்பொழுது பெறும் உதவி சிறிதாக இருந்தாலும் அது இவ்வுலகை விட மிகப்பெரியது. - வை.மகேந்திரன் Explanation in English: A help done by one timely at a crisis even if such is small is bigger than this world. - MAHENDIRAN V ------------------------ குறள் 103: பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது - தெய்வப்புலவர் விளக்கம்: எந்த பிரதிபலனையும் மனதில்கூட நினைக்காது ஆற்றும் உதவியானது கடலைவிட மிகப்பெரியது. - வை.மகேந்திரன் Explanation in English: The stance of a help enthusiastically done by one without any expectation is bigger than ocean. - MAHENDIRAN V ------------------------ குறள் 104: தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் செய்த உதவி தினையளவாகினும், அவ்வுதவி செய்யப்பட்ட காலத்தை மனதில் வைத்து, பயனடைந்தவர் அது பனைமரத்தை காட்டிலும் உயரமானது என்பர். - வை.மகேந்திரன் Explanation in English: Even if the volume of help is a small size, the person who is helped would know that it is taller than a palm tree because of done at crisis time. - MAHENDIRAN V ------------------------ குறள் 105: உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: உதவியின் அளவு பெரிதோ சிறிதோ, உதவி அடைந்தவரின் பண்பை பொறுத்தே உதவியின் அளவுகோள் என்னவென்று அறியமுடியும். - வை.மகேந்திரன் Explanation in English: The type and volume of a help is not a matter but its scale and quality is categorised based on the morality of the person who is helped. - MAHENDIRAN V ------------------------ குறள் 106: மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: குற்றமற்றவர்களை மறக்காமல் இருப்பதுபோல், தக்க நேரத்தில் உதவியவர்களை துறக்காமல் இருத்தல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: One shouldn't quit persons who had helped on time as if shouldn't forget those who are crimeless in society. - MAHENDIRAN V ------------------------ குறள் 107: எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: துயரத்தின் பொழுது துணை நின்று உதவியவரின் நட்பை ஏழு பிறவி எடுத்தாலும் மறத்தல் ஆகாது. - வை.மகேந்திரன் Explanation in English: One should never forget one's help done at the time of crisis even he gets born several times in the future - MAHENDIRAN V ------------------------ குறள் 108: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் செய்த உதவியை காலத்திற்கும் மறக்கக்கூடாது ஒருவேளை தீமைகள் செய்திருந்தால் அன்றே மறந்துவிடுவது நல்லது. - வை.மகேந்திரன் Explanation in English: Forgetting helps done by one on time is not moral but the evils done by one should be forgotten on the spot. - MAHENDIRAN V ------------------------ குறள் 109: கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: உதவி செய்தவர் பிறகொருகாலத்தில் கொடிய தீமை செய்தால் அவர் செய்த உதவியின் தரமும் கெட்டுபோகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one who had helped in the past does an extreme evil in the present, the tendency of his past help would lose its grade. - MAHENDIRAN V ------------------------ குறள் 110: எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு - தெய்வப்புலவர் விளக்கம்: எந்த ஒரு அறத்தையும் மறந்துபோனவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கலாம் ஆனால் ஒருவர் காலத்தில் செய்த உதவியை மறந்தவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காது. - வை.மகேந்திரன் Explanation in English: Even If one destroys at any respect of virtue may be pardoned but the stance of forgetting the helps done by one will never be pardoned. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 12 நடுவு நிலைமை (நீதி) CHAPTER 12 JUSTICE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: பாரபட்சம் பார்க்காது உண்மைநிலையறிந்து நடுவுநிலை காப்பதே ஒரு நீதிமானின் ஒழுக்கம். - வை. மகேந்திரன் Explanation in English: To protect justice without showing partiality is the Morality of a person who is judging. - MAHENDIRAN V ------------------------ குறள் 112: செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த நீதிமானின் செல்வம் தழைத்தோங்கும். பிற்காலத்தில் சந்ததியினருக்கு அது அழியா சொத்தாக அமையும். - வை. மகேந்திரன் Explanation in English: A honest justice's wealth will be forever. It shall be a solid property to his descendants. - MAHENDIRAN V ------------------------ குறள் 113: நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: அநீதி நன்மையை தரும் என்ற நிலை ஏற்பட்டாலும்கூட எக்காரணம் கொண்டும் நடுவுநிலை நீதி வழுவக்கூடாது. - வை. மகேந்திரன் Explanation in English: Even if an injustice causes gain, justification shouldn't foul at any reason. - MAHENDIRAN V ------------------------ குறள் 114: தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் நடுவு நிலையின் பொழுது நீதியுடன் நடந்துகொண்டாரா இல்லையா என்பது அவர் தன் சந்ததியினரின் வாழ்க்கையில் காட்டிக்கொடுத்துவிடும். - வை. மகேந்திரன் Explanation in English: It will be known during the decendants' life in the future whether one has behaved justicious or not during his role as a justice. - MAHENDIRAN V ------------------------ குறள் 115: கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி - தெய்வப்புலவர் விளக்கம்: நன்மையும் தீமையும் இயல்புதான் என்றாகினும், வாய்மையுடன் நீதியுடன் நடந்துகொள்வதே நல்ல மனிதனுக்கு அழகு. - வை. மகேந்திரன் Explanation in English: Although Good and bad of ones have been scripted earlier by the nature. Being honest and justicious is pretty to a good man. - MAHENDIRAN V ------------------------ குறள் 116: கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: நீதியாளனாக இருந்து கொண்டு நீதி தவறி நடக்க ஒருவர் விழைந்தால் அவர் நிச்சயம் கெடப்போகிறார் என்பதற்கான அறிகுறி. - வை. மகேந்திரன் Explanation in English: If one fouls from justice on his being as a judge, that is a symptoms that he goes to be spoilt surely. - MAHENDIRAN V ------------------------ குறள் 117: கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - தெய்வப்புலவர் விளக்கம்: நீதி வழுவா நிலை ஒருவேளை வறுமையை தருமானால், நல்லவர்கள் எவரும் அதை வறுமையென கூறமாட்டார்கள். - வை. மகேந்திரன் Explanation in English: Even if one goes to poverty since he follows justice, that wouldn't be considered as poverty by good people. - MAHENDIRAN V ------------------------ குறள் 118: சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு நல்ல நடுவன் நிலை என்பது, தராசு அங்கும் இங்கும் ஆடி இறுதியில் சரியான நிறையை காட்டுவதுபோல், எப்பக்கமும் சாய்ந்துவிடாமல் நீதியை அறிவிப்பதே ஆகும். - வை. மகேந்திரன் Explanation in English: A Good justice means not to lay any side blindly. It should be right way as if the scale measures accurately in final despite dangling here and there. - MAHENDIRAN V ------------------------ குறள் 119: சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு பக்கம் சாய்வில்லாது நடுவன் நிலையின் மனம் பலமாக இருப்பின், அவர் உதிர்க்கும் சொற்கள் நல்ல நீதியை வழங்கும். - வை. மகேந்திரன் Explanation in English: If a judge's mind is strong without laying one side, his words surely will declare a good justice. - MAHENDIRAN V ------------------------ குறள் 120: வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர் பொருளையும் தன் பொருள் போல் பேணி வணிகம் செய்வதே நல்ல வணிகருக்கு அழகு. - வை. மகேந்திரன் Explanation in English: The sensible act of a good trader is that to trading by protecting others' things too like their own things. - MAHENDIRAN V ------------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 13 அடக்கம் உடைமை CHAPTER 13 The properties of obedience 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------------------- குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: அடங்கி வணக்கத்துடன் வாழும் வாழ்க்கை மிளிரும். அப்படி வாழாத வாழ்க்கையை இருள்சூழும். - வை. மகேந்திரன் Explanation in English: Obedience will bring one to a bright life. Failing which will be brought to a dark life. - MAHENDIRAN V -------------------------------- குறள் 122: காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: அடக்கமான குணம் ஒருவனின் வாழ்க்கையை பலமாக்குவதுபோல் வேறு எதுவும் பலமாக்காது. - வை. மகேந்திரன் Explanation in English: Obedience is the big wealth to one's life. No any other to strengthen one's life. - MAHENDIRAN V -------------------------------- குறள் 123: செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: அடக்கம், பணிவுடன் வாழ்வதே அறிவார்ந்த செயல் என்பதையுணர்ந்து வாழ்பவரின் வாழ்க்கையில் எல்லையில்லா புகழ் என்றும் நிறைந்திருக்கும். - வை. மகேந்திரன் Explanation in English: One who knows only the obedient way is sensible will be lifted up for getting infinite fames by all in his life. - MAHENDIRAN V -------------------------------- குறள் 124: நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது - தெய்வப்புலவர் விளக்கம்: கிஞ்சித்த அளவும் ஒழுக்கம் தவறாது பணிவுடன் வாழும் தன்மை எந்த ஒரு மலையை காட்டிலும் உயரமானது. - வை. மகேந்திரன் Explanation in English: Living without slipping even bit in the way of discipline and obedience is taller than any mountain. - MAHENDIRAN V -------------------------------- குறள் 125: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கநெறிகளை கையாண்டு பணிவுடன் வாழ்பவனே செல்வந்தர்களை விட செல்வந்தன். - வை. மகேந்திரன் Explanation in English: One who is obeying good people and living disciplilinarilly is rich man than any other rich people. - MAHENDIRAN V -------------------------------- குறள் 126: ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஆமை தன் அவையங்களை தன் ஓட்டுக்குள் இழுத்து வைத்துக்கொள்வதுபோல் ஐம்புலன்களையும் அடக்கியாளும் வித்தை தெரிந்தவன் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் செல்வ செழிப்புடன் விளங்குவான். - வை. மகேந்திரன் Explanation in English: One who balances his senses of five prime parts like a tortoise does will live well in life and also in the future lives having all wealth. - MAHENDIRAN V -------------------------------- குறள் 127: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு - தெய்வப்புலவர் விளக்கம்: பேச்சில் தன் நாவை அடக்கி ஆளத் தெரியாதவனுக்கு எல்லா வகையிலும் துன்பநிலை வந்துசேரும். - வை. மகேந்திரன் Explanation in English: If one doesn't control his tongue during speaking he will suffer with difficulties a lot in all respects. - MAHENDIRAN V -------------------------------- குறள் 128: ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு சிறிய, தீய வார்த்தை போதும், ஒருவன் சம்பாதித்து வைத்த அனைத்து நற்புகழை வீனாக்கிவிடும். - வை. மகேந்திரன் Explanation in English: A single evil word is enough much to spoil one's earned all moralities. - MAHENDIRAN V -------------------------------- குறள் 129: தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு - தெய்வப்புலவர் விளக்கம்: நெருப்பினால் வந்த காயம் கூட குணமாகிவிடும் ஆனால் கடுஞ்சொற்களால் ஏற்படும் காயத்தை குணப்படுத்த முடியாது. - வை. மகேந்திரன் Explanation in English: Sore caused even by fire too can be cured but not an injury caused by words. - MAHENDIRAN V -------------------------------- குறள் 130: கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த கல்வியும் நற்பண்பும் கொண்டு மதிப்பு மிக்கவனாக வாழ்பவனை அந்த அறமே காத்திருந்து அவனை வரவேற்கும். - வை. மகேந்திரன் Explanation in English: Even virtuality too will be waiting to welcome a man who has been living with all respective manners like having education and obedience. - MAHENDIRAN V ------------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited. Thanks. MAHENDIRAN V 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 14 ஒழுக்கம் உடைமை CHAPTER 14 Discipline/Morality 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ----------------------------- குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கம் ஒன்றே உலகில் உயர்வானது ஆகையால், ஒழுக்கம் உயிரிலும் மேலானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Since morality is the prime sense, it is greater than one's soul. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 132: பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லொழுக்கம் ஒன்றே வாழ்வில் என்றும் துணை நிற்குமாகையால், எந்த ஒரு கஷ்ட்ட நிலை ஏற்பட்டாலும் ஒழுக்க நெறி தவறாது வாழவேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Despite meeting any kind of difficulties, one should keep discipline as only such is the safeguard for one's life ever. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 133: ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கத்துடன் வாழ்பவனே நல்லதொரு குடிமகன். இல்லேல், அவனது பிறப்பே தீமையானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: One who is having good disciplines is a good citizen otherwise his birth means evil. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 134: மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: மறந்துபோன வேதங்களை கூட திரும்ப கற்றுக் கொண்டுவிடமுடியும் ஆனால் ஒழுக்கம் தவறிப்போய் வாழ்ந்தால், குடும்பகௌரவம் நற்பெயரை இழக்கும் நிலை ஏற்படும். மீட்டெடுக்க முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: Forgotten vedic too can be relearned but losing disciplines will spoil the goodwill of one's family status, cannot be retrieved. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 135: அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: எப்படி பொறாமை குணம் ஒருவனுக்கு செல்வத்தை கொண்டுவராதோ அது போல் தீய ஒழுக்கங்கள் ஒருவனின் வாழ்க்கையில் பெரிய இழப்பை ஏற்ப்படுத்தும். - வை.மகேந்திரன் Explanation in English: Jealousy will not bring wealth to one likewise indiscipline life will make a big loss to one. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 136: ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து - தெய்வப்புலவர் விளக்கம்: நன்கு கற்றறிந்தவர்கள், 'ஒழுக்கம் தவறினால் குடும்பத்தின் மதிப்பு கெடும்' என்பதை அறிவார்கள் ஆகையால், அறநெறி தவற மாட்டார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Good men will not foul from disciplinary life as they know if they foul so, they would lose the honour of their family. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 137: ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி - தெய்வப்புலவர் விளக்கம்: நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்வது ஒன்றே நல்வாழ்விற்கு வித்தாகும் இல்லேல் தீய வாழ்க்கைக்கு வழிவகுக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Only way to get a fabulous life is, following good disciplines, failing such will lead to evil life. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 138: நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லொழுக்கங்கள் நன்மைக்கு காரணங்களாக அமையும். தீய ஒழுக்கத்துடனான வாழ்வு தீமைகளை மட்டுமே பெற்றுத்தரும். - வை.மகேந்திரன் Explanation in English: A fine virtuality followed in one's life will bring to the brightest life and one's Indisciplined life would cause evil manners. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 139: ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்ல ஒழுக்கமுள்ள மனிதன் தவறியும் கூட தீயவைகள் தரக்கூடிய வார்த்தைகளை உச்சரிக்க மாட்டான். - வை.மகேந்திரன் Explanation in English: A good moralitised man would never slip his tongue pronouncing illy words. - MAHENDIRAN V ------------------------------------- குறள் 140: உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: பற்பல கற்றறிந்த சான்றோனாக இருந்தாலும், நல்லொழுக்கம் பேணுபவர்களிடம் பழாகாதவனாக அவன் இருந்தால், அவள் ஒரு முழு முட்டாளாவான். - வை.மகேந்திரன் Explanation in English: If one doesn't behave with good moralitised persons, even if he is literate by studying numberlss books, he is utter fool. - MAHENDIRAN V ---------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 15 பிறனில் விழையாமை CHAPTER 15 NO DESIRING OTHERS' SPOUSE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 141: பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில் - தெய்வப்புலவர் விளக்கம்: அடுத்தவர் மனைக்கு (கணவன்/மனைவி) ஆசைப்படுவோர் அறனுக்கு முரணானவர் என்பதை கற்றோர் அறிவர். - வை.மகேந்திரன் Explanation in English: The characteristic of desiring other's spouse is against the morality. Well versed literates would know it. - MAHENDIRAN V ------------------------ குறள் 142: அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர் மனைக்கு ஒழுக்கத்திற்கு முரணாக ஆசைப்படும் செயலைப் போல கொடிய பாவம் உலகில் வேறெதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: There is no as such a worst sin in the world as desiring on other's spouse immorally. - MAHENDIRAN V ------------------------ குறள் 143: விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: நம்பிக்கைக்குட்பட்டு அனுமதிக்கப்படுபவன் அனுமதித்தவனின் மனைவி மீது இச்சை கொள்வானானால், அவன் இறந்த உடலுக்கு சமம். - வை.மகேந்திரன் Explanation in English: If a person who is believed very much by another is desiring the another's wife in wrong way, such person is worse than dead body. - MAHENDIRAN V ------------------------ குறள் 144: எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல் - தெய்வப்புலவர் விளக்கம்: எத்தனைதான் உயர்வாய் இருந்து புகழ்பெற்றவராயிருந்தாலும் அவர் அடுத்தோர் மனையாளின் மேல் மோகம் கொண்டால் அவர் தன் தகுதி புகழ் அனைத்தும் மதிப்பற்று போகும். - வை.மகேந்திரன் Explanation in English: How far as one is prime and fame, if he wills to have other's spouse, his entire status is invalid. - MAHENDIRAN V ------------------------ குறள் 145: எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி - தெய்வப்புலவர் விளக்கம்: எளிதான ஒன்று என்று எண்ணி பிறர் மனைவியின் மீது ஆசை கொள்வது தீர்க்க முடியாத பாவச்செயல். - வை.மகேந்திரன் Explanation in English: One who tries to have other's spouse by thinking that's an easy one will earn an unsoluable sin. - MAHENDIRAN V குறள் 146: பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர் மனை நோக்கி ஆசை கொள்வோர், பகை, பாவம், அச்சம் மற்றும் பழி ஆகிய இந்த நான்கிலிருந்து தப்பிக்கவே முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: One who wills to have other's spouse will never escape from four forms such as enemines, sin, fear and crime. - MAHENDIRAN V ------------------------ குறள் 147: அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன் - தெய்வப்புலவர் விளக்கம்: எச்சூழலிலும் பிறர் மனைக்கு இச்சை கொள்ளாதவரே நல்லொழுக்கத்துடன் வாழ்பவராகிறார். - வை.மகேந்திரன் Explanation in English: Living with good disciplines means that not to will other's spouse at any circumstance. - MAHENDIRAN V ------------------------ குறள் 148: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனென்றோ ஆன்ற வொழுக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர் மனை நோக்காத் தன்மை அறம் மட்டுமானதல்ல, மேன்மையான ஒழுக்கம் நிறைந்தது ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: The stand of not willing other's spouse is not only virtuality but also an immense morality. - MAHENDIRAN V ------------------------ குறள் 149: நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர்மனை பால் விரல் கூட படா எண்ணம் கொண்டோரே பயம் காட்டும் கடல்சூழ்ந்த இப்புவியில் வாழத் தகுதியுடையவர். - வை.மகேந்திரன் Explanation in English: Only the man who even doesn't desire to touch other's spouse is fully eligible to live in the earth covered by fearful oceans. - MAHENDIRAN V ------------------------ குறள் 150: அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று - தெய்வப்புலவர் விளக்கம்: பிறருக்கு உபகாரம் செய்யாதாகினும் பரவாயில்லை, அது ஒரு பொருட்டு அல்ல. ஆனால் பிறர்மனை பால் கனவிலும் ஆசை கொள்ளக் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: Even if one hasn't done even a bit betterment to others, that is not a matter at all. But he shouldn't even think to desire other's wife. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 16 பொறையுடைமை CHAPTER 16 HAVING PATIENCE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------ குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: நிலத்தை தோண்டினாலும் நிலம் தாங்கிக் கொள்வதை போல பிறர் இகழ்ந்து பேசினாலும் பொறுமையாக இருப்பதே பேரறிவாகும். - வை. மகேந்திரன் Explanation in English: The good sense is that being quiet patient when one is sneering, as if the earth being quiet even if being dug - MAHENDIRAN V ------------------------ குறள் 152: பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று - தெய்வப்புலவர் பிறர் தரும் தொல்லைகளை கண்டு பொறுமையாய் இருத்தல் நலம்தான் ஆயினும் அவற்றை மறந்துவிடுவது அதனினும் நன்று. - வை. மகேந்திரன் Explanation in English: Although the stance of being patient is far better for life forgetting very immediately evils done by others is so great. - MAHENDIRAN V ------------------------ குறள் 153: இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - தெய்வப்புலவர் விளக்கம்: விருந்தோம்பல் செய்ய முடியாதது கொடுமையான வறுமை. அதேபோல், தீயவர்களைக் கடக்கும்போது பொறுமையாக இருப்பதுதான் ஒருவரின் பெரிய பலம். - வை. மகேந்திரன் Explanation in English: The cruel poverty is what being unable to hospitate. likewise one's big strength is what being patient with evil persons' overcoming. - MAHENDIRAN V ------------------------ குறள் 154: நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: வாழ்க்கையில் பரிபூரண திருப்தி வேண்டுமாயின், எச்சூழலிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். - வை. மகேந்திரன் Explanation in English: If one needs fulfillment in life he must have patience a lot in all respects. - MAHENDIRAN V ------------------------ குறள் 155: ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து - தெய்வப்புலவர் விளக்கம்: பழிதீர்க்கும் நெஞ்சம் கொண்டோரை இவ்வுலகம் அறவே மதிக்காது. பொறுமை காப்போருக்கு தான் மகுடம் தானே வரும். - வை. மகேந்திரன் Explanation in English: Revenge wouldn't be respected by society ever but being patient would be crowned by the same society. - MAHENDIRAN V ------------------------ குறள் 156: ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் - தெய்வப்புலவர் விளக்கம்: பழிச்செயல்கள் ஒருநாள் அல்லது இரு நாள் தீயவர்களால் பாராட்டப்படலாம் ஆனால் பொறுமை குணம் நிறைந்திருந்தால் வாழ்க்கை முழுதும் மகிழ்ச்சியாக வாழலாம். - வை. மகேந்திரன் Explanation in English: Action of revenge may get applause for only day but being patient will bring cheerfulness ever in life. - MAHENDIRAN V ------------------------ குறள் 157: திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் செய்த தீங்குக்கு பழிதீர்க்கிறேன் என்ற எண்ணத்தை மனதிற்குள் நினைக்காமல் இருப்பதே உலகின் மிகப்பெரிய பொறுமை குணமாகும். - வை. மகேந்திரன் Explanation in English: Being not to do any revenge as a reply for one's illy activities is the biggest patience in the world. - MAHENDIRAN V ------------------------ குறள் 158: மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: அதீதமாக பொறுமையாக இருப்பவர்களுக்கு முன்னால் பிறரால் செய்யப்படும் தீமைகள் அனைத்தும் தோற்றுப்போகும். - வை. மகேந்திரன் Explanation in English: The stance of being immensely patient will surely defeat ill activities of others. - MAHENDIRAN V ------------------------ குறள் 159: துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர் விளக்கம்: பிறரின் தாழ்ந்த இகழ்ச்சியை பொறுத்து கொண்டு வாழும் நிலை, ஞானம் பெற்ற துறவிகளின் அந்தஸ்த்துக்கு இணையானதாகும். - வை. மகேந்திரன் Explanation in English: Keeping quiet and being so patient while being scolded vulgarly by deadliers is like the status of wisdomed sages. - MAHENDIRAN V ------------------------ குறள் 160: உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொ னோற்பாரிற் பின் விளக்கம்: ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக வாழும் நிலைப்பாடு, பல நாட்கள் உண்ணாமல் விரதம் இருப்பதற்கு சமமாகும். - வை. மகேந்திரன் Explanation in English: The stance of one's being silent while being cruelly worded by others is greater than fasting without food for long time. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 17 அழுக்காறாமை CHAPTER 17 NOT TO BEING JEALOUS 📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) ------------------------- குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: ஒருவர் ஒழுக்கமான வாழ்க்கைக்காக யார் மீதும் பொறாமை கொள்ளாத குணத்தை வழக்கமாக்கிகொள்ள வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: One should make a habitual activity not to having jealousy on any one for his moralitised life. - MAHENDIRAN V ------------------------- குறள் 162: விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: பொறாமை கொள்ளாத குணத்தை காட்டிலும் மிகப்பெரிய சொத்து இவ்வுலகில் எதுவும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: No any other property is as big one as ones' having characteristic not to be jealous on others life. - MAHENDIRAN V ------------------------- குறள் 163: அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான் - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: உருவாக்கும் திறனும் அறமும் இல்லாதவரே அடுத்தவரின் படைப்புகளை கண்டு பொறாமை கொள்கிறார் - வை.மகேந்திரன் Explanation in English: Only the man who doesn't have sense of creativeness would have jealousy a lot when he sees other's skills. - MAHENDIRAN V ------------------------- குறள் 164: அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: பொறாமை எண்ணம் இல்லாத வாழ்வியல் முறையே ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை சான்றோர்க்கு மட்டுமே தெரியும். - வை.மகேந்திரன் Explanation in English: Only good man knows that he can have moralities in all respects when he is away from the character of jealousy. - MAHENDIRAN V ------------------------- குறள் 165: அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: பொறாமை கொள்ளும் குணத்தை காட்டிலும் மிகப்பெரிய எதிரி எதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: No any other thing is as the biggest enemy as having the character of jealousy in one's life. - MAHENDIRAN V ------------------------- குறள் 166: கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும் - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகளை கண்டு பொறாமைபடுபவர்களுக்கு செல்வம் மற்றும் துணிமணி கூட மிஞ்சாது - வை.மகேந்திரன் Explanation in English: Getting jealousy while one is helping others is evill trait. Such trait will pluck off all wealths and cloths. - MAHENDIRAN V ------------------------- குறள் 167: அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: பொறாமைகாரர்களை செல்வத்திற்கு தெய்வமான லக்ஷ்மி திரும்பி கூட பார்க்க மாட்டாள். - வை.மகேந்திரன் Explanation in English: One who has jealous would never be blessed by God of wealth Lakshmi. - MAHENDIRAN V ------------------------- குறள் 168: அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: பாவ காரியமான பொறாமை, ஒருவரை தீய வழியில் அழைத்துச் செல்வதுடன் அவருடைய செல்வத்தையே சீர்குலைத்துவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: The stance of having sinful jealousy will spoil one's wealth and will guide him to illy path. - MAHENDIRAN V ------------------------- குறள் 169: அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: பொறாமையுள்ளவர்களின் நல்வாழ்க்கையையும், நல்லவர்களின் கஷ்ட்டம் நிறைந்த வாழ்க்கையும் மறுசீராய்வு செய்யவேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: The better life of jealousers and bad stance of virtual persons must be reviewed. - MAHENDIRAN V ------------------------- குறள் 170: அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் - தெய்வப்புலவர் தமிழ் விளக்கம்: பொறாமையுடையோர் வாழ்க்கையில் ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை அதுபோல பொறாமை இல்லாதோர் வாழ்க்கையில் இறக்கம் இருக்காது. - வை.மகேந்திரன் Explanation in English: There wouldn't be ascent in the life of jealous ones, likewise descent can't be seen in the life of ones who aren't jealous. - MAHENDIRAN V ------------------------- Explanation in Tamil and English written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அதிகாரம் 18 வெஃகாமை Chapter 18 Stand of non-greedness விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - தெய்வப்புலவர் விளக்கவுரை : அநீதியாக அடுத்தவரின் பொருளை அபகரிப்பவருக்கு அழிவு வரும். குற்றமும் பெருகும். - வை. மகேந்திரன் Explanation in English: One who possesses other's property injusticiously would be destroyed, and crime would hike up. MAHENDIRAN V ------------------------------------- குறள் 172: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் - தெய்வப்புலவர் விளக்கவுரை : அடுத்தவரின் பொருளை அபகரித்தால் பழி வந்துசேரும் என்று அறிந்து நீதிக்கு பயப்படுபவர் அப்படி செய்யமாட்டார். - வை. மகேந்திரன் Explanation in English: Justicious person wouldn't desire for other's property since he knows that it's a big sin. MAHENDIRAN V ------------------------------------- குறள் 173: சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்கவுரை : நல்வழியில் பணம் ஈட்டும் நல்லோர் அநீதி வழியில் அடுத்தோர் பொருட்களை அபகரிக்க விரும்பமாட்டார்கள். - வை. மகேந்திரன் Explanation in English: Those who earn by virtual ways wouldn't desire to take others' properties. MAHENDIRAN V ------------------------------------- குறள் 174: இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் - தெய்வப்புலவர் விளக்கவுரை : கடுமையான வறுமையிலும்கூட, ஐம்புலன்களை அடக்கியாளும் நல்லோர் அடுத்தோரின் உடைமைகளுக்கு ஆசைப்படமாட்டார்கள். - வை. மகேந்திரன் Explanation in English: Even though being severe poverty, moralitisers who defeat five senses of organs wouldn't desire others' assets. MAHENDIRAN V ------------------------------------- குறள் 175: அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் - தெய்வப்புலவர் விளக்கவுரை : பிறர் பொருளுக்கு ஆசைப்படும் தன்மை நுணுக்கமான அறிவுள்ளோரின் செயல்பாடாகாது. - வை. மகேந்திரன் Explanation in English: Willing to take others' assets wouldn't be the habit of previous knowledgeable persons. MAHENDIRAN V ------------------------------------- குறள் 176: அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கவுரை : கடவுளின் அருள் வேண்டி நின்று, பிறரின் பொருட்களை அபகரிக்க நினைப்பவன் வாழ்க்கை கெட்டுப்போகும். - வை. மகேந்திரன் Explanation in English: One who prays to God one side, but wills to possess others' things will surely get evil life. MAHENDIRAN V ------------------------------------- குறள் 177: வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன் - தெய்வப்புலவர் விளக்கவுரை : பிறர் பொருளை அபகரித்து எத்தனை இன்பம் கண்டாலும் அது துன்பத்திற்கான வழி. - வை. மகேந்திரன் Explanation in English: Being joyful by grabbing others' belongings is the way for illy stance. MAHENDIRAN V ------------------------------------- குறள் 178: அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் - தெய்வப்புலவர் விளக்கவுரை : அடுத்தோர் உடைமைகளை அபகரிக்க நினைக்காமலிருந்தால் தான் இருக்கும் செல்வம் நிலைத்து நிற்கும். - வை. மகேந்திரன் Explanation in English: If one wants to protect his existing wealth he should never will on other's belongings. MAHENDIRAN V ------------------------------------- குறள் 179: அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு - தெய்வப்புலவர் விளக்கவுரை : பிறர் உடைமைக்கு ஆசைப்படாமல் அறநெறியில் வாழ்வோர்க்கு திருமகள் தானாக வந்து அருள்புரிவாள். - வை. மகேந்திரன் Explanation in English: The god of wealth 'Thirumagal' will grace herself visiting to ones who live virtually without desiring others' properties. MAHENDIRAN V ------------------------------------- குறள் 180: இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு - தெய்வப்புலவர் விளக்கவுரை : விளைவு அறியாது பிறருடைமைக்கு ஆசைப்படுபவருக்கு சோகம் தான் மிஞ்சும். அவ்வாறு ஆசைப்படாதோரின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். - வை. மகேந்திரன் Explanation in English: Ones who desire others' belongings unthinking the effects will meet saddened stand. Unwillers of other's things will live fabulously. MAHENDIRAN V ------------------------------------- Explanation in Tamil and English written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) அதிகாரம் 19 புறங்கூறாமை CHAPTER 19 No back biting (Not to accuse one's behind) தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) குறள் 181: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது - தெய்வப்புலவர் விளக்கவுரை : ஒருவர் அறம் செய்யாவிட்டால்கூட பரவாயில்லை. பிறர் இல்லாத சமயத்தில் அவர் பற்றி இழி கருத்து கூறாமல் இருப்பதே ஒரு அறம். - வை.மகேந்திரன் Explanation in English: Not to talking worst about one when he is not present is a greater morality than doing morality in life. - MAHENDIRAN V --------------------------------- குறள் 182: அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை - தெய்வப்புலவர் விளக்கவுரை : அறம் செய்யாதது கூட ஒரு பெரும் பிழை இல்லை. ஒருவர் இல்லா சமயத்தில் பழி பேச்சு பேசி நேரில் இனிப்பாய் சிரிப்பது இழிசெயல். - வை.மகேந்திரன் Explanation in English: Even Immoral behaviour too is not a big sin but talking worst about one's behind to others and smiling at him is unpardonable illy habit. - MAHENDIRAN V --------------------------------- குறள் 183: புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் - தெய்வப்புலவர் விளக்கவுரை : புறம்பேசி வாழ்வாங்குவாழ்வதைக் காட்டிலும் செத்துப் போகுதல் கூட ஒரு அறமே. - வை.மகேந்திரன் Explanation in English: Rather dying is honest than living with fame by speaking worst when one is absent. - MAHENDIRAN V ---------------------------------- குறள் 184: கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் - தெய்வப்புலவர் விளக்கவுரை : ஒருவர் இல்லா சமயத்தில் புறம் பேசி மகிழ்வதை விட முகத்தில் அடித்தாற்போல் நேரில் கடுஞ்சொற்களால் பேசுவது எவ்வளவோ மேல். - வை.மகேந்திரன் Explanation in English: Speaking about one with harsh words in person is far better than speaking worst when one is absent. - MAHENDIRAN V ---------------------------------- குறள் 185: அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் - தெய்வப்புலவர் விளக்கவுரை : ஒருவன் எவ்வளவு அறம் செய்து வாழ்ந்தாலும் அவன் புறம்பேசுபவனாக இருந்தால் அவனது அறம் அனைத்தும் பொய்த்து போகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one is living by doing morality a lot, if he speaks worse about one when one is absent, his virtuality would disappear. - MAHENDIRAN V ---------------------------------- குறள் 186: பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும் - தெய்வப்புலவர் விளக்கவுரை : ஒருவரை பழித்து பிறரிடம் பேசுபவன் நிச்சயம் பிறரால் பழித்து பேசப்படுவான். - வை.மகேந்திரன் Explanation in English: One who talks worst about one behind would surely be talked by others worst. - MAHENDIRAN V ---------------------------------- குறள் 187: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் - தெய்வப்புலவர் விளக்கவுரை : ஒருவரை பற்றி நல்லவற்றை கூறி நட்பை வளர்க்காது பழிசொல் கூறி நட்பை பிரிப்பது நயவஞ்சகத்தனம். - வை.மகேந்திரன் Explanation in English: It is cunning what one is separating friendship by saying worst about one instead of talking betterments of one. - MAHENDIRAN V ---------------------------------- குறள் 188: துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு - தெய்வப்புலவர் விளக்கவுரை : நட்புக்குறியவரையே பற்றி புறம்பேசும் பேசும் ஒருவர், அயலாரை பற்றி புறம்பேசுவதை சொல்லவும் வேண்டுமோ? - வை.மகேந்திரன் Explanation in English: While one is speaking worst about closed one, need we say how he would talk about stranger? - MAHENDIRAN V ---------------------------------- குறள் 189: அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை - தெய்வப்புலவர் விளக்கவுரை : இந்த பூமி, தான் அறம் தழுவாதிருக்கவேண்டும் என்பதற்காகதான் புறம்பேசுபவனையும் சுமந்து வருகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Only for protecting its moral duty, the Earth is carrying the back biters (them who speak worst behind of one) - MAHENDIRAN V ---------------------------------- குறள் 190: ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு - தெய்வப்புலவர் விளக்கவுரை : பிறரின் குற்றத்தை கண்டு களிப்பதற்கு முன் தன் குற்றம் எது என்று அறிந்து வாழ்பவனின் வாழ்க்கையில் தீங்கு வராது. - வை.மகேந்திரன் Explanation in English: The life of one who accuses himself for his crimes before accusing others will never get evils. - MAHENDIRAN V ------------------------------------- Explanation in Tamil and English written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) அதிகாரம் 20 பயனில சொல்லாமை CHAPTER 20 TO AVOID SPEAKING USELESS MATTERS தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் - தெய்வப்புலவர் விளக்கவுரை: தேவையில்லாமல் பயனற்றவைகளை பேசுபவர் பலராலும் இகழப்படுவார். - வை.மகேந்திரன் Explanation in English: One who speaks unnecessarily like a loosey goosey would be criticised badly by society. - MAHENDIRAN V குறள் 192: பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது - தெய்வப்புலவர் விளக்கவுரை: பயனற்ற வார்த்தைகளை வளவளவென்று பேசுவது ஒருவருக்கு அறம் செய்யாதிருப்பதை விட தீமையானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Speaking unwanted words infront of many is more illy than being merely not doing moral activities. - MAHENDIRAN V -------------------------------- குறள் 193: நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை - தெய்வப்புலவர் விளக்கவுரை: ஒருவன் பயனற்ற ஒன்றை விவரித்து பேசுவதை வைத்தே அவன் அறநெறி தெரியாதவன் என்பதை அறிந்து கொள்ள முடியும். - வை.மகேந்திரன் Explanation in English: One who speaks deeply about an useless affairs is known that he is against the man of Morality. - MAHENDIRAN V -------------------------------- குறள் 194: நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து - தெய்வப்புலவர் விளக்கவுரை: பலரிடத்திலும் பண்பில்லாத வார்த்தைகளை பேசுவது அவனுக்கும் அனைவருக்கும் தீமையையே கொண்டுவரும். - வை.மகேந்திரன் Explanation in English: Speaking immorally to others would bring only evil effects to him and all. - MAHENDIRAN V -------------------------------- குறள் 195: சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: பயனற்ற விஷயங்களை நல்லோர் பேசினாலும் அவர்களது பெருமையும் புகழும் தாழ்ந்து போகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if good men speak immorally, their prides and honour would descend. - MAHENDIRAN V -------------------------------- குறள் 196: பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல் - தெய்வப்புலவர் விளக்கவுரை: பயனற்ற வார்த்தைகளால் வீண்பேச்சு பேசுபவர்கள் ஒரு மானிட பதரே அன்றி ஒழுக்கம் நிறைந்த மனிதராக இருக்கமுடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: One who is arguing by unwanted words is a mere human body but not human ever. - MAHENDIRAN V -------------------------------- குறள் 197: நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று - தெய்வப்புலவர் விளக்கவுரை: சான்றோர் நற்கூற்றுகள் சொல்லாவிட்டால் கூட தவறில்லை. பயனற்ற அவச்சொற்களை உதிர்க்காமல் இருக்க வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Honourable persons may be not speaking betterments but not to pronounce useless illy words. - MAHENDIRAN V -------------------------------- குறள் 198: அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல் - தெய்வப்புலவர் விளக்கவுரை: அறிவில் சிறந்த ஆன்றோர் பெருமக்கள் ஒருபோதும் பெரும் பயன் இல்லாத வார்த்தைகளை பேசமாட்டார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Well-versed intellectual experts would never speak evil caused words. - MAHENDIRAN V -------------------------------- குறள் 199: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் - தெய்வப்புலவர் விளக்கவுரை: மயக்கத்திலிருந்து மீண்டிருந்தபோதிலும், கறையில்லா தெளிந்த அறிவுடையவர்கள் ஒரு போதும் கருத்தில்லா சொற்களை பேசமாட்டார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Even if, pure literates persons retrieved from dizziness would never speak meaningless words. - MAHENDIRAN V -------------------------------- குறள் 200: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் - தெய்வப்புலவர் விளக்கவுரை: பயன் தரக்கூடிய வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும். பயன் தராத சொற்களை பேசுதல் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: One should speak only the matters that are useful to all. Useless matters must be avoided. - MAHENDIRAN V -------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) அதிகாரம் 21 தீவினையச்சம் CHAPTER 21 FEAR TO DO EVILS தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு - தெய்வப்புலவர் விளக்கவுரை: தீயோர் தீமையை மட்டுமே குணமாக கொண்டிருப்பதால் தீயசெயல்களை செய்ய அஞ்சமாட்டார்கள். மனிதாபிமானிகள் அப்படி செய்ய அஞ்சுவர். - வை.மகேந்திரன் Explanation in English: Evil guys wouldn't be afraid of doing illy activities as it is their trait. But who have humane would be afraid of doing so. - MAHENDIRAN V --------------------------------- குறள் 202: தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் - தெய்வப்புலவர் விளக்கவுரை: தீமை செயல்கள் தீயை காட்டிலும் அதீத பயத்தை தரவல்லவை என்றெண்ணி தீமைகள் செய்ய அஞ்சவேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Evils are more dangerous than fire. Thinking so, one should fear to do illy things. - MAHENDIRAN V --------------------------------- குறள் 203: அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல் - தெய்வப்புலவர் விளக்கவுரை: தீமை செய்தோருக்கு பழிக்கு பழியாக தீமை செய்யாமல் இருப்பதே பேரறிவு. - வை.மகேந்திரன் Explanation in English: The immense knowledge is that not to doing evil as a revenge to one who might have done evil earlier. - MAHENDIRAN V --------------------------------- குறள் 204: மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு - தெய்வப்புலவர் விளக்கவுரை: பிறக்கு தீமை செய்ய கிஞ்சித்தும் எண்ணக்கூடாது. மறந்தும் ஒருவேளை தீமை செய்தால் அறம் அவனுக்கு கேடு விளைவிக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: One should not even imagine to doing evil to others. Incase of doing so, morality would punish severely. - MAHENDIRAN V --------------------------------- குறள் 205: இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றுப் பெயர்த்து - தெய்வப்புலவர் விளக்கவுரை: ஏதும் இல்லை எனும் வறுமையை காட்டி தீமைகள் செய்பவன் மென்மேலும் வறுமை வந்துசேரும். - வை.மகேந்திரன் Explanation in English: If one does illy things by showing reason of being poverty, poverty would cummulate on him more and more. - MAHENDIRAN V --------------------------------- குறள் 206: தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான் - தெய்வப்புலவர் விளக்கவுரை: தமக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைப்பவன் பிறர்க்கு தீமைகள் செய்யாதிருக்கவேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: If one wants not to meet difficulties in life, he ought not to do any illy things to others. - MAHENDIRAN V --------------------------------- குறள் 207: எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும் - தெய்வப்புலவர் விளக்கவுரை: ஒருவன் கொடும் பகை எதையும் கூட எதிர்கொண்டுவிடலாம். ஆனால் அவன் செய்யும் தீமைகளால் ஏற்படும் பகை அவனை அழித்துவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: One can be opposing any kind of big eneminess but not stand against the effects caused by his doing evil things. It would destroy him. - MAHENDIRAN V --------------------------------- குறள் 208: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று - தெய்வப்புலவர் விளக்கவுரை: ஒருவன் செய்த தீய செயல்கள் அவனை நிழல்போல் தொடர்ந்து அவனை கெட வைக்கும் - வை.மகேந்திரன் Explanation in English: Surely one's evils done to others would follow him like a shadow and would destroy him. - MAHENDIRAN V --------------------------------- குறள் 209: தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால் - தெய்வப்புலவர் விளக்கவுரை: ஒருவன் தன் வாழ்க்கையை நேசித்து அனுபவிக்க ஆசைப்படுபவன் பிறர்க்கு துன்பம் தரும் செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: One who wills to joyfully live in his life should never even to think to do bad affairs to others. - MAHENDIRAN V --------------------------------- குறள் 210: அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: பிறர்க்கு தீமைகள் செய்யாது வாழ்பவனின் வாழ்க்கையில் தீமைகள் ஒரு போதும் அண்டாது. - வை.மகேந்திரன் Explanation in English: Evils would never near to one who lives without doing evils to others. - MAHENDIRAN V --------------------------------- Explanation in Tamil and English written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) அதிகாரம் 22 ஒப்புரவறிதல் CHAPTER 22 HELPING TENDENCY Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு - தெய்வப்புலவர் விளக்கவுரை: மழை எப்படி எந்த பிரதிபலனும் எதிர்பாராது புவிக்கு நீரை தருகிறதோ அதுபோல ஒருவர் செய்யும் உதவி, கைமாறு எதிர்பார்த்து செய்தல் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: As if rain provides water to the earth without expecting any compensation, one's help should be so. - MAHENDIRAN V ----------------------------------- குறள் 212: தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு - தெய்வப்புலவர் விளக்கவுரை: உழைத்து சம்பாதிப்பவர்கள் ஈட்டிய பணத்தை உழைக்க இயலாமல் போவோர்க்கு கொடுத்து உதவுவதே பேருதவியாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The stance of helping money earned by one's hard work to unables is the greatest help. ----------------------------------- குறள் 213: புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற - தெய்வப்புலவர் விளக்கவுரை: உழைக்க இயலதாவர்களுக்கு தன் உழைப்பால் பலன் எதிர்பாராது கொடுத்து உதவும் மாண்பு மிக்கவர்கள் தேவலோகத்தில் கூட காண்பதற்கு அரிதானவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Those who help by their hard work and without any gain to ones who are unable to work are great. They are equqllent to God. - MAHENDIRAN V ----------------------------------- குறள் 214: ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் - தெய்வப்புலவர் விளக்கவுரை: உழைக்க இயலாதோர்க்கு கொடுத்து உதவுவர்களே உயிர்வாழ தகுதியுள்ளவர்கள்.மற்றோர் இறந்தோர்க்கு சமம். - வை.மகேந்திரன் Explanation in English: Ones who help to who are unable to work and earn due to their inability are eligible to have live, others are equallent to be dead. - MAHENDIRAN V ----------------------------------- குறள் 215: ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு - தெய்வப்புலவர் விளக்கவுரை: தன் சம்பாதித்யம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற மனப்பான்மையுடைவர்கள், உயிர்வாழ ஊர் உலகிற்கு பயன்படும் நீர் நிலைகளுக்கு ஒப்பானவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Ones who think that their earnings should be useful to all are equallent to the water sources that are factors for all living beings to live. - MAHENDIRAN V ----------------------------------- குறள் 216: பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: உதவும் மனப்பான்மை உள்ள நல்ல மனிதர்களிடம் செல்வம் குவிவது, மரங்களில் பழங்கள் பழுத்து நிறைந்திருப்பதற்கு ஒப்பாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The stance of cummulating wealth to aiding persons is as if trees are having ripped fruits a lot. - MAHENDIRAN V ----------------------------------- குறள் 217: மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: நல் மனிதர்களிடம் செல்வம் நிறைந்திருந்து, அனைவருக்கும் பயன்படுமேயானால், மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருந்தாக பயன்படுவது போலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Richers' having a lot of money is like trees are used as medicines by its all organs. - MAHENDIRAN V ----------------------------------- குறள் 218: இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் - தெய்வப்புலவர் விளக்கவுரை: உதவி செய்தே வாழ்ந்து பழகிப்போனவர்கள், தங்களால் இயலாத காலத்திலும் கடன் பெற்றாவது உதவி செய்வர். - வை.மகேந்திரன் Explanation in English: Richers who are habitually helping to others would be helping by borrowing incase of standing with poverty. - MAHENDIRAN V ----------------------------------- குறள் 219: நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு - தெய்வப்புலவர் விளக்கவுரை: செல்வம் மிகுந்தவர் வறுமையடைந்தால், அவர் வருந்துவது எதற்காக என்றால், பிறருக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணுவதுதான். - வை.மகேந்திரன் Explanation in English: If rich men supposed to be loss and meet poverty since they helped to inabilities, they would be worried out only for the reason that they aren't able to help to others. - MAHENDIRAN V ----------------------------------- குறள் 220: ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து - தெய்வப்புலவர் விளக்கவுரை: நல்லதொரு செல்வந்தன் அடுத்தோர்க்கு அள்ளி கொடுப்பதால் தீமையை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் தன்னை விற்றாவது அத்தீமையை எதிர்கொள்வான். - வை.மகேந்திரன் Explanation in English: If a good rich man meets evils because of his infinite helps to others, he would tackle such evils by mortgaging himself. - MAHENDIRAN V ----------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) அதிகாரம் 23 ஈகை CHAPTER 23 DONATION/HELP தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து விளக்கவுரை: ஏதுமில்லாதோர்க்கு வழங்குவதே ஈகையாகும் மற்றவையெல்லாம் எதையோ எதிர்பார்த்து வழங்குவது போலாகும். Explanation in English: Helping to people who are under poverty is not an expectable help. If one does the same for others, that means that is expectable one. -------------------------- குறள் 222: நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று விளக்கவுரை: ஒருவரிடமிருந்து ஈகை பெறுவது அத்தனை நன்மையன்று. இல்லார்க்கு ஈகை தருவதால் பின்னாளில் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைப்பதும் ஒருவித எதிர்பார்ப்பே. Explanation in English: The stance of looking for help from others is not fair. Likewise, one's expecting heaven for his having done help is also not fair. -------------------------- குறள் 223: இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள விளக்கவுரை: தன் ஏழ்மை நிலையை பிறரிடம் காட்டிக்கொள்ளாது தன் சக்திக்கேற்றவாறு உதவிக்கரம் நீட்டுபவரே உயர்ந்த குடிமக்கள். Explanation in English: The good citizen is who doesn't reveal his poorness but donating for other's needs as much as his ability. -------------------------- குறள் 224: இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு விளக்கவுரை: ஈகை பெற்றவுடன் மலர்ந்த முகம் காட்டினாலும், பெறும்வரை இரக்கம் தோய்ந்த முகத்துடன் நிற்கும் நிலை பரிதாபத்திற்குரியது. Though one who comes for aid gets blossomed face after getting food or things from one, the stance of his standing with pitiable face till he is donated is tragedious. -------------------------- குறள் 225: ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின் விளக்கவுரை: தவவலிமையால் பசியை தாங்கித் கொள்ளும் ஆற்றலை விட பசியை போக்க உணவளிக்கும் ஆற்றலே பெரியது. The stance of tackling one's hunger through spiritual meditation is not stronger than abating the hunger by serving food. -------------------------- குறள் 226: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி விளக்கவுரை: ஒருவரின் பசிப்பிணியை போக்க உணவளித்து மகிழ்பவனின் செல்வமனைத்தும் அழியாமல் நிற்கும். One who stops one's hunger by distributing food pleasantly will not lose his wealth in his life. It will stably stand for him for years. -------------------------- குறள் 227: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது விளக்கவுரை: தன் உணவை பிறர்க்கும் பகிர்ந்தளித்து தானும் உண்பவனுக்கு பசிப்பிணி என்றும் வராது. One who is eating his food by distributing others would never get hunger sick in his life. -------------------------- குறள் 228: ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் விளக்கவுரை: ஈகை அளித்து அதிலுள்ள மகிழ்ச்சியை அறியாதவரே தன் பொருள் அனைத்தையும் யாரிடமோ எங்கோ இழப்பர். Ones who aren't aware of that 'only helping others would cause happiness' would lose their sources to someone and somewhere in the future. -------------------------- குறள் 229: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல் விளக்கவுரை: தேடிய பொருளனைத்தையும் தானே உண்டு அனுபவித்து வாழும் நிலை, அடுத்தோரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்கும் நிலையைவிட கொடுமையானது. The stance of enjoying all his properties himself without assisting to any one is worse than standing infront of one and begging for help. -------------------------- குறள் 230: சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை விளக்கவுரை: சாவது தான் பெரும் துன்பமென்றாலும், பிறர்க்கு உதவ ஏதுமில்லாத நிலை சாவதைவிட பெரும் துன்பமாகும் என்பர் சான்றோர். Intellectuals would say that 'death is not an extreme tragedy but the stance of being not able to help others is the most extreme tragedy'. ------------------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) -------------------------- அதிகாரம் 24 புகழ் CHAPTER 24 PRIDE (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 -------------------------- குறள் 231: ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு விளக்கவுரை: ஏழைகளுக்கு உதவுவதனால் கிடைக்கும் புகழை விட ஒரு மனிதனுக்கு பெரும் சம்பாதித்யம் ஏதுமில்லை Explanation in English: No any other earning is the best to one as he earns prides by helping poor people. -------------------------- குறள் 232: உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ் விளக்கவுரை: வறுமையில் இருப்போர்க்கு உதவுவதை கண்டு பிறர் புகழும் புகழ்ச்சியே முதன்மையான புகழ். Explanation in English: The perfect pride is that others applaud one because of his doing immense help to people who are under poverty. -------------------------- குறள் 233: ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில் விளக்கவுரை: ஒருவனின் நற்செயல்களால் கிடைக்கும் புகழே என்றும் நிலைத்து நிற்குமேயன்றி வேறெதுவும் இல்லை. Explanation in English: None would stably stand but the pride of one done by good activities. -------------------------- குறள் 234: நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு விளக்கவுரை: இவ்வுலகம் தேவர்கள் முனிவர்களை கூட வாழ்த்தாது ஆனால் நற்செயல் புரிந்து புகழ்பெற்றவர்களை வாழ்த்தும். Explanation in English: The world would no applaud even sages or saints but ones who get prides of his good acts. -------------------------- குறள் 235: நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது விளக்கவுரை: அத்தனை துன்பத்திலும் கஷ்ட்டத்திலும் புகழை தாங்கி நிற்கும் தன்மை சாவிற்கு பிறகும் நிலைத்து நிற்கும். Explanation in English: Retaining prides despite being infinite difficulties would ever stand even after death too. -------------------------- குறள் 236: தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று விளக்கவுரை: நற்செயல் புரிந்து புகழ்பெற்று வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும். இல்லேல் வாழ வந்ததே அர்த்தமற்றதாகும். Explanation in English: One should live with earning prides a lot by doing enormous betterments otherwise one's birth is meaningless. -------------------------- குறள் 237: புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன் விளக்கவுரை: புகழுடன் வாழ இயலாதவர் தன் இயலாமையை மறைத்து அதற்காக பிறரை இகழ்ந்து உரைப்பது சிறுமையாகும். Explanation in English: It's meaningless what one who is not able to be granted prides because of his inability but accusing others instead of him. -------------------------- குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின் விளக்கவுரை: வாழ்வில் எஞ்சி நிற்பது புகழ் தான் என்றெண்ணி வாழ்வில் புகழ் பெற வாழ தவறுவது ஒரு பழியாகும். Explanation in English: Failing being granted prides despite knowing that only pride remains ever is a crime. -------------------------- குறள் 239: வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் விளக்கவுரை: புகழ்பெற்று வாழ முயற்சிக்காதவரை சுமந்ததற்காக இந்த புவியே வெட்கி நிற்கும். Explanation in English: The earth too would shy and lose its dignity for carrying ones who fail to live with prides of good activites. -------------------------- குறள் 240: வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் விளக்கவுரை: பழி/குற்றமில்லாமல் வாழ்பவரே வாழ்பவர்களாவார்கள். அது போல புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ லாயக்கற்றவர்களாவார்கள். Explanation in English: Only the life of ones without crime is the best life likewise the life of ones without prides is the worst life. ---------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) -------------------------- அதிகாரம் 25 அருளுடைமை CHAPTER 25 GRACEFULNESS (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 -------------------------- குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள விளக்கவுரை: எவ்வளவுதான் பொருள் செல்வம் யாரிடத்தில் இருந்தாலும் அது அருள் என்கிற செல்வத்திற்கு ஈடாகாது. Explanation in English: How far ever wealth can be had by whoever. Such is not equallent to the wealth of grace. -------------------------- குறள் 242: நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை விளக்கவுரை: எவ்வழிச் சென்றாலும் கிடைக்கும் செய்தி, நல்வழி நாடிச் சென்று பெற்ற நல்லருள் ஒன்றே கடைசிவரை துணையாக நிற்கும். Explanation in English: Any path of religious say that one should go on right path to get great grace. -------------------------- குறள் 243: அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் விளக்கவுரை: அருள் சேர்ந்த உள்ளமுடைவர்களுக்கு இருள் சூழ்ந்த துன்பம் என்றும் வருவதில்லை. Explanation in English: A graceful hearted person would never get darky illy life ever. -------------------------- குறள் 244: மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை விளக்கவுரை: அனைத்து உயிர்களையும் நேசித்து வாழ்பவர்களுக்கு பேரருள்கிட்டுவதால் உயிருக்கு அஞ்சி வாழவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. Explanation in English: If ones are loving all living beings in the world, as they are blessed immensely they can be away from the fear of death. -------------------------- குறள் 245: அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி விளக்கவுரை: காற்று நிறைந்திட்டு இவ்வுலகை காப்பதுபோல் அருள் நிறைந்திட்டு நல்லோர்க்கு துன்பம் வருவதில்லை. Explanation in English: As if the wind stands and protects this world, graceful persons would be away from all evils. -------------------------- குறள் 246: பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார் விளக்கவுரை: அருளில்லாதோர, தான் அடையப்போகும் துன்ப நிலையையும் அறியும் வாயப்பு கிட்டாதாவர். Explanation in English: Graceless ones couldn't come to know what they are to meet difficulties in the future time. -------------------------- குறள் 247: அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு விளக்கவுரை: பொருட்செல்வம் இல்லாது ஒருவர்க்கு இவ்வுலகம் இன்பம் தராதது போல் அருட்செல்வம் இல்லாதோர்க்கு மோட்சத்தில் இடமில்லை Explanation in English: No pleasant in the present life to ones who don't have wealth likewise there would not be place in the heaven to those who don't have graces from god. -------------------------- குறள் 248: பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது விளக்கவுரை: பொருட்செல்வம் இழந்திருந்திருந்தாலும் மீட்டு விடலாம், இழந்த அல்லது இல்லாது போன அருட்செல்வத்தை மீட்டு பெறமுடியாது. Explanation in English: The lost wealth can be retrieved by one but not the lost graces can be gotten back. -------------------------- குறள் 249: தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் விளக்கவுரை: அருள் இல்லாதவனின் அறச்செயல்கள் அறிவிலிகளின் நூல்களில் காணும் கருத்தை போன்றதாகும். Explanation in English: Moralities done by graceless persons are equallent to the concepts of the books written by utter fools. -------------------------- குறள் 250: வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து விளக்கவுரை: தன்னை விட பலம் குன்றியவர்களிடம் தன் வீரத்தை காட்டுவதற்கு முன், தன்னைவிட பலசாலியிடம் எதிர்கொள்ளும் ஆற்றல் தனக்கு உள்ளதா என்பதை ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும். Explanation in English: One should think about whether he is strong enough to dash against one who is stronger than him before showing his bravery to one who is weaker. ---------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) -------------------------- அதிகாரம் 26 புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ----------------------------- குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் விளக்கவுரை: இன்னொரு உயிரைக் கொண்டு தன் உடலை வளர்ப்பவனை எப்படி கருனையுள்ளவனாக இருக்க முடியும்? Explanation in English: How can one be merciful if he grows his body by killing other living beings? ----------------------------- குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு விளக்கவுரை: புலால் உண்பதால் ஒருவன் அருளில்லாதவனாகிறான் அவன். அவனிடம் பொருள் குவிந்திருந்தாலும் அது அநீதியாகும். Explanation in English: Though one is having infinite wealth, if he eats meat, he is known as graceless fellow. ----------------------------- குறள் 253: படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை யுண்டார் மனம் விளக்கவுரை: புலால் சுவை அறிந்தவன், தீமை வழிக்காக படை கொண்டு எச்செயலையும் செய்பவனுக்கு சமமானவன். Explanation in English: One who tastes meat and flesh is a person like a person who has troops for collapsing by illy ways. ----------------------------- குறள் 254: அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல் விளக்கவுரை: பிற ஜீவராசிகளின் உயிரை பரித்தல் அருள் இல்லை. அப்படி பரிப்பவர்கள் கருணையற்றவர்கள். அதிலும் புலால் புசித்தல் அர்த்தமற்ற செயல். Explanation in English: Killing other living beings is graceless activity and merciless characteristic. More over, eating meat is sinful. ----------------------------- குறள் 255: உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு விளக்கவுரை: புலால் உண்ணாதிருத்தலே உயர்நிலை. தவறுபவர்கள் நரகத்தின் வாயிலுக்கு செல்கிறார்கள் என்று பொருள். நரகம் அவர்களை கவ்விகொள்ளும். Explanation in English: The status of not eating flesh is the highest grace. Failing which would go to the gate of hell. The hell would crawl them. ----------------------------- குறள் 256: தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில் விளக்கவுரை: உண்பதற்காக உயிர்வதை செய்யாமலிருந்தால் புலால் கிடைக்காத நிலை ஏற்படும். புலால் உண்ணும் வழக்கமும் இல்லாமல் போகும். Explanation in English: If there is no slautering living beings (catle), none can avail meat, and habit of eating meet wouldn't exist. ----------------------------- குறள் 257: உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின் விளக்கவுரை: புலால் இன்னொரு உயிரின் ரணம் என்றறிந்தவர்கள் புலால் உண்ணமாட்டார்கள். Explanation in English: One who knows that meat is the hurt of another living being would not eat it. ----------------------------- குறள் 258: செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் விளக்கவுரை: குற்றமில்லா நெஞ்சுடையார் உயிர் பிரிந்த உடலை உண்ணமாட்டார்கள். Explanation in English: One who is crimeless hearted characteristic would never eat the meat that is a derived one from a soul. ----------------------------- குறள் 259: அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று விளக்கவுரை: ஓர் உயிரை கொல்லாதிருத்தல் ஆயிரம் வேள்விகள் (யாகங்கள்) செய்ததற்கு சமமானதாகும். Explanation in English: The stance of not killing a living being is equallent to perform thousands of spiritual disciplines. ----------------------------- குறள் 260: கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் விளக்கவுரை: எவ்வுயிரையும் கொல்லாதிருப்போரை அனைத்து உயிர்களும் கைகூப்பி வணங்கும். All living beings would pray ones who don't kill any living being for any reason. ---------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) -------------------------- அதிகாரம் 27. தவம் Chapter 27. PENANCE (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ---------------------------- குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு விளக்கவுரை: தனது துன்பத்தை தாங்கிக்கொள்வதும், பிறருக்கு துன்பம் தராமல் இருப்பதே பெரும் தவமாகும். Explanation in English: The prime penance is that the state of being patient despite having difficulties, and not to do illy activities to others. ---------------------------- குறள் 262: தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள்வது விளக்கவுரை: தவம் செய்யும் ஒழுக்கநெறிமுறைகளை அறிந்தோரே தவம் செய்யமுடியும் மற்றோர் தவம் செய்தலாகாது. Explanation in English: Only the persons who know the disciplines of penance can do penance. Others can't do it. ---------------------------- குறள் 263: துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்கள் தவம் விளக்கவுரை: துறவறம் பூண்டோர்க்கு பணிவிடை செய்வதே ஒரு தவம் என்றெண்ணி தவம் செய்ய மறப்பார்கள் பலர். Explanation in English: Some might forget to perform penance since they are enthusiastically servicing to those who have quitted all desires. ---------------------------- குறள் 264: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும் எண்ணின் தவத்தான் வரும் விளக்கவுரை: தவ வலிமையால் தீயோரை திருத்தமுடியும். நல்லோரை மிக வல்லோராக்க முடியும். Explanation in English: Surely, Through one's penance, he can correct evil guys to bring to the right path, and can enhance purists more and more. ---------------------------- குறள் 265: வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் விளக்கவுரை: விரும்பியவற்றை விரைந்து பெற்றுக்கொள்ளும் பாக்கியம் தவ வலிமைக்கு உண்டு. Explanation in English: One can obtain all betterments rapidly by doing a strong penance morally. ---------------------------- குறள் 266: தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு விளக்கவுரை: நற்குணம் கொண்ட நல்லவர்களே தவம் செய்ய முற்படுவர். ஏனையோர் ஆசைக்குட்பட்டு அவலநிலை அடைவர். Explanation in English: Only disciplined persons would desire to do penance. Others would be spinned in greedy net and get evils a lot. ---------------------------- குறள் 267: சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு விளக்கவுரை: சூட்டினால் தங்கம் மென்மேலும் மிளிர்வது போல, தன்னை மென்மேலும் வருத்தி தவம் செய்வோருக்கு பிரகாச வாழ்க்கை கிட்டும். Explanation in English: As if gold is glittering more and more since it is heated, ones who do penance more and more would get glittering in their life. ---------------------------- குறள் 268: தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும் விளக்கவுரை: தன் உயிரே முக்கியம், தன் வாழ்க்கையே செளக்கியம் என்று நினைக்காதவர்களை இம் மண்ணிலுள்ள அனைத்து உயிர்களும் வணங்கும். Explanation in English: All living beings in this earth would be praising ones who don't consider that only their lifes are important for them. ---------------------------- குறள் 269: கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு விளக்கவுரை: இறப்பையும் எதிர்கொள்ளும்/வெல்லும் ஆற்றலை தூய்மையான தவத்தின் பயனால் பெற முடியும். Explanation in English: One can defeat his death too by virtue of his pure penance. ---------------------------- குறள் 270: இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் விளக்கவுரை: இவ்வுலகில் பலருக்கு எதுவுமில்லா நிலை ஏற்படுவதற்கு காரணம் ஒழுக்கம் நிறைந்த தவநிலை மேற்கொள்ளாததே. சிலருக்கு மட்டும் அருள் கிடைப்பதற்கு காரணம் துன்பத்தையும் பொறுத்து தவநிலையை பின்பற்றுவதே. Explanation in English: Nil betterment in many persons' life is happening because of their ignorance of moral penance. Likewise a few are getting grace of God because of their strong penance despite having difficulties. ---------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) -------------------------- அதிகாரம் 28. கூடா ஒழுக்கம் CHAPTER 28. EVIL MORALITY (AVOIDABLE DISCIPLINES) (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ---------------------------- குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் விளக்கவுரை: ஒழுக்கமற்ற வஞ்சகத்தனமான குணமுள்ளவரை இந்த பஞ்சபூதங்களும் பார்த்து எள்ளிநகையாடும். Explanation in English: The five prime Gods of this galaxy would giggle at those who are dirty hearted guys. -------------------------- குறள் 272: வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின் விளக்கவுரை: தன் குற்றத்தை தன் மனசாட்சியே உறுத்தியும் தொடருங்கால் தவம் செய்தும் புண்ணியமில்லை. Explanation in English: If one resumes his crime though his conscience reminds him, his doing penance is useless. -------------------------- குறள் 273: வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று விளக்கவுரை: தீயமனம் மனதில்கொண்டு நல்லோர் போல் நடிப்போர் புலித்தோல் போர்த்திக்கொண்டு பசுவை போல் புல் மேய்வதற்கு ஒப்பாகும். Explanation in English: While carrying dirty a lot inside pretending honestly outside is like a cow is eating grass with tiger skinned. -------------------------- குறள் 274: தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று விளக்கவுரை: தவக்கோலம் பூண்டு தவறுகள் பல இழைத்தல், புதரில் மறைந்து நின்று வேட்டையாடுவதற்கு சமமாகும். Explanation in English: Doing illy affairs a lot with a dress code of sages is as bad as a hunter is hunting hidddenly. -------------------------- குறள் 275: பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும் விளக்கவுரை: பற்று அனைத்தும் துறந்தேன் என்று கூறிக்கொண்டு அவச்செயல்கள் செய்வோர்க்கு துன்பம்தான் பரிசாக வரும். Explanation in English: If one says that he has quitted all but habits are opposite, he would be gifted sadness. -------------------------- குறள் 276: நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில் விளக்கவுரை: பற்று எதனையும் துறக்காமல் துறந்தது போல் நடிப்பவர்கள் தான் இவ்வுலகின் முதற்கண் இரக்கமற்றவர்கள்/ஏமாற்றுக்காரர்கள். Explanation in English: Ones who are without quitting all greed but pretending as if he has done so are the first merciless persons/ cheaters. -------------------------- குறள் 277: புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து விளக்கவுரை: அகத்தில் அழுக்கையும் புறத்தில் அழகையும் கொண்டுள்ளவர்களின் நிலைப்பாடு, குன்றிமணி சிகப்பாய் தோன்றினாலும் அதன் முனை கருப்பாக இருக்கும் நிலைக்கு ஒப்பானதாகும். Explanation in English: The stance of those who are dirty inside but beauty outside is like a rosary pea that looks beautiful outside but carries black in corner. -------------------------- குறள் 278: மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் விளக்கவுரை: புறத்திலுள்ள மாசை அகற்ற நீராடினால் போதும் என்றாலும் அகத்திலுள்ள அழுக்கை அகற்ற வழி? Explanation in English: Dusts in body can be removed by bathing, but what is the way to wash the dusts that are inside. -------------------------- குறள் 279: கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை வினைபடு பாலாற் கொளல் விளக்கவுரை: அம்பு (கணை) நேரானதாக இருந்து கொடிய செயல் செய்யக்கூடியதாலும். யாழ் வளைந்திருந்து இனிய ஓசை தரக்கூடியதாலும், உருவம் என்பது வினைபடும் தன்மையை பொறுத்தது. Explanation in English: Arrow is straight but attacks. Veena is bended but delivers sweety sound so that Grading is not determined of one's appearance. -------------------------- குறள் 280: மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் விளக்கவுரை: உலகம் பழிக்கும் இழி செயல்களை முற்றிலும் துறந்தாலே போதும். முடி வளர்த்தல், முடி மழித்தல் போன்ற வேடங்கள் தேவையில்லை. Explanation in English: Quitting all desires is the best status of a sage. But not having a long hair or getting tonsured. -------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com (Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) -------------------------- அதிகாரம் 29 கள்ளாமை CHAPTER 29 NOT TO STEAL OTHERS (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ---------------------------- குறள் 281: எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு விளக்கவுரை: பிறரிடம் அவப்பெயர் எடுக்க வேண்டாமெனில் அடுத்தவரின் பொருளை கிஞ்சித்தும் அபகரிக்க நினைக்கக்கூடாது. Explanation in English: If ones don't want to get worst name in society, he ought not to think steal others. -------------------------- குறள் 282: உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல் விளக்கவுரை: அடுத்தோரின் பொருளை அடைய நினைத்துப் பார்ப்பதே ஒரு வித கள்வத்தனம். Explanation in English: Even one thinks about stealing others, that too is a kind of robriness. -------------------------- குறள் 283: களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும் விளக்கவுரை: பிறர் பொருளை களவி இன்பம் பெற்றால் பல மடங்காக தன் பொருள் அழியும். Explanation in English: If one may be pleasant by stealing others', he would lose his things multiple times. -------------------------- குறள் 284: களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும் விளக்கவுரை: ஒரு முறை களவு செய்து ஆசைக் கண்டுவிட்டால் பல முறை செய்ய நேர்ந்து அளவிலா துன்பம் பெற வழிவகுக்கும். Explanation in English: If one desires stealing act one time, he would meet out infinite evils as he would be eager to steal often. -------------------------- குறள் 285: அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில் விளக்கவுரை: அருளும் அன்பும் மனதில் நிலைத்திருந்தால் களவு செய்யும் எண்ணம் கனவிலும் வராது. Explanation in English: If one is graceful and kindness, he would never think about stealing others'. -------------------------- குறள் 286: அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர் விளக்கவுரை: இருப்பதை வைத்து வாழ்க்கை நடத்த விரும்பாது பேராசை நிரம்பியவருக்கே களவு செய்யும் தீமை எண்ணம் வரும். Explanation in English: Only the greedy persons who aren't able to live with sufficient wealth would get the illy thoughts of stealing others'. -------------------------- குறள் 287: களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில் விளக்கவுரை: அளவறிந்து வாழும் ஆற்றல் பெற்றோர் களவு செய்யும் மாயவலையில் விழ மாட்டார். Explanation in English: Ones who know to move their lives with codes of limitation wouldn't not fall on stealing greed. -------------------------- குறள் 288: அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சில் கரவு விளக்கவுரை: அளவோடு ஆசைப்பட்டு வாழ்பவர்கள் நெஞ்சில் அறம் இருக்கும். களவு செய்து வாழ்வோர் நெஞ்சில் வஞ்சம் மட்டும்தான் இருக்கும். Explanation in English: Ones who live by feeling their wealth is sufficient would have morality. Thieves would have only aggressiveness. -------------------------- குறள் 289: அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் விளக்கவுரை: திருடும் தொழிலை தவிர பிற தொழில் மேல் நாட்டமில்லாதவர்கள் அதனாலேயே அழிந்துபோவர். Explanation in English: Ones who don't experience and desire at any profession other than stealing would be destroyed because of that characteristic. -------------------------- குறள் 290: கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு விளக்கவுரை: கள்வர்களின் உயிர் அவர்களிடம் இருப்பதையே ஒரு பாவமாக நினைக்கும், களவு எண்ணம் இல்லாதோரின் உயிர்நிலைக்கு தேவர்களின் ஆசீர்வாதம் கிட்டும். Explanation in English: Even soul too be shy and would think as a sin to tend on stealers. Those who don't have stealing thoughts in mind would be blessed by Gods. -------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 30 வாய்மை CHAPTER 30 TRUTHFULNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------------------- குறள் 291: வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் விளக்கம்: வாய்மை என்பது என்னவென்றால், பிறருக்கு தீங்கு தராத வார்த்தைகளை மட்டும் பேசுதல் ஆகும். Explanation in English: What the truthful honesty is that to pronounce/speak only good words that should not cause any evil to others. ------------------------------------- குறள் 292: பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் விளக்கம்: பொய்மை உரைத்தல் ஆகாது தான் எனினும், பொய்மையால் நன்மைபயக்கும் பட்சத்தில் பொய்மை கூட வாய்மையாகும். Explanation in English: Lying is not good but if it is spoken for any good affair that too is considered a kind of truthfulness. ------------------------------------- குறள் 293: தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் விளக்கம்: பேசுவது பொய்மையென்று அறிந்தும் பொய் பேசுபவர்களின் மனசாட்சியே அவர்களை உறுத்தும். Explanation in English: One's conscience would be punishing him if one speaks lies despite knowing that is not good. ------------------------------------- குறள் 294: உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் விளக்கம்: உள்ளத்துள் பொய் பேசாது வாழ்பவர்கள் உலகத்தார் உள்ளத்துள் குடியிருப்பார்கள். Explanation in English: Those who don't speak lies at any circumstance would be tending in all people's heart. ------------------------------------- குறள் 295: மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை விளக்கம்: தவத்தின் மூலம் ஞானம் பெற்று விளங்குபவர்களை விட பொய் பேசாது வாழும் மக்களே உயர்ந்தவர்கள். Explanation in English: Those who live without lying are considered as greater people than the people who had obtained wisdom by their penance. ------------------------------------- குறள் 296: பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும் விளக்கம்: பொய் பேசாது வாழும் நிலையே உயர்ந்தது. புண்ணியம் அனைத்தும் தானாய் வந்துசேரும். Explanation in English: The life without lies is the highest one. Graces would cummulate to them who observe such life. ------------------------------------- குறள் 297: பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று விளக்கம்: பொய்மை பேசாது வாழ்ந்தாலே போதும். அது பலருக்கு அறம் செய்து வாழும் நிலைக்கு ஒப்பாகும். Explanation in English: It's enough living without speaking lies. That stance is equallent to the stance of life doing infinite Morality. ------------------------------------- குறள் 298: புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் விளக்கம்: புறத்தூய்மை நீரால் ஏற்படுவதுபோல அகத்தூய்மை வாய்மையால் ஏற்படும். Explanation in English: As if making tidyness of body washing by using water, tidyness of mind and heart are made by being honest. ------------------------------------- குறள் 299: எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு விளக்கம்: இருளை போக்கும் எல்லா விளக்குகளையும் விட உயரிய விளக்கு உள்ளத்துள் நிற்கும் பொய்யாமை குணமே ஆகும். Explanation in English: The stance of having trait of without lying is concerned as a greater holy lamp than all lamps which hurl up darks in the world. ------------------------------------- குறள் 300: யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற விளக்கம்: யாமறிந்த வகையில், வாய்மைக்கு நிகரான சிறப்புநிலையாக எதையும் ஒப்பிட்டு கூற இயலாது. Explanation in English: As far I have known no any stance can be said as greater one than one's being truthful. ------------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 31 வெகுளாமை CHAPTER 31 STANCE OF NOT GETTING ANGER. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------------------- குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென் விளக்கம்: தன் கோபம் பலித்துவிடும் என்கிற சூழ்நிலையில் அஞ்சி சினம் கொள்ளாதவனே புத்திசாலி. மற்ற இடங்களில் கோபம் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அது ஒரு பொருட்டாகாது. Explanation in English: If one controls himself by knowing that his anger would effect badly because of the situation, he is intelligent. Other types of anger is not considered as a matter. ------------------------------------- குறள் 302: செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற விளக்கம்: வலியோரிடத்தில் சினங்கொண்டால் தீமைதான் விளையும் அதுபோல எளியோரிடம் சினம் காட்டுதல் அறத்திற்கு புறம்பானது. Explanation in English: Angering on strong persons would cause to one numberless evils. Likewise angering on weak persons is against the Morality. ------------------------------------- குறள் 303: மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும் விளக்கம்: எவரிடத்திலும் சினம் கொள்வதை மறப்பது நலம். இல்லேல் அந்த சினத்தாலேயே தீமைகள் வரும். Explanation in English: It's better to forget angering on anyone from the root. Otherwise it would bring an infinite evils. ------------------------------------- குறள் 304: நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற விளக்கம்: சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தரும் கோபத்தை விட ஒருவனுக்கு பகை வேறொன்றுமில்லை. Explanation in English: No one is as a big enemy to one as an anger is, even if it may cause happiness and laugh. ------------------------------------- குறள் 305: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் விளக்கம்: தன் சினமே ஒருவனை அழித்துவிடுமாகையால், தன்னை காபந்து செய்துகொள்ள வேண்டுமாயின் சினம்கொள்ளாமல் இருப்பது நலம். Explanation in English: If one wants to protect himself, he ought not to getting anger on anyone because it would surely destroy him. ------------------------------------- குறள் 306: சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் விளக்கம்: சினம் தன்னை மட்டுமின்றி, தன்னை காத்து நிற்கும் சுற்றத்தையும் அழித்துவிடும். Explanation in English: Anger would destroy not only oneself but also all who are protecting him. ------------------------------------- குறள் 307: சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று விளக்கம்: கைகளால் நிலத்தை அறைந்தால் கைகளுக்கு தான் கேடு அதுபோல சினம்தான் தன்னை காக்கும் கைப்பொருள் என்று நினைப்பனுக்கு கேடு தான் வரும். Explanation in English: The act of slamming the land by hands would cause pain only to hands. Likewise if one thinks that his anger is a safeguard for him, he would surely meet evils. ------------------------------------- குறள் 308: இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று விளக்கம்: சுடும் நெருப்பைக் காட்டிலும் மோசமான துன்பத்தை தந்தவனாகினும் நாடி வருங்கால், பகையை நினைத்து சினம் கொள்ளுதல் கூடாது. Explanation in English: If one nears to one to make friendliness eventhough he had done infinite evils that are worst than burning fire, one should not get anger on him by thinking past events. ------------------------------------- குறள் 309: உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின் விளக்கம்: உள்ளத்திலிருந்து சினம் எனும் குணத்தை அகற்றிவிட்டால், அனைத்து இன்பமும் அவனிடம் வந்துசேரும். Explanation in English: If one removes the root of anger from his heart, all wealth would cummulate to him. ------------------------------------- குறள் 310: இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை விளக்கம்: சினம் எனும் குணம் கொண்டோர் இறந்தோர்க்கு சமமானவர்கள். சினத்தை தூக்கியெறிந்தோர் துறவிகளுளுக்கு ஒப்பானவர்கள். Explanation in English: Angering guys are equallent to dead persons likewise, those who have given up their anger are parellel to sages. ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 32 இன்னா செய்யாமை CHAPTER 32 Features of not doing evil 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------------------- குறள் 311: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் விளக்கம்: துன்பம் செய்தால் அளப்பறிய பணம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், மாசற்ற நன்மக்கள் பிறர்க்கு துன்பம் தர எண்ணமாட்டார்கள். Explanation in English: Immaculate good people would never think to do evil even if they get an opportunity to get a plenty of money for doing evil. ------------------------------------- குறள் 312: கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் விளக்கம்: கடுந்துன்பம் ஒருவர் தந்திருந்தாலும் அதற்கு பதிலடியாக துன்பம் தர நினைக்காததே மாசற்றவர்களின் கொள்கை. Explanation in English: The principle of immaculate people is not to reply evil to ones who had done severe evil to them. ------------------------------------- குறள் 313: செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும் விளக்கம்: யாதொரு துன்பமும் தராத ஒருவருக்கு துன்பம் செய்யுங்கால், மீளா துன்பம் நிச்சயம் வந்துசேரும். Explanation in English: If one does misery to one who had never done any misery to anyone, an insoluble big misery will reach to him. ------------------------------------- குறள் 314: இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் விளக்கம்: தீங்குசெய்தவருக்கு சரியான பதிலடி யாதெனில், அவர் வெட்க்கும்படி அவருக்கு நல்லது செய்துவிடுவதே. Explanation in English: The best reply to one who had done evil is that to do goodness as far as he is shying a lot. ------------------------------------- குறள் 315: அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போற் போற்றாக் கடை விளக்கம்: பிற உயிர்க்கு வரும் துன்பத்தை தன் துன்பம் போல் நினைக்காவிட்டால் அறிவு இருந்தும் என்ன பயன்? Explanation in English: If one doesn't feel that other's misery is like his own, what's else gain despite being wisdom? ------------------------------------- குறள் 316: இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் விளக்கம்: துன்பநிலை என்னவென்று அறிந்தபின்பும் பிறர்க்கு துன்பம் செய்ய நினைப்பது தவறு. Explanation in English: It's a great fault if one does evil to others though he had known the sadness of evil. ------------------------------------- குறள் 317: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை விளக்கம்: யாருக்கும் எந்த காலத்திலும் ஒரு சிறு துன்பம் கூட தராமலிருப்பதே சிறப்பான குணம். Explanation in English: The best character is that not doing even a bit evil to any one at any circumstance. ------------------------------------- குறள் 318: தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் விளக்கம்: தன்னுயிர்க்கு துன்பம் வந்தால் மனவலியால் துடிக்கும் ஒருவன் பிற உயிர்க்கு துன்பம் தர நினைப்பது என்ன நியாயம்? Explanation in English: While one who is getting suffering when he is getting evil, if he wants to do misery to others is not justice. ------------------------------------- குறள் 319: பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் விளக்கம்: பிறர்க்கு துன்பம் தந்து இன்பம் அடைந்து கொண்டிருக்கும்பொழுதே துன்பம் அவனுக்கு துரிதமாக வந்து சேரும். Explanation in English: Evil will reach to one in no time if he is cheerful for his having done evil to some other. ------------------------------------- குறள் 320: நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் விளக்கம்: பிறர்க்கு தீமை செய்தால் அத்தீமை தனக்கே வரும் என்ற உண்மையை அறிந்தவர்கள் பிறர்க்கு தீமை செய்ய விழையமாட்டார். Explanation in English: Persons who know that an evil done to others will surely return to them will never dare to do evils. ------------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 33 கொல்லாமை CHAPTER 33 NOT TO SLAUGHTER/KILL 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் விளக்கம்: அறங்களிலேயே முதன்மையான அறம் எது என்றால் உயிர்களை வதை செய்யாதிருத்தல்தான். இவ்வறம் பிற நல்வினைகள் எல்லாவற்றையும் தரும். Explanation in English: The prime Morality is that not to kill any living being. Being so, all goodness would reach them. ------------------------- குறள் 322: பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை விளக்கம்: கிடைத்ததை மற்றோர்க்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வதே சிறந்த அறம் என்று சான்றோர் நூல்களில் குறிப்பிடுகிறார்கள். Explanation in English: Great men have quoted in their books that the stance of living and eating by sharing food to others is the best Morality. ------------------------- குறள் 323: ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று விளக்கம்: கொல்லாமையே முதல் சிறந்த அறமாகும் பொய் சொல்லாமை அடுத்த சிறந்த அறமாகும். Explanation in English: Not killing is the first Morality in one's life. Not lying is the next Morality. ------------------------- குறள் 324: நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழும் நெறி விளக்கம்: சிறந்த அறநெறி என்பது எதுவென்றால், எந்த உயிரையும் எச்சூழலிலும் கொல்லாமலிருப்பதே. Explanation in English: The best Morality in one's life is that not to kill any living being at any circumstance. ------------------------- குறள் 325: நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை விளக்கம்: வாழ்வின் அறநிலைக்கு அஞ்சி துறவறம் மேற்கொள்வோரை காட்டிலும் உயிர்பலி கூடாது என்ற அறநிலைக்கு அஞ்சி வாழ்பவரே சிறந்தவராவார். Explanation in English: The persons who fear to Morality and being not killing any living being are greater than ones who become as sages by obeying the Morality. ------------------------- குறள் 326: கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லா துயிருண்ணுங் கூற்று விளக்கம்: உயிர் கொல்லா நிலை கொண்ட நல்லோரை கண்டு உயிர்கொண்டு செல்லும் நமனும் பின்நாளில் அவர் உயிரை பறிக்க அஞ்சுவான். Explanation in English: The Naman who plucks the lives too would fear to pluck the live of the persons who are living with good Morality by having sence of not killing manner. ------------------------- குறள் 327: தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை விளக்கம்: தன் உயிரே போகும் சூந்நிலை ஏற்பட்டாலும், பிற உயிரை பறிக்கும் எண்ணத்தை மனதில்கொள்ளக்கூடாது. Explanation in English: One should not even think for killing any living being even if he is in the situation as losing his live. ------------------------- குறள் 328: நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை விளக்கம்: உயிர் பலியிடுதல் பயன் தரும் என்கிற அற்ப கூற்றை நல்லோர் எவரும் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். Explanation in English: Good virtual persons wouldn't agree the stance of saying killing living beings spiritually would cause gain for life. ------------------------- குறள் 329: கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து விளக்கம்: மாபாதக செயல் என்று அறியாமல் கொலை செய்வதை தொழிலாக கொண்ட மானிட பதர்கள் சான்றோர் கண்களுக்கு அற்ப பொருளாக தெரிவார்கள். Explanation in English: Persons who commit killing is their profession without knowing such is an earth shaking activity will be seen by good moralitised persons as very silly people. ------------------------- குறள் 330: உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் விளக்கம்: ஒரு உடம்பிலிருந்து உயிரை நீக்கி அற்ப செயல் செய்பவர்கள், தன் உடம்பிலிருக்கும் நோய் என்றுமே போகாத நிலையிலேயே கடைசிவரை வாழ்வர். Explanation in English: Those who do ugly affairs that is plucking soul from a body will be suffering in their life by carrying unrecoverable diseases till they die. ------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 34   நிலையாமை Chapter 34  INSTABILITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 ------------------------- குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை விளக்கம்: நிலையில்லாதவற்றை நிலையானவை என்று உணரும் அறிவு இழிவானதாகும். Explanation in English: The wisdom that says instability is stability is silly one. -------------------- குறள் 332: கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று விளக்கம்: பெருஞ்செல்வம் இருப்பது நாடகத்தின் பொழுது கூட்டம் குழுமி இருப்பதுபோல். நிலையானதல்ல. நாடகம் முடிந்து கூட்டம் கலைந்து செல்வதுபோல் அச்செல்வமும் விலகிப் போகும். Explanation in English: Having a sack of wealth is like a crowd infront of drama. As if the crowd disassemble after the drama, big wealth too can go away. -------------------- குறள் 333: அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் விளக்கம்: செல்வம் நிலையற்றது. நிறைந்திருக்கும்பொழுதே அதைக் கொண்டு பல அறச்செயல்கள் செய்வது நல்லது. Explanation in English: Having big wealth is instable. when it exists, has to utilise it for doing goodness for others. -------------------- குறள் 334: நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின் விளக்கம்: உயிரும் நிலையற்றதே. நாள் அல்லது காலம் என்பது, உயிர் உடம்பிலிருப்பதை குறித்து வைத்துக்கொள்ளும் ஒரு வாள் என்பதை சான்றோர் அறிவர். Explanation in English: Live is instable. Day or time is like a sword that counts the days of staying time of live in body. -------------------- குறள் 335: நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும் விளக்கம்: நா அடைத்து விக்கல் வருவதுபோல் இறப்பு வருவதற்கு முன்பே  அறச்செயல்களனைத்தையும் செய்துவிடவேண்டும். Explanation in English: Live is instable so the service of doing all goodness should be completed before live is leaving the body as if getting hickup due to block of tongue. -------------------- குறள் 336: நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு விளக்கம்: நேற்றிருப்போர் இன்றில்லை என்கிற நிலையாமையை  பெருமைக்குறியதாக கொண்டதுதான் இந்த உலகம். Explanation in English: Life is instable because this world proudly contains the stance that is one who was alive yesterday but he is no more today. -------------------- குறள் 337: ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல விளக்கம்: வாழ்வின் உண்மையான அர்த்தத்தை ஒரு பொழுது உணர்ந்து அறிந்து கொள்ள முயற்ச்சிப்பதை விடுத்து அவ்வாழ்விற்காக காணும் கனவுகளோ கோடிக்கும் மேல். Explanation in English: One is dreaming crores and more for his life but failing to know the exact meaning of the life. -------------------- குறள் 338: குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு விளக்கம்: உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவு, பறவை தன் கூட்டை பிரிந்து பறந்துவிடுவது போல் நிலையற்றதாகும்.  Explanation in English: The relationship between live and body is instable because live too would fly away from body as if a bird is flying away from its nest. -------------------- குறள் 339: உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு விளக்கம்: வாழ்க்கை நிலையற்றது. இறப்பு என்பது உறங்கச் செல்வதுபோல். அது போல பிறப்பு என்பதும் உறங்கி விழிப்பதுபோல் தான். Explanation in English: Death means that one is going to sleep due to tired. Likewise birth means that one is waking up from his sleepy. -------------------- குறள் 340: புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு விளக்கம்: உடல் உயிர்க்கு நிலையானதல்ல. அது உயிரை தன் ஓர் ஓரத்தில் வந்து அமர இடம்தரும் ஒரு புகலிடமே! Explanation in English: Body is just like a sanctuary to live. It just provides a place to live for dwelling so body too is instable to live.  ------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com  📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.  Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 35 துறவு Chapter 35 ASCETICISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் விளக்கம்: ஒருவர் ஒன்றின் மீதுள்ள பற்றை துறந்துவிட்டால், அதன்மூலம் ஏற்படும் துன்பத்தை அடையமாட்டார். Explanation in English: If one quits all desires of a thing, he will be away from miseries caused by such thing. --------------------------- குறள் 342: வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல விளக்கம்: விரும்பத்தக்கதாக ஒன்று இருப்பினும் அதை துறந்துவிட்டால் அதனால் அடையும் இன்பங்களோ பற்பல. Explanation in English: If one quits a thing that is such a admirable one of him, many more immense happiness would cummulate to him. --------------------------- குறள் 343: அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு விளக்கம்: ஐம்புலன்களையும் அடக்கியாளும் வித்தையை அறிந்து கொள்ளும்பட்சத்தில் அவை விரும்பும் அனைத்தையும் துறந்துவிடலாம். Explanation in English: If one knows to control all five senses, he can quit the desires caused by those five senses. --------------------------- குறள் 344: இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து விளக்கம்: தவ நிலையின் இயல்பு எதுவென்றால் யாதொரு உடைமை மீதும் பற்றில்லாமல் இருத்தலே. உடைமைபால் மதிமயங்கி பற்று கொண்டால் துறவு பெறமுடியாது. Explanation in English: The base of penance is that to quit the desire put on anything. If one affectionates lovingly on anything, Hardly to get the stance of asceticsm. --------------------------- குறள் 345: மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை விளக்கம்: பிறவியின் துன்பம் வேண்டாம் என நினைப்போருக்கு அவர் தன் உடம்பே மிகையாக இருக்கும்பொழுது பிற ஆசைகளுக்கு இடமே இல்லை. Explanation in English: The entire body alone is a gift to ones those who don't want the miseries of births. Being so, other desires are unnecessary. --------------------------- குறள் 346: யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் விளக்கம்: நான் தான் எல்லாம் என்ற செருக்கை அறுத்தாலே போதும் வானுலத்தை விட உயர்ந்த உலகத்தில் உட்புகலாம். Explanation in English: If one cuts out the haughtiness thought "Only I am all", he will have been living in better than the heavenly world. --------------------------- குறள் 347: பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு விளக்கம்: ஆசைகளை விடாமல் அகத்தில் கொள்வோரை துன்பங்கள் விடாமல் பற்றிக்கொள்ளும். Explanation in English: Miseries would strongly hug those who don't quit desires but pasting them in their mind. --------------------------- குறள் 348: தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் விளக்கம்: அனைத்து ஆசைகளையும் துறந்தவரே முற்றும் துறந்தவராவர். ஏனேயோர் ஆசையெனும் வலையில் சிக்கிக்கொண்டவராவர். Explanation in English: Only those who quit all desires are known as complete ascetics. Others are those who are trapped in the net of greed. --------------------------- குறள் 349: பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் விளக்கம்: ஆசைகளற்ற வாழ்க்கையே மறுபிறப்பை அறுக்கும். இல்லேல் பிறந்து பிறந்து சாகும் நிலைதான் தொடரும். Explanation in English: Only the desireless life would cut off the stance of rebirths. Otherwise, should get rebirths and meet out suffering ever. --------------------------- குறள் 350: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு விளக்கம்: பற்று அற்றவர்களின் பற்று யாதென்று அறிந்து அதனை பற்றிக்கொண்டாலே பற்றுகளனைத்தையும் விட்டுவிடலாம். Explanation in English: If one knows the desire of ones those who quit all desires, he can quit all of his desires. ------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 36 மெய்யுணர்தல் CHAPTER 36 CONSCIOUSNESS/ TO REALISE TRUTHFULNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு விளக்கம்: பொய்மையை உண்மை என்று உணர்வோர் மற்றும் பிறர்க்கும் அதை உணர்த்துவோரின் பிறப்புநிலை இழிவானதாகும். Explanation in English: The stance of ones who perceive falsehood to be true and those who perceive it to others is contemptible. ----------------------- குறள் 352: இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு விளக்கம்: ஒருவர் குற்ற நிலையிலிருந்து நல்ல நிலைக்கு வரும்பொழுதுதான் இன்பநிலைகளை நிறைய பெறுவர். Explanation in English: One can get a lot of pleasures only when one skips him from a state of guilt to a state of good. ----------------------- குறள் 353: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து விளக்கம்: அச்சத்திலிருந்து நீங்கி தெளிந்த அறிவு பெறுபவர்களுக்கு இந்த வானமும் வசப்படும். Explanation in English: This heaven will be subdued for those who are freed from fear and receive enlightened. ----------------------- குறள் 354: ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு விளக்கம்: ஒருவருக்கு ஐம்புலன்களை அடக்கியாள தெரிந்திருந்தும், மெய்யுணர்வு எது என்று அறியா நிலையில் அவர் இருந்தால் யாதொரு பயனும் இல்லை. Explanation in English: It is of course useless for a person to know how to suppress five senses, but if he does not know what consciousness is. ----------------------- குறள் 355: எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு விளக்கம்: கூறும் பொருள் எத்தகையதாகினும், யார் அதை கூறினாலும் அதிலுள்ள உண்மைப் பொருளை கண்டறிவதே சாணக்கியத்தனம். Explanation in English: Whatever the meaning of whatever is said, the wisdom is to find the reality in whoever says it. ----------------------- குறள் 356: கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி விளக்கம்: நன்கு கற்றறிந்து மெய்ப்பொருள் கண்டறிந்தோர்க்கு மறுப்பிறப்பு துன்பம் வந்து சேராது. Explanation in English: Those who are well educated and find the truth would not meet out the misery of rebirth ----------------------- குறள் 357: ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு விளக்கம்: உண்மைநிலையறிந்து அதில் உறுதியாய் இருப்போர், மறுப்பிறப்பு நிலை குறித்து அஞ்சவேண்டியதில்லை. Explanation in English: Ones those who know by distinguishing the facts and are firm in it, do not have to fear about the state of rebirth. ----------------------- குறள் 358: பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு விளக்கம்: பிறப்பு எனும் மடைமையை நீங்கச்செய்து, சிறப்பு எனும் உண்மை பொருளை கண்டறிவதே சிறந்த ஞானமாகும். Explanation in English: The best wisdom is to cut off the clutter of birth and discover the true meaning of features of life. ----------------------- குறள் 359: சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் விளக்கம்: மெய்பொருளின் சார்பு என்னவென்று அறிந்து அதனை பின்பற்றி பற்றின்றி வாழ்ந்தால் துன்பங்கள் வாழ்வில் அணுகாது. Explanation in English: Miseries will not tend in life of ones if they know what the bias is and follow it and live without dedires. ----------------------- குறள் 360: காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய் விளக்கம்: காமம், சினம், ஆசை இவை மூன்றையும் விடாவிட்டால், சமூகத்தில் ஒருவர் தன் நற்பெயரை இழந்து தீமைகளை மட்டுமே பெறுவர். Explanation in English: If the bad senses such as lust, anger and desire are not given up, one will lose one's reputation in the society and only gain evil. ----------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 37 அவா அறுத்தல் CHAPTER 37 TO CUT OFF DESIRES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து விளக்கம்: ஆசை துன்பம் தருவித்தாலும், அனைத்து உயிர்களின் உதயத்திற்கும் அவைகளை பாதுகாத்தலுக்கும் அடிப்படை வித்து ஆசையே. Explanation in English: Although desire causes miseries, that is the base to provide and protect births to all living beings. --------------------------- குறள் 362: வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் விளக்கம்: பிறவாமை என்பதையே ஒருவர் விரும்ப வேண்டும் அப்படி செய்ய ஆசையில்லா எண்ணம் வேண்டும். Explanation in English: One should like not be born again. If one wants to like so, he must cut off desires from his thought. --------------------------- குறள் 363: வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில் விளக்கம்: ஆசை அறவே இல்லை என்ற எண்ணமே பெருஞ்செல்வம். அதற்கு ஈடாக எதையும் குறிப்பிட முடியாது. Explanation in English: The biggest wealth is the stance of not desiring on anything. Nothing can be parellaled to it. --------------------------- குறள் 364: தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் விளக்கம்: தூய்மை என்பதற்கு இலக்கணம் பேராசையற்ற குணம். அது நேர்மையாக இருந்தால் மட்டுமே வரும். Explanation in English: The base of purity is that having desireless thoughts. Only being honest would provide this tendency. --------------------------- குறள் 365: அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார் அற்றாக அற்ற திலர் விளக்கம்: பிறவியற்றவர்களே பற்றற்றவர் ஆவார்கள் அல்லது பற்றற்றவர்களே பிறவியற்றவர்களாக இருக்க முடியும் மற்றவர்கள் பற்றவர்களாக கருதப்படுவர் மாத்திரமே. Explanation in English: Only Birthless persons can have desireless status. Or desireless tendency can cause birthless probability. Others may be considered as desireless but not perfectly. --------------------------- குறள் 366: அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா விளக்கம்: ஆசையே அடுத்தோரை வஞ்சிக்கும் எண்ணத்தை உண்டாக்கும். அவ்வாசை வரக்கூடாது என்று அஞ்சி வாழ்வதே அறம் ஆகும். Explanation in English: Only greed stimulates cunning acts that to be done on others. So living fearfully for not to get such trait is Moral or virtual. --------------------------- குறள் 367: அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் விளக்கம்: ஒருவன் அழியாது இன்புற்று வாழவேண்டுமாயின் ஆசையை அறவே ஒழித்தால் மட்டுமே அது சாத்தியப்படும். Explanation in English: If one wants to be living stably with all cheers, it is possible only by cutting off all desires in life. --------------------------- குறள் 368: அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும் விளக்கம்: ஆசையற்றவர்களுக்கு துன்பநிலை என்றுமில்லை. ஆசையை விடார்க்கு துன்பநிலை தொடர்ந்து வரும். Explanation in English: No miseries to ones who gives up all desires. Likewise, miseries would cummulate to ones who don't quit desires. --------------------------- குறள் 369: இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின் விளக்கம்: ஆசை என்பது துன்பம் ஆகும். அத்துன்பத்தை ஒழித்தால் மட்டுமே இடையற்ற இன்பநிலையை பெற முடியும். Explanation in English: Desire is meant also as a misery. One can have pauseless pleasance in life, only when he throws out such misery called desire. --------------------------- குறள் 370: ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் விளக்கம்: நிறைவு என்கிற நிலையே இல்லாத ஆசையை ஒழித்தால், நிலைத்து வாழும் இயல்பு நிலையை இயற்கை தரும். Explanation in English: Only when one destroys desire that has dissatisfaction at all, he could get a habitual stance of living stably. ----------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 38 ஊழ் CHAPTER 38 FATE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி விளக்கம்: பொருள் தேடா அசைவற்ற நிலையை தருவதும், பொருள் தேடும் முயற்ச்சியை தருவதும் ஒருவரின் விதியே. Explanation in English: The reason for one's inability of earning being stable, and being brisk for earning is depending upon one's fate. ------------------------ குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை விளக்கம்: அறிவை அகற்ற வைத்து பேதமையை உண்டாக்கி ஒன்றை இழக்க வைப்பதும், ஆக்கத்துடன் இருக்க வைப்பதும் விதியின் செயல்களாகும். Explanation in English: Making one to get fade up in life by plucking knowledge towards making him losing all, and making one to be creative are the acts of fate. ------------------------ குறள் 373: நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும் விளக்கம்: நூல்கள் பல கற்பதால் பெறும் அறிவை, விதிப்பயனால் பிறப்பில் பெறும் உண்மை அறிவு மிகுதியாக்கும். Explanation in English: The wisdom that is obtained from birth through fate would enhance the wisdoms earned by studying numerous books. ------------------------ குறள் 374: இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு விளக்கம்: இரு வெவ்வேறு இயல்புகள் இயற்கையாம் விதியில். செல்வத்தில் திளைப்பது ஒன்று. அறிஞராக ஜொலிப்பது ஒன்று. Explanation in English: Fate determines two different routes. One is that making one to glitters in wealth and making another one glitters in wisdom. ------------------------ குறள் 375: நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு விளக்கம்: செல்வம் தேடும் சூழலில் நல்லவை தீயவையாவதும் தீயவை நல்லவையாவதும் விதியின் பண்பே. Explanation in English: During earning wealth, it is effect of fate what goodness becomes bad and badness becomes good. ------------------------ குறள் 376: பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம விளக்கம்: ஒருவரின் உரிமைப் பொருட்கள் அவர் வேண்டாம் என்றாலும் அவரிடம் தான் நிற்கும். உரிமையில்லாதவைகளை அவர் வேண்டும் என்றாலும் விதி அவற்றை இழக்கவைத்துவிடும். Explanation in English: Even if one doesn't want his own wealth and belongings, those will stand with him stably, and those things which aren't his but if he wants to possess them, fate will make him lose those things. ------------------------ குறள் 377: வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது விளக்கம்: கோடிகள் பல சேர்த்தாலும் விதிப்பயன் இல்லையென்றால், சேர்த்தவர் அவற்றை அடைவது அல்லது அனுபவிப்பது அரிது. Explanation in English: Even if one earns crores and crores, if there is no fate to one to enjoy them, he can't. ------------------------ குறள் 378: துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின் விளக்கம்: எளியோர்க்கு, துன்ப நிலை நீங்கிப்போகும் விதி அவர்களிடம் இல்லையெனில், நுகர வேண்டியவற்றை நுகரும் வாய்ப்பில்லாமல், அவர்கள் துறவு நிலையை அடைய வேண்டிவரும். Explanation in English: If there is no fate to poor people to stand away from miseries, they will stand on the state of asceticism. ------------------------ குறள் 379: நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் விளக்கம்: நன்மைகள் நடந்தால் இன்பத்தை ஒதுக்கிவைக்காமல் மகிழ்வுறும் மக்கள், தீமைகள் நடந்தால் துன்பம் விதிப் பயன் என்று உணராமல் அழுவது அறிவன்று. Explanation in English: What while people are enjoying their happiness during being happy without thinking about fate, crying thinking about fate when they are sad is not right. ------------------------ குறள் 380: ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் விளக்கம்: விதியின் வலிமை தெரியாமல் அதன் வலியை போக்கிட வேறு வழிநாடினாலும் அங்கும் கூட விதி தான் வலிமையாய் வந்து நிற்கும். Explanation in English: Even if one turns his path to be away from the pain of fate without knowing the strength of fate, the fate will come and stand there too. ----------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 -------------------------------------- பகுதி 2. பொருட்பால் MORALITY OF WEALTH ----------------------- அதிகாரம் 39 இறைமாட்சி CHAPTER 39 CHARACTERISTICS OF A GOOD REIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 381: படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு விளக்கம்: சிறந்த படை, நல்ல பிரஜைகள், மிகுந்த செல்வம், அறிவுமிகு அமைச்சர்கள், அயலாரிடம் அன்பு, மக்கள் அச்சமின்றி வாழ பாதுகாப்பு - இவை ஆறும் கொண்டவனே வீரமிகு சிங்கத்திற்கு இணையான அரசனாவான். Explanation in English: One who has the six prime stances like, strong troops, Moral people, immeasurable wealth, intelligent ministers, kind relationship with strangers, and safety assurance for people to live fearlessly is the powerful and brave king of a nation. And he is parellel to a lion. --------------------------- குறள் 382: அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு விளக்கம்: ஒரு சிறந்த அரசனுக்கு இயல்பாகவே இருக்க வேண்டிய நான்கு நற்பண்புகள் யாதெனில், அஞ்சாமை, உதவும் குணம், நிறைந்த அறிவு, ஊக்கம். Explanation in English: A powerful king should have four best characteristics for his good reign. They are, fearlessness, the trait of helping tendency, much more intelligence and powerfulness in his reigning acts. --------------------------- குறள் 383: தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு விளக்கம்: புவி ஆளும் ஒரு மன்னன், எந்நேரத்திலும் சோர்ந்து விடாமலிருத்தல் வேண்டும். கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும். அஞ்சாநெஞ்சம் கொண்டவனாக இருக்கவேண்டும். Explanation in English: A king who rules his nation must not get fatigue at any situation, should be literate, should have fearless heart. --------------------------- குறள் 384: அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு விளக்கம்: அறனுக்கு பங்கம் ஏற்படாது, தீயவைகளை அகற்றி வீரத்துடன் செயல்படுவதே மானம் உள்ள அரசாகும். Explanation in English: Only the Goverment which is acting bravely without losing Morality, rubbing out all evils is honourable one. --------------------------- குறள் 385: இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு விளக்கம்: வருவாயை உருவாக்கி அதை கருவூலம் நிரம்ப பெருக்கி, அவற்றை காத்து நின்று, அறிவுப்பூர்வமாக செலவிடும் அரசே வல்லமை பொருந்திய அரசாங்கமாகும். Explanation in English: Only which creates income sources, multiplying such to full of treasury, protecting such, and intelligently alloting funds for reasonable expenditures is an immense Goverment. --------------------------- குறள் 386: காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் விளக்கம்: காண்பதற்கு எளிமையானவனாகவும் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருந்து ஆட்சி புரியும் அரசனையே இவ்வுலகம் மெச்சும். Explanation in English: The world will applaud the king who is ruling, looking very simple and without pronouncing any hard word. --------------------------- குறள் 387: இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு விளக்கம்: இனிய சொல் பிரயோகித்து ஈகை குணம் பெற்று, மக்களை காக்கும் மன்னனையே இவ்வுலகம் போற்றும். Explanation in English: The world will praise the king who protects people, with having stance of helping tendency and by speaking sweetly with people. --------------------------- குறள் 388: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் விளக்கம்: பகுத்தாராய்ந்து முறையான நீதி வழங்கி மக்களை காக்கும் மன்னன் மக்களால் இறைவனுக்கு நிகராக கருதப்படுவான். Explanation in English: The king who is being honest and judging justiciouly for protecting people will be considered equallent to God by people. --------------------------- குறள் 389: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு விளக்கம்: காது கொடுத்து கேட்கஇயலா கடுஞ்சொற்களால் விமர்சிக்கப்பட்டாலும், அப்படி அவர்கள் செய்வது தவறு என்றறிந்து அவற்றை பொறுத்துக் கொண்டு அரசாளும் மன்னனின் ஆட்சியே இவ்வுலககில் நிலைத்து நிற்கும். Explanation in English: The reign of a king who is very much patient even if he is criticised with harsh words by others (despite knowing such words are against truth) will stand for ever. --------------------------- குறள் 390: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி விளக்கம்: கொடை வழங்குதல், கருணை காட்டல், நல்லாட்சி செய்தல், எளியோரை அரவணைத்து காத்தல் ஆகிய நான்கு பண்புகளையும் கொண்ட மன்னனின் ஆட்சியில் வறுமை வராது. Explanation in English: No poverty will be in the reign of a king who is having the four characteristics such as, donating to people, showing mercy on people, ruling good, and being a strong safeguard for people. --------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 40 கல்வி CHAPTER 40 EDUCATION 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - தெய்வப்புலவர். விளக்கம்: கற்றவைகளை நல்லவைகளாக்கி கொள்ளவேண்டும். அல்லது நல்லவைகளை மட்டுமே கற்க வேண்டும். கற்றதோடு நிற்காமல், கற்றவர் என்கிற தகுதி நிலைபெறும் வகையில் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: One should make their learned aspects be good for life or should learn only good aspects. The importance is that he should have all quallities based on his learning. - MAHENDIRAN V குறள் 392: எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு - தெய்வப்புலவர். விளக்கம்: கணிதம் சார்ந்த கல்வியை கலைகளுடன் ஒருங்கிணைத்து கற்றல் அனைத்துயிர்களுக்கும் இரு கண்களை போன்றதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Learning aspects relevant to mathematics (numbers) along with arts is like two eyes of life of everyone. - MAHENDIRAN V --------------------------- குறள் 393: கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் - தெய்வப்புலவர். விளக்கம்: கற்றோருக்கு தான் கண்கள் இருந்து பயன். கல்லார்க்கு கண்களிலிருந்தும் கண்ணில்லாதவர்களாகவே கருதப்படுவர். - வை.மகேந்திரன் Explanation in English: Only educated are having eyes. Despite having eye sight, if one is illeducated he would be considered as not having eyes. - MAHENDIRAN V --------------------------- குறள் 394: உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் - தெய்வப்புலவர். விளக்கம்: மகிழ்வுடன் கூடி கருத்துரைத்து, பிரிதலின்பொழுது, இனி இவரை எப்பொழுது காண்போம் என்கிற தாக்கத்தை ஏற்படுத்துவதே கற்றோரின் தொழில் பக்தி. - வை.மகேந்திரன் Explanation in English: The career devotion of an educated is to teach by convening joyfully and to make an impact when he is parting like 'when we will see him again.' - MAHENDIRAN V --------------------------- குறள் 395: உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் - தெய்வப்புலவர். விளக்கம்: வலியோர் முன் எளியார் ஏங்கி நிற்பது போல், கற்றோர் முன் காத்துநின்று கல்வி பயின்றோரே கற்றார் ஆவர். அப்படி செய்ய வெட்க்கப்பட்டோர் கல்லார் ஆவர். - வை.மகேந்திரன் Explanation in English: As if poor is waiting infront of rich for getting gain, Ones who are eagerly learning by waiting for scholars are Literates. Those who shied to do so are illeducated. - MAHENDIRAN V --------------------------- குறள் 396: தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு - தெய்வப்புலவர். விளக்கம்: புவியில் எவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவு நீர் சுரக்கும் அது போல எவ்வளவு கற்கிறோமோ அவ்வளவு அறிவு பிறக்கும. - வை.மகேந்திரன் Explanation in English: As if water secretes from the earth as far as the level of digging the earth, Knowledge would secrete as far as one's evel of learning capability. - MAHENDIRAN V --------------------------- குறள் 397: யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு - தெய்வப்புலவர். விளக்கம்: கற்றவர் எல்லா தேசத்திலும் ஊரிலும் சிறப்பு பெறுவர். இதையறிந்தும் கடைசிவரை கல்லாமல் இருப்பது மடைமை. - வை.மகேந்திரன் Explanation in English: Despite knowing the Literates would get fame wherever they go across the world, being without learning is foolish. - MAHENDIRAN V --------------------------- குறள் 398: ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து - தெய்வப்புலவர். விளக்கம்: கற்கும் கல்வி ஒருவரின் இப்பிறவிக்கு மட்டுமல்ல, ஏழு பிறவிக்கும் சந்ததிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். - வை.மகேந்திரன் Explanation in English: Education obtained by one is useful not only in this birth but also will be useful for seven more births and descendants. - MAHENDIRAN V --------------------------- குறள் 399: தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் - தெய்வப்புலவர். விளக்கம்: கற்றோர், தாமும் இவ்வுலகமும் கல்வி கற்றதன் பயனால் இன்புறுவதைக் கண்டு மேலும் மேலும் கற்க விரும்புவர். - வை.மகேந்திரன் Explanation in English: As Literates are realising that the pleasance can be obtained only by education, they would be eager to learn more and more. - MAHENDIRAN V --------------------------- குறள் 400: கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை - தெய்வப்புலவர். விளக்கம்: கல்வி ஒன்றே ஒருவருக்கு அழியாச் செல்வம். இதற்கு ஈடாக யாதொன்றையும் குறிப்பிடமுடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: Only the education is an undestroyable wealth. Nothing can be parellel to this. - MAHENDIRAN V --------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 41 கல்லாமை CHAPTER 41 ILLITERACY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: கருத்து நிறைந்த நூல்களை படிக்காமல், கற்கிறேன் என்று கூறுவது, அரங்கு மற்றும் உபகரணம் இல்லாமல் பகடை விளையாடுவது போல் ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one says that he is learning but not studying books that contain wisdom, that is like the state of playing gambling without hall and instrument. - Mahendiran V --------------------------- குறள் 402: கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. - தெய்வப்புலவர். விளக்கம்: கல்லாதவர்கள், கற்றோர் அவையில் பேச விரும்புவது என்பது, மார்பங்களிரண்டும் இல்லாதவள் புணர்ச்சிக்கு ஆசைப்படுவது போலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The state of willing of ill-educated to address in the hall of educated is like a woman is willing for lust without her boobs. - Mahendiran V --------------------------- குறள் 403: கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் - தெய்வப்புலவர். விளக்கம்: கற்றவர்கள், அவையில் உரையாற்றும் பொழுது கல்லாதவர்கள் அவையடக்கத்துடன் முந்தி நின்று எதுவும் பேசாமல் கவனித்துக்கொண்டிருந்தால், கல்லாதோரும் கற்போரே. - வை.மகேந்திரன் Explanation in English: If ill-educted is being quiet and listen obediently while educated are addressing, ill-educated too are learners. - Mahendiran V --------------------------- குறள் 404: கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார் - தெய்வப்புலவர். விளக்கம்: கல்லாதோரின் கருத்துக்கள் சிறந்ததாயிருந்தாலும், கற்றோர் அதை ஏற்க மறுப்பர். - வை.மகேந்திரன் Explanation in English: Even if the concept spoken by ill-educated is found to be best, educated would deny to accept that. - Mahendiran V --------------------------- குறள் 405: கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் - தெய்வப்புலவர். விளக்கம்: கற்றோர் அவையில் கல்லாதோர் தற்பெருமை பேசினால், அவர்களின் சொல்லாடல் நீர்த்துப்போகும். - வை.மகேந்திரன் Explanation in English: If ill-educated speak their self prides in the hall of educated, the words expressed by illeducated would be invalid. - Mahendiran V --------------------------- குறள் 406: உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர் - தெய்வப்புலவர். விளக்கம்: கல்லாதோர், விளைச்சல் தராத தரிசு நிலத்தை போல உயிரிருந்தும் பலனில்லாத உடலை மட்டும் தாங்கி நிற்பவரே. - வை.மகேந்திரன் Explanation in English: As if a dried land that is not providing harvest, Ill-educated are like a mere body despite having live. - Mahendiran V --------------------------- குறள் 407: நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று - தெய்வப்புலவர். விளக்கம்: நூல்கள் பலபடித்து நுட்பமான அறிவு பெறாமல் அழகாக மட்டும் இருப்பவனின் நிலைப்பாடு, அழகுப் பதுமையொன்று மணல் சிற்பமாக இருப்பதற்கு சமமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Being pretty in appearance but not carrying knowledge by studying books a lot is like a beautiful woman sculptured by mere sand. - Mahendiran V --------------------------- குறள் 408: நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு - தெய்வப்புலவர். விளக்கம்: கல்லாதோரிடம் குவிந்து கிடக்கும் செல்வம், கற்றுணர்ந்த நல்லோரின் வறுமையை விட கொடியது. - வை.மகேந்திரன் Explanation in English: Immesurable wealth that is had by ill-educated is atmost worst than the severe poverty of educated. - Mahendiran V --------------------------- குறள் 409: மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு - தெய்வப்புலவர். விளக்கம்: கல்லாதோர் மேற்பிறப்போ கீழ்பிறப்போ, அது முக்கியமல்ல, அவர்கள் கற்றோருக்கு சமமாக கருதப்பட மாட்டார். - வை.மகேந்திரன் Explanation in English: Whether ill-educated is a born bred of highclass or lowclass is not a matter, they can't be considered equallent to educated. - Mahendiran V --------------------------- குறள் 410: விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் - தெய்வப்புலவர். விளக்கம்: நுல்கள் பல கற்று மதி நிறைந்தோரே மக்களாக கருதப்படுவர். மற்றோர் விலங்குகளுக்கு ஒப்பானவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: People those who have studied books a lot and being fullfilled with wisdom are called human. Others are considered as animals. - Mahendiran V --------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 42 கேள்வி CHAPTER 42 HEARING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: செவி மற்றும் செவி வழியாக கேட்டறியும் நல் கருத்துக்களே எல்லா செலவங்களையும் விட தலைச்சிறந்த செல்வமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Rather hearing good words through ears and ears alone are the prime wealth ever than any other. - Mahendiran V --------------------------- குறள் 412: செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: செவிக்கு விருந்தாக கருத்துக்கள் கிடைக்காத சமயத்தில் வயிற்றுபசிக்கு சிறிது உணவு எடுத்துக்கொள்ளலாம். - வை.மகேந்திரன் Explanation in English: If there is no feast to abate hunger of hearing good words by ears, may utilise such time for having food to abate stomach's hunger. - Mahendiran V --------------------------- குறள் 413: செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து - தெய்வப்புலவர் விளக்கம்: செவிவழி கேட்டு கேட்டு ஞானம் அடைந்து புவியில் வாழும் மக்களவர், தவமே உணவென்று வாழ்ந்த அடியார்களுக்கு ஒப்பாவர். - வை.மகேந்திரன் Explanation in English: People who had obtained wisdom by hearing through ears are parellel to sages who lived by thinking penance alone is food. - Mahendiran V --------------------------- குறள் 414: கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: நூல்கள் பல படிக்க வாய்ப்பில்லாவிடினும் கற்றறிந்தோர் உரைகளை செவி வழி கேட்டு கற்பது, சங்கடங்கள் வரும் போது ஊன்றுகோலாய் அமையும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one doesn't have an opportunity to study books or epics, studying by hearing good words from scholars would help him during suffering like a stick helps to a disabled man. - Mahendiran V --------------------------- குறள் 415: இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கமுடையோரின் சொற்களை கேட்டறிதல், வழுக்கும் நிலத்தில் விழாமல் காக்கும் ஊன்றுகோல் போல், வாழ்க்கைக்கு பெரிதும் உதவும். - வை.மகேந்திரன் Explanation in English: Words heard from Morality persons would be helpful to one's life like a stick is helping one when he is walking on slipping floor. - Mahendiran V --------------------------- குறள் 416: எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: எந்த அளவுக்கு நல்லவைகளை கேட்டறிகிறோமே அந்த அளவுக்கும் அதிகமாகவே பெருமை சேர்க்கும். - வை.மகேந்திரன் Explanation in English: One would get multiple amount of prides only based on the amount of good words of good people heard by him. - Mahendiran V --------------------------- குறள் 417: பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: நுணுக்கமாய் கேட்டறிந்து ஞானம் பெற்றோர், அறிந்ததில் ஒரு சில பிழையென்றாலும் அதை பேதமையாய் சொல்லி உடைக்க மாட்டார். - வை.மகேந்திரன் Explanation in English: Those who are intellectual and earning wisdom of hearing preciously good words from good people would not break errors innocently perhaps found by them. - Mahendiran V --------------------------- குறள் 418: கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லோரின் நல் கருத்தை செவி வழியே கேட்க தயங்குபவர்களுக்கு/மறுப்பவர்களுக்கு செவிகளிருந்தாலும் அவர்கள் செவிடர்களே. - வை.மகேந்திரன் Explanation in English: Those who are hesitating or denying to hear good words of good people are also deaf despite having ears. - Mahendiran V --------------------------- குறள் 419: நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது - தெய்வப்புலவர் விளக்கம்: நுண்ணிய கருத்துக்களை நயம்பட கேட்டறிய தவறியோர், பணிவுடன் பேசும் பண்பை இழப்பர். - வை.மகேந்திரன் Explanation in English: Those who fail to hear pleasant and good words of good people would lose the trait of saluation and obedience during their speaking. - Mahendiran V --------------------------- குறள் 420: செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென் - தெய்வப்புலவர் விளக்கம்: செவி இனிக்க கேட்டறியும் சுவையை உணராது, வாய் இனிக்க உண்ணும் உணவே சுவை என்போர் இவ்வுலகில் இருப்பதும் இறப்பதும் ஒன்றுதான். - வை.மகேந்திரன் Explanation in English: Being alive and dying is same what those who don't realise the sweet taste of hearing for gathering good words through ears, but preferring for the taste of food that they eat. - Mahendiran V --------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 43 அறிவுடைமை CHAPTER 43 POSSESSION OF KNOWLEDGE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625 --------------------------- குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவனாலும் அழிக்க முடியாத கோட்டை போன்றது அறிவு. அழிவிலிருந்து காப்பாற்றும் கருவி ஆகும் அறிவு. - வை.மகேந்திரன் Explanation in English: Knowledge is power like a fort. It is a strong weapon to protect from destroyal - Mahendiran V --------------------------- குறள் 422: சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: மனம்போன போக்கில் போக விடாமல், தீய வழியை தகர்த்து நல்வழிக்கு இட்டுச் செல்வதே அறிவு ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: Knowledge will direct one very right path by cracking evils; won't lead to wrong path wherever mind goes. - Mahendiran V --------------------------- குறள் 423: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: யார் எக்கருத்தை கூறினாலும், அதிலுள்ள நற்பொருளை இனம்கண்டு எடுத்துக்கொள்வதே அறிவார்ந்த செயல். - வை.மகேந்திரன் Explanation in English: If whoever says whatever about a matter, the wisdom is that to pick out good ones from such matter by distinguishing intelligently. - Mahendiran V --------------------------- குறள் 424: எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரிடம் கருத்துரைக்கும் பொழுது அவர் புரியும்படி உரைப்பதே அறிவார்ந்த செயல். அதுபோல பிறர் கூறும் கருத்து நுட்பமாய் இருந்தாலும் அதை புரிந்துகொள்ளும் ஆற்றலே அறிவு ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: The right knowledge is that to express a matter to others understandably, and to comprehend the concept from a matter despite being tough. - Mahendiran V --------------------------- குறள் 425: உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரிடம் நட்பு பாராட்டி, பகைத்து மீண்டும் கூடி என்றிராமல் எப்பொழுதும் பகையின்றி நட்பு பாராட்டி நிலைத்து வாழ்வதே அறிவாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Living stably by making friendship always with others without making eneminess now and then is knowledge. - Mahendiran V --------------------------- குறள் 426: எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: உலகத்தார் செல்லும்/ சொல்லும் வழி நல்வழியாயின், முரண்படாமல் அதை பின்பற்றுவதே அறிவார்ந்த செயல். - வை.மகேந்திரன் Explanation in English: If the route of world people is found to be correct, following such without controversial is knowledgable act. - Mahendiran V --------------------------- குறள் 427: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவுடையோர் ஒரு செயலை அதன் பின்விளைவை துல்லியமாய் அறிந்து செயல்படுவர். அப்படி செய்யாதார் அறிவில்லாதவராவர். - வை.மகேந்திரன் Explanation in English: Wisdomed people would act always by predicting precisely the future effect of their acts. Those who don't fo do are senseless people. - Mahendiran V --------------------------- குறள் 428: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் - தெய்வப்புலவர் விளக்கம்: அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமல் வீரம் காட்டுபவர்கள் அறிவில்லாதவர்கள்; விளைவை நினைத்து வீரம் காட்டாதவர்கள் அறிவாளிகள். - வை.மகேந்திரன் Explanation in English: Those who show their bravery in the situation when one should be calm are senseless. Those who don't show their anger in the same situation, and being calm are knowledgeable persons. - Mahendiran V --------------------------- குறள் 429: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் - தெய்வப்புலவர் விளக்கம்: வரப்போகும் விளைவை அனுமானித்து புத்திக்கூர்மையாக செயல்படுவோர்க்கு எக்காலத்திலும் துன்பம் வர வாய்ப்பில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: No miseries to people those who act by thinking and predicting intelligently about future effects. - Mahendiran V --------------------------- குறள் 430: அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவுடையோரிடம் பொருள், செல்வம் இருப்பினும் இல்லாவிடினும் இருக்க பெற்றவரே. அறிவிலாரிடம் அவை குவிந்திருந்தாலும் இல்லா நிலையிலிருப்பர் ஆவர். - வை.மகேந்திரன் Explanation in English: Whether knowledged are having wealth and sources or not is not a matter, it is considered that they have all those because of having knowledge. But, even if ill- knowledged are having an infinite wealth and property, it is considered that they have nothing. - Mahendiran V --------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work are reserved by me, and it's my own property. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 44 குற்றங்கடிதல் CHAPTER 44 CONDEMNING CRIMES. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR From the domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------------ குறள் 431: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஆணவம் சினம் காமம் இவை மூன்றையும் அகற்றினால் பெருமையாக வாழலாம். - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: One who gives up pride, anger and lust will be alive proudly in the world. -MAHENDIRAN V ------------------ குறள் 432: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: கொடை நிறுத்தல், மதிப்பிழந்த மானம், அளப்பறியா பெருமை ஆகியவை ஆள்பவர்களுக்கு இருக்கக்கூடாத பண்புகள். வை. மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: Stopping donations, valueless honour, infinite pride are big enemies to rulers. -MAHENDIRAN V ------------------ குறள் 433: தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறிதளவு குற்றமாகினும் அதுவும் பெரியக் குற்றங்களுக்கு சமம் தான் என்று கருதி குற்றம் செய்யாதிருப்போரே பழிக்கு அஞ்சி நடப்பவராவர். வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: No size for crime. Even if it is a little one, one should consider such is big. If one follows this concept that means that he is the man who fear for sins. -MAHENDIRAN V ------------------ குறள் 434: குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை - தெய்வப்புலவர் விளக்கம்: குற்றம் அது பழி கொணரும். பகையை தரும். அழிவுக்கான ஆதாரம் அது. குற்றம் காக்க குற்றம் செய்யின் தீமையை விலைக்கு வாங்குவது போலாகும். வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: Crime would bring sin, eneminess. That is the factor for demise. If one commits at crime, it mean that he purchases evils by paying money. -MAHENDIRAN V ------------------ குறள் 435: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: குற்றம் செய்யும் முன்பே அதை செய்யாதிருக்க பண்படாதவனின் வாழ்க்கை எரியும் தீயின் அருகில் இருக்கும் வைக்கோல் போல் கருகிப்போகும். - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: If one doesn't stop himself crimes even if he is in the situation to do, that is like that hills of straws is kept near the flaming fire. -MAHENDIRAN V ------------------ குறள் 436: தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரிடம் குற்றம் காணும் முன்னே தன்பால் ஏதும் குற்றம் இல்லை என்று நிற்பவனே குறையில்லாத அரசன். - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: One who stands without any crime on him before he accuses others is a faultless king. -MAHENDIRAN V ------------------ குறள் 437: செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: கொடையேதும் செய்யாது கஞ்சம் காட்டி பூட்டி வைக்கப்பட்ட செல்வம் வீணாய் அழிந்துபோகும். - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: One's wealth that is kept locked as stinginess by not using that to donate to inabilities will vanish itself. -MAHENDIRAN V ------------------ குறள் 438: பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: பொருளின் அல்லது செல்வத்தின் மேல் வீணான பற்றுக்கொண்டு அது சேர வேண்டிய இடத்திற்கு செல்ல விடாமல் நிறுத்திவைப்பதே பெருங் குற்றமாகும். - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: By putting a fake affection on money and stopping such to reach at right place is a very big crime. -MAHENDIRAN V ------------------ குறள் 439: வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை - தெய்வப்புலவர் விளக்கம்: நன்மை தரும் செயல் செய்யாது தன்னைக் கண்டு தானே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பவன் நல்ல மனிதனில்லை. - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: Instead of doing good acts, if one's getting surprised of his own prides and speaking proudly himself, he is not a good person. -MAHENDIRAN V ------------------ குறள் 440: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் - தெய்வப்புலவர் விளக்கம்: தன் விருப்பம் எதுவென்று பிறர் அறியாவண்ணம் செயல்படுபவனை/ ஆட்சி புரிபவனை பகைவனின் வஞ்சனை கூட எதுவும் செய்யாது. - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: Manoeuvre acts of enemies will not affect to the king who is ruling intelligently by making others not knowing his activities of his future plans. -MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் CHAPTER 45 HAVING SUPPORTS OF WISDOMED ADULTS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR From the domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------------ குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: மெத்த படித்தறிந்தவர்களின் கருத்துக்களை கேட்டறிவது கேட்ப்போரின் திறனை பெரிதும் மேம்படுத்தும். - வை.மகேந்திரன். Explanation in English: The state of listening to the opinions of well-educated people will greatly enhance the ability of the listener. - MAHENDIRAN V குறள் 442: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: அனைத்தும் உணர்ந்த பெரியோரின் அரவணைப்பில் இருந்தால், இருக்கும் துன்பம் போவதுடன், வரும் துன்பமும் வராமல் போகும். - வை.மகேந்திரன் Explanation in English: If all is in the warmth of the conscious adult, the existing suffering will go away and the coming suffering will not come. - MAHENDIRAN V குறள் 443: அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: அனுபவம் மிகுந்த பெரியோரை தமக்கே உரியவராக்கி கொள்வது அரிதிலும் அரிது. - வை.மகேந்திரன் Explanation in English: It is extremely rare for experienced adults to claim ownership of themselves. - MAHENDIRAN V குறள் 444: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை - தெய்வப்புலவர். விளக்கம்: அறிவிலும் ஆற்றலிலும் தம்மைவிட சிறந்தோரை தமக்கேயுரியவராக்கி கொள்வதே தலைச்சிறந்த பேறு. - வை.மகேந்திரன் Explanation in English: The ultimate goal is to make someone your own colleague who is better than you in knowledge and energy. - MAHENDIRAN V குறள் 445: சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: சுற்றி நிற்கும் அமைச்சர்களில் யாரை ஒரு மன்னன் கண்ணாகப் போற்றி அறிவுரை பெறுகிறானோ அவனை பிறரும் சூழ்ந்து கொள்வர். - வை.மகேந்திரன் Explanation in English: Whoever of the ministers standing around is praised by a king will be surrounded by others. - MAHENDIRAN V குறள் 446: தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் - தெய்வப்புலவர். விளக்கம்: தகுதி நிறை வல்லோனை துணையாக கொண்டிருக்கும் மன்னனுக்கு எதிரியால் யாதொரு துன்பமும் வர வாய்ப்பில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: No suffering is likely to come from the enemy to the emperor who is accompanied by a meritorious expert. - MAHENDIRAN V குறள் 447: இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் - தெய்வப்புலவர். விளக்கம்: ஆள்பவனிடம் தீமைகள் காணும்போது கண்டித்து அவனை குறை திருத்தும் பெரியோர் இருக்கும் பட்சத்தில், அவன் ஆட்சிக்கு தீங்கு வாய்ப்பில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: If there are well versed who condemn and criticize the ruler when he sems to be doing evil, he is unlikely to harm the regime. - MAHENDIRAN V குறள் 448: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் - தெய்வப்புலவர். விளக்கம்: குறைகளை சுட்டிக்காட்டும் சுற்றத்தார் இல்லாத மன்னனின் ஆட்சி, பிறரால் கெடுக்கப்படாவிட்டாலும் தானே கெடும். - வை.மகேந்திரன் Explanation in English: The rule of a king who has no circle to point out faults, will spoil itself even if it is not spoiled by others. - MAHENDIRAN V குறள் 449: முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை - தெய்வப்புலவர். விளக்கம்: முதலீடு இல்லாத தொழிலுக்கு வருவாய் எப்படி வரும்? அது போல அரண் போல் தாங்கி நிற்கும் பெரியோரின் துணை இல்லாத மன்னனின் ஆட்சி கவிழும். - வை.மகேந்திரன் Explanation in English: How do you get gain from your business without investment? The rule of the emperor will be overthrown without the support of safeguard who stands like pillars. - MAHENDIRAN V குறள் 450: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் - தெய்வப்புலவர். விளக்கம்: நல்லோர் மற்றும் பெரியோரின் துணையில்லா ஒருவருக்கு பகையாளரின் தீமைச் செயலால் வரும் தீங்கு பன்மடங்கு வலியைத் தரும். - வை.மகேந்திரன் Explanation in English: The harm caused by the evil deed of the enemy will inflict multiple pains on one if he doesn't have support of the good and wisdomed adults. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 46 சிற்றினம் சேராமை CHAPTER 46 NOT TO BE AFFILIATED TO EVIL TEAM. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR From the domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 451: ம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - தெய்வப்புலவர்சிற்றின விளக்கம்: தீய சிந்தனையுடையோரிடம் தீய குணம் படைத்தோரே சேர்வர். நற்சிந்தனையுள்ள பெரியோர்கள் தங்கள் பெருமை கருதி ஒருகாலும் அவர்களுடன் சேர மாட்டார்கள். வை. மகேந்திரன் Explanation in English: Evil-minded server would join with evil-minded people. Good-natured adults will never join them because of protecting pride. MAHENDIRAN V --------------------- குறள் 452: நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: நீர், தான் சேரும் நிலத்தின் தரத்திற்கேற்ப தன் தன்மையை மாற்றிக் கொள்வதுபோல மக்களின் அறிவும் அவர்கள் சேர்ந்து பழகும் மக்களின் தரத்தின்படியே அமையும். வை. மகேந்திரன் Explanation in English: Like water changes its character according to the quality of the land it joins, the knowledge of the people and the quality of the people with whom they live. MAHENDIRAN V --------------------- குறள் 453: மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னா னெனப்படுஞ் சொல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் இயல்பாக அறிவு நிறைந்து காணப்பட்டாலும், சேர்ந்திருக்கும் கூட்டத்திற்கேற்றவாறே அவர் எத்தகையர் என்பது தீர்மானிக்கப்படும். வை. மகேந்திரன் Explanation in English: Although a person is naturally knowledgeable, his or her size will be determined by the congregation to which he or she belongs. MAHENDIRAN V --------------------- குறள் 454: மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: பிறப்பில் இயற்கையாய் பெறப்பட்ட அறிவு அழகாகினும், பழகும் சேரும் கூட்டத்தின் தன்மைக்கேற்ப அது மாறிப்போகும். வை. மகேந்திரன் Explanation in English: Naturally acquired knowledge at birth is beautiful, but it will change according to the nature and quality of the gathering from society. MAHENDIRAN V --------------------- குறள் 455: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் - தெய்வப்புலவர் விளக்கம்: மனமும் செயலும் செழுமையானாலும் சேரும் கூட்டத்தின் தன்மை பொறுத்தே தூய்மை நிலை அமையும். வை. மகேந்திரன் Explanation in English: Although the mind and action are rich, the level of purity depends on the nature of the gathering from the colleagues with whom one joins. MAHENDIRAN V --------------------- குறள் 456: மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் கில்லைநன் றாகா வினை - தெய்வப்புலவர் விளக்கம்: மனம் தூய்மையாக இருக்குங்கால், புகழும் பெருமையும் பெருகும். சார்ந்திருக்கும் கூட்டம்/இனம் சிறப்புற இருப்பின், தீவினைகள் எதுவும் அண்டாது. வை. மகேந்திரன் Explanation in English: If the mind is pure, fame and glory will increase. If the dependent crowd / race is good, there will be no harm or evil. MAHENDIRAN V --------------------- குறள் 457: மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழுந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: மனத்தூய்மை உயிரை காக்கும். சார்ந்திருக்கும் இனத்தின் தூய்மை நல்லவை அனைத்தையும் கொண்டு வரும். வை. மகேந்திரன் Explanation in English: Purity of mind saves lives. The purity of the race with whom one accompnies will bring all that is good. MAHENDIRAN V --------------------- குறள் 458: மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: மனமது நலமாயிருந்து நன்மை பயத்தாலும், சார்ந்திருக்கும் இனம் நலமாக இருந்தால் மனம் மேலும் வலிமை பெறும். வை. மகேந்திரன் Explanation in English: Though the mind is healthy and causes good, the mind will gain more strength if the affiliated race is good. MAHENDIRAN V --------------------- குறள் 459: மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும் இனநலத்தி னேமாப் புடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: மனம் நலமாயிருந்து எல்லையில்லா தொடர் இன்பம் பெற்றாலும் கூடி நிற்கும் இனத்தின் தரமே அதற்கு வலிமை சேர்க்கும். வை. மகேந்திரன் Explanation in English: Even if the mind is healthy and enjoys boundless happiness, the quality of the assembled race will add strength to it. MAHENDIRAN V --------------------- குறள் 460: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் சேர்ந்து நிற்கும் நல்ல இனத்திற்கு இணையான துணை எதுவுமில்லை; தீய இனத்திற்கு இணையான துன்பம் எதுவுமில்லை. வை. மகேந்திரன் Explanation in English: There is no equal to the good race in which one stands together; There is no suffering equal to that of the evil race. MAHENDIRAN V --------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை. CHAPTER 47 DOING KNOWN ACTS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்யுங்கால், அதனால் வரும் லாபம் என்ன, இழப்பு என்ன, இழப்பை ஈடுகட்டும் வழி என்ன என்றாராய்ந்து செய்க. வை. மகேந்திரன் Explanation in English: When you dare do an act, do it after determining the merits and demerits of such act. Try to know how to compensate the loss, if it occurs. MAHENDIRAN V ------------------ குறள் 462: தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில் - தெய்வப்புலவர் விளக்கம்: தெரிந்தவர்கள் துணை கொண்டு தேர்ந்து நின்று செயல்பட்டால், இயலாத செயல் என்று எதுவுமில்லை. வை. மகேந்திரன் Explanation in English: If one does an act with a strong coordinations of known persons, nothing would be impossible. MAHENDIRAN V ------------------ குறள் 463: ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஊக்கா ரறிவுடை யார் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு தொழிலில் அதிகமாய் லாபம் ஈட்டலாம் என்று எண்ணி முதலீட்டையும் இழக்கும் செயலை அறிவுடையோர் செய்யமாட்டார். வை. மகேந்திரன் Explanation in English: The wise man will not do the act of losing the investment thinking that he can make more profit in a business. MAHENDIRAN V ------------------ குறள் 464: தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பா டஞ்சு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: தன் மீது பழி வந்தால் என்ன செய்வது என்று அஞ்சுபவரே தனக்கு தெளிவில்லாத செயல்களில் இறங்க மாட்டார். வை. மகேந்திரன் Explanation in English: The one who is afraid of what will happen if he is blamed for his blunder action by the society will not step in to do the vague actions. MAHENDIRAN V ------------------ குறள் 465: வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு - தெய்வப்புலவர் விளக்கம்: தன்னை தன் நாட்டை காத்துக் கொள்ளும் வழிமுறை அமைக்காது பகைவரை எதிர்க்க துணியும் அரசனின் செயல், பகைவரை அவன் தன் மண்ணிலேயே வளரவிடுவது போலாகும். வை. மகேந்திரன் Explanation in English: The act of a king who dares to oppose the enemy who does not set himself the means of defending his country is like he grows the enemy in his own soil. MAHENDIRAN V ------------------ குறள் 466: செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: செய்ய தேவையற்றவைகளை செய்தாலும் கேடு வரும்; செய்யவேண்டியவற்றை செய்யாமல் இருந்தாலும் கேடு நிச்சயம். வை. மகேந்திரன் Explanation in English: Doing things that are not necessary to do is harm; Even if you don’t do what needs to be done is also certainly harm. MAHENDIRAN V ------------------ குறள் 467: எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்யும் முன்பே ஆராய்ந்து துணிந்து செயல்படுவது விவேகம்; செயலில் இறங்கிய பின் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணுவது இழுக்காகும். வை. மகேந்திரன் Explanation in English: It is prudent to explore and act boldly before committing an act; It is a drag if you think that you can take care of yourself after getting active. MAHENDIRAN V ------------------ குறள் 468: ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: துணைகளுடன் கூடி நின்று வெற்றி பெறுவோம் என்று எண்ணி சுய முயற்சி ஏதுமில்லாது செய்யப்படும் செயல் கெட்டுத்தான் போகும். வை. மகேந்திரன் Explanation in English: The act of doing anything without self-effort but thinking that we will succeed together with others' coordinations will go bad. MAHENDIRAN V ------------------ குறள் 469: நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: பிறக்கு உதவி செய்யுங்கால், அவரின் குணமறிந்து நிலையறிந்து அவ்வுதவி செய்யாவிட்டால், அது நன்றானது என்றாலும் பழி வந்து சேரும். வை. மகேந்திரன் Explanation in English: If you commit to help other without knowing the stance and trait of him, even if your help is good one, you'll be blamed. MAHENDIRAN V ------------------ குறள் 470: எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு - தெய்வப்புலவர் விளக்கம்: தன் தகுதிக்கு பொருந்தாத ஒரு செயலை ஒருவர் செய்யுங்கால் உலகம் அவரை இகழும் ஆதலால் இகழாவண்ணம் செயல்கள் செய்ய அறிதல் வேண்டும். வை. மகேந்திரன் Explanation in English: If a person commits an act that does not suit his qualifications, the world will despise him, and so, he should know to choose acts to do that not be despised by the world. MAHENDIRAN V --------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 48 வலியறிதல் CHAPTER 48 TO KNOW THE STRENGTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 471: வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்யத் துணியும் முன்பு, தனது வலிமை, செயலின் வீரியம், எதிரியின் பலம், தனக்கும் எதிரிக்கும் துணை வருவோரின் வலிமை இவை நான்கையும் ஆராய்ந்த பின்பே துணியவேண்டும். வை. மகேந்திரன் Explanation in English: Before daring to take an action, one should dare to examine his strength, the vigor of the action, the strength of the enemy, and the strength of himself and the adversary's companions. MAHENDIRAN V --------------------- குறள் 472: ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில் - தெய்வப்புலவர் விளக்கம்: போருக்கு செல்லும் அரசன் அல்லது ஒரு செயலை செய்யும் நபர், தன் சுயத்திறன் அனைத்தையும் கணக்கிட்டு அதற்கேற்றார் போல் செயல்பட்டால் தோல்விக்கு இடமே இல்லை. வை. மகேந்திரன் Explanation in English: There is no room for failure if the king who goes to war, or the person who does an act, calculates all of his self-efficiency and acts as if they are appropriate. MAHENDIRAN V --------------------- குறள் 473: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் - தெய்வப்புலவர் விளக்கம்: ஏதோ ஒரு உத்வேகத்தில் மனஎழுச்சி ஏற்பட்டு திட்டமிடாமல் அவசரகதியில் செயல்பட்டு தோல்வியடைந்தோர் பலர். வை. மகேந்திரன் Explanation in English: There are many people who got upset and failed on their action because of their sudden inspiration and act in an unplanned emergency. MAHENDIRAN V --------------------- குறள் 474: அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: தன் வலிமை எந்தளவு என்றறியாமல், தன்னைத்தானே புகழ்ந்துரைத்து வியந்து செய்யப்படும் செயல் கெட்டுப்போகும். வை. மகேந்திரன் Explanation in English: The action done by one without realizing how strong he is, and praising himself and wondering will be spoiled. MAHENDIRAN V --------------------- குறள் 475: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் - தெய்வப்புலவர் விளக்கம்: மயிலிறகை பல மடங்கு வண்டியில் ஏற்றினால் அது வண்டியின் அச்சை முறிக்கக்கூட செய்யும். ஆகையால் எளியார் தானே என நினைத்து பகைக்கொள்வது ஆபத்து. வை. மகேந்திரன் Explanation in English: If the feathers of peacock is over-loaded on a cart, it will even break the axle of the cart. Therefore, it is dangerous if one calculates that the enemy is simple. MAHENDIRAN V --------------------- குறள் 476: நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: தான் வலிமைப் பெற்றவன் என்றெண்ணி மரக்கிளையின் நுனிக்கு செல்ல ஆசைப்பட்டால் உயிர் மிஞ்சாது. எதிரியின் தன்மைக்கேற்றவாறு ஒருவர் செயல்படவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. வை. மகேந்திரன் Explanation in English: If one wants to go to the tip of the tree thinking that he is strong, life will not survive. It implies that one must act according to the character of the enemy. MAHENDIRAN V --------------------- குறள் 477: ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் போற்றி வழங்கு நெறி - தெய்வப்புலவர் விளக்கம்: தன் இருப்பின் அளவறிந்து ஈகை செய்தால் மட்டுமே ஒருவனின் செல்வம் அவனிடம் தங்கும் இல்லேல் அது கரைந்துபோகும். வை. மகேந்திரன் Explanation in English: Only when one spends or donates his wealth according to his staying asset, his wealth and asset would exist otherwise it would vanish. MAHENDIRAN V --------------------- குறள் 478: ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: செல்வத்தின் வரவு சிறிதாகினும் பெரும் செலவு செய்யாதிருப்பின் செல்வத்தின் இருப்பிற்கு பாதகம் வராது. அளவறிந்து செலவு செய்வதே பொருளை காக்கும். வை. மகேந்திரன் Explanation in English: The existence of wealth will not be affected if the credit of the wealth is spent reasonably. Measuring and spending will save one's sources. MAHENDIRAN V --------------------- குறள் 479: அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: தன் இருப்பு மற்றும் செலவினத்தை அறியாமல் வேகத்தில் நடைபோடும் ஒருவரின் வாழ்க்கையில் செல்வம் பொருள் இருப்பது போல் தெரிந்தாலும் இல்லாத நிலையை ஏற்ப்படுத்தும். வை. மகேந்திரன் Explanation in English: Wealth in the life of one who walks at speed without knowing his balance and expense can cause a state of non-existence even if it seems to be existing. MAHENDIRAN V --------------------- குறள் 480: உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் தன் வருவாய்க்கும் இருப்புக்கும் மீறி உபகாரம், ஈகை செய்தால் இருக்கும் செல்வம் தானாக வற்றிப்போகும். வை. மகேந்திரன் Explanation in English: If one does good deeds beyond his means of income and wealth, the existing wealth will dry up itself. MAHENDIRAN V --------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 49 காலமறிதல் CHAPTER 49 TO KNOW THE IMPORTANCE OF TIME 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 481: பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது - தெய்வப்புலவர் விளக்கம்: இரவு நேரத்தில் பலமுடையதான கோட்டானை பகல் நேரத்தில் பலம் பெறும் காக்கை வெல்வது போல, ஒரு அரசன் காலம் கணித்து பகைவரை வெல்லவேண்டும். வை. மகேந்திரன் Explanation in English: A king must predict the time and defeat the enemy, just as an owl that is strong only at night time is defeated by a strong crow in day time. MAHENDIRAN V ------------------ குறள் 482: பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு - தெய்வப்புலவர் விளக்கம்: பருவம் அறிந்து, காலத்தை வீணாக்காமல் செய்யப்படும் ஒரு வினை அல்லது தொழில், செல்வத்தை நீங்காமல் நிறையச் செய்யும். வை. மகேந்திரன் Explanation in English: Knowing the season, an action or business that is done without wasting time, will fullfill the wealth in treasury. MAHENDIRAN V ------------------ குறள் 483: அருவினை யென்ப உளவோ கருவியாற் கால மறிந்து செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: தகுந்த கருவிகள்/ சாதனங்களைக் கொண்டு காலம் அறிந்து ஒரு செயலை செய்தால் அரிதான காரியம் எதுவுமில்லை. வை. மகேந்திரன் Explanation in English: You'll feel that nothing is a rare action, if an action is done by a proper tool and equipment at the right time. MAHENDIRAN V ------------------ குறள் 484: ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: காலம் இடம் அறிந்து ஒரு செயல் செய்யப்படுமாயின், இவ்வையகமும் கைக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்படும். வை. மகேந்திரன் Explanation in English: If an action is taken by knowing the right time and right place, one who does the action will realise that world has been subdued in hand. MAHENDIRAN V ------------------ குறள் 485: காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: வையகத்தை வசப்படுத்தலாம் என்ற எண்ணமுடையோர், ஒன்றை செயல்படுத்துவதற்கு மனம் தளராமல் காலம் வரட்டும் என்று காத்திருப்பர். வை. மகேந்திரன் Explanation in English: Those who think that they can subdue the world will wait for the time without getting discouraged to do something. MAHENDIRAN V ------------------ குறள் 486: ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சுரம் கொண்ட அரசன் தன் பகையை வெல்ல காலம் கருதி காத்திருப்பது, வேகம் எடுத்து சீறி பாய்வதற்கு ஒரு விலங்கு சற்று பின்னோக்கி செல்வது போல் தான். வை. மகேந்திரன் Explanation in English: The brave king waits for the time to defeat his enemy, like an animal going backwards a little to pick up speed to attack. MAHENDIRAN V ------------------ குறள் 487: பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவுடைய அரசன், தன் பகைவனின் தீமை பொல்லாததாகினும், தாக்குவதற்கு சினத்தை வெளியில் காட்டாமல் அகத்தில் வெகுண்டு, காலம் வரும் வரை காந்திருப்பான். வை. மகேந்திரன் Explanation in English: The wise king, despite his enemy's evil is worst, would have longed for the time to come, without showing outbursts but sharpening his anger inside to attack. MAHENDIRAN V ------------------ குறள் 488: செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை காணிற் கிழக்காந் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவனின் அழிவு அவன் கையிலே தான் என்று அவன் அழியும் வரை சினம் காட்டாது பொறுத்திருப்பான் சிறந்த அரசன். வை. மகேந்திரன் Explanation in English: The best king is the one who does not show anger until the destruction of the enemy that the destruction is in his hands. MAHENDIRAN V ------------------ குறள் 489: எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: காலம் நேரம் ஒத்துப் போனால், தாமதமேதும் செய்யாது செயற்கரிய செயல்களை செவ்வனே செய்து முடிப்பதே மான்பான செயல். வை. மகேந்திரன் Explanation in English: If the time is appropriate to do an action, Doing it without delay even a bit though it is difficult is an intelligent action. MAHENDIRAN V ------------------ குறள் 490: கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - தெய்வப்புலவர் விளக்கம்: இரை கிடைக்கும் வரை அசையாது நின்று இரை வந்ததும் விரைந்து கொத்தும் ஒரு கொக்கை போல, காலம் வந்ததும் எதிரியை விரைந்து தாக்குவதே நல்-அரசனுக்கு அழகாகும். வை. மகேந்திரன் Explanation in English: The beauty for a good king is, attacking his enemy immediately when the time is very appropriate, as if the bird (Crane) is standing motionless until it gets prey and hooking (picking) the prey in no time when it sees the prey. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 50 இடனறிதல் CHAPTER 50 TO KNOW TO CHOOSE THE PLACE FOR BATTLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவர் மீது படையெடுக்கும் முன்பே முற்றுகை செய்வதற்கான இடத்தை ஒரு அரசன் தேர்வு செய்துகொள்ள வேண்டும். எதிரியை வெல்வது எளிது என்கிற இறுமாப்பு அவனுக்கு இருக்கக்கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: A king must choose a place to lay siege before invading the enemy. He should not have the arrogance that it is easy to defeat the enemy. MAHENDIRAN V ------------------ குறள் 492: முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: அதி வலிமை நிறைந்து போரிடும் திறமையது ஒரு அரசனுக்கு இருந்தாலும், அரண் காத்து போரிடும் குணம் அவனிடம் இருப்பின் அது பலவித ஆக்கத்தை தரும். வை.மகேந்திரன் Explanation in English: Although a king has the ability to fight with great strength, if he has the ability to fight the bulwark, it will give a variety of creativity. MAHENDIRAN V ------------------ குறள் 493: ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: இடம் எது என்று அறிந்து, தற்காப்பு முறையுடன், அதன் மேல் போர் செய்யும் அரசன் வலிமையில்லாதவரானாலும் வலிமையானவரே. வை.மகேந்திரன் Explanation in English: Knowing what the place is, with a defensive system, the king who fights over is strong even if he is not strong. MAHENDIRAN V ------------------ குறள் 494: எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: ஏற்ற இடம் நன்கறிந்து சூழ்ந்து நின்று போரிட்டால், எதிரியின் வெற்றி கனவு எளிதாக பறந்து செல்லும். வை.மகேந்திரன் Explanation in English: If the right place is well known and surrounded, and fight, the enemy's dream of victory will easily fly away. MAHENDIRAN V ------------------ குறள் 495: நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற - தெய்வப்புலவர் விளக்கம்: நீரில் வாழ்ந்து பிற உயிர்களை கொல்லும் முதலை, நிலத்திற்கு வந்தால் அந்த பிற உயிர்களால் கொல்லப்படும். (வீரம் விவேகம் வெற்றி அனைத்தும் இருக்கும் இடத்தை பொறுத்தது) வை.மகேந்திரன் Explanation in English: The crocodile that lives in the water and kills other creatures will be killed by those other creatures if it comes to land. (Bravery Wisdom Success all depends on where you are) MAHENDIRAN V ------------------ குறள் 496: கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து - தெய்வப்புலவர் விளக்கம்: வீதியில் உலாவரும் தேர் கடல் சென்றால் மூழ்கும். கடலில் உலாவரும் கப்பல் நிலம் வந்தால் கரை தட்டும். (எந்த செயலுக்கு எந்த இடம் என்பதை ஒரு அரசன் அறிவது அவசியம்) வை.மகேந்திரன் Explanation in English: The chariot that roams the streets will sink if it goes to sea. A ship sailing in the sea will hit the shore if it lands. (A king needs to know which place is suitable for which action) MAHENDIRAN V ------------------ குறள் 497: அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி யிடத்தாற் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவரின் களம் அறிந்து போர் செய்யவேண்டிய திறன்களை எதை எதை எங்கு வைப்பது என்றறிந்தால் போதும், அஞ்சாமை என்கிற துணை ஒன்றே போதும் எதிரியை எளிதில் வென்றுவிடலாம். வை.மகேந்திரன் Explanation in English: Knowing the enemy's domain and knowing where to put the fighting capabilities is enough, by having the state of fearlessness one can defeat the enemy. MAHENDIRAN V ------------------ குறள் 498: சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறிய படையாகினும் குறை ஒன்றுமில்லை. போர் களத்தில் அதற்கு ஏற்ற இடத்தில் வைக்கப்பட்டால், அது பெரும்படையும் அழிக்கும் வல்லமை பெறும். வை.மகேந்திரன் Explanation in English: There is nothing wrong with a small force. If it is placed on the battlefield in a suitable place, it will gain most of its destructive power. MAHENDIRAN V ------------------ குறள் 499: சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்ட லரிது - தெய்வப்புலவர் விளக்கம்: மிகுந்த அரணும் மிகச்சிறந்த படை பலமும் வைத்திராமல், பகைவனின் இடம் சென்று பகை தீர்க்க படையெடுத்து வெல்வது என்பது அரிதாகும். வை.மகேந்திரன் Explanation in English: It is hardly to go to the enemy's place and invade and defeat the enemy without having the greatest defense and the best force. MAHENDIRAN V ------------------ குறள் 500: காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு - தெய்வப்புலவர் விளக்கம்: பாகனுக்கும் அஞ்சாத, வேல் கொண்ட வீரர்களையும் வீழ்த்த வல்ல யானை, சேற்றில் சிக்கினால் நரிக்கு தான் அது இரையாகும். (வீரம் அது சார்ந்து நிற்கும் இடத்தில் தான் பயன்படும்) வை.மகேந்திரன் Explanation in English: The elephant that is not afraid of its mahout may defeat the warriors who are with weapons, but if it is caught in the mud, even a fox too will kill it. (Bravery is used only where it depends) MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. MAHENDIRAN V) 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 51 தெரிந்து தெளிதல் CHAPTER 51 TACTICS OF RECRUITMENT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: மன்னனாக தேர்ந்தெடுக்கப்பட தகுதிப் பெற்றவன், அறம் செய்யத் தெரிந்தவனாகவும், பொருளை காத்து உயரச் செய்பவனாகவும், இன்பத்தில் மட்டுமே திளைக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாதிருப்பவனாகவும், உயிருக்கு அஞ்சும் கோழைத்தனம் இல்லாதவனாகவும் இருத்தல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: A king who is elected must be virtuous, and should know to protect and increase the wealth; shouldn't be a fellow to desire lust and shouldn't be a coward. MAHENDIRAN V ------------------ குறள் 502: குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடியில் பிறந்து, குற்றம் புரியும் குணமில்லாது, தீயவை செய்ய வெட்க்கப்படும் உயரிய மனம் படைத்தவனே பதவிக்கு தகுதியானவனாவான். வை.மகேந்திரன் Explanation in English: Only a high-minded person who is born bred of good family, without guilt, and ashamed to do evil, deserves the position. MAHENDIRAN V ------------------ குறள் 503: அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - தெய்வப்புலவர் விளக்கம்: மெத்த படித்து அறிவுக்கூர்மை பெற்றவராகினும், ஏதோ ஒன்றைப் பற்றி அவருக்கு அறியாமை இல்லாமல் இருக்காது. வை.மகேந்திரன் Explanation in English: Even if one is well-educated and intelligent, It's not sure that he would be well to do in all. He might be an unknown on something. MAHENDIRAN V ------------------ குறள் 504: குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவனிடமுள்ள நற்குணங்களையும், குற்றம் சார்ந்த தீய குணங்களையும் ஆராய்ந்து அளவிட்டு எது பெரிது என்று கண்டபின்பே அவனை ஒரு பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: One should be selected for a position only after examining the merits and demerits of him and finding out what is great. MAHENDIRAN V ------------------ குறள் 505: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவரின் பெருமைமிகு செயலுக்கும் சிறுமைத்தனமான செயலுக்கும் அவர் தன் பிறப்பில் வந்த புத்தியே காரணம் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: The trait of his birth is the cause of one's proudable deed and the deed of petty. MAHENDIRAN V ------------------ குறள் 506: அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி - தெய்வப்புலவர் விளக்கம்: மக்கள் தொடர்பு நிலை மற்றும் சுற்றத்தார் உறவு நிலையில் பலமில்லாதாவர்கள், பந்தபாசம் அற்றவர்கள் ஆவார்கள் ஆதலால் அவர்கள் தலைமை பண்புக்கு தகுதியற்றவர்கள். வை.மகேந்திரன் Explanation in English: One who is not having a healthy relationship with public is not eligible to put on a post since he would not have an affection at a work. MAHENDIRAN V ------------------ குறள் 507: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பின் காரணமாக அறிவிலாரை தெரிவு செய்தால் அறியாமை தான் விரிவடையும். வை.மகேந்திரன் Explanation in English: If one places a fool person at a position by means of love and kind on him, only ill knowledge would increase there. MAHENDIRAN V ------------------ குறள் 508: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: தகுதி இல்லாதவனை பற்று இல்லாதவனை தெரிந்தும் தேர்வு செய்தால், நாடும் கெடுவதுடன், வழிமுறைக்கும் அது துன்பம் தரும். வை.மகேந்திரன் Explanation in English: If one places knowingly a person who is not affectionate at the work, not only it is bad for the nation but also it would spoil the society subsequently. MAHENDIRAN V ------------------ குறள் 509: தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் - தெய்வப்புலவர் விளக்கம்: தகுதியில்லா ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டால், அவரிடம் உள்ள திறமையை கண்டறிந்து அதற்குறிய பண்பில் அவரை அமர்த்துதல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Incase of selecting a person who is not eligible for a work, one who selects should find out the selected person's skills and utilise him based on such skill. MAHENDIRAN V ------------------ குறள் 510: தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: தேராத ஒருவனை தேர்ந்தெடுத்து பணியிலும் அமர்த்திய பின் அந்நிலை குறித்து கவலையுறுவது மிகுந்த துன்பத்தை தரும். வை.மகேந்திரன் Explanation in English: After placing a weak person at a position, if one who selected him is worried out of the stance of the person whom he selected, it would cause a deep misery. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 52 தெரிந்து வினையாடல் CHAPTER 52 ACTING WISELY (OBTAINING WORKS WISELY) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: நற்செயல் எது தீயச் செயல் எது என அறிந்து நாட்டு நலம் கருதி நற்செயல் புரிபவனால் தான் நாடு நல்வழியில் ஆளப்படும். வை.மகேந்திரன் Explanation in English: A country would be ruled well only by a king who knows to distinguish which is right and wrong acts for the sake of his nation. MAHENDIRAN V ------------------ குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை - தெய்வப்புலவர் விளக்கம்: வருவாய்க்கான வழிகளை உருவாக்கி, மேம்படுத்தி, இடையூறுகளிருந்தால் அவற்றை களைந்து செய்யப்படும் செயலே சிறந்த செயல். வை.மகேந்திரன் Explanation in English: The good act is one which is done by one, searching sources for income, enhancing such, and knowing to crack the issues during such actions. MAHENDIRAN V ------------------ குறள் 513: அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பும் அறிவும் நிறைந்திருந்து பேராசை அறுத்து நல்லோரை அச்சமின்றி தேர்ந்தெடுக்கும் தகுதிகள் உள்ளவனே மன்னனாக தேர்ந்தெடுக்கப்பட லாயக்கானவன். வை.மகேந்திரன் Explanation in English: One who has kindness and wisdom, gave up greed, and knows to choose good people for work is eligible to be elected as a king. MAHENDIRAN V ------------------ குறள் 514: எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - தெய்வப்புலவர் விளக்கம்: நலம் செய்வார் என்று பகுத்தாராய்ந்து ஒருவரை பதவியில் அமர்த்தினாலும், செயல்களில் வினோதம் காட்டுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். வை.மகேந்திரன் Explanation in English: Also there are persons who do their acts conservatively even if they were selected distinguishingly for better acts. MAHENDIRAN V ------------------ குறள் 515: அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவுடன் அறிந்து செயலாற்றும் ஒருவன் எதிரே நிற்க, செயல்பட தெரியாத யாரோ ஒருவனை சிறந்தவன் என கூறி அமரவைப்பது சிறப்பான செயல் அல்ல. வை.மகேந்திரன் Explanation in English: It's not good one that choosing anonymous one, saying that he is good, while the actual good person is standing near. MAHENDIRAN V ------------------ குறள் 516: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த உணர்ந்து செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: செயலாற்றுபவனின் தரம் அறிந்து, செயலின் தன்மையையும் அறிந்து, செயலின் காலத்தையும் உணர்ந்து ஒரு செயலை செயல்பட வைப்பதே அறிவாகும். வை.மகேந்திரன் Explanation in English: The stance of activating a work by knowing the quality of the person who does it and status of the work and time when to finish the work is wise one. MAHENDIRAN V ------------------ குறள் 517: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்க அச்செயல் மீது ஆர்வம் கொண்டு சிறப்பாய் செயலாற்றுபவனை தேர்ந்தெடுத்து அவனிடம் அச்செயலை ஒப்படைப்பதே அறிவார்ந்த நிர்வாகத்திற்கு அழகு. வை.மகேந்திரன் Explanation in English: The wise of an admin is allotting a work to one who can do the work successfully with passion. MAHENDIRAN V ------------------ குறள் 518: வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலுக்குறியவனை தேர்ந்தெடுத்ததோடு அல்லாமல் அவன் அச்செயலில் சிறப்பாய் செய்யும் நிலையை ஏற்படுத்துவது நியமித்தவனின் கடமை. வை.மகேந்திரன் Explanation in English: An admin precise duty is not only selecting an appropriate person for a work but also making the person to do such work pleasantly by providing suitable facilities. MAHENDIRAN V ------------------ குறள் 519: வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு - தெய்வப்புலவர் விளக்கம்: பணியிலமர்ந்தவன் சிறப்பாய் செயல்பட்டுக்கொண்டிருக்க, அவனை தூற்றி துஷ்பிரயோகம் செய்தால் பணி தந்தவனை விட்டு திருமகள் விலகிவிடுவாள். வை.மகேந்திரன் Explanation in English: While a person who has been appointed for a work does such work so passionately, if he is criticised in back abusively by admin, the goddes of wealth would get away from the admin. MAHENDIRAN V ------------------ குறள் 520: நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு - தெய்வப்புலவர் விளக்கம்: நாடு செழிக்க வேண்டுமானால், நாட்டில் உழைப்போரின் மணம் வாடாமல் இருக்க, ஆக வேண்டிய செயல்களை ஒரு மன்னன் செய்யவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: If a king wants that his nation to be wealthy and powerful, he ought to take care in all respects for making his people who work hard for his nation be cheerful in all ways. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 53 சுற்றந் தழால் CHAPTER 53 RELATIONSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள - தெய்வப்புலவர் விளக்கம்: வாழ்வில் ஒருவன் நலிந்து போனாலும், அவனது நற்செயல்களை கூறி பாராட்டுவது அவனது உறவுகள் மட்டுமே. வை.மகேந்திரன் Explanation in English: Even if one goes to poverty, only relatives would talk about his prides saying his good acts. MAHENDIRAN V ------------------ குறள் 522: விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: உறவுகளுடன் அன்பாக ஒருவன் இருந்து விட்டால், அவனுக்கு செல்வநிலை உயரும். ஆக்கம் நிறைந்த வாழ்க்கை அமையும். வை.மகேந்திரன் Explanation in English: If one has a good relationship with many by speaking good words, it is equallent to having an infinite wealth and the best life. MAHENDIRAN V ------------------ குறள் 523: அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: கரை இல்லாது குளம் நீர் நிறைந்திருந்து என்ன பயன்? அது போலதான் உறவுகளுடன் தொடர்பில்லாமல் வாழும் ஒருவனுடைய வாழ்க்கையும். வை.மகேந்திரன் Explanation in English: If one doesn't have a good relationship with his relatives, that is meaning of a pond has full of water but shore. MAHENDIRAN V ------------------ குறள் 524: சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் - தெய்வப்புலவர் விளக்கம்: சுற்றம் உறவுகளுடம் கலந்து பேசி வாழ்வது பெருஞ்செல்வம் பெற்றிருப்பதற்கு சமம். வை.மகேந்திரன் Explanation in English: Having a healthy relationship with others is equallent to having more more money. MAHENDIRAN V ------------------ குறள் 525: கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: உறவுகளுக்கு உதவி செய்து அன்புடன் பேசி வாழ்பவனை சுற்றத்தார் சூழ்ந்து நின்று பாதுகாப்பர். வை.மகேந்திரன் Explanation in English: One who has a good relationship by helping others with using sweet words would be covered by all protectively. MAHENDIRAN V ------------------ குறள் 526: பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில் - தெய்வப்புலவர் விளக்கம்: சினம் தவிர்த்து, கொடைகள் பல புரிந்து வாழ்பவனுக்கு சுற்றத்தார் நிறைந்திருப்பது போல் வேறு எவருக்கும் இருக்க வாய்ப்பில்லை. வை.மகேந்திரன் Explanation in English: No one can have a big amount of relations as one who is donating to people by giving up anger can have. MAHENDIRAN V ------------------ குறள் 527: காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள - தெய்வப்புலவர் விளக்கம்: காகம், தனக்கு கிடைத்த உணவை மற்ற காகங்களையும் கூவி அழைத்து பங்கிட்டு உண்ணுவது போன்ற குணம் படைத்தோனுக்கு செல்வம் குன்றாது. வை.மகேந்திரன் Explanation in English: The wealth wouldn't decrease to one who has the trait as if crow is eager to call all crows to share its food when it's eating. MAHENDIRAN V ------------------ குறள் 528: பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் - தெய்வப்புலவர் விளக்கம்: பொது நிலை பார்க்காது திறமையுள்ளவர்களுக்கே ஒரு அரசன் முதலிடம் தருவானேயானால், திறமையுடன் செயலாற்ற பலரும் முனைவார்கள். வை.மகேந்திரன் Explanation in English: If a king prefers only skillful persons among public to facilitate, many would forward to work skillfully. MAHENDIRAN V ------------------ குறள் 529: தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும் - தெய்வப்புலவர் விளக்கம்: உறவாக இருந்து பழகி, காரணம் குறித்து ஒருவரிடமிருந்து பிரிய நேரிட்டாலும், மறு நேரத்தில் காரணமின்றியே ஒன்றுசேர்வார்கள். வை.மகேந்திரன் Explanation in English: If some who behave good but go out from a king by means of reason, they would come and rejoin with the king without having reason. MAHENDIRAN V ------------------ குறள் 530: உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந் தெண்ணிக் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: காரணமின்றி பிரிந்து சென்ற உறவு / நட்பு, காரணம் கொண்டு உறவாட வந்தால், பகுத்தாராய்ந்து உள்ளே சேர்ப்பதே சிறந்த மன்னனுக்கு அழகு. வை.மகேந்திரன் Explanation in English: If a Friendship that went out from a king without reason, later comes in to rejoin by means of a having reason, such should be examined precisely by the king. Only then he would be considered a clever King. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 54 பொச்சாவாமை CHAPTER 54 NON-OBLIVION 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: கடுஞ்சினத்தால் விளையும் கெடுதலை விட களிப்புற இருக்கும்பொழுது ஏற்படும் மறதியே கொடுமையானது. வை.மகேந்திரன் Explanation in English: Evil caused due to forgetting during pleasure is more miserable than the evil caused due to very much anger. MAHENDIRAN V ------------------ குறள் 532: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமையால் தினமும் அறிவு குன்றுவதுபோல் நெகிழ்ந்திருந்து மறந்து போகும் நிலை ஒருவனின் புகழை கொன்றுவிடும். வை.மகேந்திரன் Explanation in English: As if the poverty injures one's life day to day, the stance of one's oblivioness will kill his pride. MAHENDIRAN V ------------------ குறள் 533: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு - தெய்வப்புலவர் விளக்கம்: கற்றுணர்ந்தவர்களாயிருந்தாலும் கூட மறதியும் சோர்வும் உள்ளோருக்கு புகழும் பெருமையும் கிடைக்க வாய்ப்பே இல்லை வை.மகேந்திரன் Explanation in English: Even if one is very much literate, if he has oblivioness and laziness, he would never get any victory or pride. MAHENDIRAN V ------------------ குறள் 534: அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நல் பதவியிலிருந்தும் மறதி என்றொன்று இருந்தால் அது பலத்த பாதுகாப்பு இருந்தும் அச்சப்படும் நிலைக்கு ஒப்பாகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if one is in a good position on his career but if he is having the stance of oblivion, it is like the stance of fearing though one is protective mode. MAHENDIRAN V ------------------ குறள் 535: முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: துயரம் வரும் முன்னே அதற்கான தற்காப்பை செய்ய மறப்பவன் துயரம் வந்த பின் வருந்தி யாது தான் பயன் ? வை.மகேந்திரன் Explanation in English: If one is failing to protect himself before he meets misery and he is worried out after he meets out, it is meaningless. MAHENDIRAN V ------------------ குறள் 536: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்ப தில் - தெய்வப்புலவர் விளக்கம்: எக்காலத்திலும் எதையும் மறக்காத நிலையை போல ஒரு நன்மையான நிலை இவ்வுலகில் எதுவுமில்லை. வை.மகேந்திரன் Explanation in English: There is no as any equallent goodness in the world as one is having the sense of nonoblivion at any circumstance. MAHENDIRAN V ------------------ குறள் 537: அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: மறவா நிலை என்ற கருவியை பண்பாக ஒருவர் பெற்றிருப்பின், அவர் எந்த ஒரு அரியச் செயலையும் செய்யத் திறன் படைத்தவராவார். வை.மகேந்திரன் Explanation in English: If one is having the tool namely nonoblivioness as his trait, he would be able to do any rare acts. MAHENDIRAN V ------------------ குறள் 538: புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: சான்றோர்கள் இது நன்மை என்று சொல்லிச்சென்ற செயல்களை செய்யத் தவறியவர்களுக்கு ஏழு பிறப்பிலும் நன்மை கிடைக்காது. வை.மகேந்திரன் Explanation in English: One who fails to follow up to do the acts as directed by literate experts lived in the past would never get any goodness even if he lives for seven generations. MAHENDIRAN V ------------------ குறள் 539: இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து - தெய்வப்புலவர் விளக்கம்: அதீத மகிழ்ச்சியில் இருப்போர், மகிழ்ச்சியின் திளைப்பில் கடமையாற்ற மறந்து அதனால் அழிந்தவர்களை நினைத்துப் பார்த்து, கடமையாற்ற மறவாதிருத்தல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: One who is very much pleasure and cheerful has to think about the people those who lost their good life because of their the sense of forgetting to do their duties during their enjoying happiness, and based on this lesson one not to forget to do his duties. MAHENDIRAN V ------------------ குறள் 540: உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்கும் வரை எதையும் மறவாது செயலின் இலக்கை மட்டுமே மனதில் வைத்து செயல்படுவோர் எளிதில் அதில் வெற்றி பெருவார். வை.மகேந்திரன் Explanation in English: One who is traveling towards his objective without fouling the remembrance till he reaches his goal will get victory easily. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 55 செங்கோன்மை. CHAPTER 55 GOOD REIGN. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 541: ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை - தெய்வப்புலவர் விளக்கம்: தனிப்பட்ட காழ்ப்பு ஏதுமில்லாமல், குற்றம் எதுவென்று ஆராய்ந்து உறுதியாய் நடுவாய் நின்று வழங்குவதே உண்மையான நீதியாகும். வை.மகேந்திரன் Explanation in English: The virtue justice is that not laying any side and examining the actual crime and justifying correct judgment for the sake of people's life. MAHENDIRAN V ------------------ குறள் 542: வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி - தெய்வப்புலவர் விளக்கம்: வானத்தின் கொடையான நீரை/மழையை நம்பி வாழ்வதை போல், மன்னனின் செங்கோல் தவறாத ஆட்சியையும் நம்பித்தான் வாழ்கிறார்கள். வை.மகேந்திரன் Explanation in English: People live by believing the honest reign of a king as if they live by believing the sky for rain. MAHENDIRAN V ------------------ குறள் 543: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு அரசனின் ஆட்சி அந்தணர்கள் போற்றும்/ கடைபிடிக்கும் அறம் சார்ந்த வேதத்திற்கும் முதன்மையானதாத இருக்க வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: A king's reign ought to be primer than the verdicts of vedic and epics sloganed by vedic readers. MAHENDIRAN V ------------------ குறள் 544: குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: மக்களை அரவணைத்து நல்லாட்சி புரியும் ஒரு அரசனை மக்கள் அடி பிறழா பின் தொடர்வர். வை.மகேந்திரன் Explanation in English: Surely a king who rules an honest reign by hugging people would be obeyed by people without fouling the king's foot print. MAHENDIRAN V ------------------ குறள் 545: இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நீதி வழுவா நல்லாட்சியை ஒரு அரசன் தருங்கால், பருவமழை தானாய் பொழியும் நிலபுலன்கள் சீராய் விளையும். வை.மகேந்திரன் Explanation in English: If a king reigns his country so honestly, it would be raining itself and crops would cummulate over-all. MAHENDIRAN V ------------------ குறள் 546: வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு மன்னனின் வெற்றியை தீர்மானிப்பது அவன் எறியும் வேலை (ஆயுதம்) காட்டிலும் அவன் செய்யும் நீதி வழுவா ஆட்சி முறையே. வை.மகேந்திரன் Explanation in English: Jawline thrown by a king does not determine the victory of him, only the reign done by him without fouling justice. MAHENDIRAN V ------------------ குறள் 547: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: வையகத்தை அரசன் காப்பான். அந்த அரசை காப்பதுவோ அவன் செய்யும் குறையில்லா ஆட்சி முறையே. வை.மகேந்திரன் Explanation in English: The world might be protected a king but he is protected by his faultless good reign. MAHENDIRAN V ------------------ குறள் 548: எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: மக்களின் குறையறிந்து நீதி வழங்காது, கற்றோர் கருத்து கேளாமல் ஆட்சியாளும் அரசனும் கெடுவான் அவனது ஆட்சியும் கை கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: A king who rules his nation without lending his ears for the pleads of people, and rules without hearing suggestions from well-versed people would be affected, and his reign too would fall down. MAHENDIRAN V ------------------ குறள் 549: குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர் வருத்தும் பழியிலிருந்து மக்களையும் தன்னையும் காத்து, பழி செய்வோரை ஆராய்ந்து கடும் தண்டனை வழங்கி ஆட்சி செய்வது ஒரு அரசனின் கடமை. வை.மகேந்திரன் Explanation in English: A king's prime duty is that he ought to protect people from evils raised from out, and to sentence a big punishment to ones who does very much miseries. MAHENDIRAN V ------------------ குறள் 550: கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் - தெய்வப்புலவர் விளக்கம்: கொலை பாதகம் செய்வோரை தண்டித்து மக்களை காப்பது என்பது பயிர்களை காக்க களைகளை பிடுங்குவதுதற்கு ஒப்புமையாகும். வை.மகேந்திரன் Explanation in English: It's just like a plucking weeds for the growth of crops what a king protects people by giving big punishment to murderers for people's sake. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 56 கொடுங்கோன்மை CHAPTER 56 - TYRANNY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து - தெய்வப்புலவர் விளக்கம்: குடிமக்களின் உரிமை பறித்து உடைமை பறித்து கோலாட்சி புரியும் வேந்தன் கொலை தொழில் செய்பவனைவிட கொடியவனாவான். வை.மகேந்திரன் Explanation in English: A king who rules miserably his country by plucking rights and belongings of people is worse than commercial killers. MAHENDIRAN V ------------------ குறள் 552: வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு - தெய்வப்புலவர் விளக்கம்: ஆட்சி அதிகாரத்தில் குடிமக்களை பொருள் தரசொல்லி கட்டாயப்படுத்துதல், இரவில் திருடன் கோல் கொண்டு வழிப்பறி செய்வது போலாகும். வை.மகேந்திரன் Explanation in English: The dominant action of a king like compelling people to pay money unreasonably is equallent of the action of road side robber who stands at night with stick and plucking things. MAHENDIRAN V ------------------ குறள் 553: நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: நாட்டின் தீமைகள் களைந்து முறையாக ஆட்சி செய்யத் தவறும் மன்னன் சிறுக சிறுக தீங்கு பெருகி தன் நாட்டை இழப்பான். வை.மகேந்திரன் Explanation in English: A king who rules without considering to remove evils that tend in his nation would lose his nation gradually due to cummulation of penance. MAHENDIRAN V ------------------ குறள் 554: கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு - தெய்வப்புலவர் விளக்கம்: செங்கோல் தவறி கொடுங்கோல் புரியும் அரசன் தன் பொருளையும் இழப்பான், குடிகளும் கெட்டுப் போகும். வை.மகேந்திரன் Explanation in English: A king who runs his reign without justice and by tyirannising would lose his nation as well as people would be spoilt. MAHENDIRAN V ------------------ குறள் 555: அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை - தெய்வப்புலவர் விளக்கம்: கொடுங்கோல் பலனால் குடிகள் அழும் கண்ணீர் வெள்ளமே அக்கொடுங்கோல் அரசனின் செல்வத்தை அழிக்கும் படையாக அமையும். வை.மகேந்திரன் Explanation in English: The tears of people who are suffering due to tyranny of the reign of a king would be a troop to kill such king and his wealth. MAHENDIRAN V ------------------ குறள் 556: மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி - தெய்வப்புலவர் விளக்கம்: மன்னனின் ஆட்சிமுறை செழுமையாய் இருந்தால் அவன் புகழுடன் வலம் வருவான். இல்லேல் புகழ் சரிந்து அவப்பெயர் எடுப்பான். வை.மகேந்திரன் Explanation in English: A king who reign his nation on the justicious path would get all prides, otherwise, he would lose his pride and earn badwill. MAHENDIRAN V ------------------ குறள் 557: துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: மழையின்றி மக்கள் படும் அவதி எவ்வாறோ அது போல் தான் அருள் இல்லா மன்னனின் ஆட்சி குடிமக்களை துன்பமடையச் செய்யும். வை.மகேந்திரன் Explanation in English: The stand of people suffering because of not having graces from their king is equallent to suffering of people due to no even a drop of rain. MAHENDIRAN V ------------------ குறள் 558: இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - தெய்வப்புலவர் விளக்கம்: குடிமக்கள் பொருள் நிறைந்து வாழ்ந்தாலும் அவ்வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியில் கீழ் அமைந்தால் அது துன்பத்திலும் துன்பமாகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if people have a big wealth but if they are ruled by a tyranny king, there wouldn't be as a great penance as it is. MAHENDIRAN V ------------------ குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் - தெய்வப்புலவர் விளக்கம்: மன்னனால் முறை தவறி செய்யப்படும் ஆட்சியின் துன்பம், பருவத்தில் மழை பெறாமல் படும் அவதியை போன்றதாம். வை.மகேந்திரன் Explanation in English: People's suffering because of immoral reign of their king is equallent to the suffering of people due to get unseasonable rain. MAHENDIRAN V ------------------ குறள் 560: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் - தெய்வப்புலவர் விளக்கம்: காவலனாகிய மன்னன் மக்களை காக்கத் தவறும் ஆட்சி தந்தால், பசு தரும் பாலின் பலன் குன்றும், ஞானிகளும் ஞானம் மறப்பர். வை.மகேந்திரன் Explanation in English: If a king who is liable to protect people fails to protect people and nation, the milk obtained from cows would be invalid, and the wisdomed people would lose their wisdom. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை (வரம்பு மீறாமை) CHAPTER 57 NOT TO EXCEED THE LIMIT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து - தெய்வப்புலவர் விளக்கம்: குற்றம் செய்தவனை அவன் மீண்டும் அக்குற்றம் செய்யாவண்ணம் ஆராய்ந்து தண்டனை சிறந்த வேந்தனுக்கு அழகு. வை.மகேந்திரன் Explanation in English: One who is brilliant to issue punishment for a crime as far as not to repeat the same crime is the best king. MAHENDIRAN V ------------------ குறள் 562: கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: குற்றம் செய்தவனுக்கு தண்டனையை கொடியதாக காட்டி மென்மையாக அத்தண்டனையை வழங்கும் அரசன் ஆட்சி கட்டிலில் நீடிப்பான். வை.மகேந்திரன் Explanation in English: A king who punishes crimed persons has to announce that his punishment would be very severe but he has to punish reasonably. Only then he could prolong his reign. MAHENDIRAN V ------------------ குறள் 563: வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: குடிகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் வகையில் செய்யப்படும் ஆட்சி விரைவில் கவிழ்ந்து கெட்டுப்போகும். வை.மகேந்திரன் Explanation in English: A reign done by a king goes on tyrannical and causing suffering to people would be spoilt and dissolved. MAHENDIRAN V ------------------ குறள் 564: இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: குடிகளால் கொடுங்கோலன் என்று கெட்டப் பெயர் சம்பாதித்த அரசனும் வீழ்வான் ஆட்சியும் கெடும். வை.மகேந்திரன் Explanation in English: A king who earns badwill from people and earns worst name like a tyrannic king will fall down and lose his reign. MAHENDIRAN V ------------------ குறள் 565: அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: குடிகளிடம் முகம் காட்டா அல்லது கடுகடுத்த முகத்துடன் காணப்படும் அரசன் நிறைந்த செல்வம் வைத்திருந்தாலும், அவன் பூதத்துடன் ஒப்பிட மட்டுமே லாயக்கானவன். வை.மகேந்திரன் Explanation in English: A king whose face is always looking rude and who is rarely seen by people would lose his wealth despite having lots of, and he is equallent to apparition. MAHENDIRAN V ------------------ குறள் 566: கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: கடிந்து பேசும் குணமும் இன்முகமும் இல்லாத அரசனிடம் உள்ள செல்வம் எளிதில் கரைந்துபோகும். வை.மகேந்திரன் Explanation in English: The wealth of a king, who is the characteristic of speaking with people by rough and harsh words without pleasant face, would vanish easily. MAHENDIRAN V ------------------ குறள் 567: கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் - தெய்வப்புலவர் விளக்கம்: கடுங்குணமும் அதீத தண்டனையும் தரும் அரசனின் அரண் வளமையாக இருந்தாலும் நாளுக்கு நாள் தேய்ந்து போகும். வை.மகேந்திரன் Explanation in English: The acropolis of a king, who has tyrannic reign and who gives cruel punishment to people, would be worn-out day to day. MAHENDIRAN V ------------------ குறள் 568: இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு - தெய்வப்புலவர் விளக்கம்: இனத்தோடு (அமைச்சர்களோடு) ஒட்டாது கடுங்கோபக்காரனாக இருக்கும் அரசனின் செல்வம் அளப்பறிய கெடும். வை.மகேந்திரன் Explanation in English: The wealth of a king, who doesn't take coordination of his co-ministers and being a cruel, would be spoilt immeasurably. MAHENDIRAN V ------------------ குறள் 569: செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: போர் போன்ற நெருக்கடி வரும் முன்பே நாட்டைக் காக்க திட்டமிடா அரசன் போர் வந்த பின்னே தன் அரணை இழப்பான். வை.மகேந்திரன் Explanation in English: A king who doesn't take care to protect his country as a pre-planned action before war would lose his acropolis. MAHENDIRAN V ------------------ குறள் 570: கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல தில்லை நிலக்குப் பொறை - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லோர் பேச்சை கேட்காதவனாவனே கடுங்கோல் அரசாட்சி செய்யும் அரசனாக உருவாகுவான் . இந்நிலையை போன்ற ஒரு பெருஞ்சுமை ஒரு நாட்டிற்கு வேறெதுவுமில்லை. வை.மகேந்திரன் Explanation in English: A king who doesn't listen to good words of well-versed people would become a cruel king. There is no any other worst status to a nation as it is. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 58 கண்ணோட்டம் CHAPTER 58 (GLANCE) BENIGNANT SIGHT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 571: கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு - தெய்வப்புலவர் விளக்கம்: கண்ணுறவது என்பது ஒரு பேரழகாகும். இத்திறன் இருப்பதனால் தான் இவ்வுலகம் இயங்குகிறது. வை.மகேந்திரன் Explanation in English: The stance of mercy sight is a pretty one. Only because of existing this, the world is functioning. MAHENDIRAN V ------------------ குறள் 572: கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை - தெய்வப்புலவர் விளக்கம்: கண்ணுற்று இரக்கம் காட்டுபவர்களுக்காகத் தான் இவ்வுலகம் உள்ளது. மற்றோரெல்லாம் இப்புவிக்கு பாரமானவர்கள். வை.மகேந்திரன் Explanation in English: The world is here only for those who are benignant sight. Others are considered just overload to this earth. MAHENDIRAN V ------------------ குறள் 573: பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண் - தெய்வப்புலவர் விளக்கம்: கண்ணுறும் தன்மையை ரசிக்க தெரியாதோருக்கு இருக்கும் கண்கள், பாடலில் நல்ல சந்தத்திற்கு பொருந்தாத வரிகளுக்கு ஒப்பாகும். வை.மகேந்திரன் Explanation in English: The eyes had by ones those who dont desire to glace pleasance of the world are equallent to wrong lyrics that is written to the right tune MAHENDIRAN V ------------------ குறள் 574: உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண் - தெய்வப்புலவர் விளக்கம்: காணவேண்டியவற்றை வேண்டுமென்றே காணாமல் இருக்கும் கண்கள், முகத்தில் ஒரு உறுப்பு என்பதை தவிர வேறு அந்தஸ்தேதும் அதற்கில்லை. வை.மகேந்திரன் Explanation in English: If one's eyes wantonly deny to have a mercy look, such eyes are considered just only as the parts in head than any other status. MAHENDIRAN V ------------------ குறள் 575: கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற் புண்ணென் றுணரப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: கண்களின் பெருமையே கண்ணோட்டம் தான். கண்ணோட்டம் விரும்பாத கண்கள் வெறும் புண்களாக மட்டுமே கருதப்படும். வை.மகேந்திரன் Explanation in English: The pride of eyes is its benignant sight. If the eyes deny to glance a mercy sight, those would be considered as sores. MAHENDIRAN V ------------------ குறள் 576: மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைடந்துகண் ணோடா தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: கண்கள் இருந்தும் கண்ணோட்டம் செய்ய தவறுபவர்கள் மண்ணில் புதைந்து நிற்கும் மரத்திற்கு இணையானவர்கள். வை.மகேந்திரன் Explanation in English: Despite having eyes, if ones fail to be interested to have a benignant glance, it means that those persons are parallel to a tree that is buried on the soil. MAHENDIRAN V ------------------ குறள் 577: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: கண்களுடையவர்களுக்கு கண்ணோட்டம் இருப்பதென்பது இயல்பு. கண்கள் இருந்தும் கண்ணோட்டம் விழையார் கண்களில்லாதவர்களாவார்கள். வை.மகேந்திரன் Explanation in English: Having benignant sight is nature to those who are having eyes. Being so, if ones aren't willing to have a mercy sight despite having eyes, they are considered as an utter blind. MAHENDIRAN V ------------------ குறள் 578: கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை உடைத்திவ் வுலகு - தெய்வப்புலவர் விளக்கம்: தொழிலும் கெடாமல் கடமையும் தவறாமல் கண்ணோட்டம் செய்யும் வல்லவர்களுக்கே இவ்வுலகம் சொந்தமாகும். வை.மகேந்திரன் Explanation in English: This world can be owned by good men who are having benignant sight without failing their duties and profession. MAHENDIRAN V ------------------ குறள் 579: ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - தெய்வப்புலவர் விளக்கம்: எதிராய் பெரும் தீங்கிழைக்கும் கொடியோனிடமும் பொறுமைமையாய் கண்ணோட்டம் கொள்ளும் பண்பு மாண்புக்குறியது. வை.மகேந்திரன் Explanation in English: The state of having mercy look of one on ones those who do miseries a lot against him is such a honourable status. MAHENDIRAN V ------------------ குறள் 580: பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: முகத்திற்கு முகம் என்ற நாகரிகம் கருதுவோர் நட்புக்குறியோர் நஞ்சை கொடுத்தாலும் நயம்பட அதை உண்ண மறுக்க மாட்டார். வை.மகேந்திரன் Explanation in English: Because of for considering face respect, the great persons would not deny to eat a thing despite knowing that is a poison since that is given by his close ones . MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 59 ஒற்றாடல் CHAPTER 59 MANAGING SPIES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த அரசனின் ஆளுமைக்கு, ஒற்றர்களை கையாளுதல், நூல்களை பயில்வதனால் பெறும் அறிவு ஆகிய இரண்டும் இரு கண்களை போன்றதாம். வை.மகேந்திரன் Explanation in English: Governing spies' activities, gathering knowledge through books are like two eyes to a king. MAHENDIRAN V ------------------ குறள் 582: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் - தெய்வப்புலவர் விளக்கம்: நாட்டின் அனைத்து இடங்களிலும் நிகழும் நிகழ்வுகளை ஒற்றர்களை கொண்டு அவ்வப்பொழுது அறிதல் அரசனின் கடமை. வை.மகேந்திரன் Explanation in English: Gathering news across the nation and internation now and then by trustful spies is the prime duty of a good king. MAHENDIRAN V ------------------ குறள் 583: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒற்றன் மூலம் செய்தி அறிய தெரியா மன்னனின் ஆளுமையால் அவன் ஆட்சி வளமை பெறாது. வை.மகேந்திரன் Explanation in English: A reign ruled by a king who is intelligent to gather news from truthful spies would not be wealthy. MAHENDIRAN V ------------------ குறள் 584: வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லவர் சுற்றத்தார் பகவர் என பகுத்தாய்ந்து அவர்களிடமிருந்து செய்தி தொகுத்து மன்னனிடம் அளிப்பதே ஒற்றனின் பணி. வை.மகேந்திரன் Explanation in English: An intelligent duty of a good spy is that to distinguish the facts that not to show partiality such as good people, relatives and enemies during gathering secrets, and bringing reports to king. MAHENDIRAN V ------------------ குறள் 585: கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று - தெய்வப்புலவர் விளக்கம்: யாரும் அறியா வேடம் கொண்டு, அறிந்தாலும் எதிர்க்கும் துணிவு கொண்டு, பிடிபட்டாலும் ரகசியம் காக்கும் தன்மை உடையவரே சிறந்த ஒற்றர். வை.மகேந்திரன் Explanation in English: A good spy is who acts on his duty not to make others know him, and even if he is caught not to fear and not to reveal secretes of his nation. MAHENDIRAN V ------------------ குறள் 586: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று - தெய்வப்புலவர் விளக்கம்: துறவியர் வேடத்தில் உள்நுழைந்து, நிகழ்வுகளை கண்காணித்து, பிடிபட்டு துண்பம் கொண்டாலும் துளியும் ரகசியம் வெளியிடா ஒருவரே நல் ஒற்றர். வை.மகேந்திரன் Explanation in English: A good spy is who masks a sage's role and penetrates into enemy's ground, watching all secret activities, even if he is caught and suffering, not to reveal secrets to enemies. MAHENDIRAN V ------------------ குறள் 587: மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பா டில்லதே ஒற்று - தெய்வப்புலவர் விளக்கம்: மறைத்த செய்திகளையும் மதியால் பெற்று அறிந்தவற்றை ஐயமில்லாமல் கொண்டுவருபவரே சிறந்த ஒற்றர். வை.மகேந்திரன் Explanation in English: A good spy is who observes the suppresed facts of enemis by his intelligence, and to bring them daringly to king. MAHENDIRAN V ------------------ குறள் 588: ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஓர் ஒற்றரால் அறியப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை, மற்றோர் ஒற்றரின் மூலம் செய்திப் பெற்று சரிபார்த்தலே அறிவாகும். வை.மகேந்திரன் Explanation in English: The wisdom of a king is that to confirm truthfulness of the message brought by the first spy, by sending another one spy to the same place. MAHENDIRAN V ------------------ குறள் 589: ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒற்றர்கள் மூவராயின், ஒருவரையொருவர் அறியாவண்ணம் வினை செய்ய வைத்து, மூவரின் கருத்தையும் ஒப்பிட்டு உண்மையறிதல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Perhaps sending three spies to a place to gather facts, it's very important to making situation not to know those spies with each other, and to confirm realisation from the messages brought by those three. MAHENDIRAN V ------------------ குறள் 590: சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற் புறப்படுத்தான் ஆகும் மறை - தெய்வப்புலவர் விளக்கம்: சபையறிய ஒற்றரை பாராட்டுவது நல்லாட்சிக்கு நல்லதல்ல. ரகசியம் பெறுதலை அம்பலப்படுத்துவது போல் அமையும் அது. வை.மகேந்திரன் Explanation in English: It's not a wisdom activity of a king if he appreciates spies on the stage like a function. If he does so, It would be looking like a state of distributing secretes to all. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 60 ஊக்கம் உடைமை CHAPTER 60 PROPERTY OF ENERGY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 591: உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஊக்கமே பிரதான ஆற்றல். எனவே ஊக்கமுடையவரே ஆற்றலுடையவராக கருதப்படுகிறார். ஊக்கமிலார் ஆற்றலில்லாதவராவார்கள். வை.மகேந்திரன் Explanation in English: Energy is the true property of one. Only they are considered property holders. Others are known as none havers. MAHENDIRAN V ------------------ குறள் 592: உள்ள முடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: உறுதி உள்ளம் உடையோரே நிலையான உடைமையுடையவராவார். அவரிடம் பொருட்செல்வம் குவிந்திருந்தாலும் அது நிலையான உடைமையாகாது. வை.மகேந்திரன் Explanation in English: Only the concrete mind of one is the stable property (to achieve something). Even if having much more wealth is not considered as so. MAHENDIRAN V ------------------ குறள் 593: ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தங் கைத்துடை யார் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊக்கம் நிறைந்துள்ளோர் ஒருவேளை அவர்தம் பொருளனைத்தையும் இழந்தாலும் ஊக்கம் இருப்பதன்கால் அவர் கலங்கிவிடமாட்டார். வை.மகேந்திரன் Explanation in English: Those who have stably energy in mind would never be worried out incase of losing his full wealth because of having energy as a stable property. MAHENDIRAN V ------------------ குறள் 594: ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை - தெய்வப்புலவர் விளக்கம்: சோர்வற்ற ஊக்கம் ஒருவரிடம் இருந்திட்டால், பொருட்செல்வம் கூடிய ஆக்கம் அனைத்தும் அவரிடம் தானாக வந்து சேரும். வை.மகேந்திரன் Explanation in English: If one is having tireless energy in mind, all wealth and creative sense would cummulate to his home itself. MAHENDIRAN V ------------------ குறள் 595: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: நீர் நிலையில் மலர்களின் தாள்கள் நீரின் அளவைப் பொருத்து உயர்வதை போல, ஒருவரின் ஊக்கத்தின் அளவைப் பொருத்தே அவர் தன் உயர்வும் அமையும். வை.மகேந்திரன் Explanation in English: One's development is measured based on his having energy in his mind as if the flowers in water raises their head based on the water level. MAHENDIRAN V ------------------ குறள் 596: உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து - தெய்வப்புலவர் விளக்கம்: உயர்வைப் பற்றிய சிந்தனை வேரூன்றி இருக்க வேண்டும். உயர்வு அது தாமதமானாலும் அச்சிந்தனையை நிறுத்தல் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: The thoughts and objectives for development should be strong ever. Even if the development lates its arrival, shouldn't stop the thoughts done towards the victory. MAHENDIRAN V ------------------ குறள் 597: சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு - தெய்வப்புலவர் விளக்கம்: அம்புகள் பல பாய்ந்தாலும் யானை அது தளராது தாங்கி நிற்கும். அதுபோல உயர்வில் சிதைவுகள் வந்தாலும் ஊக்கத்தை கைவிடக் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: Even if an elephant is attacked by a numerous javelines it would stand alone stably. Likewise, if one meets out worries in mind, shouldn't lose his energy to achieve. MAHENDIRAN V ------------------ குறள் 598: உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஊக்கமிலா மன்னன் கொடையுள்ளம் பெறமாட்டார். ஆதலில், தன்னை மிகுதியானவன் என்று சொல்லிக் கொள்ளும் செருக்கை அவர் இழப்பார். வை.மகேந்திரன் Explanation in English: A king who loses his energy would lose also his status of benefactor so he couldn't say himself that he is a great king. MAHENDIRAN V ------------------ குறள் 599: பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் - தெய்வப்புலவர் விளக்கம்: பேருடம்பும், பெருங்கொம்புமுடைய யானை, உருவத்தில் பெரிதாகினும், உத்வேகம் ஊக்கம் கொண்ட புலியது பாய்ந்தால் அஞ்சத்தான் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: An elephant might be looking very big in appearance by having sharpened horns but it must be afraid of for a tiger that has an infinite energy and speed. MAHENDIRAN V ------------------ குறள் 600: உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு - தெய்வப்புலவர் விளக்கம்: ஊக்கம் நிறைந்த பண்பே மனிதனின் உண்மையான அறிவு. அஃது இல்லையெனில் அவன் மனிதன் எனும் பெயரில் நிற்கும் ஒரு மரமே. வை.மகேந்திரன் Explanation in English: Having energetic sense is the true wisdom. Failing to have such, one is considered as a tree despite having named human. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 61 மடி இன்மை CHAPTER 61 TO CRACKING LAZINESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 601: குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறந்த குடி அனையாத விளக்காக இருந்தாலும், சோம்பலும், சோர்வும் இருந்தால் அந்த குடி மங்கிப் போகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if a family is glittering, if laziness is tending there, such family would go down more and more. MAHENDIRAN V ------------------ குறள் 602: மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறந்த குடியை உயர்வு செய்ய வேண்டுமாயின், சோம்பல் சோகம் தரும் என அறிந்து சோம்பாமைக்கு வித்திடவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: If one wants to hiking prides of his family, he must know the severeness of the laziness, and has to crack the laziness in no time. MAHENDIRAN V ------------------ குறள் 603: மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து - தெய்வப்புலவர் விளக்கம்: சோம்பல் அது சோகம் என அறியாத அறிவிலிகள் தன் குடி தனக்கு முன்பே மங்கிப் போவதை காண்பர். வை.மகேந்திரன் Explanation in English: One who is fool because of not knowing that the laziness would cause sadness would lose his family before he demises. MAHENDIRAN V ------------------ குறள் 604: குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: சோம்பல் நிறைந்த வாழ்க்கையில் குற்றமும் பெருகும். குலப்பெருமையும் சீர்குலையும். வை.மகேந்திரன் Explanation in English: The family on which laziness tends would meet out crimes, and would lose out the dignity of it. MAHENDIRAN V ------------------ குறள் 605: நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் - தெய்வப்புலவர் விளக்கம்: காலம் தாழ்த்தல், சோர்வடைதல், மறந்து போகுதல், அதிக தூக்கம் - இவை நான்கும் தாழ்வை நோக்கி அழைத்து செல்லும் மரக்கலம் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: The stances of four traits such as postponing for an act, being lazy, forgetting, longer sleep are known as a boat that leads one to bring to deep misery. MAHENDIRAN V ------------------ குறள் 606: படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: நிலம் பல ஆண்டு நிறைந்த செல்வம் பெற்றாலும் சோம்பல் எனும் நோயிருந்தால், அனைத்தும் பயனற்று போகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if one is having a lot of wealth through lands lot, if he has the disease - laziness, all would be collapsed. MAHENDIRAN V ------------------ குறள் 607: இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் - தெய்வப்புலவர் விளக்கம்: சோம்பலில் வீழ்ந்து முயற்சியேதும் செய்யார் பலரின் இகழ்ச்சிக்கு ஆளாவர். வை.மகேந்திரன் Explanation in English: One who falls down in laziness and doesn't try even a bit for survival would be criticised very much by the society. MAHENDIRAN V ------------------ குறள் 608: மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க் கடிமை புகுத்தி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறந்தகுடி பெருமையாயிருந்தாலும் சோம்பலது அங்கு குடிகொண்டால், பகைவரிடத்தில் அக்குடி அடிமையாகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if one's birth is proud, if the laziness tends there, his family would become slave to many. MAHENDIRAN V ------------------ குறள் 609: குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: வாழ்க்கையில் சோம்பலை ஒருவன் விட்டு விட்டால், குலப்பெருமை ஓங்கும் ஆண்மையின் ஆளுமையும் உயரும். வை.மகேந்திரன் Explanation in English: If one comes out from lazy feeling, the domain of his family would hike up, and his masculine status would raise up. MAHENDIRAN V ------------------ குறள் 610: மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு - தெய்வப்புலவர் விளக்கம்: சோம்பலை தூக்கியெறிந்தவன் உலகையே காலடிக்குள் கொண்டுவந்த மன்னனுக்கு சமமாவான். வை.மகேந்திரன் Explanation in English: One who has cracked the laziness is compared to a king who has defeated the world and keeping it on his feet. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 62 ஆள்வினை உடைமை CHAPTER 62 THE FEATURES OF HARD WORK BEYOND THE FATE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 611: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: இதை செய்ய முடியுமா என்று மலைத்து நிற்க கூடாது. செய்து முடிக்க முயற்ச்சித்தால் வெற்றி கிட்டும். வை.மகேந்திரன் Explanation in English: Being stunned because of fearing to finish a work is not wisdom. If trying to finish it, victory would come in hand. MAHENDIRAN V ------------------ குறள் 612: வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு - தெய்வப்புலவர் விளக்கம்: செய்யும் செயல் கடினம் என நினைத்து பாதியில் நிறுத்துதல் அறிவாகாது. அதை கடினமானாலும் செய்துமுடித்திட முயற்சிக்கவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Pausing a work by thinking that it is difficult is coward. Even if it is hard, trying to finish it is energized sense. MAHENDIRAN V ------------------ குறள் 613: தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர்க்கு உதவி செய்யும் மனோபக்குவம் முயற்சியின் வீரியத்தில் உள்ளது. முயற்சிக்கு சோர்வுற்று உதவி புரிதலை நிறுத்துதல் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: Thinking to help others is based on one's try. Shouldn't be fearing and stopping to help others saying being lazy. MAHENDIRAN V ------------------ குறள் 614: தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: உதவி செய்வேன் என்று சூளுரைத்து முயற்சிக்காமல் இருப்பது, படையில் வெறும் வாளை வைத்து வீண் வீச்சு செய்வது போலாகும். வை.மகேந்திரன் Explanation in English: Having pledged to help earlier, then being not to try to do so is like waving sword fakely in the war. MAHENDIRAN V ------------------ குறள் 615: இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் - தெய்வப்புலவர் விளக்கம்: தன் இன்பம் பெரிது என்று கருதாமல் கடமையாய் பலருக்கு உதவுபவன், சுற்றத்தாரின் துன்பம் போக்கும் வல்லவனாவான். வை.மகேந்திரன் Explanation in English: One who acts as a duty without selfishness for helping others is considered as the great man who is caring society to wipe their miseries. MAHENDIRAN V ------------------ குறள் 616: முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: முயன்றால் மட்டுமே செல்வம் கிட்டும். ஏதும் செய்யாமல் சும்மா இருத்தல் துன்பத்திற்கு வழிவகுக்கும். வை.மகேந்திரன் Explanation in English: Only way to get wealth is that to try. Being mere would cause to earn miseries a lot. MAHENDIRAN V ------------------ குறள் 617: மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள் - தெய்வப்புலவர் விளக்கம்: சோம்பலில் திளைப்பனிடம் கருநிற மூதேவி குடியிருக்கிறாள். சோம்பாது உழைப்பவன் வாசலில் திருமகள் உட்புகுவாள். வை.மகேந்திரன் Explanation in English: Dark goddes of unluck would tend with lazy fellows while the goddes of wealth would hug the hard worker who throws laziness. MAHENDIRAN V ------------------ குறள் 618: பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி - தெய்வப்புலவர் விளக்கம்: விதிப் பயனில் வீழ்வது கூட குற்றமில்லை ஆனால் ஆற்றும் கடமையில் அறிவார்ந்து செயல்படாமல் இருப்பதே குற்றமாகும். வை.மகேந்திரன் Explanation in English: Fallon down due to one's fate is not a crime but it is utter crime what one is sitting mere instead of doing a work that should be done. MAHENDIRAN V ------------------ குறள் 619: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: விதியின் காரணத்தால் வெற்றி கிட்டாது என்றாலும், கடும் உழைப்பை கருத்தில் கொண்டு அவ்விதியே அவனுக்கு பலனை அள்ளித்தரும். வை.மகேந்திரன் Explanation in English: Despite saying that shouldn't get victory due to fate, the same fate would provide returns because of one's hard work. MAHENDIRAN V ------------------ குறள் 620: ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: உழைக்கும் திறன் பலம் நிறைந்தால், ஊழ்வினை தடையையும் தகர்த்தெரிந்து வெற்றி தரும். வெற்றியே அவனது விதியாக மாறும். வை.மகேந்திரன் Explanation in English: If one's hard work is found to be very strong, it would cause a victory by cracking the bad fates of one. The victory would be his real fate. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 63 இடுக்கண் அழியாமை CHAPTER 63 THE FACTS OF MISERIES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 621: இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில் - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பம் வருங்கால் துவண்டு போகாது உள்ளுக்குள் சிரித்து மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள வேண்டும் துன்பத்தை எதிர்கொள்ளும் வலிமையான மருந்து அதுதான். வை.மகேந்திரன் Explanation in English: When one meets out misery, he has to make himself be pleasant intensively. This is the right remedy to give up the misery. MAHENDIRAN V ------------------ குறள் 622: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: வெள்ளம்போல் கரைபுரண்டு துன்பம் வந்தாலும் எதிர்த்து நிற்கும் மனதிடம் வலிமையாய் இருப்பின் துன்பமே அஞ்சும். வை.மகேந்திரன் Explanation in English: If one strongly opposes the miseries that come to him like flood, such misery too would be afraid of him to near him. MAHENDIRAN V ------------------ குறள் 623: இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பம் நெருங்குங்கால், துன்பத்திற்கே துன்பம் தரும் இயல்பே அறிவுடையவர்களின் செயல். வை.மகேந்திரன் Explanation in English: The wisdom activity of one is that to give misery to the misery, if it nears to him. MAHENDIRAN V ------------------ குறள் 624: மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பத்தையும் தாண்டி இன்பமாய் விடாமுயற்சி செய்யும் செயலுக்கு தடைகளையும் தாண்டி வண்டியை இழத்துச் செல்லும் எருதேச்சான்று. வை.மகேந்திரன் Explanation in English: Bulls who skips the hurdles when they pull the cart is the right example to one to skipping the hurdles that come to one's life by a continual try. MAHENDIRAN V ------------------ குறள் 625: அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: தொடர் துன்பம் வரும் பொழுது தாங்கிக்கொள்ளும் மன உறுதியை கொண்டிருந்தால் வரும் துன்பம் துன்பப்பட்டுப்போகும். வை.மகேந்திரன் Explanation in English: If one is being strong and tackling the continual miseries, those miseries would run away by meeting out misery from him. MAHENDIRAN V ------------------ குறள் 626: அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புதல் தேற்றா தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: செல்வம் நிறைந்திருக்கும் காலத்தில் மகிழ்ச்சியில் திளைத்து அதை காக்கத் தெரியாமல், வறுமை வரும்பொழுது கலங்குவதில் அர்த்தமில்லை. வை.மகேந்திரன் Explanation in English: Being happy infinitely without saving during having wealth a lot but worrying out and being saddened during poverty is meaningless. MAHENDIRAN V ------------------ குறள் 627: இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பம் என்பது எவ்வுயிர்க்கும் இயல்பு என்பதை அறிந்திட்டால், துன்பத்த்தின் கொடுமை பெரிதாக தெரியாது. வை.மகேந்திரன் Explanation in English: If one realises that meeting out misery is nature to all living beings, the cruelty of misery would not be felt by one as a big one. MAHENDIRAN V ------------------ குறள் 628: இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்ப முறுதல் இலன் - தெய்வப்புலவர் விளக்கம்: இன்பத்தில் விருப்பம் இல்லாதோர் துன்பத்தை துயரமாக எண்ண மாட்டார்கள். ஆதலால் துன்பத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுவதில்லை. வை.மகேந்திரன் Explanation in English: Those who don't bother about pleasance when they meet out happiness would not be worried out of misery too when it comes. So that they would not be afraid of misery. MAHENDIRAN V ------------------ குறள் 629: இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்ப முறுதல் இலன் - தெய்வப்புலவர் விளக்கம்: இன்பம் வரும் காலத்தில் அதை இனிது என்று அனுபவிக்க விரும்பாதோர் துன்பம் வரும் காலத்தில் அதை ஒரு பொருட்டாகாவே நினைக்கமாட்டார்கள். வை.மகேந்திரன் Explanation in English: (This too is the same matter as previous lines) Those who are not interested to enjoying pleasance would not consider as a hard when they meet out misery. MAHENDIRAN V ------------------ குறள் 630: இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பமும் தனக்கு ஒரு இன்பமே என்று கருதுபவர்களை பகைவரும் வியந்து பாராட்டுவார்கள். வை.மகேந்திரன் Explanation in English: Enemies too would very much applaud ones who consider misery too is a kind of pleasance. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 64. அமைச்சு CHAPTER 64. THE MINISTERY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு - தெய்வப்புலவர் விளக்கம்: நல் கருவி / பொருள் கொண்டு உரிய நேரத்தில், செயல் நோக்கம் அறிந்து செயலாற்றுவதே நல் அமைச்சின் தலையாய பணியாகும். வை.மகேந்திரன் Explanation in English: The prime duty of a ministery is that to do an act on time by using right tools and to know clearly the objective of the act. MAHENDIRAN V ------------------ குறள் 632: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு - தெய்வப்புலவர் விளக்கம்: அஞ்சாமை, குடிமகன்களை காத்தல், நிறைய கற்று அறிதல், கற்றோரின் கருத்து பெறுதல், சோர்வை தகர்த்து முயற்சி செய்தல் - இவை ஐந்தும் ஒரு நல்ல அமைச்சின் திறமைகளாகும். வை.மகேந்திரன் Explanation in English: The important five skills that to be had by a ministery are, Being fearless to act, Protecting citizens, Learning a lot, Hearing from literates, and try to do any difficult work. MAHENDIRAN V ------------------ குறள் 633: பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு - தெய்வப்புலவர் விளக்கம்: எதிரியின் கூட்டத்தை பிரித்தல், நலம் செய்வோரை காத்தல், பிரிந்தாரை நலம் கருதி சேர்த்தல் ஆகியவை நல் அமைச்சின் நல் அறிவாகும். வை.மகேந்திரன் Explanation in English: Splitting off the enemy's team, protecting well wishers, admitting the team who went away, for the sake of the nation are the best wisdom of the best ministery. MAHENDIRAN V ------------------ குறள் 634: தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு - தெய்வப்புலவர் விளக்கம்: தான் ஆராய்ந்து பார்த்ததில் சரியென்று பட்டால் அதை துணிந்து செயல்படுத்தும் திறன் கொண்டவனே சிறந்த அமைச்சன் ஆவான். வை.மகேந்திரன் Explanation in English: If one is strong on his dicision known by him of his own examination/research, he has to implement such dicision bravely to act. Only then, he is the best minister. MAHENDIRAN V ------------------ குறள் 635: அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: அறம் அறிந்தவனாகவும், அறிவு நிறைந்தவனாகவும், எக்காலத்திலும் எச்செயலையும் செய்யும் வல்லமை படைத்தவனாகவும் இருப்பவனே அரசனக்கு ஆலோசனை தர தகுதி படைத்தவனாவான். வை.மகேந்திரன் Explanation in English: One who is honest, intelligent and virtual, and having ability to do any kind of act at any circumstance is purely eligible to counsel to a king, and can be a good adviser. MAHENDIRAN V ------------------ குறள் 636: மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை - தெய்வப்புலவர் விளக்கம்: இயற்கை அறிவுடன் நூல் அறிவும் சேர்ந்திட்ட ஒருவன் முன் எவ்வித சூழ்ச்சியும் தோற்றுபோகும். வை.மகேந்திரன் Explanation in English: Infront of one who is well-versed on both by education and well trait by birth, any kind of trickery manner would get failed. MAHENDIRAN V ------------------ குறள் 637: செயற்கை அறிந்தக் கடைத்து முலகத் தியற்கை அறிந்து செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: நூல் பல கற்று அறிவு நிறைந்திருந்தாலும், ஒரு அமைச்சன் அன்றைய நடப்பறிந்து அறிவார்ந்து செயல்பட வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Even if the person of ministery is well versed in all respects through books, he must be acting in the ministery according to the present trend that tends in the nation. MAHENDIRAN V ------------------ குறள் 638: அறிகொன் றறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு அரசன் அறிவற்று இருந்தாலும், அவன் பிறர் சொல் கேட்க மறுப்பவனாக இருந்தாலும், நாட்டை வழிநடத்த அரசனை நல்வழி நடத்துவது ஒரு அமைச்சனின் கடமை. வை.மகேந்திரன் Explanation in English: If a king is inintelligent and hesitates to hearing advices from well versed, the authority of ministery ought to guide him for right ways to rule the nation. MAHENDIRAN V ------------------ குறள் 639: பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் - தெய்வப்புலவர் விளக்கம்: குறை நிறைந்த, சூழ்ச்சி நிறைந்த அமைச்சன் ஒருவன் அரசனின் ஆலோசகனாக இருந்தால், எழுபது கோடி எதிரிகளை எதிரே வைத்துகொள்வது போலாகும். வை.மகேந்திரன் Explanation in English: If an intelligent minister is had by a king aside for ruling his nation, it is equallent to having seventy crore enemies. MAHENDIRAN V ------------------ குறள் 640: முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: திறன் இல்லா அமைச்சனிடம் தரம் மிக்க பணி கொடுத்தால், வளம் மிக்க நாடும் பலம் இழந்து போகும். வை.மகேந்திரன் Explanation in English: If a confidential and intellectual work is given to an inappropriate minister, the wealth full nation too would lose its strength. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 65 சொல்வன்மை CHAPTER 65 ELOQUENCE (SPEAKING SKILL) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று - தெய்வப்புலவர் விளக்கம்: நாவன்மை நலம் பல பயக்கும் ஆதலால் அது ஒரு பெருந்செல்வம். இதற்கு இணை கூறுவது அரிது. வை.மகேந்திரன் Explanation in English: The strength of eloquence is a great wealth to all. To compare this power by another skill is hardly. MAHENDIRAN V ------------------ குறள் 642: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: நாவன்மையால் நல்லதும் நடக்கும் தீயதும் நடக்கும். நாவை தீயச் சொல் சொல்லாது கட்டுப்படுத்தும் திறன் அவசியம். வை.மகேந்திரன் Explanation in English: The eloquence may cause good and bad time versa. The effort of controlling tongue for not using illy words is necessary. MAHENDIRAN V ------------------ குறள் 643: கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் - தெய்வப்புலவர் விளக்கம்: சொல்லாடல் சிறப்பாயிருந்து ஒருவர் பேசும் ஆற்றல், கேட்போர் மட்டும் அல்லாது கேளாதாவரையும் கவர்ந்திழுக்கும். வை.மகேந்திரன் Explanation in English: The eloquent speech of one would attract not only those who are willing to hear, but also those who are not so interested to listen. MAHENDIRAN V ------------------ குறள் 644: திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங் கில் - தெய்வப்புலவர் விளக்கம்: பொருளறிந்து, ஆள் அறிந்து இடம் அறிந்து பேசுதல் வேண்டும். அதுவே அறமாகும். புரிந்து கொள்ள முடியாதோரிடத்தில் மேதாவித்தனம் காண்பிக்கக்கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: While speaking, should take care of whom we speak, what we speak. That is the moral way. Shouldn't show our intellectuality to an inappropriate person by talk. MAHENDIRAN V ------------------ குறள் 645: சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து - தெய்வப்புலவர் விளக்கம்: பேசும் சொற்களில், உயர்ந்த சொற்களை பயன்படுத்த வேண்டும். அதை விட சிறந்த சொல் இல்லையே என்பது போல் இருக்க வேண்டும் பேசும் சொற்கள். வை.மகேந்திரன் Explanation in English: Using sweet words during speaking is very important. The words should be the best as if not to find out any synonym. MAHENDIRAN V ------------------ குறள் 646: வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் - தெய்வப்புலவர் விளக்கம்: அடுத்தோரை கவரும் விதத்தில் பேசுவது எப்படி முக்கியமோ அது போல பிறர் சொல்லும் நற்சொற்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Whereas one wills to speak with others interactively, he should be hearing other's good words spoken by them . MAHENDIRAN V ------------------ குறள் 647: சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: கூறும் சொற்கள் சிறப்பாய் இருந்து, வாதத்திற்கு அஞ்சா நெஞ்சம் கொண்டு, வலியுறுத்தி நாவன்மை புரிபவனை வெல்வது கடினம். வை.மகேந்திரன் Explanation in English: It's hardly to defeat one who wisely eloquences bravely and also speaking sweet words impressively. MAHENDIRAN V ------------------ குறள் 648: விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: வகைப்படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்தி இனிமையாய் பேசும் வல்லவனுக்கு நல்லோரும் வல்லோரும் நட்பாவார்கள். வை.மகேந்திரன் Explanation in English: One whose eloquence is in order and lined up and speaking understably good words would get literate friend circle a lot. MAHENDIRAN V ------------------ குறள் 649: பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: சபைக்கு தகாத வார்த்தைகளை பேச இயலாத சமயத்தில், பற்பல சொற்களை தேடிப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்படுவது இயல்பே. வை.மகேந்திரன் Explanation in English: While being in the situation not able to speak some inappropriate words infront of audience on the stage, it's difficult and awkward to find out alternative words. MAHENDIRAN V ------------------ குறள் 650: இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரிந்துரையா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: கற்றறிந்த அனைத்தையும் பிறரும் அறியும்வண்ணம் கருத்துரைக்க இயலாமல் போகும் நிலை, மலர்ந்த தாமரை மணம் தராத நிலைக்கு ஒப்பாகும். வை.மகேந்திரன் Explanation in English: The stance of being not able to explain one's learnt aspects to others is like a lotus that blossomed but not emits aroma. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 66 வினைத் தூய்மை CHAPTER 66 PURITY OF ACTS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 651: துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவருக்கு துணை ஆக்கம் தரும் கால் அவர் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றியை ஈட்டுவார். வை.மகேந்திரன் Explanation in English: If one gets a wisdomed assistance for his acts, he would get victories in all respects. MAHENDIRAN V ------------------ குறள் 652: என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை - தெய்வப்புலவர் விளக்கம்: புகழும் அறமும் தராத செயல்கள் வீணானது. விட்டொழிப்பதே நன்மைக்கு அழகு. வை.மகேந்திரன் Explanation in English: The acts of one that don't provide prides and if it's found to be immoral, that ought to be given up immediately. MAHENDIRAN V ------------------ குறள் 653: ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர் - தெய்வப்புலவர் விளக்கம்: புகழினை கெடுக்கும் செயல்களை தவிர்த்தால் மட்டுமே ஒளி வீசும் வாழ்வு அமையும் இல்லேல் அவப்பெயர்தான் மிஞ்சும். வை.மகேந்திரன் Explanation in English: Only when one avoids to do the acts that destroys one's good status, he can get a brightening life otherwise only dirty name would remain. MAHENDIRAN V ------------------ குறள் 654: இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: தெளிந்த அறிவுடைய மக்கள் துன்பமது வந்தாலும் கூட இழிச்செயல்களை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். வை.மகேந்திரன் Explanation in English: Good people would never dare to do dirty acts even if they are in big suffering in life. MAHENDIRAN V ------------------ குறள் 655: எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று - தெய்வப்புலவர் விளக்கம்: வருந்தும் செயல்களை செய்து விட்டு பின் ஏன் அதை செய்தோம் என வருந்துவது அறிவற்றத்தனம். அச்செயலை மீண்டும் செய்யாமல் இருப்பதே அறிவாகும். வை.மகேந்திரன் Explanation in English: If one is worried out for his having done a dirty acts earlier, that is foolish. Even if that had been done because of situation, that acts should never be done again. MAHENDIRAN V ------------------ குறள் 656: ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை - தெய்வப்புலவர் விளக்கம்: பெற்ற அண்ணை பசியால் துடித்தாலும் பொருள் வேண்டி இழிச் செயல்களை செய்தல் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: Even if one's mother is suffering from a big hunger, he should not dare to do any immoral acts for searching money. MAHENDIRAN V ------------------ குறள் 657: பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை - தெய்வப்புலவர் விளக்கம்: இழிச் செயல் செய்து பழி சுமந்து வாழ்வதைவிட வறுமையில் வாடி வாழும் வாழ்க்கை மேன்மைபடும். வை.மகேந்திரன் Explanation in English: Living with trend of poverty is far better than living by earning big wealth by immoral a dirty activities. MAHENDIRAN V ------------------ குறள் 658: கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: தகாதச் செயல்கள் தரம் இழக்க செய்யும் என்று அறிந்தும் பொருள் வேண்டி செய்யுங்கால், துன்பமும் துயரமும் தான் மிஞ்சும். வை.மகேந்திரன் Explanation in English: Despite knowing that immoral acts of one would decrease his quality in life and doing such acts, only miseries and evils would remain in his life. MAHENDIRAN V ------------------ குறள் 659: அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரை அழவைத்து ஈட்டிய பணம், பொருள் அதிகமாய் அழவைத்து அழிந்துபோகும். நேர்மையாய் வந்த பணம் நிலையாக நிமிர்ந்து நிற்கும். வை.மகேந்திரன் Explanation in English: The wealth earned by one by making crying others would cause him a big cry. The wealth earned by one honestly and morally would stand stably with him. MAHENDIRAN V ------------------ குறள் 660: சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துணீர் பெய்திரீஇ யற்று - தெய்வப்புலவர் விளக்கம்: தீய வினைகளால் ஈட்டிய பணம் மற்றும் பொருளை பாதுகாக்க நினைப்பது, ஈர மண்ணில் பானை செய்து அதில் தண்ணீரை பாதுகாப்பது போல் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: Protecting money and properties that were earned by illy ways is like the act of saving water pouring it in the wet soiled pot. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 67 வினைத்திட்பம் CHAPTER 67 WILLPOWER IN ACTION 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 661: வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற - தெய்வப்புலவர் விளக்கம்: மன உறுதி ஒன்றே மனிதனுக்கு பலம். மற்றவையெல்லாம் அதற்கு பிறகுதான். வை.மகேந்திரன் Explanation in English: Only Having stability in mind is biggest strength to one. Others are considered onlysecondly. MAHENDIRAN V ------------------ குறள் 662: ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் - தெய்வப்புலவர் விளக்கம்: இடையூறு வராவண்ணம் ஒருவரின் செயல் திறன் இருத்தல் வேண்டும். இடையூறு ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனோதிடம் வேண்டும் என்பதே அறிஞர்களின் கோட்பாடு.. வை.மகேந்திரன் Explanation in English: One should plan strongly for his profession not to meet any troubles till he reaches the goal. Even if there may be difficulties, should know to crack such - is the principles of experts. MAHENDIRAN V ------------------ குறள் 663: கடைக்கொட்கச் தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: செயல்வடிவம் செய்து அது முற்றுபெறும் போதே வெளி கொணர வேண்டும். அப்பொழுதான் அதற்கு மதிப்பு. இடையில் வெளி கொணருதல் நன்மை பயக்காது. வை.மகேந்திரன் Explanation in English: A project being done by one should be revealed after the full completion of such work. Only then it would be foud to be valid. If such work is revealed on half of the way there wouldn't be any gain of the work. MAHENDIRAN V ------------------ குறள் 664: சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: இச்செயலை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்வதோடு நிற்காமல் சொல்லியபடி செய்து நிறைவேற்றுவதே அறிவார்ந்த செயல். வை.மகேந்திரன் Explanation in English: Talking and planing to do a work is not a matter, Bringing such work to finish without fail as if planning that is wisdom. MAHENDIRAN V ------------------ குறள் 665: வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு சாமன்யன் தன் மனோதிடத்தால் செயல் புரிந்து வெற்றிபெற்றால், மன்னன் அதை அறிய பெற்றால், பெரிதும் அவன் பாராட்டப்படுவான். வை.மகேந்திரன் Explanation in English: If a citizen achieves at work successfully by his willpower, if it is brought to the knowledge of the king, he would be felicitated enormously by all. MAHENDIRAN V ------------------ குறள் 666: எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: செய்து முடிக்க எண்ணும் செயலில் தீவிர முயற்சி இருந்து 'செய்து முடித்து விடுவேன்' என்று மன உறுதியுடன் செயல்பட்டால் அப்பணியில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். வை.மகேந்திரன் Explanation in English: If one is having a determination intensively that he would complete his plan successfully, he would surely succeed in that. MAHENDIRAN V ------------------ குறள் 667: உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: பெரிய தேரை இழுக்கும் அச்சானி மிகச்சிறியதுதான். எனவே சாதனை செய்வதற்கு பெரியவர் சிறியவர் என பாகுபாடு காண்பது அறிவன்று. வை.மகேந்திரன் Explanation in English: The axis of a chariot is very small but it pulls the giant chariot. So considering the type of a person to do a work is poor thought. MAHENDIRAN V ------------------ குறள் 668: கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் மனக்கலக்கம் இல்லாது, பிரியப்படும் பணியினை தொய்வின்றி செய்யுங்கால் அவர் செய்யும் செயலில் வெற்றி காண்பார். வை.மகேந்திரன் Explanation in English: If one does his duty interestingly without any confusion of mind, and without any lagging, he would surely meet out success. MAHENDIRAN V ------------------ குறள் 669: துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை - தெய்வப்புலவர் விளக்கம்: பணி முடிவில் இன்பம் கிட்ட வேண்டுமாயின், துன்பங்கள் சிலவற்றை சந்திக்க நேர்வது இயல்பு, ஒருவர் கிடைக்கப்போகும் இன்பத்தை மனதிற்கொண்டு துணிவுடன் செயலாற்ற வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: If one wants to get pleasance at his work on its completion, it's nature to meet some hurdles during doing such work. He must be doing bravely his work only by thinking the upcoming pleasance. MAHENDIRAN V ------------------ குறள் 670: எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு - தெய்வப்புலவர் விளக்கம்: வேறு எந்த வகையில் உறுதி, பெற்றவராயிருந்தாலும், செய்யும் தொழிலில் அதுச் சார்ந்த செயலில் மனவலிமை இல்லாதோரை இவ்வுலகம் போற்றாது. வை.மகேந்திரன் Explanation in English: Even if one is strong enough at any respect, if he doesn't have a strong willpower on his regular profession, the world wouldn't praise him. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 68 வினை செயல்வகை CHAPTER 68 MODE OF ACTIONS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயல் குறித்து நன்கு ஆராய்ந்து துனிவுடன் முடிவெடுக்க வேண்டும். முடிவு தீர்க்கமாக இருக்கும் கால், காலதாமதம் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: The decision for an action must be taken strongly and patiently by examining the merits and demerits of the action. If the determination is finalised, shouldn't postpone at any reason. MAHENDIRAN V ------------------ குறள் 672: தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை - தெய்வப்புலவர் விளக்கம்: முக்கிய முடிவுகளில் நிதானம் தேவை. அவசரகதியில் எடுத்தல் கூடாது. விரைவில் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் காலம் தாழ்த்தல் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: Deep concentration and patience are needed to take important decisions. Shouldn't hurry up before knowing the reason for urgency. But emergency action to be taken without postponing for important reasons. MAHENDIRAN V ------------------ குறள் 673: ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: இயலுமிடத்தில் விரைந்து முடிவெடுத்து செயலாற்ற வேண்டும். இயலா இடங்களில் இயலாக் காரணத்தை ஆராய்ந்து இயலும் நிலைக்கு கொண்டு வர வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Taking decisions to do actions is depending upon the stance of possibilities. If possility is fair to do an action, should do it immediately. If there is no possibility, should bring out that situation to be possible. MAHENDIRAN V ------------------ குறள் 674: வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலால் ஏற்பட்ட பகைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடரவிட்டால் அந்நிலை, அனைக்காது விட்ட நெருப்பைப் போன்றதாகும். வை.மகேந்திரன் Explanation in English: If permanent solution isn't taken on an issue during actions, it is equallent to letting fire by not putting off it. MAHENDIRAN V ------------------ குறள் 675: பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: என்ன பணி, எப்பொழுது, எந்த இடம், என்ன கருவியைக் கொண்டு எதற்காக - என்பதையெல்லாம் ஆராய்ந்த பின்பே ஒரு செயலை தயக்கமின்றி துவங்கவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: One has to start to an action without hesitation but he should know clearly for what such action is done, and when and where and by which source that is done. MAHENDIRAN V ------------------ குறள் 676: முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்ய துவங்கும் முன் அச்செயலால் யாது பயன், தடை வந்தால் சமாளிப்பது எப்படி, செயல் தன்மை - இவற்றை ஆராய வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Before starting an action, should know the aim and gain of that action, and should know how to crack any issue that may raise, and the type of work. MAHENDIRAN V ------------------ குறள் 677: செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை துவங்கும் முன் அச்செயலில் அனுபவமுள்ளோரின் கருத்தை கேட்டறிந்து ஆராய்ந்து அச்செயலில் இறங்கவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Before doing an action, one should discuss and examine the merits and demerits of such action from the experienced persons. MAHENDIRAN V ------------------ குறள் 678: வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருச் செயலை செய்யும்கால், அச்செயல் சார்ந்த மற்றொரு செயலையும் ஆரம்பித்து செயலாற்றி முடித்துக் கொள்வது, பிளிரும் யானையை அடக்க மற்றொரு யானையை பயன்படுத்துவது போலாகும். வை.மகேந்திரன் Explanation in English: During doing a work, beginning another one relevant work simaltaneously to finish both, it's equallent to using an elephant to control another one rude elephant. MAHENDIRAN V ------------------ குறள் 679: நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலின் பொழுது, அச்செயலின் நன்மைக்காக, நட்புக்கு உதவி செய்து நலம் தேடி கொள்வது நல்லது என்றாலும், பகைவரை நட்புக்கொள்ளவைப்பது விரைவான நன்மையை தரும். வை.மகேந்திரன் Explanation in English: For the sake of one's doing work, even if he earns betterment of doing help to his friends, making friendship on enemies would cause more betterments. MAHENDIRAN V ------------------ குறள் 680: உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் கொள்வர் பெரியார்ப் பணிந்து - தெய்வப்புலவர் விளக்கம்: வலியோரை எளியார் எதிர்க்க துணியும்பொழுது, எளியாரின் மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டால், எளியார் பெரியோரை பணிந்து நிற்பர். வை.மகேந்திரன் Explanation in English: On the situation of opposing stronger by weaker, if the people of weaker are getting fear, weaker would obey the advices of big persons. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 69 தூது CHAPTER 69 MESSANGER OF EMPEROR (AMBASSADOR) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பும் அறிவும் நிறைந்து நற்குடியில் பிறந்து மன்னனுக்கு விசுவாசமாக நடப்பவனே நல்ல தூதன். வை.மகேந்திரன் Explanation in English: The good qualities of the best ambassador are, having distinguished knowledge, birth quality, being benevolent to a king. MAHENDIRAN V ------------------ குறள் 682: அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பு, அறிவு, சொல்லாற்றல் ஆகியவை நல்ல தூதருக்கு இன்றியமையாததாகும். வை.மகேந்திரன் Explanation in English: Having must to an ambassador are, kindness, wisdom on sharing message, knowing to speak impressively. MAHENDIRAN V ------------------ குறள் 683: நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு - தெய்வப்புலவர் விளக்கம்: ஆய்ந்து அறிந்து கற்றுனர்ந்த தூதுவரால் மட்டுமே பிற அரசிடம் தூது வகை செய்து தன் அரசனின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியும். வை.மகேந்திரன் Explanation in English: Only the ambassador who knows to examine good ones, and being good in education in all respects, and knowing to share messages intelligently can bring victory to the king. MAHENDIRAN V ------------------ குறள் 684: அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஆராய்ந்து பார்க்கும் அறிவு, இயற்கை அறிவு நல்ல தோற்றம் இவை மூன்றும் ஒரு தூதருக்கு அவசியமாகும். வை.மகேந்திரன் Explanation in English: The three traits such as having knowledge to examine, nature sensibility and attractive appearance are important to an ambassador. MAHENDIRAN V ------------------ குறள் 685: தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது - தெய்வப்புலவர் விளக்கம்: அரசன் யாது சொன்னாலும் அடுத்த அரசிடம் தூது சொல்லும் முறையில் கண்ணியம் காப்பவனே நல்ல தூதுவன். அவன் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும். நீக்க வேண்டியதை அறிவுடன் நீக்க வேண்டும். எதிரிமன்னனுக்கு சினம் வரா வகையில் அந்த தூது அமையவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Whatever a king asks to share messages to another king, an ambassador must know to contol and segregate the messages, to showing kindness during passing on messages and behaving kindly, and to know not to make another king get anger of sharing messages. MAHENDIRAN V ------------------ குறள் 686: கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாந் தூது - தெய்வப்புலவர் விளக்கம்: அஞ்சா குணம், குறிப்பறிந்து ஆற்றும் அறிவார்ந்த செயல், எதிரியை சினம் கொள்ளா வைக்கும் தந்திரம்- இவை தூதுவனுக்கு முக்கியம். வை.மகேந்திரன் Explanation in English: Being not to fear, doing actions by knowing trend, knowing tricks not to make anger the recepient - are the sensible principles that to be had by an ambassador. MAHENDIRAN V ------------------ குறள் 687: கடனறிந்து காலங் கருதி இடனறிந் தெண்ணி உரைப்பான் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: கடமையுணர்ந்து, இடமறிந்து, காலம் தெரிந்து செய்தி சொல்லும் திறனே தூதுவனுக்கு பலம். வை.மகேந்திரன் Explanation in English: The strength of an ambassador is that to act by knowing situation, time and place on sharing messages. MAHENDIRAN V ------------------ குறள் 688: தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உள்ளத்தூய்மையுடன், துணிச்சலுடன், நட்புடனும் வாய்மை உரைப்பவனே நல்ல தூதுவன். வை.மகேந்திரன் Explanation in English: The best ambassador is who is having purity in heart, bravery on actions, having cooperativeness and expressing truths. MAHENDIRAN V ------------------ குறள் 689: விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன் - தெய்வப்புலவர் விளக்கம்: தூதன் எனப்படுபவன் தவறியும் குற்ற வார்த்தை கூறாதவனாக இருத்தல் வேண்டும். உறுதி மனம் கொண்டவனாக இருத்தல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: The ambassador should not tongue slip by crime words at any cost. He must have strong tendency in mind. MAHENDIRAN V ------------------ குறள் 690: இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் குறுதி பயப்பதாம் தூது - தெய்வப்புலவர் விளக்கம்: தூது சொல்லுங்கால், ஆபத்து நேரும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பயம்கொள்ளாமல், அரசுக்கு விசுவாசம் காட்டி கடமையாற்ற துணிபவனே சிறந்த தூதன். வை.மகேந்திரன் Explanation in English: Incase of situation is dangerous on enemy's ground, an ambassador should not fear any more at all. He has to do actions bravely and to be grateful to the king. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் CHAPTER 70 TO CO-OPERATE TO KING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: மக்கள் மன்னரிடம் உள்ள தொடர்பு, விலகாமலும் நெருங்கி போய்விடாமலும் நெருப்பில் குளிர் காய்வது போலிருக்க வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: The relationship between people and the king neither should be close nor being far away. It should be like warming up body infront of fire during cold time. MAHENDIRAN V ------------------ குறள் 692: மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: அரசர் விரும்புவதையெல்லாம் தானும் விரும்பி அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலிருப்போரே அரசால் ஆதாயமடைவர். வை.மகேந்திரன் Explanation in English: Only the men who don't desire all things that a king desires would get gain from the king. MAHENDIRAN V ------------------ குறள் 693: போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: அரசருக்கு நெருக்கமாக இருப்போர் தங்கள் மீது ஏதும் பழி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லேல், அரசர் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பர். வை.மகேந்திரன் Explanation in English: The people who are close to the king must take care of not getting any evil name at all circumstance, otherwise they would lose belief that the king put on them. MAHENDIRAN V ------------------ குறள் 694: செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து - தெய்வப்புலவர் விளக்கம்: சபையில் பெரியோர்கள் அமர்ந்திருக்கையில், ஒருவர் மற்றோர் காதில் ரகசியம் பேசி சிரிப்பொலி எழுப்புதல் சபை நாகரிகமன்று. வை.மகேந்திரன் Explanation in English: While great people are sitting on the stage, if one and another make noise by speaking ear to ear and laughing, that's not the stage etiquette. MAHENDIRAN V ------------------ குறள் 695: எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை - தெய்வப்புலவர் விளக்கம்: அரசரோ அல்லது சபைப் பெரியோர்களோ தங்களுக்குள் ரகசிய விவாதம் செய்யுங்கால், மற்றவர் காது கொடுத்து கேட்க முயற்சிப்பதோ, என்ன விஷயம் என்று வினவுவதோ தவறு. வை.மகேந்திரன் Explanation in English: While the king and people of ministry are secretly arguing regarding nation affairs, if others try to hear by lending ear or questioning regarding that is utter fault. MAHENDIRAN V ------------------ குறள் 696: குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் - தெய்வப்புலவர் விளக்கம்: அரசரிடம் கோரிக்கை வைக்குங்கால் அல்லது ஒரு செய்தி சொல்ல முற்படுங்கால், அரசரின் மனநிலை, நேரம் அறிந்து அரசர் விரும்பும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: If public wants to put a plead or wants convey a message to the king, he has to wait for the time and should know the mentality of the king, and then should convey that as if the king is interested to hear that. MAHENDIRAN V ------------------ குறள் 697: வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: அரசரே விரும்பி கேட்டாலும், பயனுள்ள செய்திகளை சொல்வதில் தவறில்லை, ஆனால் பயனற்ற செய்திகளை கூறுதல் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: Even if a king is eager to ask message from public, one should express only good ones but not any illy mesages at any respect. MAHENDIRAN V ------------------ குறள் 698: இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: அரசர் ஒருவருக்கு இளையவராக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், அரசரின் பதவி அந்தஸ்த்தை கருதி அரசரை மதித்து நடந்து கொள்ளவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Even if one is very close relative to the king or older than the king, based on obeying his designation such person has to be behaving. MAHENDIRAN V ------------------ குறள் 699: கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: தெளிந்த அறிவுடையோர், தாங்கள், அரசருக்கு பாத்தியப்பட்டோர் என்று சொல்லிக்கொண்டு அரசருக்கு விரும்பத்தகாத தீயச் செயல்களை செய்ய மாட்டார்கள். வை.மகேந்திரன் Explanation in English: Ones who are cleaned intelligent and saying that they are very liable persons to the king would never act any illy activities against the king's willing. MAHENDIRAN V ------------------ குறள் 700: பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: அரசருடன் வெகுகாலம் பழகிய நட்பில், அரசுக்கு உதவாத காரியங்களை, அரசருக்கும் கூட தெரியாமல் தன்னிச்சையாக ஒருவர் செயலாற்றுங்கால் அது அவருக்கு கேடு விளைவிக்கும். வை.மகேந்திரன் Explanation in English: If one is saying that he is a long time friend to the king for long time and doing some activities for the nation himself without knowledge to the king, he would meet out big misery. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 71 குறிப்பறிதல் CHAPTER 71 THE KNOWLEDGE OF MIND-READING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 701: கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி - தெய்வப்புலவர் விளக்கம்: முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே ஒருவன் என்ன நினைக்கிறான் என்று குறிப்பு அறிகிறவன் இவ்வுலகின் ஆபரணம். வை.மகேந்திரன் Explanation in English: One, who reads another one's mind and knowing what that person thinks just by a sight, is a good ornament to this world. MAHENDIRAN V ------------------ குறள் 702: ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: துளியும் சந்தேகமில்லாமல் துல்லியமாய் ஒருவரின் முகத்தை பார்த்து கணிப்பவர் தெய்வ கடக்ஷம் பொருந்தியவர். வை.மகேந்திரன் Explanation in English: One who reads another one's mind presisely by an eyesight is known as a person blessed by God fo his having extraordinary sense. MAHENDIRAN V ------------------ குறள் 703: குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: முகத்தை பார்த்து துல்லியமாய் கவனிப்பவரை எத்தனை செல்வம் கொடுத்தாவது அவரை தன்னகத்தே தன் பணிக்கு ஒருவர் வைத்துக்கொள்ளலாம். வை.மகேந்திரன் Explanation in English: One can appoint a person who is skilled in reading mind minutely. He is valuable for confidential works. MAHENDIRAN V ------------------ குறள் 704: குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு - தெய்வப்புலவர் விளக்கம்: மனதில் இருப்பதை மதியால் குறிப்புணர்பவர்கள் மற்றவர்களை போல் உடலுறுப்புகள் கொண்டிருந்தாலும் அறிவில் உயர்ந்தவராவார். வை.மகேந்திரன் Explanation in English: Although Mind readers may be compared to normal persons because of having similar human parts, they are the most wisdomed persons above the normal persons. MAHENDIRAN V ------------------ குறள் 705: குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் - தெய்வப்புலவர் விளக்கம்: வாய்திறவாது கண்களால் பார்த்தே மற்றவரின் உள் மனதை அறிய இயலவில்லையெனில், கண்களால் என்ன தான் பயன் ? வை.மகேந்திரன் Explanation in English: If one is not able to know what is in one's mind by looking at eyes, what is the uses of having eyes? MAHENDIRAN V ------------------ குறள் 706: அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் - தெய்வப்புலவர் விளக்கம்: பளிங்குக்கல் அல்லது கண்ணாடி, அப்படியே ஒருவரின் தோற்றத்தை பிரதிபலிப்பதுபோல் முகத்தின் தன்மை உள்ளத்தில் உள்ளதை காட்டிக் கொடுத்துவிடும். வை.மகேந்திரன் Explanation in English: As if the glittering marble stone reflects one's appearance while standing nearby, one's stance of eye sight would emit what is in his mind. MAHENDIRAN V ------------------ குறள் 707: முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் - தெய்வப்புலவர் விளக்கம்: விருப்பையும் வெறுப்பையும் உடனே உமிழ்வது முகம் மட்டுமே. முகம் தான் முதல் அறிவு என்பது மிகையில்லை. வை.மகேந்திரன் Explanation in English: One's first sense of knowledge is eyes, because only the eyes are reflecting one's pleasance and sadness. MAHENDIRAN V ------------------ குறள் 708: முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி உற்ற துணர்வார்ப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: உள்ளத்து உணர்வை உள்ளபடி அறியும் அறிவுடையோர் கிடைத்தால் போதும். அவரை வைத்து சந்தேகத்துரியவரின் முகத்தின் முன் நிற்கவைத்து உண்மையை பெறலாம். வை.மகேந்திரன் Explanation in English: If an intelligent person who is able to bring out one's inner sense through the eye sight is there that is enough, he can be utilised by an admin to know all truths of one who is suspected. MAHENDIRAN V ------------------ குறள் 709: பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: மனதில் உள்ளது பகையா நட்பா என்று ஒருவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது கண்களின் பார்வை தன்மை அதை எளிதில் சொல்லிவிடும். வை.மகேந்திரன் Explanation in English: It is needless that one has to say that he is being friendly or enemiously, his eye sight would easily emit such stance. MAHENDIRAN V ------------------ குறள் 710: நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவரின் உள்ளத்து அறிவை, பார்வையாலேயே கண்டறிந்து வெளிபடுத்துபவரே நுண்ணறிவு படைத்தவர் ஆகிறார். வை.மகேந்திரன் Explanation in English: Only the person who reads one's mind just by an eyesight and expresses the facts is called the most micro intelligent person. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 72 அவை அறிதல் CHAPTER 72 KNOWING THE STAGE ETIQUETTE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 711: அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: அவையில் பேசும்பொழுது, அவையிலுள்ளவர்களின் முதிர்ச்சி அறிந்து நற்கருத்துகளை நயப்பட உரைப்பதே மதிப்பு. வை.மகேந்திரன் Explanation in English: During speaking on the stage, one should know the quality of persons seated on the hall, and then has to express. That is wisdom. MAHENDIRAN V ------------------ குறள் 712: இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: சொற்களின் நடையறிந்த நல்லார் இருக்கும் சபையில், நன்னடத்தையுடன் நல்நடையில் பேச வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Should know to speak with good dialects and good behaviour infront of the genius seated on the stage. MAHENDIRAN V ------------------ குறள் 713: அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: அவையின் அருமை தெரியாமல் மனம் போன போக்கில் பேசுபவர்கள் சொல்லின் வகையுணர்ந்து பேசத்தெரியாதவர். வை.மகேந்திரன் Explanation in English: One who is speaking loosey goosey without knowing the status of the stage is known as illknowledged person. MAHENDIRAN V ------------------ குறள் 714: ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவாளிகள் மத்தியில் அறிவுச்சுடர் ஓங்க பேசுதல் வேண்டும். அறியும் ஆற்றல் குறைவாக உள்ளோர் அவையில் புரியும்படி உரையாற்ற வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Should be speaking flammable infront of persons who are inflammable of knowledge, and to be speaking understandably to those who are not so well to grasp. MAHENDIRAN V ------------------ குறள் 715: நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவு நிறை ஆன்றோர் அமர்ந்திருக்கும்கால், அவையில் முந்தி நின்று பேசாமல் இருப்பதே அவையடக்கம் எனப்படுகிறது. வை.மகேந்திரன் Explanation in English: Not to be speaking earlier than better persons start to speak on the stage of wisdomed people is considered as stage etiquette. MAHENDIRAN V ------------------ குறள் 716: ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஆன்றோர் மத்தியில் தவறுடன் பேசி தடுமாறும் நிலைப்பாடு அறநெறி தவறுதலுக்கு ஒப்பானதாகும். வை.மகேந்திரன் Explanation in English: Speaking fault fully unknowingly in the presence of wisdomed people is like the stance of fouling Morality. MAHENDIRAN V ------------------ குறள் 717: கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொற்றெரிதல் முன்னர் இழுக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: கற்றுணர்ந்த அனைத்தையும் கருத்துரைக்க ஏதுவான சபை எதுவெனில், குறையற்ற சொற்கள் பேசாத மதிநிறைந்த மக்கள் இருக்கும் சபையே. (சபையறிந்து பேசுக என்பது இதான்) வை.மகேந்திரன் Explanation in English: Must be speaking all knowledgeable and learned aspects only in the presence of well-versed persons seated in the hall. (This means that to speak knowing the status of the stage) MAHENDIRAN V ------------------ குறள் 718: உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவு நிறை அவையில் (அவர்கள் அறியவில்லை என நினைத்து) அறிவை போதிக்கிறேன் என உரைப்பது வளர்ந்த பயிருக்கு நீரூற்றுவது போலாகும். வை.மகேந்திரன் Explanation in English: Speaking innocently by means of inputting knowledge to knowldged persons means that putting water to well grown plants. MAHENDIRAN V ------------------ குறள் 719: புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லோர் கூடி நிற்கும் அறிவு மிகு நற்சபையில் பேசும் ஆற்றல் உள்ளவர்கள், அறிவில் நலிந்தோர் மத்தியில் அறிவுடன் பேசுவது ஆக்கம் தராது. வை.மகேந்திரன் Explanation in English: If the people who are fully elegible to speak only to well versed audience are addressing in front of ill knowledged persons, it is not fair to them. MAHENDIRAN V ------------------ குறள் 720: அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவுடையார் தன் தன்மைக்கு ஏற்பிலார் மத்தியில் அறிவுடைமை பேசுவது அமிழ்தத்தை அவசியமின்றி அங்கங்கே சிதறவிடுவது போலாகும். வை.மகேந்திரன் Explanation in English: Addressing of well versed persons infront of inappropriate persons of them is like the stance of spilling nectar here and there unnecessarily. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 73 அவை அஞ்சாமை CHAPTER 73 NOT TO HAVE STAGE-FEAR (The stance of not to fear to speak on stage/council/auditorium) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 721: வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: சொல்லில் தூய்மையுடையோர் சபையில் பேசுங்கால், அவையில் இருப்போரின் வகையறிந்து தவறிழைத்து பேச மாட்டார்கள். வை.மகேந்திரன் Explanation in English: Persons having purity on their speech would never speak faultfully when they speak on a council as they know to distinguish the audience. MAHENDIRAN V ------------------ குறள் 722: கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: கற்றோர் அவையில், தான் கற்றவைகளை நயம்பட ஒருவர் உரை நிகழ்த்தினால், கற்றுத் தேர்ந்தவர் இவர் தான் என்று பெயர் பெறுவார். வை.மகேந்திரன் Explanation in English: If one speaks amazingly his learned aspects on the stage of well-versed, he would be enormously applauded by audience. MAHENDIRAN V ------------------ குறள் 723: பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: போர்களத்தில், உயிருக்கும் அஞ்சாமல் போரிடுபவர்கள் கூட பலர் உண்டு ஆனால் அவையில் அஞ்சாமல் பேசும் ஆற்றல் உள்ளவர்கள் சிலரே. வை.மகேந்திரன் Explanation in English: There may be many who fight fearlessly on the battle but only a few who have efforts to speak on the stage fearlessly. MAHENDIRAN V ------------------ குறள் 724: கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: கற்றோர் அவையில் ஒருவர் தான் கற்றவைகளை வெளிப்படுத்துவது ஒரு புறமிருந்தாலும் அக்கற்றோரின் கூற்றுகளை கேட்டுணர்ந்து அறிவை உயர்த்திக்கொள்ளவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Even if one speaks his learned aspects so wisely on the stage of well-versed, he has to lend his ears for hearing others' and has to boost up his knowledge. MAHENDIRAN V ------------------ குறள் 725: ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு - தெய்வப்புலவர் விளக்கம்: அவையில் உரையாற்றும் பொழுது, அவையினரால் கேட்கப்படும் வினாக்களுக்கு அஞ்சாமல் பதில் கூறும் ஆற்றல் பெற, பல நூல்களை கற்று அறிந்திருத்தல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: If a stage addresser wants to be capable to answer the questions of well-versed on the stage when he addresses, he must have much stuff by learning a lot. MAHENDIRAN V ------------------ குறள் 726: வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: போரிடும் வீரர் அஞ்சி நடுங்கினால் அவர் கையில் வாள் இருந்தும் பயனில்லை. அது போல சபையில் பலர் முன் பேசத் தயங்குபவர் பல நூல்கள் கற்றும் பயனில்லை. வை.மகேந்திரன் Explanation in English: Despite having a sword if a soldier fears to fight on a battle, the sword had by him is useless likewise, if an addresser fears to speak though he had learned a lot, all his learnings are useless. MAHENDIRAN V ------------------ குறள் 727: பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத் தஞ்சு மவன்கற்ற நூல் - தெய்வப்புலவர் விளக்கம்: சபையோர் முன் பேச அஞ்சும் மனிதர் கற்ற நூல்கள், போரிடத்தெரியா ஒரு கோழையான வீரனின் கையில் உள்ள கூர்மையான வாளுக்கு சமமானதாகும். வை.மகேந்திரன் Explanation in English: The learned items of a speaker who fears to speak on the stage is like a sharp-sword had by a coward soldier who fears to fight on battle MAHENDIRAN V ------------------ குறள் 728: பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: பல நூல்கள் கற்றும் பேரறிவு பெற்றும் சபையில் உரையாற்றுபவர், பலரும் புரிந்து கொள்ளாத வகையில் உரை நிகழ்த்தினால், அவர் பயனற்றவராவார். வை.மகேந்திரன் Explanation in English: Although one is well-versed in all respects and having knowledge a lot, if he addresses his aspects ununderstandably to many of audience, he is considered as useless. MAHENDIRAN V ------------------ குறள் 729: கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: கற்றறிந்து புலமைப் பெற்று அறிவுடையவராயிருந்தாலும், அறிஞர்கள் சபைக்கு வர பயப்படுகிறவர்கள் கல்லாதவர்களை விட கீழானவர்கள். வை.மகேந்திரன் Explanation in English: Although one is a well learned person and having more poetic knowledge, if he fears to come to the council of well-versed, he is considered as lower than illiterates. MAHENDIRAN V ------------------ குறள் 730: உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: கற்றவற்றை சபைக்கு கொண்டு வந்து பகிர மனமில்லாதவர்கள் வாழ்வதில் அர்த்தம் இல்லை. வை.மகேந்திரன் Explanation in English: Living stance of ones who aren't willing to come to share his learned aspects to the council of literates is meaningless. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this interpretation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 74 நாடு. CHAPTER 74 NATION. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு - தெய்வப்புலவர் விளக்கம்: நிறைந்த நிலங்கள் மூலம் விளைபொருளும், மதி நிறைந்த மக்களும், குறையாத செல்வமும் நிறைந்திட்ட பொது நிலமே நாடு ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: The good nation is one that has the crops a lot from several fields, wisdomed people and non-decreasable wealth. MAHENDIRAN V ------------------ குறள் 732: பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - தெய்வப்புலவர் விளக்கம்: பெரும் பொருள் நிறைந்திட்டு, பிறர் போற்றும் நிலை பெற்று, கேடு அது இல்லை என கூறப்படும் பெரும் நிலபரப்பே நாடு ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: A big surface that has all wealth, prides from all other nations, and the status of no miseries is the best country. MAHENDIRAN V ------------------ குறள் 733: பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு - தெய்வப்புலவர் விளக்கம்: வரும் மக்களை வரவேற்று குடிமக்களாக்கி இறைநிலை தழுவி பொருள் சேர வருவாய் தேடும் பரந்த நிலமே நாடு ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: A broad surface that welcomes refugees and making them citizens, following spiritual affairs, and having efforts to increase the revenue is the good nation. MAHENDIRAN V ------------------ குறள் 734: உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு - தெய்வப்புலவர் விளக்கம்: மக்களின் பசி போக்கி நோய் அண்டா நிலை ஏற்படுத்தி பகை வந்தால் வெற்றி கண்டு மக்களை காக்கும் புவியின் ஒரு பகுதியே நாடு ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: A part of the earth that takes care of no hunger, no disease, and winning enemies incase of war and protecting people is the good nation. MAHENDIRAN V ------------------ குறள் 735: பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு - தெய்வப்புலவர் விளக்கம்: அரசுக்கு இடையூறு தரும் குழுக்களும், உள்ளிருந்தே பழி செய்யும் கூட்டமும், வேந்தனை அச்சுறுத்தும் நிலையும் இல்லாத பூமியே நல்ல நாடு ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: A good nation must have the stances that not to interrupt or threat the king by cunning teams or any kind of team of astrocities and misery doers. MAHENDIRAN V ------------------ குறள் 736: கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவரால் கேடு வந்தாலும், கேடு வராவிட்டாலும் தன் வளம் குன்றா நிலையில் இருக்கும் நாடே தலைச்சிறந்த நாடாகும். வை.மகேந்திரன் Explanation in English: A nation should not lose its dignity and wealth even if there is illy acts from enemies or not such stance. MAHENDIRAN V ------------------ குறள் 737: இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நில நீரும் மழை நீரும், மலையும் மலையிலிருந்து வீழ்ந்து வரும் நீர் வளமும், காபந்துக்கான அறனும் ஒரு நாட்டின் உறுப்புகளாகும். வை.மகேந்திரன் Explanation in English: The prime elements of a nation are, water sources of the earth and rain; hills and water falling from the hills; and a strong protection for people. MAHENDIRAN V ------------------ குறள் 738: பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து - தெய்வப்புலவர் விளக்கம்: பிணியற்ற வாழ்வு, செல்வம் நிறைந்திருத்தல், நல்ல விளைச்சல் தரும் வயல்வெளிகள், பாகாப்பு, மக்களின் மகிழ்ச்சி - இவை ஐந்தே ஒரு நாட்டிற்கு அழகு சேர்க்கும். வை.மகேந்திரன் Explanation in English: These five important sources are beautifying a nation. They are, disease free life, good wealth, enormous harvest from fields, stance of good defence, cheerfulness of people. MAHENDIRAN V ------------------ குறள் 739: நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு - தெய்வப்புலவர் விளக்கம்: பிரயத்தனம் மற்றும் கடும் முயற்ச்சியால் வளர்ந்த நாடு, நாடு தான் என்றாலும், இயற்கை வளங்கள் மிகுதியாய் நிறைந்திருந்து அது காக்கப்பட்டு வளரும் நாடே சிறந்த (அதிஷ்ட்டகரமான) நாடாகும். வை.மகேந்திரன் Explanation in English: Even though a nation is growing up of full efforts of people and hard work, one that is growing up of having nature sources and that is protected is the best (lucky) nation. MAHENDIRAN V ------------------ குறள் 740: ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு - தெய்வப்புலவர் விளக்கம்: அனைத்து நன்மைகளும் வளங்களும் நிறைந்திருந்தாலும், மாண்பில்லா/கொடூர மன்னன் ஒரு நாட்டை ஆண்டால், எல்லாம் பாழாகும். வை.மகேந்திரன் Explanation in English: Although a nation has all wealth and efforts, if the nation is ruled by a dishonest and cruel king, such nation would get collapsed. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 75 அரண் CHAPTER 75 BULWARK/ FORT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் - தெய்வப்புலவர் விளக்கம்: அரண், அதாவது கோட்டை இருவகைகளிளும் ஒரு தேசத்திற்கு பயனாகிறது. படையெடுத்து சென்று எதிரியை அழிக்கவும், எதிரி படையெடுத்தால் படைகளை தற்காத்துக்கொள்வதற்கும் பயன்படுகிறது. வை.மகேந்திரன் Explanation in English: The defensive wall/ bulwark is very important to a country for two reasons. The first one is to invade and destroy enemy's fort, and the second one is to protect and keeping troops inside incase of enemy's invading. MAHENDIRAN V ------------------ குறள் 742: மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண் - தெய்வப்புலவர் விளக்கம்: அகன்ற நிலம், ஆழமான நீர்நிலைகள், அடர்ந்த காடு, உயர்ந்த மலை இந்நான்கும் அமையப்பெறுவதே சிறந்த அரண். வை.மகேந்திரன் Explanation in English: The best fort must have the defensive stances surrounding it such as a broad land, deep and broad water sources, thicker forest and high hills. MAHENDIRAN V ------------------ குறள் 743: உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் - தெய்வப்புலவர் விளக்கம்: அகலமாக, உயரமாக, உறுதியாக, அரசுக்கு பாதுகாப்பாகவும், பகைவர் எளிதில் நெருங்க முடியாத இந்நான்கு பொறியியல் தன்மையுடன் கட்டப்பட்டதே சிறந்த அரண் என நூல்கள் கூறுகின்றன. வை.மகேந்திரன் Explanation in English: The ancient books say that a bulwark's architecture should be four stances like, broadly, protectively, strongly and as if the enemy shouldn't enter easily inside. MAHENDIRAN V ------------------ குறள் 744: சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண் - தெய்வப்புலவர் விளக்கம்: காவலுக்கு குறுகிய இடமும், உள்ளிடம் பரந்துவிரிந்தும், சுற்று சுவர் உயர்ந்தும், தடித்தும், எதிரியும் வந்தால் மலைத்துப்போகும் அமைப்பில் உள்ளதே அரண் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: A fort should have a narrow way in the entrance but broad and long space inside. The defensive wall should be thick, strong and tall as much as startled by enemies even if they invade. MAHENDIRAN V ------------------ குறள் 745: கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண் - தெய்வப்புலவர் விளக்கம்: எதிரி ஒருகால் முற்றுகையிட்டாலும், உள்ளே வரமுடியாதவாறும், உள்ளிருக்கும் படையினருக்கு பாதுகாப்பாகவும், தானிய கிடங்குகளுக்கு பாதகமில்லாமலும், உறுதியாய் அமைக்கப்படுவதே அரண் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if enemy invade and try to come inside, the fort of a nation should be strong and protective as if not to enter and damage cereal godown and troops that are inside. MAHENDIRAN V ------------------ குறள் 746: எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும் நல்லா ளுடைய தரண் - தெய்வப்புலவர் விளக்கம்: தேவையானவை அனைத்தையும் உள்ளிருப்பாய் கொண்டு, தேசத்தை காக்கும் வலிமையுடைய நல்ல வீரர்களை கொண்டிருப்பதே அரண் எனப்படும். வை.மகேந்திரன் Explanation in English: The best fort is where all needful items can be kept and stocked for protecting a nation and where strengthened soldiers are alertly. MAHENDIRAN V ------------------ குறள் 747: முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண் - தெய்வப்புலவர் விளக்கம்: எதிரி சூழ்ந்தாலும் அல்லது சூழாத நிலையிலும் அல்லது சூழ்ச்சி செய்து உள் நுழைய முயன்றாலும் எந்த சேதமும் ஏற்படாமல் வீரர்களால் காக்கப்படும் கோட்டையே சிறந்த அரண் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: The great fort is which is confidently protected by warriors without any loss even if it is surrounded or not by enemy or any illy actions cunningly done by enemy. MAHENDIRAN V ------------------ குறள் 748: முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண் - தெய்வப்புலவர் விளக்கம்: கோட்டை முற்றுகையிட்டபோதிலும், உள்ளிருந்தே எதிரியை தாக்கும் வழிவகைகளை கொண்டதாக அமைக்கப்பட்டதே அரண். வை.மகேந்திரன் Explanation in English: A Fort should have all facilities as if attacking enemies from inside minutely at the time of being surrounded by enemies. MAHENDIRAN V ------------------ குறள் 749: முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண் - தெய்வப்புலவர் விளக்கம்: எதிரி வெளிநின்று போர் துவக்குங்கால், போரின் துவக்கத்திலேயே உள்ளிருந்தபடியே எதிரியை தாக்கும் படி அமைக்கப்பட்டதே அரண் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: In the case war is begun by enemies from the entrance of the fort, the fort should be as far as facilitable to attack enemies from inside strongly. MAHENDIRAN V ------------------ குறள் 750: எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண் - தெய்வப்புலவர் விளக்கம்: எத்தனை சிறப்பான தளவாடங்கள் வீரர்கள் ஏராளமாய் இருந்தபோதிலும், ஒரு அரசின் செயல்படும் திறன் வலுவிழந்து காணப்பட்டால் அரண் இருந்தும் இல்லாததேயாகும். வை.மகேந்திரன் Explanation in English: Even though a fort is having entire facilities like all weapons tanks and numerous soldiers, if the nation is worthless in ruling activities, the fort of the nation would be invalid. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 76 பொருள் செயல்வகை CHAPTER 76 THE ACTIVITIES OF WEALTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் - தெய்வப்புலவர் விளக்கம்: மதியில்லாதவரையும் மதியுள்ளவராக்கி மதிக்கத்தக்கவராக்கும் ஒரே கருவி, ஒருவரிடம் குவியும் செல்வம் தான். வை.மகேந்திரன் Explanation in English: The big tool that is called wealth would make a person who is utter fool as an intelligent as if would be personalized. MAHENDIRAN V ------------------ குறள் 752: இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: செல்வமில்லாதவரை விட செல்வம் நிறைந்திருப்போரை தான் இவ்வுலகம் போற்றுவது இயற்கையாக உள்ளது. வை.மகேந்திரன் Explanation in English: It seems to be nature that only the persons who have wealth a lot are praised by the world, than those who have no sufficient wealth. MAHENDIRAN V ------------------ குறள் 753: பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று - தெய்வப்புலவர் விளக்கம்: செல்வம் எனும் அனையா விளக்கு தேசமெங்கும் சென்று பகை எனும் இருளை போக்க வல்லது. வை.மகேந்திரன் Explanation in English: The un put off lamp called wealth is capable to hurl up darkness namely eneminess across the world. MAHENDIRAN V ------------------ குறள் 754: அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர்க்கு தீமை தராது திரட்டிய பணம் மட்டுமே ஒருவனுக்கு அன்பையும் அறனையும் தந்து நிலைத்து நிற்கும். வை.மகேந்திரன் Explanation in English: Only the wealth earned by moral way without giving any adversities to any one would stably tend with one granting him morality and kindness. MAHENDIRAN V ------------------ குறள் 755: அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: அறவழியில், அன்புடைமையுடன் ஈட்டா பணம் அடிவாசல் வந்து நின்றாலும் அதனை அனுமதித்திடல் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: One should not allow the wealth that was earned by immoral ways, even if it waits in the entrance MAHENDIRAN V ------------------ குறள் 756: உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள் - தெய்வப்புலவர் விளக்கம்: வரி, திறை, சுங்கத்தின் மூலம் வசூலிக்கும் செல்வம், பகைவரை வீழ்த்தி கொணர்ந்த செல்வம் அனைத்தும் அரசனுடையதே. வை.மகேந்திரன் Explanation in English: The wealth collected through many kinds of taxes including customs affairs and the same brought from other contries by winning in the war belong to the king of the nation. MAHENDIRAN V ------------------ குறள் 757: அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பினால் ஈன்ற அருள் ஒரு குழந்தையாக கருதப்படுமானால் அக்குழந்தை, செல்வம் எனும் செவிலி தாயாரால் வளர்க்கப்படுவது ஆகும். (செல்வம் இல்லாமல் அருள் ஒளி பெறாது என்கிறார்) வை.மகேந்திரன் Explanation in English: If the grace obtained from the kindness is considered as a child, it would be bred of course by a step mother that is called wealth. (The Saint Poet says that the grace wouldn't glitter without wealth) MAHENDIRAN V ------------------ குறள் 758: குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை - தெய்வப்புலவர் விளக்கம்: கைக்கொண்ட செல்வத்தை கொண்டு, தெரிந்த தொழிலை செய்பவது, இரு யானைகள் சண்டையிடுவதை அருகில் நின்று கண்டு ஆபத்தை சந்திக்காது குன்றின் மீது நின்று அப்போரை காண்பதற்கு ஒப்பாகும். வை.மகேந்திரன் Explanation in English: If one starts his known business by the money with his hand and surviving, that is equallent to looking at two elephants fighting with each other in the land, by standing on a hill safely instead of standing near the fight unsafely. MAHENDIRAN V ------------------ குறள் 759: செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃதனிற் கூரிய தில் - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவர்களின் ஆணவத்தை அகற்ற வேண்டுமெனில், போதுமான செல்வம் கையிருப்பு வேண்டும். அதற்கு இணையான வலுவான வாள் எதுவுமில்லை. வை.மகேந்திரன் Explanation in English: Of course it is must having a sufficient own wealth to abate/remove the aragance of the enemies. No any other strong sword is as it is. MAHENDIRAN V ------------------ குறள் 760: ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நல்வழிகளில் திரட்டிய நற்பொருள் நலம் பட இருந்தால், அறம் இன்பம் இரண்டும் தானாய் அமையும். வை.மகேந்திரன் Explanation in English: If the wealth is earned by all moral ways and being good, the remain two properties such as Morality and pleasance would reach to him themselves. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 77 படை மாட்சி CHAPTER 77 THE MAJESTY OF ARMY/TROOPS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 761: உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: நான்கு வித படைபலமும் சிறந்திருந்து, பகைவனை வெல்லும் ஆற்றலே ஒரு அசனுக்கு நிறை மிகு செல்வம் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: The great wealth of a king is what he is having promptly the four troops and their ability of effort of collapsing his enemies. MAHENDIRAN V ------------------ குறள் 762: உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: போரில் பின்னடைவு ஏற்பட்டாலும், முன்னோர்களின் வீரத்தை மனதிற்கு கொண்டு முடிந்தவரை முன்னேறும் விவேகம், பரம்பரை வலிமைக்கான அடையாளம். வை.மகேந்திரன் Explanation in English: No matter at all if a king's troop is back foot during war. The troops have to prove their genetic bravery and have to forward to attack for showing the icon of the nation's ancestry effort. MAHENDIRAN V ------------------ குறள் 763: ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: எண்ணிலடங்கா எலிப்படை எதிர்த்து வருவதால் என்ன பயன்? நாகம் ஒன்று மூச்சு விட்டால் எலிகளனைத்தும் நாசமாகும். (படைக்கு எண்ணிக்கை பெரிதல்ல, வலிமை தான் முக்கியம்.) வை.மகேந்திரன் Explanation in English: A long and deep breath of dragon is enough to throw away the numerous troops of rats. (Numbers of soldiers is not a matter but their strength and efforts) MAHENDIRAN V ------------------ குறள் 764: அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை - தெய்வப்புலவர் விளக்கம்: எதிரியின் பலத்தையும் சூழ்ச்சியையும் எளிதில் வெல்லும் பாரம்பரிய பலம் கொண்ட படையே சிறந்த படை. வை.மகேந்திரன் Explanation in English: The best army is who can win the maneuver and strength of enemy's army, by having traditional bravery. MAHENDIRAN V ------------------ குறள் 765: கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை - தெய்வப்புலவர் விளக்கம்: உயிர்களை பறிக்கும் நிலையில் எதிரி திரண்டு வந்தாலும் அஞ்சாமல் கூடி நின்று எதிர்த்து நிற்கும் திறன் படைத்ததே சிறந்த படை. வை.மகேந்திரன் Explanation in English: Even if numerous members of enemy's army are coming forward to pluck souls, the army of a country who are courageously standing up with enormous effort and fighting with them is the great one. MAHENDIRAN V ------------------ குறள் 766: மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: வீரம், மானம், நன்னடத்தை, தலைவனின் உறுதியான கட்டளை - இவை நான்கும் ஒரு படை கடைபிடிக்க வேண்டிய பண்புகள். வை.மகேந்திரன் Explanation in English: The four best characteristics to be followed by an army are, keeping bravery, dignity, good attitudes and obeying the prominent order of the king. MAHENDIRAN V ------------------ குறள் 767: தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து - தெய்வப்புலவர் விளக்கம்: போரை நிறுத்தும் அல்லது வெல்லும் மதிநுட்பம் எதுவெனில் முன்னேவரும் தூசு படைகளை முன்னேற விடாமல் தாங்கி தாக்கும் ஆற்றல் அறிந்திருப்பதே. வை.மகேந்திரன் Explanation in English: The intelligence of stopping or winning the war is, to know to collapse the infantry troops earlier as a bilateral action. MAHENDIRAN V ------------------ குறள் 768: அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு படையின் சிறந்த அணிவகுப்பே, எதிரியை வீழ்த்தும் போர் திறமைக்கு அடிப்படை ஆதாரம் ஆகும். பலமும் வீரமும் ஆற்றலும் அணிவகுப்பின் தோற்றத்தின் மூலமே வெளிப்படும். வை.மகேந்திரன் Explanation in English: The prominent parade before war is the base of victory. The appearance of parade would say the strength and efficiency of an army. MAHENDIRAN V ------------------ குறள் 769: சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை - தெய்வப்புலவர் விளக்கம்: தாழ்வு மனப்பான்மை, வறுமை, மன்னன் அல்லது நாட்டின் மீது வெறுப்பு- இவை ஒரு படைக்கு இல்லாதிருந்தால் எதிரியை எளிதில் வீழ்த்தும். வை.மகேந்திரன் Explanation in English: Soldiers shouldn't have a drop of inferiority, poverty and hatred on the king or nation. Only then, it's easy one to defeat enemy. MAHENDIRAN V ------------------ குறள் 770: நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் - தெய்வப்புலவர் விளக்கம்: வீரம் விவேகம் நிறைந்த போர்வீரர்களை ஒரு படை கொண்டிருந்தாலும், நல்லதோர் படைத்தலைவன் அப்படைக்கு இல்லாவிட்டால் அப்படை சிறந்து விளங்காது. வை.மகேந்திரன் Explanation in English: Although an army is strong and brave, if it doesn't have a good leadership, such army would lose its strength. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 78 படைச்செருக்கு CHAPTER 78 THE PRIDES OF ARMY MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் - தெய்வப்புலவர் விளக்கம்: என் தலைவனிடம் உங்கள் வீரத்தை காட்டாதீர்கள்; அப்படி காட்டிய பலர் ஆங்காங்கே கல் சிலையாய் நிற்கின்றனர் அறிவீரா?-என்று ஒரு வீரன் செருக்காய் முழங்க வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Hey, Dont play with my king by your wrong game; there were many stood up as statues as they had played like you. A valient soldier has to make hurray like above to enemy. MAHENDIRAN V ------------------ குறள் 772: கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: சிறு முயல் மீது தப்பாது அம்பெய்தி வீழ்த்துவதை காட்டிலும், பெரும் யானை மீது எய்தி குறிதவறினாலும் பரவாயில்லை. அது தான் வீரம். வை.மகேந்திரன் Explanation in English: The true valiance is rather shooting a big elephant by arrow despite the aim fouls, than killing accurately by arrowing a poor rabbit . MAHENDIRAN V ------------------ குறள் 773: பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவனிடம் வீரம் காட்டி வீழ்த்துவது ஆண்மையின் அடையாளம் தான் என்றாலும், பகைவனின் இயற்கையான துன்பத்தை கண்டு இரக்கம் காட்டுவது ஆண்மையின் மகத்துவம் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: Even though winning enemy by showing valiance is the icon of masculinity, showing sympathy on him when he is adverse is the feature of masculinity. MAHENDIRAN V ------------------ குறள் 774: கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் - தெய்வப்புலவர் விளக்கம்: கையிலிருந்த வேல் ஒன்றை எதிர்த்து வந்த யானைமேல் வீசிய பின், அடுத்த தாக்குதலுக்கு வேல் தேடி அங்கும் இங்கும் அலையமாட்டான் நல்வீரன். தன் மார்பில் பாய்ந்திருக்கும் வேலை பிடுங்கி எறிந்து மகிழ்வான் எதிரியை தாக்க. வை.மகேந்திரன் Explanation in English: After throwing a jauline to attack an elephant that comes to kill a hero, he wouldn't waste his time to search out here and there for the next jauline, he would pluck out the jauline pleasantly from his body that was stuck on his chest and wake up to attack. MAHENDIRAN V ------------------ குறள் 775: விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: விழித்த கண்ணோடு எதிரி மேல் வேல் எறிந்து பின் கண் இமை மூடுங்கால், இமைப்பொழுதில் எதிரி வேல் எறிய வாய்ப்பு கொடுத்ததாகிவிடும். வை.மகேந்திரன் Explanation in English: Hero shouldn't close his eyes as soon as throwing jauline on enemy. It may be like giving an opportunity to enemy to re-throw it on hero. MAHENDIRAN V ------------------ குறள் 776: விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் நாளை எடுத்து - தெய்வப்புலவர் விளக்கம்: தான் போர் புரிந்த நாட்களை கணக்கிடும் வீரன், தான் காயம் படா நாட்கள் அதில் இருந்தால் வருந்துவான் அவன். வை.மகேந்திரன் Explanation in English: A valient soldier would be worried out if there is no wounded patch on his body when he counts the days of war in the rest time. MAHENDIRAN V ------------------ குறள் 777: சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து - தெய்வப்புலவர் விளக்கம்: புகழை மட்டும் விரும்பி ஆனாலும் உயிர் மீது ஆசையின்றி போர் புரியும் நிலைத்திருக்கும் வீரன் தன் காலில் வீரக்கழல் கட்டிக்கொள்பவனாவான். வை.மகேந்திரன் Explanation in English: A valient man would be considered that he has worn anklet as a symbol of valiance if he is fighting for prides and no willing to be alive. MAHENDIRAN V ------------------ குறள் 778: உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்றல் இலர் - தெய்வப்புலவர் விளக்கம்: உயிர் பயமின்றி போரிடும் வீரனை, போர் வேண்டாம் என்று தலைவன் சினத்தால் அதட்டினாலும், தன் வீரத்தின் சீற்றத்தை விட்டு விடமாட்டான் நல் வீரன். வை.மகேந்திரன் Explanation in English: Even if the king orders to stop the war, a brave valiant man wouldn't lose his sprit of valiance during war. MAHENDIRAN V ------------------ குறள் 779: இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: சாவேன் என்று சூளுரைத்த வீரன் போரில் வென்றோ தோற்றோ பிழைத்திருந்தால், அவனை இகழ்வது அபத்தம். வை.மகேந்திரன் Explanation in English: It is utter fault if one criticises a soldier who hasn't died during war but had pledged himself that he would sacrifice his live during war. MAHENDIRAN V ------------------ குறள் 780: புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: போரின் பொழுது, தன் வீரர்களின் நன்றியுணர்ச்சியால் கண்களில் நீர்வடிய பார்த்து நிற்கும் அரசனின் கண்முன் சாவ துணிவது ஒரு வீரனின் போர் தர்மம். வை.மகேந்திரன் Explanation in English: In front of the king who is tearing because the sense of gratitude of his valiant soldiers during war, if a soldier dares even for dying, that means war dharma. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work is reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 79. நட்பு CHAPTER 79. FRIENDSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நட்பை போல அரிதானது எதுவுமில்லை. இனிய நட்பு அரிதான செயல்களுக்கு பெரிய காவலாக அமையும். வை.மகேந்திரன் Explanation in English: None can be compared to the state of friendship. And the deep friendship would protect one in all respects. MAHENDIRAN V ------------------ குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லோரிடம்/ அறிவுடையோரிடம் உள்ள நட்பு வளர்பிறை காலம் போன்று வளர்ந்து கொண்டிருக்கும் அல்லது வளர்த்துக்கொள்ளல் வேண்டும். தீயோரிடம் கொள்ளும் நட்பு, தேய்பிறை காலம் போன்று தேய்ந்து போகுதல் நலம். வை.மகேந்திரன் Explanation in English: The friendship with wisdom people would grow up like waxing crescent or has to raise up. And if the friendship with fools wans like the waning crescent, that's good. MAHENDIRAN V ------------------ குறள் 783: நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நன் நூல்களை தொடர்ந்து கற்பதனால் இன்பம் அடைவது போல் பண்பாளர்களுடன் பழக பழக மகிழ்ச்சி தானாய் கிடைக்கும். வை.மகேந்திரன் Explanation in English: As if getting pleasance while reading good books, behaving to ones who have good characteristics would cause much happiness. MAHENDIRAN V ------------------ குறள் 784: நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு - தெய்வப்புலவர் விளக்கம்: சிரித்து பேசி மகிழ்வதல்ல நட்பு. நட்புக்குரியவன் நெறிமுறை மாறினால் திருத்த முற்படுவதே சிறந்த நட்பு. வை.மகேந்திரன் Explanation in English: Friendship is not only for passing time by chating but turning him to good way if he fouls moralities. MAHENDIRAN V ------------------ குறள் 785: புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒத்த மனதும் ஒருமித்த கருத்தும் ஒரே யோசனையும் இருப்பதே ஆழ்ந்த நட்பு. ஆழ்ந்து பழகி அடிக்கடி சந்திப்பதனால் வருவதல்ல நட்பு. வை.மகேந்திரன் Explanation in English: Meeting often and speaking frequently is not meaning a good Friendship. But having similar frequencies and parellel thoughts would make more depth in friendship. MAHENDIRAN V ------------------ குறள் 786: முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: முகம் மலர்ந்து பேசுவது பழகுவது அல்ல நட்பு. அகம் குளிர மகிழ்ச்சியில் மலர்ந்து திளைக்க வைப்பதே நட்பு. வை.மகேந்திரன் Explanation in English: Just smiling by face and speaking sweetly is not a deep friendship. Showing love enthuciasticlly is the real-icon of the good friendship. MAHENDIRAN V ------------------ குறள் 787: அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நண்பன், பழி வழியில் சென்றால் இழுத்து நல்வழி படுத்துவதும், விதி வழியில் தீமை கண்டால் அதில் பங்குகொள்வதே சிறந்த நட்பு. வை.மகேந்திரன் Explanation in English: The best friendship is that pulling back a friend to the right way if he fouls morality, and taking part with him if he falls in miseries due to fate. MAHENDIRAN V ------------------ குறள் 788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உடை களைந்தால், உடனே கை சென்று சரி செய்வது போல், நண்பனுக்கு துன்பம் வந்து விட்டால் ஓடிச்சென்று உதவுவதே நட்பு. வை.மகேந்திரன் Explanation in English: As if the hand goes immediately to set right if the dress slips unfortunately, one should take rapid action to help to a friend if he is adversed. MAHENDIRAN V ------------------ குறள் 789: நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு பொழுதும் பிரியாது வேறுபாடும் காட்டாது ஒருவருக்கொருவர் உவகையில் உயர்ந்து நிற்பதே உண்மையான நட்பு. வை.மகேந்திரன் Explanation in English: The state of not leaving with each other at any time and being indifferently and helping with each other passionately is the best friendship. MAHENDIRAN V ------------------ குறள் 790: இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நட்பின் தன்மையை அளவிட்டு பேசுவதும், உவகையின் காரணத்தை புகழ்ந்துரைத்து பழகுவதும் நட்பின் ஆழத்தை கெடுக்கும். வை.மகேந்திரன் Explanation in English: Measuring the depth of friendship and applauding with each other for their sharing help to one and another would damage the friendship. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 80. நட்பாராய்தல் CHAPTER 80. WEIGHING FRIENDSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லவரோ தீயவரோ ஒருவருடன் நட்பு கொண்டபின், விடுவது என்பது அரிதானதாகிவிடும். நட்பு கொள்ளும் முன் ஆராய்ந்து பார்த்து நட்பு கொள்ளல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: It's of course tough to leave out a friend who is good or bad. Therefore, it's important to distinguish a man in all respects for having him a friend. MAHENDIRAN V ------------------ குறள் 792: ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: கேடான நட்பு சாவிலும் கொண்டுபோய்விடும் ஆகையால் நன்கு நுணுக்கமாக பகுத்தாராய்ந்து ஒருவரை நட்பாக்கி கொள்தல் அவசியம். வை.மகேந்திரன் Explanation in English: A bad Friendship would bear us up to death sometimes. So distinguishing precisely a man to have friend is so necessary. MAHENDIRAN V ------------------ குறள் 793: குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: குணம் குலம் பிறப்பு தரம் குற்றமிலா தன்மை இவையனைத்தையும் ஆய்ந்த பின்பே ஒருவரிடம் நட்பு பாராட்டவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Weighing one's trait, birth quality, and confirming whether he is crimeless or not is important to make him a friend. MAHENDIRAN V ------------------ குறள் 794: குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: பழிச்சொல் ஏதும் வாரா, வந்தாலும் அஞ்சி நாணுகின்ற நன்னடத்தையுள்ள நற்குடியில் பிறந்தவரின் நட்பை விலை கொடுத்தாவது பெற்றுக்கொள்ளல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Atleast by paying fee too to have one as a friend if he is born and bred from good circumstance, and who fears to do illy acts. MAHENDIRAN V ------------------ குறள் 795: அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: தவறிழைத்தால் அழ வைக்கும் அளவுக்கு கனத்த குரலில் கண்டித்து நல்வழிக்கு இட்டுச் செல்லும் நல்லோரை நட்பாக்கி கொள்ளல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: One ought to make a good person as a friend who condemns strongly as if making cry while committing any fault that is against morality. MAHENDIRAN V ------------------ குறள் 796: கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் - தெய்வப்புலவர் விளக்கம்: நட்பின் பால் கிடைத்த நஷ்ட்டமானது பாடமாகி, மேலும் அதைப் போன்ற நட்பை தேடா அறிவு கிடைப்பது நன்மை தானே? ஆதலினால் தீதிலும் ஒரு நன்மை உண்டு. வை.மகேந்திரன் Explanation in English: An ill too get a gain. It means that if one gets one as a friend and getting loss of good will because of the friend, it is evil. He would never do such a fault in the future. That lesson is a gain. MAHENDIRAN V ------------------ குறள் 797: ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊதியம் என்பது இங்கு லாபம். அதாவது, அறிவிலிகளின் நட்பை உடனே துறப்பது ஒருவருக்கு பெரிய லாபமாகும். வை.மகேந்திரன் Explanation in English: Earning means gain here. If one gives up idiots from his friend circle, that is an enormous gain of him. MAHENDIRAN V ------------------ குறள் 798: உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: ஊக்கத்தை மங்கச் செய்யும் செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும். துன்பம் வரும் பொழுது விலகிக்கொள்ளும் நட்பை விலக்கிவைத்துவிடவேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: One should not do any actions that make dull one's effort likewise, one must give up the friends who leaves out on his suffering time. MAHENDIRAN V ------------------ குறள் 799: கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் கேடை சந்திக்கும் காலத்தில் விட்டு விலகிய நட்பை, இறக்கும் நேரத்தில் கூட அந்த வஞ்சனை செயலை மறக்க முடியாது. வை.மகேந்திரன் Explanation in English: One can never forget a friend who leaves out at the the time of one's misery times, even at the time of dying. MAHENDIRAN V ------------------ குறள் 800: மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும ஒருவுக ஒப்பிலார் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: மனதில் அழுக்கற்ற மானிடரையே நண்பராக்கி கொள்ள வேண்டும். அழுக்கு நிறைந்த அற்பர்களை விலை கொடுத்தாவது ஒதுக்கிடல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: One must have a friend who doesn't have dirty in mind and heart. And one ought to give up ones in no time atleast by paying fee, who are found to be dirty and silly. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 81. பழைமை CHAPTER 81. FAMILIARITY/ OLDNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 801: பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நாட்கள் மாறினாலும் எதுவும் மாறாமல் எதையும் மாற்றாமல் பழகும் நட்பே பழைமை எனப்படும். வை.மகேந்திரன் Explanation in English: Although days are passing, behaving with one without changing anything and keeping deeply the intimacy on friendship is called true oldness or familiarity. MAHENDIRAN V ------------------ குறள் 802: நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன் - தெய்வப்புலவர் விளக்கம்: நண்பன் உரிமையாய் ஒன்றை செய்வதே நட்பிற்கு இலக்கணம். அதை எண்ணி பெருமிதம் கொள்ளல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: A thing done by a friend with rights is the purity of Friendship. One should most welcome such activity. MAHENDIRAN V ------------------ குறள் 803: பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: நட்பாய் இருப்பவர் நமக்கு செய்வது ஏற்புடையதில்லை ஆயினும் நன்மைக்கே அது, அதை நாமே செய்தோம் என எடுத்துக்கொள்ளல் சிறந்த நட்பை பாதுகாத்தல் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if an activity done by our friend is found to be not agreeable in our point of view, we should broadly take such activity as that was done by us and for us. MAHENDIRAN V ------------------ குறள் 804: விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: நட்பாய் உள்ளவர், நாம் கேளாமலே உரிமையாய் ஒன்றை செய்யுங்கால் அதை விரும்பி ஏற்றுகொண்டால் நாம் அறிஞராய் ஆகிறோம். வை.மகேந்திரன் Explanation in English: If an activity is done by our friend interfered without our plead, if we take that willingly, we are of course a genius. MAHENDIRAN V ------------------ குறள் 805: பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: நண்பராக இருப்பவர் செய்தது வருந்தக்கூடியதானாலும் அதை தற்செயலாக உரிமையில் செய்து விட்டார் என்ற மனப்போக்கில் அதை எடுத்து கொள்ள வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Even if an activity done by our friend causes some interruption to us, we should consider that such activity is done by him because of intimacy put on us. MAHENDIRAN V ------------------ குறள் 806: எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கத்துடன், இடைவெளிவிட்டு பல நாள் பழகிய நட்பு இனிதாய் இருந்திட்டதால், அவரால் தொல்லைகள் வந்தாலும் கூட, நல்லோர் அந்நட்பை கைவிடமாட்டார். வை.மகேந்திரன் Explanation in English: If the distanced and virtual friend's friendshipness is pleasant, good men will not give up his friendship even if meeting some troubles from him. MAHENDIRAN V ------------------ குறள் 807: அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: நண்பரின் செயல் ஒருவேளை நமக்கு கேடாய் இருந்தாலும் நட்பின் பழைமையை கருதி நட்பை அவசரப்பட்டு நிறுத்திக் கொள்ள கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: Even though our friend's activity causes some miseries unfortunately, we shouldn't break up the friendship with him because of considering the intimacy and familiarity put on him. MAHENDIRAN V ------------------ குறள் 808: கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: நண்பர் பிழை செய்து அதை பிறர் வந்து சொல்ல, அதை கோளாமல் இருப்பவர் நல்லார். அந்நண்பர் பிழை செய்தது நன் நாளாக இருக்கலாம். வை.மகேந்திரன் Explanation in English: If one burns up about one's friend's fault to one, if the listener doesn't care of that, that's great. The day of fault done by him might be good to him. MAHENDIRAN V ------------------ குறள் 809: கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: பகையே இல்லாமல் தொன்றுதொட்டு தொடரும் நட்பை உலகம் உவந்து போற்றும். வை.மகேந்திரன் Explanation in English: If a friendship is going on without struck for infinite years, the world will forward to applaud the stance. MAHENDIRAN V ------------------ குறள் 810: விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: நெடுநாள் நண்பரவர் பிழை செய்தாலும் பொறுத்து, நட்பை தொடருங்கால் பகைவரும் இத்தன்மையை கண்டு பாராட்டுவர். வை.மகேந்திரன் Explanation in English: If one resumes the friendship with a long time friend patiently despite such friend is doing fault a lot, even enemy too would praise that stance. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 82. தீ நட்பு CHAPTER 82. Evil friendship 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: இனிக்க இனிக்க பழகுபவராக இருந்தாலும், உள்ளத்தில் பண்பில்லாதவராயின், அந்நட்பை கைவிடுவது இனிதாகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if a friend behaves sweetly all times but if he is immoral, one should quit him . MAHENDIRAN V ------------------ குறள் 812: உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என் - தெய்வப்புலவர் விளக்கம்: தனக்கு பயன் வேண்டும் சமயத்தில் நட்பாய் இருந்து பயனிலா சமயம் விலகும் நட்பு இருந்தும் ஒன்றுதான். இல்லாமல் போனாலும் ஒன்று தான். வை.மகேந்திரன் Explanation in English: Friendship that behaves only for his advantage and if he is being away at the time of one's misery, he should be avoided by one. MAHENDIRAN V ------------------ குறள் 813: உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பை தூக்கியெறிந்து, பொருளுக்காக மட்டும் நட்பு பாராட்டுபவர், விலைமாதருக்கும் திருடருக்கும் ஒப்பானவர். வை.மகேந்திரன் Explanation in English: The friendship that behaves only by minding money without love and kind is like the stance of commercial lust worker or robber. MAHENDIRAN V ------------------ குறள் 814: அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை - தெய்வப்புலவர் விளக்கம்: போரின் பொழுது, இக்கட்டான சமயத்தில் குதிரை வீரனை எகிரி தள்ளி விட்டு ஓடிடும் குதிரையை போன்ற ஒரு நட்பு, இருப்பதை காட்டிலும் அது இல்லாமல் தனிமையாய் இருந்தல் எவ்வளவோ சிறந்தது. வை.மகேந்திரன் Explanation in English: Being alone is far better than having friendship that is being like a horse that runs away leaving Its cavalryman during war. MAHENDIRAN V ------------------ குறள் 815: செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று - தெய்வப்புலவர் விளக்கம்: விரும்பி அமைக்கும் நட்பு விரும்பாமல் செல்லுங்கால், அந்த சிறு புத்தி கொண்ட நட்பு இருப்பதை விட இல்லாமல் போவதே நலம். வை.மகேந்திரன் Explanation in English: If we willingly make friendship with one but he quits us suddenly as a silly acts, such friendship is waste at all. MAHENDIRAN V ------------------ குறள் 816: பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவிலா அன்பர்களிடம் அளவிலா நட்புக் கொண்டிருப்பதை விட புத்திசாலியான பகைவனிடம் பகை பாராட்டுதல் கோடி நன்மை. வை.மகேந்திரன் Explanation in English: Having eneminess with an intelligent enemy is crore times better than having friendship with an utter fool man. MAHENDIRAN V ------------------ குறள் 817: நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும் - தெய்வப்புலவர் விளக்கம்: நகைத்து உவந்து நயவஞ்சகமாக பழகும் நட்பு தரும் துன்பத்துடன் ஒப்பிடுங்கால், பகைவரின் துன்பம் பத்து கோடி மடங்கு நன்மையானதாம். வை.மகேந்திரன் Explanation in English: The misery given by an enemy is ten crore times better than the cunning misery that is given by a friendship who is behaving with hypocrisy with smile face. MAHENDIRAN V ------------------ குறள் 818: ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்து வெற்றி வரும் சமயத்தில் உள்ளே புகுந்து கெடுக்கும் நட்பை அவருக்கு தெரியாமலேயே விட்டொழித்துவிடல் வேண்டும். (கொடிய நட்பு இது) வை.மகேந்திரன் Explanation in English: At the time of edge of the victory if a friend interferes and spoils such victory, one must leave out such friendship without his knowledge. (It's a cruel friendship) MAHENDIRAN V ------------------ குறள் 819: கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு - தெய்வப்புலவர் விளக்கம்: சொல்வது ஒன்று செய்வது வேறாக இருப்பவரிடம் உள்ள நட்பு, ஒருவரின் நடப்பில் மட்டுமல்ல, கனவிலும் கூட வந்து துன்பத்தை தரும். வை.மகேந்திரன் Explanation in English: Having friendship with one whose talk is one and act is one would cause a big misery always and even during dreaming. MAHENDIRAN V ------------------ குறள் 820: எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு - தெய்வப்புலவர் விளக்கம்: எதிரே புகழ்ந்துரைத்து இன்பம் தந்து, சபையில் புறம்பேசி துன்பத்தை உண்டாக்கும் நட்பை சிறிதளவு கூட அண்டவிடாமல் செய்திடல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: The friendship that speaks prides of us with us but speaking consversely with others like back bite ought to be quitted in no time. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 83. கூடா நட்பு CHAPTER 83. THE FRIENDSHIP THAT NOT TO BE JOINED 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 821: சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: வெளியுலகிற்கு நட்பாய் இருப்பது போல் காட்டி உள்ளுக்குள் வெறுப்புடன் பழகும் நட்பு, ஒரு பொருளை தாங்குவது போல் தாங்கி, அப்பொருளை வெட்ட தாங்கும் பட்டடை என்ற பொருளுக்கு ஒப்பானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The friendship that shows happiness in out and keeping hatred inside is equallent to the thing that is used as the basement wood for cutting a thing. - MAHENDIRAN V ------------------ குறள் 822: இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் - தெய்வப்புலவர் விளக்கம்: இனிதாய் பழகுவதாக பாசாங்கு காட்டி உள்ளார்ந்து விரும்பாத நட்பு, பதுமைப்பெண் போல் அலங்கரித்து பாலியல் செய்யும் பெண்ணை போலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The friendship that pretends like a pleasant manner and keeping worst aim inside is like the stance of a pretty woman who does the commercial lust work. - MAHENDIRAN V ------------------ குறள் 823: பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது - தெய்வப்புலவர் விளக்கம்: நன்கு கற்றுணர்ந்தோர் நட்பாய் பெற வாய்ப்பு கிட்டினால், அவர் கருத்தொற்றுமை இருந்தாலொழிய நட்பாய் தொடர்வது அரிது. - வை.மகேந்திரன் Explanation in English: Even if one is getting a well literated one as a friend, if there is no similar frequency between two, hardly to resume such friendship. - MAHENDIRAN V ------------------ குறள் 824: முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: முகத்தில் பொலிவும் சிரிப்பும் காட்டி, உள்ளத்தில் வஞ்சனை குணம் இருந்தால், அவர் நட்பை பெற அஞ்சவேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: If one behaves pleasantly as a friend but having hypocrisy inside as a trait, one has to be afraid of having him a friend. - MAHENDIRAN V ------------------ குறள் 825: மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: மனதளவில் ஒத்து வராதவரை அவர் எப்பேற்பட்டவராக இருந்தாலும், அவரை நம்பி ஒரு செயலில் இறங்குதல் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: If there is no similar thoughts of one with a friend whom he is behaving and whoever he is, he shouldn't dare to do a work believing him. - MAHENDIRAN V ------------------ குறள் 826: நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லவர் போல் நடித்து அறிவுரை கூறி பழகும் நட்பு, பகைச் சொல் அவர் பேசும் பொழுது அவரது தன்மை வெளிப்பட்டு விடும். - வை.மகேந்திரன் Explanation in English: The real face of a friendship that pretends like a good man and advising us would be known when such guy expresses illy thoughts. - MAHENDIRAN V ------------------ குறள் 827: சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவர் வணக்கமாக பேசுவது, குறி வைத்து அம்பு எய்துவதற்கு வில் வலைவது போலாகும். ஆதலால் பகைவரின் அவ்வணக்கத்தை நம்பி விடகூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: If an enemy is speaking with salutation, that is like a bow is bending more for shooting by an arrow. So, such poliet of the enemy shouldn't be believed at any situation. - MAHENDIRAN V ------------------ குறள் 828: தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவர் கை கூப்பி வணங்கினாலும் கொலைக்கருவி அக்கைக்குள் ஒளிந்திருக்கும். பகைவர் விடும் கண்ணீரும் அப்படித்தான். தற்காப்புடன் இருந்தல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if an enemy bows by closing palms, killing-weapon might be hidden inside. The tears of the enemy too are like that. Has to be defensive. - MAHENDIRAN V ------------------ குறள் 829: மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று - தெய்வப்புலவர் விளக்கம்: நண்பராய் சபையில் சிரித்து பேசி அகத்தில் வஞ்சம் கொண்டிருப்போரிடம், நாமும் அவ்வழியே சிரித்து மகிழ்ந்து நட்பை தொடர்ந்து, பழி பெறாதிருந்து நட்பை நலிவடைய செய்யவேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: We too go ahead on the same way with the friend who pretends like a good friend and speaking prides of us to others on stage, and have to make such friendship slowly invalid. - MAHENDIRAN V ------------------ குறள் 830: பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவர் நட்பு பாராட்டவருங்கால், நாம் மரியாதை நிமித்தம் புறத்தில் மகிழ்ச்சி காட்டி, உண்மைத்தன்மை அறியும்வரை அகத்தில் பகையை மறக்காமல் வைத்திருத்தல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: When the enemy wants to make friendship with us, we should rejoice on the outside for the sake of respect and keep the hatred on the inside until knowing the truthfulness. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 84. பேதைமை CHAPTER 84. THE STANCE OF IGNORANCE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 831: பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: வருவாயை விட்டு விட்டு வராததை தேடி அலைவதே அறியாமை எனப்படுகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Instead of looking for the sources of revenue, searching for something for uncoming one is known as stupidness. - MAHENDIRAN V ------------------ குறள் 832: பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: தனக்கு ஒவ்வாத/தன்னால் செய்ய இயலாத விஷயங்களில் கவனம் செலுத்தி நேரம் செலவழிப்பதே அறியாமையிலும் அறியாமை ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: Doing an act that is completely apart from one's skill or doing an inappropriate act and wasting the time is the prime ignorance of ignorance. - MAHENDIRAN V ------------------ குறள் 833: நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் - தெய்வப்புலவர் விளக்கம்: வெட்கப்பட வேண்டிய விஷயங்களுக்கு வெட்கப்படாமலிருத்தல், விரும்பியவற்றை நாடாதிருத்தல், அன்பு என்றால் என்ன என்று அறியாதிருத்தல், காக்க வேண்டியவற்றை காத்துக்கொள்ள தவறுதல்-இவையே அறியாமையின் சிறப்பியல்புகள். - வை.மகேந்திரன் Explanation in English: What the principles of ignorance are, 'Being not to shy for an act for what one must shy; Being not to be trying to get one on which one is interested; The stance of not knowing the meaning of kindness, and the stance of failing to protect one which must be protected. - MAHENDIRAN V ------------------ குறள் 834: ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: நூல்கள் நிறைய படிப்பர்; அதன் பொருள்களையும் அறிவர்; பிறருக்கும் அறிவுரை கூறுவர்; ஆனால் தன் வாழ்க்கையில் அதை கடைபிடிக்க மாட்டார்- இவரை போல பேதையர் (அறிவிலி) உலகில் வேறு யாரும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: One would be well literate by reading books a lot; he would be good in meanings; would advise to others; but would not follow those principles in his life. - Can you see any other ignorance as he is? - MAHENDIRAN V ------------------ குறள் 835: ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவற்ற செயல் செய்வோர்க்கு, இப்பிறப்பு என்றில்லை, ஏழு பிறவி எடுத்தாலும் அதன் துன்பத்தின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: To those who do ignorant activities, misery would be tending not only in this birth but also in his seven births. - MAHENDIRAN V ------------------ குறள் 836: பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த வழி எதுவென அறியாது செயலாற்ற துவங்குபவனின் செயலும் பாழாகும் அவனும் கெடுவான். - வை.மகேந்திரன் Explanation in English: One who starts a work without knowing which is the best way to do would be spoiled, also his work would be collapsed. - MAHENDIRAN V ------------------ குறள் 837: ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவிலாதோர் திரட்டும் செல்வம் சம்மந்தமில்லாதவர்களால் அனுபவிக்கப்படுமானால், அவன் உற்றாரும் உறவினரும் வருந்தி அழுவர். - வை.மகேந்திரன் Explanation in English: When the wealth earned by an ignorant man is enjoyed by anonymous, the relative circle of the ignorant person would be worried out and crying. - MAHENDIRAN V ------------------ குறள் 838: மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: பேதையின் கையில் ஒரு அரும்பொருள் கிட்டிவிட்டால், அதை பயன்படுத்தும் அறிவு இல்லாததனால், கள் உண்ட பித்தன் போல் கூத்தாடுவான். - வை.மகேந்திரன் Explanation in English: If an enormous wealth or thing is found to an ignorant guy, since he doesn't know how to utilise it, he would be jumping from the earth to sky like a drunken mad person. - MAHENDIRAN V ------------------ குறள் 839: பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவற்றவர்களுடன் நட்பு பெறும் சூழ்நிலை துன்பமேதும் தராது என்றாலும், இழப்பதனால் இன்பம் ஒன்றும் பறிபோய்விடாது. - வை.மகேந்திரன் Explanation in English: Even though no misery would tend if one makes an ignorant as a friend, no pleasance would go away if one quits him from friendship. - MAHENDIRAN V ------------------ குறள் 840: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் - தெய்வப்புலவர் விளக்கம்: மெத்த படித்த சான்றோர் கூடத்தில் பேதை ஒருவன் நுழைவதென்பது, கழுவாத காலுடன் படுக்கையில் ஒருவன் நடப்பது போன்றதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The stance of ignorant person's entering into the domain of literate people is equallent to a guy is walking on the bed without washing the feet. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 85. புல்லறிவாண்மை Chapter 85. THE STANCES OF FOLLYNESS (IGNORANCE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 841: அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு - தெய்வப்புலவர் விளக்கம்: உலகிலேயே பெரிய இல்லாமை என்பது அறிவில்லாமை தான். அறியாமையை மிஞ்சிய இல்லாமை எதுவும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: The greatest lackness in the world is of course ignorance. There is nothing lacking beyond ignorance. - MAHENDIRAN V ------------------ குறள் 842: அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவில்லாதவன் தரும் கொடை சிறப்பிற்குரியது அதை பெருபவன் பெறும் பேறு பெற்றவனாவான். - வை.மகேந்திரன் Explanation in English: The prise given by the ignorant is special one. And the one who receives it is the one who has done penance. - MAHENDIRAN V ------------------ குறள் 843: அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவில்லாதவன் தான் தன்னைத்தானே வன்மையாக துன்புறுத்திக்கொள்வான். பகைவன் கூட அவ்வாறு அவனை துன்புறுத்த முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: Only ignorant would persecute himself severely. Even the enemy too cannot persecute him in such a way. - MAHENDIRAN V ------------------ குறள் 844: வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: வெண்மையின் (அறிவின்மையின்) உள் அர்த்தம் என்னவென்றால், தனக்குத்தானே தன்னை அறிவாளி என்று பீற்றிக்கொள்வதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The actuy meaning of ignorance is to praise oneself very much proudly as intelligent. - MAHENDIRAN V ------------------ குறள் 845: கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: கல்லாததை கற்றது போல் நடிப்பர் அறிவிலார். போதாதென்று, அரைகுறையாக கற்றவைகளிலும் வீணான சந்தேகத்தை கிளப்பிவிடுவர். - வை.மகேந்திரன் Explanation in English: Ignorant would pretend that he has learned a lot. Moreover, he would raise doubts unnecessarily from his little learned. - MAHENDIRAN V ------------------ குறள் 846: அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி - தெய்வப்புலவர் விளக்கம்: குற்றம் என்று அறிந்த பின்பும் அதை நீக்கா தன்மை, உடலை மறைக்க உடை உடுத்துவதற்கு முரணானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if knowing that it is wrong and being not to try to remove such wrong is contrary to wearing clothes to cover the body. - MAHENDIRAN V ------------------ குறள் 847: அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவுடையவர்களின் கூற்றை ஏற்று நடக்காத அறிவிலியின் செயல், தனக்கு தானே துன்பத்தை தேடிக் கொள்வதற்கு சமமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The act of ignorance that does not accept the sayings of the wise is equallent to seeking misery for oneself. - MAHENDIRAN V ------------------ குறள் 848: ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் - தெய்வப்புலவர் விளக்கம்: தானும் திருந்தாது, பிறர் கூறும் நற்கூற்றுகளையும் ஏற்க தயங்கும் அறிவிலாதவன் உயிர்விடும்வரை நோயை பெற்றவனாவான். - வை.மகேந்திரன் Explanation in English: An ignorant person who does not change himself and refuses to accept the good doctrines (advices) of others is a person who gets sick till he dies. - MAHENDIRAN V ------------------ குறள் 849: காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவுள்ளவனை அறிவற்றவன் என்பதோடல்லாமல், தான் தான் அறிவுள்ளவன் என்று வாதிடுவான் அறிவற்றவன். - வை.மகேந்திரன் Explanation in English: Ignorant would not only argue a wise is ignorant but also he would strongly argue that only he is wiser than any other. - MAHENDIRAN V ------------------ குறள் 850: உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: இருக்கிறது என்று உலகமே அறிந்த பின்பும் அது இல்லை என்று வாதிடும் அறிவற்றவன் பேய்க்கு சமமானவன். - வை.மகேந்திரன் Explanation in English: When even the world says a thing is existing, If an Ignorant guy strongly argues that is not existing, he is equallent to demon. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 86. இகல் Chapter 86. HATING CHARACTERISTIC 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் - தெய்வப்புலவர் விளக்கம்: எல்லா உயிர்களையும் சமமாக கருதாத பண்பு ஒரு தீய குணமாகும். மனித உயிர்க்கு மற்ற உயிர்கள் மாறுபட்டது என்பது இகல் ஆகும். இது ஒரு வஞ்சனை குணமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The characteristic of not treating all living things equally is an evil trait. This type of character means that human life is different from other living things. This is a kind of is a treacherous characteristic. - MAHENDIRAN V ------------------ குறள் 852: பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை - தெய்வப்புலவர் விளக்கம்: தம் கருத்தோடு ஒவ்வாத ஒரு வினையை ஒருவர் செய்யுங்கால், அவ்வேற்றுமையை கருதி அவருக்கு துன்பம் தருதல் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: If one commits an act contrarily to our own opinion, we should not make misery to him by means of different opinion. - MAHENDIRAN V ------------------ குறள் 853: இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் மாறுபட்ட கருத்தை உடையவராதலால் அவர் மீது வெறுப்பு காட்டும் புத்தியை ஒருவர் அகற்றிவிட்டால் அவரின் புகழ் கூடும். - வை.மகேந்திரன் Explanation in English: If a person gives up the mind that hates one because of his different opinion, the person's reputation would raise up. - MAHENDIRAN V ------------------ குறள் 854: இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவருக்கு அடுத்தவர் மீது காட்டும் வெறுப்பே பெருந்துன்பமாகும். அத்துன்பத்தை நீக்கிவிட்டால், ஈடில்லா இன்பம் வந்துசேரும். - வை.மகேந்திரன் Explanation in English: The big suffering is the hatred of one person over another. If such suffering is removed from the mind, pleasure will cummulate immeasurably. - MAHENDIRAN V ------------------ குறள் 855: இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் மீது வெறுப்பை உமிழாமல் சாய்ந்தொழுகும் பண்பை பெற்று விட்டால், வல்லோரையும் வெல்வராகிவிடுவார் அவர். - வை.மகேந்திரன் Explanation in English: If one acquires the habit of leaning on someone's thoughts (but it should be the right one) without spitting hatred on another, he will become a winner over the world. - MAHENDIRAN V ------------------ குறள் 856: இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து - தெய்வப்புலவர் விளக்கம்: மாறுபட்ட கருத்துடையவரிடம் வெறுப்புடன் வாழ்ந்து வென்றுவிடலாம் என்று எண்ணி வாழ்பவரின் வாழ்க்கை விரைவிலேயே கெடும். - வை.மகேந்திரன் Explanation in English: The life of a person who thinks that he can live and win with hatred towards a person who has different opinion will soon be ruined. (This matter is depending upon the good quality of the opinion the other person) - MAHENDIRAN V ------------------ குறள் 857: மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் - தெய்வப்புலவர் விளக்கம்: பகையுணர்வும் வெறுப்பும் கொண்டோர், அதை விட்டால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்கிற நீதியை அறியாதவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: Those who have hatred and enmity are ignorant of the justice that can only succeed in life if it is left out. - MAHENDIRAN V ------------------ குறள் 858: இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாங் கேடு - தெய்வப்புலவர் விளக்கம்: வெறுப்பு உமிழ்ந்து வாழும் பண்பிற்கு எதிராக நடப்பது இனிமைக்கு வழிவகுக்கும். இல்லை, அதுவே சரியென்று வாழ்வோரின் வாழ்வு கெடும். - வை.மகேந்திரன் Explanation in English: Living against the habit of spewing hatred can lead to sweetness. The life of one being against this said principle would be collapsed soon. - MAHENDIRAN V ------------------ குறள் 859: இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஆக்கம் நிறைந்து வாழ்பவர் இகல் பண்பை நோக்க மாட்டார். மாறாராக இகல் பண்பை அனைத்துக்கொண்டால், துன்பத்தை வரவேற்கிறார் என்றர்த்தம். - வை.மகேந்திரன் Explanation in English: The one who lives full of creation will not look at the character of hatred. On the contrary, if he looks at the same, that means that he welcomes suffering himself. - MAHENDIRAN V ------------------ குறள் 860: இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: இகல் எனும் பகையுணர்வு வாழ்க்கை, அல்லலுக்கு வழிவகுக்கும். இகல் இல்லாத வாழ்க்கை புகழ் எனும் பெருமை தரும். - வை.மகேந்திரன் Explanation in English: The life of the one having hating characteristic will lead one to misery full life. Life without such illy character gives glory and fame. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 87. பகை மாட்சி CHAPTER 87. HOSTILITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 861: வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை - தெய்வப்புலவர் விளக்கம்: வலியாரை எதிர்த்தலை தவிர்ப்பது நலம். என்றாலும், எளியார் எதிர்க்கும்கால் எதிர்ப்பது நலம். - வை.மகேந்திரன் Explanation in English: It is better to avoid to oppose the strong ones. However, it is better to oppose weak ones if they wish to oppose. - MAHENDIRAN V ------------------ குறள் 862: அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: மக்களின் அன்பும் இல்லை, அரவணைக்க துணையும் இல்லை, வலிமையான படையும் இல்லை- இவ்வரசன் ஆற்றல் மிக்க எதிரியை வீழ்த்துவது அரிது. - வை.மகேந்திரன் Explanation in English: There is no love of the people, no support to comfort, no strong army- it is rare for this king to defeat a powerful enemy. - MAHENDIRAN V ------------------ குறள் 863: அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: அச்சம் மிகுதி, அறிவு இல்லை, அன்பும் இல்லை பண்பும் இல்லை, ஈகையும் இல்லை. - இவ்வரசன் எதிரியிடம் வீழ்ந்துவிடுவான். - வை.மகேந்திரன் Explanation in English: Having fear a lot, ignorant, no love from people, no good character, no helping tendancy to people. - This king will fall to the enemy. - MAHENDIRAN V ------------------ குறள் 864: நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - தெய்வப்புலவர் விளக்கம்: சினம் தவிர்க்க தெரியாத, மனத்தை கட்டுப்படுத்த தெரியாத அரசனை எந்நேரத்திலும், யாராலும் வீழ்த்துவது எளிது. - வை.மகேந்திரன் Explanation in English: It is easy for anyone, at any time, to overthrow a king who doesn't control his anger and doesn't know how to balance his mind. - MAHENDIRAN V ------------------ குறள் 865: வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது - தெய்வப்புலவர் விளக்கம்: பழி மட்டும் நிறைந்திருந்து, நற்பண்பும் இல்லாது, நல்வழியில் செல்லாத அரசனை வீழ்த்துவதை இனிய தருணமாக கருதுவான் பகைவன். - வை.மகேந்திரன் Explanation in English: The enemy would consider that it is a happy moment to overthrow a king who is full of crimes and without virtue and does not go in the right direction. - MAHENDIRAN V ------------------ குறள் 866: காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: அளவற்ற சினம் கொண்டு, மிகுதியாய் பேராசை பிடித்து ஆளும் அரசனை எதிர்கொள்ள, எதிரி விரும்பி செயல்படுவான். - வை.மகேந்திரன் Explanation in English: The enemy would act willingly to confront the ruling king who has an infinite anger and excessive greed. - MAHENDIRAN V ------------------ குறள் 867: கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை - தெய்வப்புலவர் விளக்கம்: கூடவே இருந்து ஒவ்வாத வினை செய்து அழிவுக்கு வழிவகுக்கும் ஒருவனை பொருளழித்தாவது பகைவனாக்கிக்கொள்ள வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Even by losing cost, one must make the enemy the one who causes the opposite reaction and leads to destruction being beside. - MAHENDIRAN V ------------------ குறள் 868: குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனாம் ஏமாப் புடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: குணம் கெட்டுப் போய் குற்றமும் பல புரிந்தவன், துணையின்றி தவிப்பான். ஆகையால் எதிரியிடம் அவன் ஏமாந்து நாட்டை இழப்பான். - வை.மகேந்திரன் Explanation in English: One who has lost his good trait and committed many crimes, will suffer without co-operation from people. Therefore he would be very much disappointed by the enemy and would lose the nation. - MAHENDIRAN V ------------------ குறள் 869: செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: அஞ்சும் குணமும் அறிவற்ற நிலையிலும் இருக்கும் அரசனை வீழ்த்தும் பகைவன், போரில் ஆனந்தம் காண்பான். - வை.மகேந்திரன் Explanation in English: The enemy who overthrows the king who is fearful and ignorant would find joy in battle. - MAHENDIRAN V ------------------ குறள் 870: கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிந்தவர் தவறு செய்தாலும், பழகிய நட்பின் இலக்கணமாய் அன்பு கொண்டவராயிருந்தால், பகைவனால் பாராட்டப்படுவார். - வை.மகேந்திரன் Explanation in English: If he who left from one makes a mistake but has intensively love with him from whom he left would be appreciated by the one. MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல் CHAPTER 88. KNOWING THE STRENGTH OF ENEMY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: பகையுணர்வு பண்பற்றது. விளையாட்டாக கூட அதை விரும்பும் எண்ணம் வந்து விடக் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: The sense of hatred is immoral. One should not want this thought even playfully. - MAHENDIRAN V ------------------ குறள் 872: வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை - தெய்வப்புலவர் விளக்கம்: வில் கொண்டு போராடும் வீரனிடம் பகைகொள்வதில் தவறில்லை. ஆனால் சொல்லாடல் கொண்ட அறிஞர்களுடன் பகை கொள்ளக் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: Do not fail to enmity with the warrior who fights with the bow. But do not quarrel with rhetorical scholars. - MAHENDIRAN V ------------------ குறள் 873: ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன் - தெய்வப்புலவர் விளக்கம்: யாரையும் அண்டாது தன்னந்தனியே இருக்க விரும்புபவன் பித்தனிலும் பித்தன் ஆவான், பகைபவர்களையும் சம்பாதிப்பான். - வை.மகேந்திரன் Explanation in English: One who wants to be alone and not to want support from anyone is an utter mad and would earn enemies. - MAHENDIRAN V ------------------ குறள் 874: பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு - தெய்வப்புலவர் விளக்கம்: பகையையும் நட்பாக்கி கொள்ளும் வித்தை தெரிந்தவன் உலகத்தால் போற்றப்படுவான். - வை.மகேந்திரன் Explanation in English: One who knows the tactics for befriending enemies would be admired by the world. - MAHENDIRAN V ------------------ குறள் 875: தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று - தெய்வப்புலவர் விளக்கம்: இரு வெவ்வேறு பகைவர்கள் மன்னனை முற்றுங்கால், துணையில்லா பட்சத்தில் ஒரு பகையை நட்பாக்கி கொள்ளும் சூட்சுமம் தெரிதல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: If two different enemies besiege the emperor, the king should have the subtlety of befriending an enemy incase of absence of support. - MAHENDIRAN V ------------------ குறள் 876: தேறினுந் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: வரும் பகைவர், மன்னனுக்கு அறிந்தவரோ அறியாதவரோ, நாட்டில் தெளிவு நிலை இல்லையென்றால், பகைக்க வேண்டாம், பகையை முறிக்காமல் கிடப்பில் வைக்க வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: The coming enemy, whether known or unknown to the emperor, should not be hated if there is no clarity in the country, and the enmity should be put to rest without breaking. - MAHENDIRAN V ------------------ குறள் 877: நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவன் தன் துன்பநிலையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. அது போல், தான் பலவீனமாக இருப்பின், பகைவன் அதை அறிந்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: It is not good for a king to share his misery with his friends. Likewise, if he is weak, he should not create the situation in which the enemy knows it. - MAHENDIRAN V ------------------ குறள் 878: வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு அரசன் தன் ரகசியம் காத்து படைபலத்தை பெருக்கிக் கொண்டால், பகைவனின் செருக்கு/ஆணவம் தானாய் அழியும். - வை.மகேந்திரன் Explanation in English: If a king keeps his secret and multiplies his creativity, the arrogance of the enemy would automatically disappear. - MAHENDIRAN V ------------------ குறள் 879: இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து - தெய்வப்புலவர் விளக்கம்: முள் மரத்தை வளரவிட்டால் ஆபத்து என்பதனால் முனையிலேயே கிள்ளி எறிவது போல், பகை வளர்வதற்கு முன்பே அதை அடக்கியாள வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: The eneminess must be suppressed before it grows up as if a thorn tree is pinched at the tip because it is danger if it grows up big. - MAHENDIRAN V ------------------ குறள் 880: உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: ஆணவம் கொண்ட பகைவரின் படையை சிதிலமாக்க திராணியில்லாத மன்னன், மூச்சு விடுவதனால் மட்டும் உயிரோடு இருப்பதாகிவிடாது. - வை.மகேந்திரன் Explanation in English: If a king who doesn't have power to control and not able to collapse the arrogant enemy's troops, It doesn't mean that he is alive because of only he is breathing. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 89. உட்பகை CHAPTER 89. INTERNAL ENEMIOUSNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: நிழலும் நீரும் துன்பம் தராத வரை அவை நல்லவையே அதுபோல் சுற்றமும் நட்பும் தொல்லை தராதவரை நல்லவர்களே. - வை.மகேந்திரன் Explanation in English: Shadow and water are good as long as they do not cause misery as well as relatives and friendship as long as they do not cause trouble. - MAHENDIRAN V ------------------ குறள் 882: வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவர் என பறைச்சாற்றி பகைமை கொள்வோரிடம் கூட பயம் கொள்ள வேண்டியதில்லை, நண்பர் என்று சொல்லி நயவஞ்சகம் செய்வோரிடம் தான் எச்சரிக்கையாய் இருந்தல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: There is no need to be afraid of those who frankly claim to be enemies, but should be careful to those who deceptively pretend to be friends. - MAHENDIRAN V ------------------ குறள் 883: உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் - தெய்வப்புலவர் விளக்கம்: உடனிருந்து உறவாடி அசரும் நேரத்தில் பகை செய்வோர், களி மண் பானை உருவாகி வரும் நேரம் அருத்தெறியும் கருவிக்கு ஒப்பாவர். - வை.மகேந்திரன் Explanation in English: Those who are being with us and behaving as a silent enemies are equallent to a kind of tool which dissects the clay pot when it is being made. - MAHENDIRAN V ------------------ குறள் 884: மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: மணம் திருந்தா உட்பகை உறுதியாக உள்ளிருந்தால், வந்த நட்பும் விலகும் வரும் நட்பும் கெடும். - வை.மகேந்திரன் Explanation in English: If there is an internal issue strongly in a domain or at a family, existing friendship would go away and the coming friendship too would be spoiled. - MAHENDIRAN V ------------------ குறள் 885: உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: உறவுமுறையில் உட்பகை உடனிருக்கும் நிலை ஏற்பட்டால், உயிர் போகும் வரை அப்பகை உபத்திரவம் தரும். - வை.மகேந்திரன் Explanation in English: If there is any crack in the intimacy in the internal relationship, it will cause a big misery till the one is breathing last. - MAHENDIRAN V ------------------ குறள் 886: ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: ஒற்றுமையாய் இருந்தவர் ஒட்டாமல் பகைக்கொண்டால், அழிவு வரும் நிலையை அகற்றுவது அரிது. - வை.மகேந்திரன் Explanation in English: If the one who was cooperative hate unfortunately, it is rare to eliminate the state of destruction in life. - MAHENDIRAN V ------------------ குறள் 887: செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி - தெய்வப்புலவர் விளக்கம்: செப்புடன் மூடி இணைந்திருப்பது போல் தோன்றினாலும் மூடி விலகி விழாது என்றில்லை அது போல் தான் உட்பகையும் நட்பாய் நடித்து இறுதியில் நச்சாய் விளங்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if the lid appears to be attached to the copper, can't say that the lid does not fall off, just like that, the pretending, internal relationship would be known as toxic in final. - MAHENDIRAN V ------------------ குறள் 888: அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு துட்பகை உற்ற குடி - தெய்வப்புலவர் விளக்கம்: அரம் தொடர்ந்து தேய்க்குமானால் இரும்பும் தேய்ந்து போகும். அது போல் தான் உட்பகை கொண்ட குழுமம் வலிமையிழந்து போகும். - வை.மகேந்திரன் Explanation in English: If a saw (tool) is constantly rubbing an iron, the iron too would get rubbed. Likewise, a domain or a family or an emperor would get weakened if there is snow war internally. - MAHENDIRAN V ------------------ குறள் 889: எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு - தெய்வப்புலவர் விளக்கம்: எள்ளின் பிளவு போல் உட்பகை பிளவு சிறிதாக இருந்தாலும் அது பெரும் பிளவை ஏற்படுத்த வல்லது. - வை.மகேந்திரன் Explanation in English: Although the internal issues seems to be as small as a sesame clevage, it can cause major fissures in the future. - MAHENDIRAN V ------------------ குறள் 890: உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரே வீட்டில் உடன்பட்டு வாழாதோர் வாழ்க்கை பாம்புடன் ஒரு குடிலில் பயந்து வாழும் வாழ்க்கைக்கு ஒப்பானது. - வை.மகேந்திரன் Explanation in English: Living in the same house with a buch of controversial issues is like living fearfully in a hut with a snake. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்கும் வல்லோரின் ஆற்றல் திறமையை பார்த்து இகழாமல் போற்றுதல் வேண்டும். அவ்வாறு போற்றுபவரே அறிவிற்சிறந்தவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: One must praise, instead of criticising, ones who do their work that is done well towards their goal. Only then, the one who praises is the person the great. - MAHENDIRAN V ------------------ குறள் 892: பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா இடும்பை தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவிற் சிறந்த பெரியோரை மதித்து வணங்காவிடின், அப்பெரியோர்களாலேயே மதியார்க்கு துன்பம் வரும். - வை.மகேந்திரன் Explanation in English: It's must to respect and obey the rythotrical scholars. If not, would cause miseries a lot to them from the scholars at any way. - MAHENDIRAN V ------------------ குறள் 893: கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: பகையை அழிக்கும் வல்லவரை பழித்து பேசுபவன், நீதி நூல்களுக்கு புறம்பாக நடந்து கொள்கிறான் என்றர்த்தம். தன் அழிவை அவனே தேடிக் கொள்கிறான் என்றும் அர்த்தம். - வை.மகேந்திரன் Explanation in English: If one blames the ones who do powerfully some acts against enemity, it means that he goes against the principles of matters written in the epics. Also it means that he earns destruction for himself. - MAHENDIRAN V ------------------ குறள் 894: கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க் காற்றாதார் இன்னா செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: மூன்று வகை திறமும் படைத்த வலியோர்க்கு வலிமையில்லாதோர் தீங்கு செய்தால், தனக்கான தீமையை தானே தேடிக் கொள்பவராவர். - வை.மகேந்திரன் Explanation in English: If the weak persons do harm to those who have three kinds of talents, it means that the weak persons seek his own evil. - MAHENDIRAN V ------------------ குறள் 895: யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர் - தெய்வப்புலவர் விளக்கம்: அரசனின் கடும் கோபத்துக்கு உள்ளானவன் இவ்வுலகில் எங்கு சென்றாலும் அவன் உயிர் வாழ வாய்ப்பே இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: If one earns a severe anger from his king, he can never be alive wherever he wishes to move. - MAHENDIRAN V ------------------ குறள் 896: எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: தீயில் எரிந்து காயப்பட்டவன் கூட தப்பித்துக்கொள்ள முடியும். ஆற்றல் நிறைந்த வல்லோரிடம் பகைத்துக் கொண்டவன் பிழைப்பதென்பது அரிது. - வை.மகேந்திரன் Explanation in English: Even someone who has been burned to death too can escape. But It is hardly to survive for a person who hates the powerful wisdomed. - MAHENDIRAN V ------------------ குறள் 897: வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின் - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குணம் நிறைந்த நல்லோரை ஒருவன் பகைத்துக் கொண்டால், அவனிடம் நிலைத்திருக்கும் பொருள் பணம் எல்லாம் வீணாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If a person hates a good hearted ones, all the material money that he has solidly is wasted. - MAHENDIRAN V ------------------ குறள் 898: குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து - தெய்வப்புலவர் விளக்கம்: மலை போல் ஓங்கி நிற்கும் பெரியோரை அழிக்க நினைக்கும் ஒருவனின் புகழ் பொருள் குடி அனைத்தும் கெடும். - வை.மகேந்திரன் Explanation in English: The reputation, wealth and entire family of someone who thinks of destroying great persons who rises like a mountain will ruin. - MAHENDIRAN V ------------------ குறள் 899: ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: உயரிய கொள்கை கொண்ட ஆற்றலுடைய வல்லோர் சினம் கொண்டால், ஒரு அரசனின் அடக்குமுறை ஆட்சி கூட அழிந்து போகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even the tyrannical rule of a king too will be destroyed if the mighty warriors with high policy get angry. - MAHENDIRAN V ------------------ குறள் 900: இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின் - தெய்வப்புலவர் விளக்கம்: தவ வலிமை மிகுந்து வலிமை பெற்ற பெரியோர் சீறி எழுந்து சபித்தால், அரண் படை பொருள் நிறைந்திட்ட அரசனும் அழிந்து போவான். - வை.மகேந்திரன் Explanation in English: If a man of great strength rises up and curses severely, the king, who is full of bulwark material, would also get ruined. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 91. பெண்வழிச் சேறல் CHAPTER 91. THE EFFECTS OF DOMINATION OF FEMINISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 901: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லறம் முக்கியம் தான் என்றாலும், மனைவியின் வாக்கு படியே நடக்கும் ஒருவன் தன் செயலில் சிறப்பாக பணியாற்றிவிடுவான் என்று சொல்ல முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: Although Living kindly with wife is important, it is not possible to say that a man who obeys his wife's words will do well in his work. - MAHENDIRAN V ------------------ குறள் 902: பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: கடமையேதும் ஆற்றாது மனைவியின் பெண்மையே பெரிது என்றிருப்பவனின் ஆக்கங்கள் வெட்க்கத்துக்குறியதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The prides earned by one is shameful if the one thinks that only his wife is prime without doing his duties to the society. - MAHENDIRAN V ------------------ குறள் 903: இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: நலம் தரும் என்று எண்ணி, இல்லத்தரசியிடம் மிகவும் தாழ்ந்து நின்று வாழ்பவன் நல்லோர் முன் நாணி நிற்பான். - வை.மகேந்திரன் Explanation in English: One who thinks that it is good and lives very lovely to the housewife will stand shamefully in front of the good people. - MAHENDIRAN V ------------------ குறள் 904: மனையாளை யஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று - தெய்வப்புலவர் விளக்கம்: மனைவியிடம் அஞ்சி அதன் பிரதிபலன் நன்மையாகும் எனில் அது நன்றே. ஆயினும் அது பாராட்டத்தக்கது அல்ல. - வை.மகேந்திரன் Explanation in English: Although obeying wife's words is good and its reputation seems to be beneficial, it is not appreciable. - MAHENDIRAN V ------------------ குறள் 905: இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: மனைவியின் சொல்லுக்கு பயந்து நடப்பவனுக்கு, நல்லோர்க்கு நற்செயல் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. - வை.மகேந்திரன் Explanation in English: One who is afraid of his wife's words will not have the opportunity to do virtual helps to society. - MAHENDIRAN V ------------------ குறள் 906: இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள் அமையார்தோ ளஞ்சு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: மனைவியின் அன்பு இனிமை- இவற்றை மட்டும் விரும்பி ஒருவர் தேவர்கள் போல் வாழ்ந்தாலும், அவர் சமூகத்தில் தன் பெருமையை இழப்பர். - வை.மகேந்திரன் Explanation in English: Only wife's love is sweet- even if one lives like heaven by thinking only this way of life is right, he will lose his pride in society. - MAHENDIRAN V ------------------ குறள் 907: பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: மனைவி தன் ஏவலினால் கணவனின் ஆளுமையில் பங்கு கொண்டு பெருமை கொள்வதை விட, வெட்க்கம் அடக்கம் தன்மையை காட்டி பெருமையடைவதே சிறப்பு. - வை.மகேந்திரன் Explanation in English: To a house wife, Rather getting prides by showing shyness and obedience is greater than getting prides from her husband's brave activities that are done because of her directions. - MAHENDIRAN V ------------------ குறள் 908: நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: மனைவியே எல்லாம் என்று அன்பொழுக வாழ்பவன், நட்புக்கும் உதவி செய்ய மாட்டான், நல்லோர்க்கும் நற்பணியாற்றமாட்டான். - வை.மகேந்திரன் Explanation in English: One who lives in love that his wife is everything, would not forward to help to his friends and any other good people. - MAHENDIRAN V ------------------ குறள் 909: அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்கண் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: பெண் பேச்சு கேட்டு நடப்பவர் அறச்செயல்கள் செய்யமாட்டார். இவரால் பொருள் உதவியோ அல்லது பிற உதவியோ பிறர்க்கு செய்ய முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: The one who listens to female's speech cannot do any virtual deeds. Also he cannot do any kind of assistance to others. - MAHENDIRAN V ------------------ குறள் 910: எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல் - தெய்வப்புலவர் விளக்கம்: நன்கு சித்திக்கும் எண்ணமும் பெருஞ்செல்வமும் பெற்றிருப்போர் மனைவியின் சொல் கேட்டு நடக்க விரும்ப மாட்டார். - வை.மகேந்திரன் Explanation in English: Those who are well in thinking for good and being financially well would not want to listen to their wives' words. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 92. வரைவின் மகளிர் CHAPTER 92. WANTON WOMEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பு என்பது அறவே இல்லாமல், பொருளை மட்டும் குறிவைத்து இனிதாக பேசும் விலைமகளிரின் செயல் இழிவானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The acts of wanton women done without love but speaking sweetly only for focusing price is the most immoral one. - MAHENDIRAN V ------------------ குறள் 912: பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: பயன் என்ன என்பதை மட்டும் மனதிற்கொண்டு பயனடைய அன்பாய் பேசும் பண்புள்ள விலை மகளிரை விரட்டிடுக. - வை.மகேந்திரன் Explanation in English: Push out the wanton women who approach with cunning smile for their own gain. It's like a devil approach. - MAHENDIRAN V ------------------ குறள் 913: பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று - தெய்வப்புலவர் விளக்கம்: விலை மகளிர், பொருளுக்காக மட்டும் கட்டித் தழுவுவதென்பது, இருட்டறையில் இனம் தெரியா பிணத்தை தழுவுவதற்கு சமம். - வை.மகேந்திரன் Explanation in English: The state of hugging of wanton woman only for money is like hugging an anonymous dead body in the dark room. - MAHENDIRAN V ------------------ குறள் 914: பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர் - தெய்வப்புலவர் விளக்கம்: அருட்பொருள் யாது என்று ஆராயும் நல்லோர்கள் அற்ப இன்பம் தரும் விலை மகளிரின் சிறுமையை விரும்ப மாட்டார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Those who are always thinking about the nature grace would never like the lust given by the silly wanton women. - MAHENDIRAN V ------------------ குறள் 915: பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர் - தெய்வப்புலவர் விளக்கம்: கற்றறிவும் பட்டறிவும் பெற்ற பெரியோர் விலை மகளிரின் அற்ப சுகத்தை விரும்ப மாட்டார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Those who have knowledge learned through experience and academy would never like the silly lust. - MAHENDIRAN V ------------------ குறள் 916: தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - தெய்வப்புலவர் விளக்கம்: அழகையும் திறமையையும் காட்டி செருக்குடன் ஈர்க்கும் விலை மகளிரிடம், ஒழுக்கமே உயர்வு எனும் பெரியோர் மயங்க மாட்டார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Those who think always that only morality is great would never be attracted by the fake pretty wanton women who act proudly. - MAHENDIRAN V ------------------ குறள் 917: நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள் - தெய்வப்புலவர் விளக்கம்: மனதை நிலை நிறுத்த தெரியாத மதிகெட்டோர் தான் விலைமகளிரின் விற்பனையில் வீழ்வர். - வை.மகேந்திரன் Explanation in English: Only the ignorants who do not know to stabling the mind would fall on the sales of wanton women. - MAHENDIRAN V ------------------ குறள் 918: ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: எதையும் ஆராய்ந்து நோக்கா அறிவிலார், விலைமகளின் வஞ்சனை அணைப்பை மாய மயக்கம் என்பர். - வை.மகேந்திரன் Explanation in English: Only the ignorants who do not know to examine which is right and false would say that the hug of wanton woman is a pleasant dizzy. - MAHENDIRAN V ------------------ குறள் 919: வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு - தெய்வப்புலவர் விளக்கம்: வரையறை இல்லா விலைமகளிரின் மென்மையான தோள்களில் தீ மக்கள் சாய்ந்து கிடப்பது நரகத்தில் இருப்பதற்கு சமம். - வை.மகேந்திரன் Explanation in English: Being laid of illy people on the soft arms of immoral-wanton women is equallent to being laid in the hell. - MAHENDIRAN V ------------------ குறள் 920: இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு - தெய்வப்புலவர் விளக்கம்: கள்ளம் கபடம் கொண்ட பெண்ணிடமும், கள், சூது இவைகளிடமும் நாட்டம் கொண்ட மனிதர்கள் மரியாதை கெட்டவர்களாவார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: People those who are eager to be with the woman who has characteristics like lie, hypocrisy, and drugs, gambling are known as disrespected men. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 93. கள்ளுண்ணாமை CHAPTER 93. NOT TO CONSUME LIQUOR 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: மதுப் பிரியர்கள் தான் சமூகத்திற்கு அஞ்சவேண்டும். சமூகம் அஞ்சாது. மேலும் மட்டு மரியாதையை இழப்பார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Only the liquor consumer should be afraid of the society. The society need not be afraid of for his action. Moreover, he would lose entire dignity of him. - MAHENDIRAN V ------------------ குறள் 922: உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் - தெய்வப்புலவர் விளக்கம்: மதுவை துறப்பது நல்லது. சான்றோரிடம் நற்பெயர் வேண்டாம் என்பவர்கள்தான் மதுவை விரும்புவார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: It's better to stop consuming liquor. If one doesn't want to earn goodwill from the grest persons, he may desire it. - MAHENDIRAN V ------------------ குறள் 923: ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி - தெய்வப்புலவர் விளக்கம்: மது அருந்தி பெற்ற தாய் முன்பு நிற்பது கொடுமை. அதுவும் சான்றோர் முன் நிற்பது கொடுமையிலும் கொடுமை. - வை.மகேந்திரன் Explanation in English: Standing with drunken stage infront of his mother is sinful. Also standing by the same stage infront of the great is the most sinful. - MAHENDIRAN V ------------------ குறள் 924: நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நாணம், மானம் என்ற நற்குனங்கள் நிறைந்தவள் கள்ளுண்டவனை விட்டு விலகி ஓடிவிடுவாள். மரியாதை இழந்து நிற்கும் நிலை ஏற்படும். - வை.மகேந்திரன் Explanation in English: The good feminine who has shyness and respectfulness will leave away from the drunken guy. He would stand on Street by losing all his respects. - MAHENDIRAN V ------------------ குறள் 925: கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: மது அருந்தும் அறியாமைச் செயல், விலை கொடுத்து குற்றத்தை வாங்குவதற்கு ஒப்பாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The sense of ignorance of drinking habit is equallent to buying crimes by paying money. - MAHENDIRAN V ------------------ குறள் 926: துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: நஞ்சு உண்டு இறப்பவருக்கும், கள்ளுண்டு மயங்கி உறங்குபவருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: There is no much difference between the person who died and laid on Street due to eating poison and laid on Street by drinking liquor. - MAHENDIRAN V ------------------ குறள் 927: உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: உள்ளுரில் மறைந்து நின்று கள்ளுண்டால் ஊரார் அறியமாட்டார் என்றில்லை, கள்ளுண்ட கண்களும் மயக்கமும் காட்டிக் கொடுத்து எள்ளி நகையாடப்படுவார். - வை.மகேந்திரன் Explanation in English: It's not like that local colleagues wouldn't know if one drinks liquor hiding. The eyes and dizzy of one who is drunken would identify it and he would be laughed at as shamefully by the society. - MAHENDIRAN V ------------------ குறள் 928: களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉம் ஆங்கே மிகும் - தெய்வப்புலவர் விளக்கம்: மது அருந்தி, அருந்தேன் நான் எனச் சொல்வது பொய் மட்டுமல்ல மடைமையும் கூட. மயக்கமும் ஆட்டமும் தானாய் உண்மையை சொல்லும். - வை.மகேந்திரன் Explanation in English: After drank, if one says that he hasn't drunk, that is not only lie but also foolish. Dizzy and shaking walk would say the fact. - MAHENDIRAN V ------------------ குறள் 929: களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - தெய்வப்புலவர் விளக்கம்: மதுவுக்கு அடிமையானவனை திருத்த முயற்சிப்பதும், நீருக்குள் மூழ்கியவனை தீப்பந்தம் கொண்டு தேடுவதும் ஒன்று தான். - வை.மகேந்திரன் Explanation in English: Both, treating the drinking habitual one and searching the person who has sunk in the water by having a fire lamp are same. - MAHENDIRAN V ------------------ குறள் 930: கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு மது விரும்பி அருந்தா நிலையில், மற்றொருவன் மது அருந்தி விழுந்து புரண்டு சீரழியும் போக்கை கண்டாவது மதுவை நிறுத்தவில்லை என்றால் அவன் மனித பிறப்பே இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: If a drunken guy can't change himself right even after seeing the disgusting status of an another one drunken person who has uglily sleeping on Street, he cannot be added in the human list. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 94. சூது CHAPTER 94. GAMBLING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று - தெய்வப்புலவர் விளக்கம்: சூது விளையாட்டில் வென்றாலும் தொடர்தல் கூடாது. அவ்வெற்றி தூண்டிலின் இரைக்கு மீன் அகப்பட்டது போலாகும். (ஒரு கட்டத்தில் தூண்டிலுடன் நம்மையும் மீன் நீருக்குள் இழுத்து விடும்.) - வை.மகேந்திரன் Explanation in English: It's better to stop playing gambling even if getting victory. Such victory is like the prey tighten in the iron bar is swallowed by fish. One fine day the fish would pull out us into the water. - MAHENDIRAN V ------------------ குறள் 932: ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு மடங்கை பெற்று, நூறு மடங்கை இழக்க வைக்கும் விளையாட்டு தான் சூதாட்டம். நல்வாழ்வு பெற வாய்ப்பே இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Gambling is the game that provides one part for making the player be pleasant, later it would pluck off hundred part from him. No chance at all to have a good life. - MAHENDIRAN V ------------------ குறள் 933: உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு முறை வந்த லாபம் மீண்டும் மீண்டும் வரும் என்று சூதாடினால் பணம் அனைத்தையும் இழக்க நேரிடும். - வை.மகேந்திரன் Explanation in English: If one expects that he would get gain again and again because of getting gain initially during gambling, the entire money would be lost. - MAHENDIRAN V ------------------ குறள் 934: சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில் - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பத்தையும் தந்து, புகழையும் கெடுக்கும் சூதாட்டத்தைப் போல் ஒருவருக்கு வறுமையை தரக்கூடிய ஒன்று வேறெதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Nothing would cause big poverty as if gambling causes since it would spoil one's life by destructing fame and providing misery. - MAHENDIRAN V ------------------ குறள் 935: கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் - தெய்வப்புலவர் விளக்கம்: சூதாடும் சூட்சுமம் அனைத்தும் அறிவேன் என்ற பெருமையுடன் ஒருவன் (உண்மையிலேயே அவன் அறிந்திருந்தாலும்) தொடர்ந்து விளையாண்டால், பொருளிருப்பு அனைத்தையும் அவன் இழப்பான். - வை.மகேந்திரன் Explanation in English: If one is saying that he is an expert in gambling and he knows the tricks, and also if he resumes gambling, he would lose his stock of entire wealth. - MAHENDIRAN V ------------------ குறள் 936: அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார் - தெய்வப்புலவர் விளக்கம்: சூதெனும் தரித்திரத்தில் விழுந்தவர் சரியான நேரத்தில் பசி தீர உணவும் உண்ணாமல் துன்பப்படுவர். - வை.மகேந்திரன் Explanation in English: If one falls on the destitutive domain namely gambling, he could not have his food ontime and also he would meet out misery. - MAHENDIRAN V ------------------ குறள் 937: பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் - தெய்வப்புலவர் விளக்கம்: சூதாடும் களமே நிரந்தர இருப்பிடம் எனும் அளவுக்கு அதில் மூழ்கிப் போனவர்கள், மூதாயர்களின் செல்வம் மட்டுமல்ல, நற்பண்புகளையும் இழப்பர். - வை.மகேந்திரன் Explanation in English: If one tends in the ground of gambling as a permanent station, he would lose not only the wealth earned by his ancestors but also his good traits. - MAHENDIRAN V ------------------ குறள் 938: பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத் தல்லல் உழப்பிக்கும் சூது - தெய்வப்புலவர் விளக்கம்: சூது, பொருளை விழுங்கும். பொய் புரட்டு பேசவைக்கும். அருளை கெடுக்கும். ஈடில்லா துன்பத்தை தரும். - வை.மகேந்திரன் Explanation in English: Gambling would swallow the wealth. It would make one fraud and make speak lie. Graces would go away. It would provide incomparable misery. - MAHENDIRAN V ------------------ குறள் 939: உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் அடையாவாம் ஆயங் கொளின் - தெய்வப்புலவர் விளக்கம்: சூது, உடை செல்வம் உணவு புகழ் கல்வி ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களை ஒருவனிடமிருந்து விலக்கிவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: Gambling would pluck out the five prime properties such as cloths, wealth, food, fame and education from the gambler. - MAHENDIRAN V ------------------ குறள் 940: இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற் றுயிர் - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பம் தொடர்ந்து வர வர, வாழ விரும்பி உயிர் மீது ஆசை கொள்வது போல், சூதாட்டத்தில் பொருளை இழக்க இழக்க அதன் மீது நாட்டம் அதிகரிக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: As if one is eager to life when he meets out often misery, the one would be attracted more by gambling when he is gambling again and again. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 95. மருந்து CHAPTER 95. MEDICINE (THE NATURAL MEDICINE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - தெய்வப்புலவர் விளக்கம்: நூல்களில் உள்ளபடி, வாதம் பித்தம் சிலேத்துமம் (கபம்)-அளவு படி உண்டு. இவை அதிகமானாலும் குறைந்தாலும் நோய் தீரா. - வை.மகேந்திரன் Explanation in English: The three humours that tend in one's body such as Vadham, Pitham and kabham should neither hike nor down. Otherwise, it would cause disease. - MAHENDIRAN V ------------------ குறள் 942: மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணின் - தெய்வப்புலவர் விளக்கம்: செரிமான இடைவெளி விட்டு உணவை முறையாக உட்கொண்டாலே போதும் மருந்தென்றொன்று தேவையில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: One shoud give gap for digestion between the times of taking food. The one need not take any medicine. - MAHENDIRAN V ------------------ குறள் 943: அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு - தெய்வப்புலவர் விளக்கம்: செரித்தறிந்து அளவறிந்து உணவு உண்பவனே நெடுங்காலம் தன் உடம்புடன் வாழ்வான். - வை.மகேந்திரன் Explanation in English: One who eats levelly and giving gap between times of taking food could be maintaing his body for long time. - MAHENDIRAN V ------------------ குறள் 944: அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து - தெய்வப்புலவர் விளக்கம்: உண்ட உணவு செரித்த பின்பு உடல் ஏற்கும் உணவு வகையறிந்து பசித்தப் பின்பு உணவுண்பதே சிறப்பு. - வை.மகேந்திரன் Explanation in English: It's great if one eats food after digestion and knowing which food fit for his body and eating only at the time of hungry. - MAHENDIRAN V ------------------ குறள் 945: மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: உடலுக்கு ஒத்துவராத உணவை உட்கொள்ளாமலிருப்பதே உடல் நலத்திற்கு உயர்வான மருந்து. - வை.மகேந்திரன் Explanation in English: The best medicine is not to eat inappropriate food to one's body's status. - MAHENDIRAN V ------------------ குறள் 946: இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் - தெய்வப்புலவர் விளக்கம்: அளவறிந்து உணவு உண்பவன் ஆனந்தமாய் இருப்பான்.அளவறியா உணவு உண்பவன் அவதிப்படுவான். - வை.மகேந்திரன் Explanation in English: Ones who eat food limitedly would be pleasant enough. And others would get miseries due to having food unlimitedly. - MAHENDIRAN V ------------------ குறள் 947: தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: பசியின் அளவு அறிந்து உணவு உண்பவனுக்கு எந்தக் கேடும் இல்லை. பசி இல்லாத நேரத்தில் அதிகம் உண்பவனுக்கு அளவிலான நோய் வரும். - வை.மகேந்திரன் Explanation in English: Ones who eat food on time only at the time of hunger, no badness to him. If eating more at the time of no hunger would get diseases a lot. - MAHENDIRAN V ------------------ குறள் 948: நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: நோய் வந்த ஒருவருக்கு அந்த நோய் அவருக்கு எப்படி வந்தது என்று ஆராய்ந்து அந்த நோயைத் தீர்ப்பதற்கு அவரின் உடல் நிலை அறிந்து ஆராய்ச்சி செய்து மருத்துவம் பார்ப்பவரே மருத்துவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: The good treatmentor is one who knows the type of sick, how it did come, what is the remedy to cure according to the status of the body of the patient. - MAHENDIRAN V ------------------ குறள் 949: உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: நோயுற்றவரின் வயது, நோயின் தன்மை, காலம் அறிந்து வைத்தியம் பார்ப்பவரே கற்றறிந்த மருத்துவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: The well learned doctor is one who knows the age of the patient, type of sick, duration of sick tending in the body of the patient. - MAHENDIRAN V ------------------ குறள் 950: உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: நோயுற்றவர், வைத்தியர், மருந்து மற்றும் மருந்து உற்பத்தியாளர் இந்நான்கு தன்மைகளை உள்ளடக்கியது தான் மருத்துவ கலை. - வை.மகேந்திரன் Explanation in English: The medical domain intents the four sub domains such as patient, doctor, medicine and the manufacturer of the medicine. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 96. குடிமை CHAPTER 96. THE PRIDES OF FAMILY AND BIRTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 951: இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு - தெய்வப்புலவர் விளக்கம்: உயர்குடி பிறந்தாரிடம் மட்டுமே சிறந்த பண்புகளும் நாணமும் ஒரு சேர இயல்பாக காணப்படும். - வை.மகேந்திரன் Explanation in English: Only the people who are the high born would have modesty along with their good traits habitually. - MAHENDIRAN V ------------------ குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் - தெய்வப்புலவர் விளக்கம்: உயர்குடி பிறந்தார், ஒழுக்கம் வாய்மை நாணம் ஆகிய பண்புகளிலிருந்து விலகி நிற்க ஆசைப்படார். - வை.மகேந்திரன் Explanation in English: People who are the high born wouldn't desire to leave out the habits of morality, honesty and modestly. - MAHENDIRAN V ------------------ குறள் 953: நகையீகை அன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: முகமலர்ச்சி, ஈகை குணம், அன்பு/இரக்கம் அடுத்தவரை இகழா குணம் இந்நான்கும் நிறைந்தோரே நேர்மையான குடியில் பிறந்தவராவர். - வை.மகேந்திரன் Explanation in English: People who are having these four good habits such as smiling when meeting others, helping tendency, mercy and being not to blaming others are considered that they are high born in noble family. - MAHENDIRAN V ------------------ குறள் 954: அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - தெய்வப்புலவர் விளக்கம்: அடுக்கடுக்காய் கோடி பணம் கொடுத்தாலும், நற்குடியில் பிறந்தோர் குடிப்பெருமையை இழக்கும் செயலை செய்ய மாட்டார். - வை.மகேந்திரன் Explanation in English: The highly born ones would never lose the dignity and prides of their family even if they are paid crores of amount to do an illy act. - MAHENDIRAN V ------------------ குறள் 955: வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடியில் பிறந்தோர், வறுமை வந்து வாட்டினாலும், கொடை தரும் பண்பை என்றும் நிறுத்தமாட்டார். - வை.மகேந்திரன் Explanation in English: People who are born in noble family would never stop their trait of donating to others even if they are in poverty state. - MAHENDIRAN V ------------------ குறள் 956: சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார் - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடிமக்கள், குலப்பெருமைக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக, பஞ்சம் வந்தாலும் கூட வஞ்சம் நிறைந்த வாழ்க்கைக்கு மாறிவிடமாட்டார். - வை.மகேந்திரன் Explanation in English: Ones who are highly born in good family would not desire to going to hypocrisy life even if they have scarcity of wealth, because of protecting the pride of their family. - MAHENDIRAN V ------------------ குறள் 957: குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடி பிறந்தார் செய்யும் குற்றம் சிறிதாகினும், அக்குற்றம் நிலவு ஒளி போல் வெட்டவெளிச்சமாக தெரிய ஆரம்பித்து விடும். - வை.மகேந்திரன் Explanation in English: If a crime (despite being simple) done by ones who are born in noble family would be established as a big one as if the moon is visible on the sky. - MAHENDIRAN V ------------------ குறள் 958: நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பான குடும்பத்தில் பிறந்தவன் பண்பற்றவனாக நடந்துகொண்டால், அவன் குடும்பப் பெருமை குறைந்து போகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one is immoral in activities though he is born of a noble family, the goodwill of his family would go down. - MAHENDIRAN V ------------------ குறள் 959: நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் - தெய்வப்புலவர் விளக்கம்: நிலத்தின் பெருமையை அதில் விளைந்த பயிரின் தரம் காட்டுவது போல், ஒருவரின் நற்ச்சொல் நற்பேச்சு அவன் குடியின் பெருமையை எடுத்துரைக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: One's talk would identify the pride of his family as if the plant proves the pride of the land from which it grows. - MAHENDIRAN V ------------------ குறள் 960: நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் தன் வாழ்க்கைக்கு நலம் வேண்டுமானால், அவரிடம் இயல்பாக நாணம் வேண்டும், அவர் தன் குலத்திற்கு பெருமை வேண்டுமானால் பணிவு வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: If one wants goodness to his life, he must have habitually the trait of modesty. And if he wants pride for his birth, he must be submissive to society. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 97. மானம் CHAPTER 97. HONOURS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: மிக முக்கியமான அவசியமான செயல் ஆனாலும் தன் குடிப்பெருமைக்கு (மானத்திற்கு) அது இழுக்கு ஏற்படுமானால் செய்யாமல் இருப்பதே நல்லது. - வை.மகேந்திரன் Explanation in English: Even if one commits very important and so necessary act, if it swallows the one's honour, it's better not to do such act. - MAHENDIRAN V ------------------ குறள் 962: சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: சீரிய வீரமிக்க செயலானாலும் புகழ் மிக்கதாக அது இருந்தாலும் குலப் பெருமைக்கு உகந்தாக அது இல்லாவிடின் அச்செயலை தவிர்க்க வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one is very brave action and such action brings some fames, if it is against the honour of one's birth, must avoid it. - MAHENDIRAN V ------------------ குறள் 963: பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: பணம் தழைத்திருக்கும் காலத்தில் பணிவு இருக்க வேண்டும். ஒருவேளை செல்வம் குன்றிப்போனால், மனம் தளரா வீரம் இருக்க வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: When one is so wealthy, should need submissiveness. And at the time of wealthless situation, should need strong mind. - MAHENDIRAN V ------------------ குறள் 964: தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: வாழ்வாங்கு வாழ்ந்து தாழ்ந்து போனவர், தலையிலிருந்து விழுந்த தலைமுடிக்கு ஒப்பாவர். - வை.மகேந்திரன் Explanation in English: If ones who lived so highly in society have the situation to going down unfortunately, that is equallent to hairs that fall down from the head. - MAHENDIRAN V ------------------ குறள் 965: குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: குன்றாய் ஓங்கி வளர்ந்து வாழ்வோர், குன்றிமணி அளவு குறை செய்தால் கூட கூனி குறுகும் நிலையை அடைவர். - வை.மகேந்திரன் Explanation in English: If ones who live like the height of mountain committing a simple mistake (even if such mistake is the size of little rosary pea), they would be blamed a lot byvthe society. - MAHENDIRAN V ------------------ குறள் 966: புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற் றிகழ்வார்பின் சென்று நிலை - தெய்வப்புலவர் விளக்கம்: வாழ வேண்டும் என்பதற்காக இகழ்பவனை ஏற்று, அவன் பின் செல்வதால் எப்பயனும் இல்லை. பெருமையும் கிடைக்காது அருளும் கிடைக்காது. - வை.மகேந்திரன் Explanation in English: For the sake of living, The stance of following silly persons who blame us is useless. can't get any pride from that. Blesdings tended so far too will fly away. - MAHENDIRAN V ------------------ குறள் 967: ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - தெய்வப்புலவர் விளக்கம்: புறம்பேசி இகழ்பவனின் உதவி கிட்டி உயிர் வாழ்ந்து மானத்தை தொலைப்பதை விட, உயிர் போனாலும் இருந்த நிலையே போதும் என்ற உறுதி எண்ணம் வர வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Rather being in the normal status by having bravery like even if the life is lost too is better than losing honour by following ones who are blaming back side by worst words, for living. - MAHENDIRAN V ------------------ குறள் 968: மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து - தெய்வப்புலவர் விளக்கம்: பெருமை காக்க வேண்டி மனம் ஒவ்வா செயல் செய்வது, சாகாமல் இருக்க மருந்தொன்றை தேடுவது போலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The state of doing against one's conscience owing to protecting prides is equallent to seeking medicine for not dying. - MAHENDIRAN V ------------------ குறள் 969: மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் - தெய்வப்புலவர் விளக்கம்: உடல் உரோமம் கலைந்தால் உயிர் வாழாதாம் கவரிமான். அது போல், குடும்ப பெருமை குலைந்தால், உடம்புடன் இருக்கும் உயிர் எதற்கு என்பராம் மானமுள்ளவர். (உயிரை துச்சமாக நினைப்பது வீரம் தான் என்றாலும் தானாக மாய்த்துக் கொள்ளக் கூடாது) - வை.மகேந்திரன் Explanation in English: It is believed that the Yak would quit its life if it loses its hair. Likewise, the great honorary persons would say that why should be alive when they lose their dignity of their family. Common advice: (Despite thinking life is silly by means of bravery, one should not quit his live). - MAHENDIRAN V ------------------ குறள் 970: இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: மானமிழந்து வாழ்வதை விட மானத்துடன் மாள்வதே மேல் என்றுரைப்போரை வியந்துபோய் மதித்து நோக்குமாம் உலகம். (உயிரை துச்சமாக நினைப்பது வீரத்திற்கு தான். தானாக மாய்த்து கொள்ளுதல் கூடாது) - வை.மகேந்திரன் Explanation in English: It's said that the world would surprisingly praise ones who say that dying is better than living by losing honours. (Despite thinking life is silly by means of bravery, one should not quit his live). - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahe திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரின் ஊக்கமின்றி வெற்றி காண்பேன் என்பது சரியன்று. ஒருவரின் வெற்றிக்கு மற்றவரின் ஊக்கமே ஊன்றுகோலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one says that he gets won himself and not from any others' assistance, that is wrong. A victory cannot be gotten without support of others. - MAHENDIRAN V ------------------ குறள் 972: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறப்பால் எல்லோரும் ஒன்றே என்றாலும் அவரவர் தொழில்களில் ஒவ்வொருவரின் செயல் திறனே அவர்களை வேறுபடுத்துகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: The birth is common to all. Only the profession and skills of activities of everyone are varying them. - MAHENDIRAN V ------------------ குறள் 973: மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் - தெய்வப்புலவர் விளக்கம்: உயர்ந்த பண்பில்லா மேல் மக்கள் மேல் மக்களல்லர். சிறந்த பண்புகள் நிறைந்திட்ட கீழ் மக்கள் கீழ் மக்களல்லர். - வை.மகேந்திரன் Explanation in English: High graded people who don't have great traits aren't high graded. Likewise, low graded people aren't low graded if they have great traits. - MAHENDIRAN V ------------------ குறள் 974: ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் தன் வாழ்வில் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ்வதென்பது, ஒரு பெண் தன் கற்பை காத்து வாழ்வது போலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The stance ones who live by following all moralities in their life is like a woman who is honestly living by protecting her virginity. - MAHENDIRAN V ------------------ குறள் 975: பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: அரியச் செயல்களை ஆனந்தமாய் ஏற்று அற்புதமாக செய்து முடிப்பவர்களே பெருமைக்குரியவர்களாவார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Ones those who are daring to attend willingly rare works that might not be able to be done by others are highly graded people. - MAHENDIRAN V ------------------ குறள் 976: சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: அருஞ்செயல் புரிந்த பெரியோர்களை போற்றிப் புகழ்வதென்பது பரந்த எண்ணம். சிறுமை உணர்ச்சியுள்ளவர்கள் அதை அறியார். - வை.மகேந்திரன் Explanation in English: The trait of applauding other's tough activities is called broad minded. Silly people would not know it. - MAHENDIRAN V ------------------ குறள் 977: இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான் சீரல் லவர்கண் படின் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறப்பு நிலை செயல்பாடுகள் சிறுமை எண்ணம் படைத்தோர் கையில் அகப்பட்டால் சிறப்புகள் அனைத்தும் சீரழிந்துபோகும். - வை.மகேந்திரன் Explanation in English: If the important and great works are given to silly minded people, all greatness of those works would be collapsed. - MAHENDIRAN V ------------------ குறள் 978: பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து - தெய்வப்புலவர் விளக்கம்: பெரிய மக்கள் எப்பொழுதும் அடக்கத்துடன் இருப்பர். சிறுமை புத்தி கொண்டவர்கள், தனக்குத்தானே பெருமைப்படுத்தி வியந்துக்கொள்வர். - வை.மகேந்திரன் Explanation in English: The great people would be always humble but the low traited people would be praising proudly themselves. - MAHENDIRAN V ------------------ குறள் 979: பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: பெருமைப்படக்கூடிய செயல் செய்தாலும் பெருமக்கள் பெருமிதம் கொள்ள மாட்டார்கள். சிறு மக்களோ தம்பட்டம் அடித்து மகிழ்வர். - வை.மகேந்திரன் Explanation in English: The great traited people wouldn't be eager to be proud of even if they have done a highly graded work. But the low traited would be dancing here and there at the same situation. - MAHENDIRAN V ------------------ குறள் 980: அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: பெருங்குணம் கொண்டோர் அடுத்தோர் குறைகளை அலச மாட்டார். சிறுங்குணம் கொண்டோரோ பிறரின் குற்றத்தை கூவி விற்று மகிழ்வர். - வை.மகேந்திரன் Explanation in English: Those who have good traits wouldn't be minding other's drawbacks as big. But the low traited ones would be eager to spreading such drawbacks to others. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 99. சான்றாண்மை CHAPTER 99. THE PERFECTNESS OF THE GREAT MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 981: கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு கடமையை, 'இது தான் நாம் செய்யத்தகுந்த பணி' என மணமுவந்து ஏற்று திறப்பட செய்ய முயற்சிப்போருக்கு நல்ல குணாதியங்கள் இருப்பது இயல்பு. - வை.மகேந்திரன் Explanation in English: One who takes a work enthusiastically that it is his prime duty and tries to complete successfully is always having very great traits. - MAHENDIRAN V ------------------ குறள் 982: குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளதூஉ மன்று - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த பண்புகளை கொண்ட குணநலமே சான்றோரை பெருமை படுத்தும் மற்ற நலன்கள் எல்லாம் அதற்கு பிறகே. - வை.மகேந்திரன் Explanation in English: Only the state of having great traits would bear prides a lot to the perfect men. Other goodwills are put next to that. - MAHENDIRAN V ------------------ குறள் 983: அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ டைந்துசால் பூன்றிய தூண் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பு, நாணம், உதவும் மனப்பான்மை, தயவுதாட்சண்யம், வாய்மை - இவை ஐந்தும் சிறந்த ஆண்மைக்கு தூண்களாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The main Pillers of perfect men are, kindness, modesty, helping tendency, face respect and honesty. - MAHENDIRAN V ------------------ குறள் 984: கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உயிர் வதை செய்யாமை தவத்திலும் சிறந்தது. பிறர் குறையை கூறாதிருப்பது ஆண்மைக்கு சிறந்தது. - வை.மகேந்திரன் Explanation in English: Not to be killing lives is greater than the penance. The state of not talking about the drawbacks of others is the greatness of perfect men. - MAHENDIRAN V ------------------ குறள் 985: ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை - தெய்வப்புலவர் விளக்கம்: ஆற்றலின் ஆற்றல் பணிவுடன் இருத்தல். சான்றாண்மையின் ஆற்றல் பகைவரை நட்பாக்குதல். - வை.மகேந்திரன் Explanation in English: The strength of effort is being humble. The strength of great men is, making enemy to be a friend. - MAHENDIRAN V ------------------ குறள் 986: சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: எளியோரிடம் தோற்றுவிட்டால், வாதிடாமல், மனம் உவந்து தோல்வியை ஒப்புக் கொள்வதும் சான்றாண்மையே. - வை.மகேந்திரன் Explanation in English: Incase of getting failure with weaker, the state of solemnly consenting such failure is too is known as greatness. .- MAHENDIRAN V ------------------ குறள் 987: இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் துன்பம் கொடுத்திருந்தாலும், அவருக்கு உதவி செய்யாமல் போகும் பண்பு சான்றாண்மையாகாது. - வை.மகேந்திரன் Explanation in English: Even though one had paid misery, the state of not helping him is not meant as perfectness. - MAHENDIRAN V ------------------ குறள் 988: இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த ஆண்மை பெற்று நற்பண்பு இருந்தால் போதும், வறுமையும் அவனைக் கண்டு அஞ்சும். - வை.மகேந்திரன் Explanation in English: If a perfect man has gotten all the best traits, even the poverty too would be afraid of nearing to him. - MAHENDIRAN V ------------------ குறள் 989: ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: சான்றாண்மை பெற்று கடல் அளவு சாதிக்கும் வல்லவர்கள், வையகமே மாறினாலும், தன் தரத்தை மாற்றிக்கொள்ளார். - வை.மகேந்திரன் Explanation in English: The most great perfect men who could achieve as far as the size of ocean would never change their quality even if the Earth changes its turns. - MAHENDIRAN V ------------------ குறள் 990: சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான் தாங்காது மன்னோ பொறை - தெய்வப்புலவர் விளக்கம்: சான்றோரின் சான்றாண்மை விலகுங்கால், இவ்வையகமே வலிமையிழந்ததாக கருதப்படும். - வை.மகேந்திரன் Explanation in English: If the perfectness leaves out from the great men, the entire world would be considered as strengthless. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் இனிமையாய், எண்களை போல் எளிதாய் எவரிடத்திலும் பழகும் பாங்கே பண்புடைமையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The state of one that one behaves so kindly and easily like reading numbers with whomever is known as good manners. - MAHENDIRAN V ------------------ குறள் 992: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடியில் பிறந்ததற்கான இலக்கணத்துடன் வாழ்வது, நல்வழியில் அன்புடன் அனைவரிடத்திலும் பழகுவது இவ்விரண்டும் அன்புடைமையின் இலக்கணங்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Living according the status of being born in noble family, and behaving with others so benevolently are the grammar of the good trait. - MAHENDIRAN V ------------------ குறள் 993: உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உருவத்தில் தோற்றத்தில் ஒருவருடன் ஒத்திருப்பது ஒற்றுமையல்ல. உள்ளத்தில் வேற்றுமை எண்ணம் இல்லாதிருத்தலே இணைபிரியா ஒற்றுமையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The real resemblance of the twos doesn't mean similar appearance but it means the similar frequency in mind. - MAHENDIRAN V ------------------ குறள் 994: நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புள ராட்டும் உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: நீதியை காத்து நிற்கும் நெறிமுறைகளுடனும் அறம் செய்யும் விரும்பி பிறர்க்கு உதவும் வகையிலும் வாழ்பவரை இவ்வுலகம் போற்றும். - வை.மகேந்திரன் Explanation in English: The world would praise ones who is living justicious and helping others morally for they getting benifits. - MAHENDIRAN V ------------------ குறள் 995: நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு - தெய்வப்புலவர் விளக்கம்: நகைச்சுவைக்காகக் கூட பிறரை இகழ்தல் துன்பம் தருவிக்கக் கூடியது என்பதை அறிந்து, பகைவனானாலும் பண்பறிந்து பழகுபவரே பண்புடைமைக்கு சொந்தக்காரர். - வை.மகேந்திரன் Explanation in English: Shouldn't blame others even for fun. One who behaves even with enemies by knowing good manners is the real trait haver. - MAHENDIRAN V ------------------ குறள் 996: பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த பண்புடையோர் நிறைந்திருப்பதால் தான் இவ்வுலகம் இனிதாக இயங்குகிறது, இல்லையேல், மண்ணுக்குள் புதைந்திருக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Only because of living of great traited persons, this world is functioning pleasantly. Otherwise, it would have got burried under the earth. - MAHENDIRAN V ------------------ குறள் 997: அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: அரம் போன்ற கூர்மையான அறிவு உள்ளவராகினும், மக்களிடம் மனித நேயம் காட்ட தெரியாதவர் மரத்திற்கு ஒப்பானவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: Even though one is being intelligent like a sharp saw, if he doesn't know to show humanism to others, he is equallent to a tree. - MAHENDIRAN V ------------------ குறள் 998: நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: நட்பற்ற பகைவர் தீச்செயல்கள் செய்தாலும், அவர்களிடம் பண்பற்ற முறையில் நடந்துகொள்வதும் ஒருவித இழுக்கே. - வை.மகேந்திரன் Explanation in English: If one behaves un traitedly even if the one's enemies are doing miseries to him, that is also a dirty manner. - MAHENDIRAN V ------------------ குறள் 999: நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறருடன் பழகி நெகிழ்ந்து பண்புடன் இருக்க தெரியாதவர்களுக்கு, பகல் பொழுதும் இருள் சூழ்ந்தே காணப்படும். - வை.மகேந்திரன் Explanation in English: To those who don't know to behave traitedly with kindness with others, the day time too would be looking like dark. - MAHENDIRAN V ------------------ குறள் 1000: பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: பண்பில்லாதவனிடம் உள்ள மட்டற்றசெல்வம் என்பது, கலம் குலைந்துபோன பாத்திரத்தில் ஊற்றப்பட்ட நல்ல பால் திரிந்து போனது போலத்தான். - வை.மகேந்திரன் Explanation in English: Having a big wealth of one who is ill-traited is equallent to the good milk becomes soured milk because of having poured it in the dirty vessel. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 101. நன்றியில் செல்வம் CHAPTER 101. THE WEALTH IN GRATITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில் - தெய்வப்புலவர் விளக்கம்: பெரும்பொருள் / செல்வம் நிறைய சேர்த்து வைத்து, வாழும்பொழுது அவற்றை அனுபவிக்க மற்றும் ஈகை செய்யத் தெரியாதவனுக்கு, ஈட்டிய செல்வத்தால் அவனுக்கும் பிறர்க்கும் பயனில்லையாதலால் அவன் இருந்தும் இறந்தவனே. - வை.மகேந்திரன் Explanation in English: One who has earned wealth a lot and failing to enjoy such and also failing to help to others is considered as a dead man though he is alive. - MAHENDIRAN V ------------------ குறள் 1002: பொருளானாம் எல்லாமென்றீயா திவறும் மருளானாம் மாணாப் பிறப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: பொருளால் தான் எல்லாம் என்பார், எதையும் சாதிக்கலாம் என்பார், ஈகையும் செய்யேன் என்பார் தானும் எதையும் செய்யேன் என்பார் - இவர் பிறப்பு இழிப்பிறப்பாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one who earned wealth a lot says that nothing is big one in this world but wealth and one can achieve anything by money and, if he wouldn't help to others and he too wouldn't enjoy, his birth is disgrace to this world. - MAHENDIRAN V ------------------ குறள் 1003: ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை - தெய்வப்புலவர் விளக்கம்: அதிக பொருள் ஈட்ட மட்டும் ஆர்வம் கொண்டு மற்ற எவற்றாலும் புகழ் தேட விரும்பாதார் இப்பூமிக்கு பாரமானவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: One who is eager only to earn wealth and not to get fame by doing any other moral acts, and being not to be helpful to others is just an unwanted load to the earth. - MAHENDIRAN V ------------------ குறள் 1004: எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன் - தெய்வப்புலவர் விளக்கம்: வாழும் பொழுது எவர்க்கும் எவ்விதத்திலும் பயன் இல்லாது யாராலும் விரும்பப்படாதவன், 'தான் மாண்ட பின் எப்புகழையும் பெறமாட்டான். - வை.மகேந்திரன் Explanation in English: One who is not liked by anyone because of not being useful to the anyone at any respect wouldn't get any goodwill after he demises. - MAHENDIRAN V ------------------ குறள் 1005: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினும் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: சேர்த்து வைத்த செல்வத்தை நுகரவும் செய்யாது, பிறர்க்கு உதவவும் செய்யாது அடுக்கி வைத்திருப்பது கோடிகோடியாயினும் அவை இருந்தும் இல்லாதவையே. - வை.மகேந்திரன் Explanation in English: If crores of wealth earned by one is not to be useful to anyone and isn't used by the earner, such fund is considered invalid despite existing. - MAHENDIRAN V ------------------ குறள் 1006: ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன் றீத லியல்பிலா தான் - தெய்வப்புலவர் விளக்கம்: தானும் அனுபவிக்காது, பிறர்க்கும் உதவாது பூட்டி வைத்திருக்கும் ஒருவனின் செல்வமும் அவனும் ஒரு நோயே. - வை.மகேந்திரன் Explanation in English: If the stance of the wealth earned by one is neither enjoyed by one nor being useful to others, he and his wealth is considered just as a disease. - MAHENDIRAN V ------------------ குறள் 1007: அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: வலியோனிடம் உள்ள செல்வம் எளியோருக்கு பயன்படாதுபோவதென்பது, ஒரு அழகு பதுமை பெண் மணமாகாமல் அப்படியே இருந்து முதுமை பெற்றதற்கு சமம். - வை.மகேந்திரன் Explanation in English: The state of not being useful of a rich man's wealth to the society is like a pretty woman is getting old without getting married. - MAHENDIRAN V ------------------ குறள் 1008: நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவனின் செல்வம் யாருக்கும் பயன்படாமல் வீணாகிப்போனால், அது நச்சு மரம் ஒன்று நடுத்தெருவில் பழுத்து குலுங்கியது போலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If the wealth of one is going to be useless as it's being helpful to none, that is considered as a toxic tree is planted on the mid of the town. - MAHENDIRAN V ------------------ குறள் 1009: அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பும் இல்லாது அறத்தையும் மீறி தன்னையும் வருத்தி ஈகையும் செய்யாது ஒருவன் குவித்து வைத்திருக்கும் செல்வம் ஒரு நாள் யாராலோ அபகரிக்கப்படும். - வை.மகேந்திரன் Explanation in English: The wealth cummulated by one who trespasses the moral ways and not having helping tendency and not having even a bit of kindness would be grabbed by somebody else one day. - MAHENDIRAN V ------------------ குறள் 1010: சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: தான் தேடிய செல்வத்தை பிறர்க்கு கொடுத்து உதவ நினைக்கும் செல்வந்தர்களின் வறுமை, மழை தரும் மேகம் வறுமை கொண்டதற்கு ஈடானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The state of attaining poverty of rich men who would like to be helpful to others financially is equallent to the clouds which provide rain to the Earth attain poverty. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற - தெய்வப்புலவர் விளக்கம்: இழிச் செயல் செய்பவன் சமூகத்தில் வெட்கப்படுவது வேறு. நெற்றி நிறை அழகுப் பெண் இயல்பாக வெட்கப்படுவது வேறு. வெட்கம் என்ற வார்த்தையினால் இரண்டும் ஒன்றாகிவிடாது. - வை.மகேந்திரன் Explanation in English: The shamefulness attained by one because of his having done evil activities to society and the shyness felt by a pretty woman who has a beautiful forehead aren't same. The first one is considered as dirty and the second one is pretty. - MAHENDIRAN V ------------------ குறள் 1012: ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உணவு உடை உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், நாணம் மட்டும் நல்ல மனிதர்களின் உடைமையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Food and clothe is common to all living beings but shyness is the great sense had by only good people. - MAHENDIRAN V ------------------ குறள் 1013: ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும் நன்மை குறித்தது சால்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உயிர் உடலுடன் தான் இணைந்து நிற்கும். அது போலத்தான், நாணமும் நற்குனம் உயர்ந்த பண்புள்ளோரிடத்தில் தான் இருக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Live is merged with body is well known. Likewise, shyness too is merged with the great traited persons. - MAHENDIRAN V ------------------ குறள் 1014: அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற் பிணியன்றோ பீடு நடை - தெய்வப்புலவர் விளக்கம்: நாணம் என்ற நற்குணத்தை ஆபரணமாக பெற்றிருப்பதால் தான் சான்றோர்களால் பீடுநடை போடமுடிகிறது. நாணம் என்பது இல்லையேல், அது இழிவு என்பதை அறிவார்கள் அவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Only because the great wisdomed are having the sense of shamefulness or modesty as an ornament, they could walk straightly infront of society. They clearly know if there is no such senses it means degraceful. - MAHENDIRAN V ------------------ குறள் 1015: பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக் குறைபதி என்னும் உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: தன் பழிக்காக நாணுதல் ஒரு பெரிய விஷயமல்ல. பிறரின் பழியை கண்டு ஒருவன் நாணம் கொள்கிறார் என்றால் அவரை இவ்வுலகம் பெரிதும் போற்றும். - வை.மகேந்திரன் Explanation in English: If one is getting shy because of his illy act, that is not a matter, but if the one gets shy due to other's degraded activity, the world would praise him. - MAHENDIRAN V ------------------ குறள் 1016: நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: பெருமக்கள், தன் நற்குணங்களுக்கு நாணமே வேலி என்றும் இவ்வுலகில் அது போன்ற பாதுகாப்பு பிற எதுவும் இல்லை என்பர். - வை.மகேந்திரன் Explanation in English: The great persons would comment that only the trait of shy is the protection for one's life and no anything can be compared to that. - MAHENDIRAN V ------------------ குறள் 1017: நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: நாணமே பெரிது என்று கருதுபவர்கள் உயிரை துச்சமாக நினைப்பர். உயிரை காக்க மானத்தை அடகு வைப்போர் வெட்கமில்லாதவர்களாவார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Those who think shame is great will think life is trivial. Those who mortgage their honour to save their lives are shameless. - MAHENDIRAN V ------------------ குறள் 1018: பிறர்நாணத் தக்கது தானாணா னாயின் அறநாணத் தக்க துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு வெட்கக்கேடான செயல் புரிந்த ஒருவன், கொஞ்சமும் வெட்கமின்றி வலம் வந்தானானால், வெட்கமே அவனை விட்டு வெட்கி விலகி விடும். - வை.மகேந்திரன் Explanation in English: If one has done a very shameful activity but walks on street shamelessly, even the shyness would get away from him with shame. - MAHENDIRAN V ------------------ குறள் 1019: குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: கொள்கை குன்றி நடப்பவனுக்கு குலப்பெருமை கெட்டுவிடும். மேலும் அது கண்டு வெட்காமல் இருப்பவனுக்கு நலமனைத்தும் கெடும். - வை.மகேந்திரன் Explanation in English: One whose principles are found to be bad in life would lose the prides if his family. And if he is not shameful for that act, all of his goodness would be collapsed. - MAHENDIRAN V ------------------ குறள் 1020: நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று - தெய்வப்புலவர் விளக்கம்: வெட்கம் என்ற ஒன்றே இல்லாமல் நடமாடுபவன், கயறு கட்டி இழுத்தாட வைக்கும் மரப்பாச்சி பொம்மைக்கு ஒப்பானவனாவான். - வை.மகேந்திரன் Explanation in English: One who behaves in life without even a bit of shy is equallent to a wooden toy played by roping just for showing that it has live. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 103. குடிசெயல் வகை CHAPTER 103. THE MAIN ACTIVITIES OF A FAMILY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1021: கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் - தெய்வப்புலவர் விளக்கம்: கருமமே கண்ணாயினும் என்ற நோக்கில் வீட்டையும் நாட்டையும் மேம்படுத்த வேண்டும் என்று செயல்படுவதை விட பெருமையான செயல் வேறெதுவும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: There is no any other pride is equallent as one does very hard work to enhance his family and nation by taking an infinite effort. - MAHENDIRAN V ------------------ குறள் 1022: ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையான் நீளும் குடி - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவுடன் முயற்ச்சியும் கைகோர்த்து செய்யும் கடமையால் ஆகும் பயன் வீட்டையும் நாட்டையும் உயர வைக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: The gain obtained during duty done with hard-work with a good knowledge would make one's home and his nation to high up. - MAHENDIRAN V ------------------ குறள் 1023: குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் - தெய்வப்புலவர் விளக்கம்: வீட்டையும் நாட்டையும் உயர்த்த பகீரத பிரயத்தனம் செய்பவர்க்கு இறைவனும் வந்து துணை செய்வான். - வை.மகேந்திரன் Explanation in English: God too would bless by standing nearby one who is hiking the quality of home and nation with full of his effort. - MAHENDIRAN V ------------------ குறள் 1024: சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: வீடும் நாடும் உயர உண்மையாய் நினைத்தாலே போதும். அதற்குறிய ஆற்றல் தானாக வரும். - வை.மகேந்திரன் Explanation in English: If one just thinks is enough to hike up his home and nation, surely all efforts and skills would cummulate around him itself. - MAHENDIRAN V ------------------ குறள் 1025: குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: குற்றமற்ற செயல்களால் வீட்டையும் நாட்டையும் முன்னேற்றிட முயல்பவனுக்கு சுற்றத்தார் சூழ்ந்து நின்று துணை நிற்பர். - வை.மகேந்திரன் Explanation in English: Friends and relatives would come and give their hands if one tries to hike his home and nation with crimeless activities. - MAHENDIRAN V ------------------ குறள் 1026: நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்ததோர் ஆண்மை எதுவென்றால், தனது குடிமையை ஆளும் திறனை தனதாக்கி கொள்வதே. - வை.மகேந்திரன் Explanation in English: The best masculinity is what one should be eager and possess himself to lead his home and nation to hike up. - MAHENDIRAN V ------------------ குறள் 1027: அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை - தெய்வப்புலவர் விளக்கம்: போர்களத்தில் வரும் சிரமங்களை தாங்கி நின்று போரிடும் ஒரு வீரனின் வல்லமையை போன்றதே நாட்டையும் வீட்டையும் உயர்த்தப் பாடுபடும் பொழுது ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்வது. - வை.மகேந்திரன் Explanation in English: To meet out difficulties during protecting family is like the same type of difficulties met out by valiant during the war in the battle. - MAHENDIRAN V ------------------ குறள் 1028: குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: குடும்பத்தையும் தேசத்தையும் உயர்த்த காலக்கெடு எதுவும் இல்லை. சோம்பல், தள்ளிப்போடுதல் ஆகியவவை நோய்களாகும். - வை.மகேந்திரன் Explanation in English: No time limit to do activities for hiking up family and nation. Laziness and postponing act are a kind of disease. - MAHENDIRAN V ------------------ குறள் 1029: இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு - தெய்வப்புலவர் விளக்கம்: குடும்பத்தை காப்பாற்ற அருப்பாடுபடும் ஒருவனுக்கு ஏற்படும் துன்பங்களை எண்ணுங்கால், அவன் துன்பத்தை சந்திப்பது இயற்கையின் நியதியோ? - வை.மகேந்திரன் Explanation in English: If you think about the miseries met out by a lead man of a family who works hard, is it a nature what he ought to meet out such miseries? - MAHENDIRAN V ------------------ குறள் 1030: இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு குடியில், வரும் துன்பத்தை போக்கவல்ல திறம் நிறைந்தோர் அவ்விடம் இல்லாவிடில், குடியானது துன்ப வலையில் விழும். - வை.மகேந்திரன் Explanation in English: If there is no proper effective persons as guidance in a family to solute the issues when the family is hanging at a problem, it would be spinned by the net of misery. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 104. உழவு CHAPTER 104. PLOUGHING / AGRICULTURE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை - தெய்வப்புலவர் விளக்கம்: எத்தொழில்கள் எங்கு நடந்தாலும், அத்தொழில்கள் உழவுக்கு பின்னால் தான். உழவு சிரமங்களடங்கிய தொழிலாயினும் அதுவே தலையானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Whatever the profession is there, would be behind to agriculture. Despite being difficulties in this profession, only this is the greatest one among all. - MAHENDIRAN V ------------------ குறள் 1032: உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து - தெய்வப்புலவர் விளக்கம்: உழவை விட்டு விலகிச் சென்று எத்தொழில் செய்தாலும், உழவு, உணவுத் தரும் தொழிலாகையால், உழவே உலகிற்கு அச்சாணியாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Although some is going away from ploughing and go to other business, as only the ploughing provides food, this is the main axis to the world. - MAHENDIRAN V ------------------ குறள் 1033: உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: உழவு தொழில் செய்வோரே பசியாரும் முதல் உரிமைப் பெற்றவர். மற்றோரெல்லாம் உழவர்க்கு பின்னால் தான் நிற்க வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Only ploughers are having first right to have food. Others just have to stand behind them. - MAHENDIRAN V ------------------ குறள் 1034: பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் - தெய்வப்புலவர் விளக்கம்: பற்பல குடைகளின் - அதாவது அரசன் பணக்காரன் தனவந்தன் வீரன், எளியோர் அறிஞர், முனிவர் ஆகியோரின்- நிழல்கள் (பெருமைகள்), உணவு தருவதால் உழவர்களின் குடைக்குள் வசப்படும். - வை.மகேந்திரன் Explanation in English: Any kind of pride of any kind of persons like king, richers, valiant, poor, wisdomed, sages all would be subdued to the pride of ploughers. - MAHENDIRAN V ------------------ குறள் 1035: இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் - தெய்வப்புலவர் விளக்கம்: உழவர் பிறரிடம் கைகட்டி பொருள் கேளாதவர். பிறர் வந்து பொருள் கேட்டால், இல்லை என்று சொல்லாமல் தருபவரும் உழவரே. - வை.மகேந்திரன் Explanation in English: Ploughers wouldn't stand infront of anyone with any prayer. Also they wouldn't deny to assist others who come to them with prayer. - MAHENDIRAN V ------------------ குறள் 1036: உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கும் நிலை - தெய்வப்புலவர் விளக்கம்: உழவர் தன் தொழிலை முடக்கினால், உணவையும் துறந்து உயர்ந்து நிற்கும் துறவியும் தாழ்ந்து போவர். - வை.மகேந்திரன் Explanation in English: If ploughers stop their work, even sages who have given up food too would suffer. - MAHENDIRAN V ------------------ குறள் 1037: தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு மடங்கு மண்ணை உழுது கால் மடங்காக்கி பயிரிட்டால் போதும். பிடி அளவு உரம் இல்லாமலே பயிர் செழித்து வளரும். - வை.மகேந்திரன் Explanation in English: It's enough, if just ploughing and composing well a volume of sand and making it quarter volume on the land, need not fertilise even a bit, the crop would grow up the best. - MAHENDIRAN V ------------------ குறள் 1038: ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உழுவதுடன் உரமிடுவது முக்கியம். உரமிடுவதுடன் நீர் பாய்ச்சுவது முக்கியம். நீர் பாய்ச்சுவதுடன் களை எடுத்தல் முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக பயிரை காவல் காப்பது மிகமுக்கியம். - வை.மகேந்திரன் Explanation in English: Fertilising is important besides ploughing. Watering is important besides fertilising. Plucking weeds is important besides watering. Above all, safeguarding crops is very important. - MAHENDIRAN V ------------------ குறள் 1039: செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: உரியவன் தினம் சென்று நிலத்தை பார்க்காவிடில், கணவனால் கவனிக்கப்படாத மனைவி கணவனை வெறுப்பது போல், நிலமும் வெறுத்து பயிர் தராதுபோகும். - வை.மகேந்திரன் Explanation in English: If a land lord or farmer doesn't visit and taking care the land as a routine work, the land would result a worse harvest as if uncared wife is getting hatred on her husband. - MAHENDIRAN V ------------------ குறள் 1040: இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஏதும் செய்ய இயலா நிலையில் உள்ளேன் என்று நிலத்துக்குரியவன் சொன்னால், நிலம் அவனை பார்த்து ஏளனமாக சிரிக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: If a plougher says to his land that he is unable to do anything favourable to the land, the land would mocker at him. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு CHAPTER 105. POVERTY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1041: இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லாமையை விட கொடியது இல்லாமை தானே தவிர வேறு எதுவுமிருக்க முடியாது ஆகையால் இல்லாமையை விட கொடியது இல்லாமை தான். - வை.மகேந்திரன் Explanation in English: Nothing is the most misery to one than the state of poverty. So that, it can be said that only the poverty is the bigger misery than the poverty. - MAHENDIRAN V ------------------ குறள் 1042: இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமை எனப்படும் பாவி கொடுத்து வாங்கும் நிலையை கெடுப்பதால் இன்பம் தொலைந்துபோய் மறுமையிலும் வறுமையை தொடரவைக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Since the sinner namely poverty would spoil one's usual survival, the pleasance of one's life would vanish, also the state of poverty would remain in the future. - MAHENDIRAN V ------------------ குறள் 1043: தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமையே ஒருவருக்கு பழகிப் போய் அதில் விருப்பம் வந்து விட்டால், அது அவனது குடும்ப பெருமையையும் பண்பையும் கெடுத்து விடும். - வை.மகேந்திரன் Explanation in English: If the poverty habitually tends one's life and the one is pushed to be interested, it would collapse the one's family's honour and pride. - MAHENDIRAN V ------------------ குறள் 1044: இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடியில் வறுமை வந்தால், அக்குடும்பத்தில் சோர்வை உண்டாக்கி இழிச்சொல் பேச வைத்து விடும். - வை.மகேந்திரன் Explanation in English: If the poverty tends on a highly traited family, laziness would raise in such family and would cause to speak illy talks. - MAHENDIRAN V ------------------ குறள் 1045: நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும் - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமையெனும் துன்பம், பற்பல துன்பங்கள் உருவாக வித்தாகிவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: The big misery namely poverty would be a core that would generate more and more miseries. - MAHENDIRAN V ------------------ குறள் 1046: நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - தெய்வப்புலவர் விளக்கம்: பல நூல்கள் கற்றறிந்து பண்பட்ட மனிதாராக இருந்து, பல நல் சொற்கள் கூறினாலும், அவர் வறுமையானவர் என்றால், அனைத்தும் மதிப்பிழந்து நிற்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one is very much literate by learning a numerous epics and being traited and preach to others good ones, if he is on poverty, all his skills would be invalid. - MAHENDIRAN V ------------------ குறள் 1047: அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமையில் இருப்பவர் இழிச் செயல் செய்ய நேர்ந்தால், பெற்ற தாயே அவரை இவர் யாரோ - என்று சொல்வாள். - வை.மகேந்திரன் Explanation in English: If one, who is on poverty, practices any evil acts, even the one's mother too would comment as 'who is this guy?' - MAHENDIRAN V ------------------ குறள் 1048: இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நேற்று துன்பத்தை தந்து கொன்ற வறுமை இன்றும் தொடர்ந்தால், எப்படி நான் வாழ்வேனோ - என்று ஒருவரை கலங்கவைத்துவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: If the poverty that killed yesterday by causing a lot of miseries continues also today, the victim would cruelly be saddened by saying how he is going to live. - MAHENDIRAN V ------------------ குறள் 1049: நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது - தெய்வப்புலவர் விளக்கம்: நெருப்பினுடே கூட ஒருவர் துயில் கொள்வது சாத்தியப்படக்கூடும் ஆனால் வறுமையில் உழல்பவர் தூக்கத்தை துறப்பர். - வை.மகேந்திரன் Explanation in English: It might be possible to sleep alongwith fire, but it is not possible to ones who are covered by poverty, to have a sleep. - MAHENDIRAN V ------------------ குறள் 1050: துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று - தெய்வப்புலவர் விளக்கம்: அன்றாட தேவையான உணவு உடை இருப்பிடம் இல்லாமல் இல்லறம் துறவா நிலையிலிருப்போருக்கு கிடைக்கும் உப்பும் கஞ்சியும் ஒரு அற்ப சந்தோஷமே. - வை.மகேந்திரன் Explanation in English: Of course Getting gruel and salt is trivial happiness to ones who are struggling for having usual commodities but willing for family life. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 106. இரவு CHAPTER 106. TO BEG / TO CLAIM FOR HELP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லாமையில் உழல்பவன் இருப்பவனிடம் உதவி கேட்கும் பட்சத்தில், பொருள் தரத் தகுதியுடையவன் தாராதிருந்தால் அவனுக்குத்தான் அது இழுக்கு - வை.மகேந்திரன் Explanation in English: When a man who is in poverty looks for help to a wealthier, if the wealthier denies to help despite having a lot, it's a degrade only to the wealthier. - MAHENDIRAN V ------------------ குறள் 1052: இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின் - தெய்வப்புலவர் விளக்கம்: கொடுக்கல் வாங்கலில் துன்பமுறும் நிலை ஏதுமில்லையெனில், கொடுத்தவருக்கும் மகிழ்ச்சி வாங்கியவருக்கும் மகிழ்ச்சி. - வை.மகேந்திரன் Explanation in English: If there is no issues during the transaction between giver and getter, both who helps and who is helped would be happy. - MAHENDIRAN V ------------------ குறள் 1053: கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோர் ஏஎர் உடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: வஞ்சமில்லா வெளிப்டையான மனதுடைய நல்லோரிடம் பெறும் உதவி பெருமைக்குரியதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Of course, the state of being helped by the broad minded and transparented is proudable one. - MAHENDIRAN V ------------------ குறள் 1054: இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு - தெய்வப்புலவர் விளக்கம்: உள்ளொன்று புறமொன்று என்ற மனநிலையை கனவிலும் கண்டறியாத நல்லோரிடமிருந்து உதவி பெறுதல், பிறர்க்கு உதவும் நிலைக்கு ஒப்பானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The state of being helped by ones who aren't having dark trait even in their dream is like the state of helping to others. - MAHENDIRAN V ------------------ குறள் 1055: கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது - தெய்வப்புலவர் விளக்கம்: இருப்பது என் பொருள் நான் யாருக்கும் தரேன் என்று சொல்லாமல் வறுமையாளரின் முகத்தை பார்த்தே ஈகையை கடமையாய் செய்பவர்கள் உள்ளதால் தான் கேட்போர்கள் (இரப்போர்கள்) துன்பம் இல்லாமல் இருக்கிறார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Only because of existing of the persons who are always ready to help others by just reading face, those who beg to others are living without misery. - MAHENDIRAN V ------------------ குறள் 1056: கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லை என்று சொல்லாத ஈகை மனம் கொண்டோரை கண்டாலே போதும், வறுமையாளரின் துன்பம் பறந்து போகும். - வை.மகேந்திரன் Explanation in English: If those who do never say the word 'NOTHING' and having helping Trait always- are just seen by the povertised persons that's enough. The misery of povertised would fly away. - MAHENDIRAN V ------------------ குறள் 1057: இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: உதவி கேட்போரை இகழ்ந்து பேசாது, அவர் நிலை கண்டு இரக்கம் காட்டி மதித்து நடந்துகொள்வோரை கண்டால், உதவி கேட்போருக்கு மனம் மகிழ்ந்துபோகும். - வை.மகேந்திரன் Explanation in English: Povertised would be pleasant, if they see the good hearted persons who don't blame povertised but sympathizing on poor people. - MAHENDIRAN V ------------------ குறள் 1058: இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: பொருளிருப்போர், இல்லாதோர்க்கு இரக்கம் காட்டி ஈகை செய்ய தவறுபவர்கள் நடமாடும் மர பொம்மைகளை போன்றவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Those who hesitate to help to povertised, despite being wealthful, are equallent to movable wooden toys. - MAHENDIRAN V ------------------ குறள் 1059: ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லாதோர் இவ்வுலகில் இல்லையென்றால், எல்லாம் இருக்கும் வல்லார் இல்லாதோர்க்கு உதவும் புண்ணியத்தை இழப்பர். - வை.மகேந்திரன் Explanation in English: If there is no povertised people in this world, wealthiers would lose the virtue as they don't have opportunity to help. - MAHENDIRAN V ------------------ குறள் 1060: இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி - தெய்வப்புலவர் விளக்கம்: ஈகை செய்யாதோர் மேல் பொருள் கேட்போர் கோபம் கொள்தல் கூடாது. கேட்டும் கிடைக்காத நிலை துன்பம் என்றால் அதற்கு காரணம் வறுமையே. - வை.மகேந்திரன் Explanation in English: Those who claim help shouldn't get anger on ones who help others, perhaps they fail to help. If such failure causes misery, the reason for that is one's poverty. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒளிவு மறைவு இல்லாத நல்லுள்ளம் படைத்தோர் ஈகை செய்ய காத்திருந்தாலும், பொருள் வேண்டி அவரிடத்தில் போய் கேட்காத நிலை கோடி நன்மையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one who is transparent and good hearted is ready to help, if one doesn't ask for money despite being poverty, that state is crore times better. - MAHENDIRAN V ------------------ குறள் 1062: இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் - தெய்வப்புலவர் விளக்கம்: இரந்து மட்டும் தான் ஒருவர் உயிர் வாழமுடியும் என்றொருச் சூழல் இருக்குமானால், இவ்வுலகை படைத்தவன் இரப்பவர் படும் வேதனையை விட அதிகம் வேதனைப்பட்டு கெட்டொழியட்டும். - வை.மகேந்திரன் Explanation in English: If there is situation that one can survive in this world only by the way of begging, May the lord who created this world suffer multi times more than the suffering of help seekers. - MAHENDIRAN V ------------------ குறள் 1063: இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில் - தெய்வப்புலவர் விளக்கம்: உழைப்பதற்கு பதிலாக இரந்துண்டு வாழ்வதே மேல் என்று நினைத்து வாழும் வாழ்க்கையை காட்டிலும் கொடுமையானது யாதொன்றும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: If one thinks that he can manage his life only by seeking help from others instead of earning by working hard, there is no any other misery as it is. - MAHENDIRAN V ------------------ குறள் 1064: இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமையில் உழன்றாலும் பிறரிடம் உதவி கேளா மான்பைப் போல் இவ்வுலகத்தில் வேறெதும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Even if being atmost poverty, the state of not asking help to others is the biggest honour in this world. No any other pride can be equallent to this. - MAHENDIRAN V ------------------ குறள் 1065: தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த துண்ணலின் ஊங்கினிய தில் - தெய்வப்புலவர் விளக்கம்: உழைப்பில் கிட்டும் நீர் நிறைந்த கஞ்சியை பருகும் பொழுது கிடைக்கும் இன்பத்திற்கு இணையென்று கூற எதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: There is no pleasant from anything else than eating watery kanji that is obtained by own earning. - MAHENDIRAN V ------------------ குறள் 1066: ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில் - தெய்வப்புலவர் விளக்கம்: தன் பசுவிற்கு தண்ணீர் வேண்டும் என்று மற்றவரிடம் கேட்பது கூட கேட்பவரின் நாவிற்கு இழிவானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if asking to others even water for one's cow too is degraceful to the tongue of one who asks. - MAHENDIRAN V ------------------ குறள் 1067: இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற் கரப்பார் இரவன்மின் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: பொருள் வைத்திருந்து அதை மறைத்து, கொடுக்க மறுப்போரிடம் பொருள் வேண்டி நிற்றல் கூடவே கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: One must not stand for help infront of one who denies to aid despite having a lot but suppressing it. - MAHENDIRAN V ------------------ குறள் 1068: இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: பொருள் இருந்து அதை தந்து உதவ மறுப்போரின் இரும்பு பாறையில் இல்லாதோரின் மரத்தோணி மோதினால் நொறுங்கித்தான் போகும். - வை.மகேந்திரன் Explanation in English: If a wooden boat of state of poverty dashes on the iron rock of cunning wealthier, the wooden boat of povertier would be smashed. - MAHENDIRAN V ------------------ குறள் 1069: இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: இரப்பவரின் நிலையை கண்டு உள்ளம் தான் உருகும். பொருள் இருந்து ஈகை செய்ய மறுப்போரை நினைத்தால் உருக உள்ளமே இல்லாமல் போகும். - வை.மகேந்திரன் Explanation in English: If we see the state of poverty of one, our heart would melt but if we just think about one who denies to help though having a lot but suppress it, we can't find heart to melt. - MAHENDIRAN V ------------------ குறள் 1070: கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர் - தெய்வப்புலவர் விளக்கம்: பொருள் கேட்டு, இல்லை என்று பிறர் சொன்னால் இரப்போருக்கு உயிரே போகிறது ஆனால் இல்லை என்று சொல்பவருக்கு போவதற்கு உயிர் இல்லையோ? - வை.மகேந்திரன் Explanation in English: Help seekers are feeling that they have lost their lives when they heard the word of denying. But those who deny to help do not have live to lose it, do they? - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் - தெய்வப்புலவர் விளக்கம்: உள்ளத்தில் கயமை தனமும் உருவத்தில் இனிமையாகவும் தோன்றும் தன்மையை மனித இனத்தில் தவிர வேறு உயிரினத்தில் காணமுடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: One cannot see this status at any living beings as it is seen in human habits that is the turpitude trait inside but sweety behaviour out side. - MAHENDIRAN V ------------------ குறள் 1072: நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லவர் நன்மை தீமையை ஆராய்ந்து வாழ்வதாலும், கயவரோ எது பற்றியும் (நீதி நேர்மை) கவலைப்படாது வாழ்வதாலும் கயவர்கள் செல்வந்தர்களாக காணப்படுகிறார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Turpituder looks always wealthy because they do not bother about justice at any situation whereas good people are afraid of justice. - MAHENDIRAN V ------------------ குறள் 1073: தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் - தெய்வப்புலவர் விளக்கம்: கயவரும் தேவரும் ஒரு விதத்தில் ஒன்றே. காரணம், கயவர்கள் யாதொரு கட்டுப்பாடுமின்றி வாழ்வதால் விரும்பியவற்றுடன் தேவர்களை போல் வாழும் நிலை ஏற்படுகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: At an angle, turpituders can be compared to the gods since they can live with all their needs because of running an unconditional life. - MAHENDIRAN V ------------------ குறள் 1074: அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ் - தெய்வப்புலவர் விளக்கம்: பண்பாடு கருதி அடங்கி வாழும் மக்களை கண்டால், கயவர் எது பற்றியும் கவலைப்படாததால், தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற இருமாப்புக் கொள்வர் கயவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Turpituders get arrogance and dominance as they don't bother about anything when they look at people who live with justice because of fear to society. - MAHENDIRAN V ------------------ குறள் 1075: அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது - தெய்வப்புலவர் விளக்கம்: அச்சம் என்றொன்று கயவரிடம் இருந்தால் ஒழுக்கம் இருந்திருக்கும். இச்சை கொள்ளும் பொருள் கிடைக்கும்வரை ஒழுக்கம் நிறைந்தவர் போல் காட்டி கொள்வர் கயவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: If turpituders had fear to God, they would be disciplined in life. They would pretend like disciplined persons till they obtain things which they desire. - MAHENDIRAN V ------------------ குறள் 1076: அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான் - தெய்வப்புலவர் விளக்கம்: கேட்டறிந்த செய்திகளை ரகசியம் காக்கத் தெரியாத கயவர்கள் உடனே பிறர்க்கு தெரிவிப்பதால் பறை என்ற வாத்தியத்திற்கு ஒப்பானவர்கள் ஆவார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Turpituders are equallent to the Indian traditional instrument that is used for announcement since they suddenly reveal the matter whatever they hear. - MAHENDIRAN V ------------------ குறள் 1077: ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கையர் அல்லா தவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஓங்கும் கையில்லாத எளியோருக்கு (முரடரல்லாதவர்க்கு) எச்சில் கையால் கூட ஈகை செய்யமாட்டார்கள் கயவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Turpituders wouldn't ready to helping even with their eating hand to weakers who aren't rude in living style and who don't do arrogant activities. - MAHENDIRAN V ------------------ குறள் 1078: சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல கொல்லப் பயன்படும் கீழ் - தெய்வப்புலவர் விளக்கம்: சான்றோர் எளியோருக்கு எளிதில் உதவுவர் ஆனால் கரும்பை பிழிவது போல் பிரயத்தனம் செய்தால் மட்டுமே கயவரிடமிருந்து உதவி பெறமுடியும். - வை.மகேந்திரன் Explanation in English: Well Literates would frequently help to ones who are weak in finance but it would be hard as if twisting sugarcane to get the help from turpituders. - MAHENDIRAN V ------------------ குறள் 1079: உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறர் உடுத்துவதிலும் உண்பதிலும் பொறாமை கொண்டு குற்றம் கண்டு செய்தியாக்குவார்கள் கயவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Turpituders would be jealous and make blame when they look at ones who are eating good and dressing rich. - MAHENDIRAN V ------------------ குறள் 1080: எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து - தெய்வப்புலவர் விளக்கம்: தமக்கு துன்பம் என்று ஒன்று வந்து விட்டால், தன்னையே விரைந்து விற்பதற்கும் தயங்க மாட்டார்கள் கயவர்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Turpituders would not hesitate to sell even themselves if they get any big misery in life. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 பகுதி- 3. இன்பத்துப்பால் MORALITY OF LOVE --------------- அதிகாரம் 109. தகை அணங்குறுத்தல் CHAPTER 109. THE PRE-MATURED LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: யார் இவள்? கம்மலும் மயக்கும் அழகும்! தெய்வமா மயிலா அல்லது பெண்ணா? மயக்கம் வருகிறது! - வை.மகேந்திரன் Explanation in English: Who is she..? Has worn ear rings to mesmerize me? Is she Angel or peacock? She causes kiddiness! - MAHENDIRAN V ------------------ குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: நான் பார்க்கும் பொழுதே அவள் பார்த்து வீசிடும் அந்த பார்வை அதீத சேனைக்கு சமம். - வை.மகேந்திரன் Explanation in English: Her sharpening sight when I see her is not alone. I predict that her sight is equallent to a numerous troops! - MAHENDIRAN V ------------------ குறள் 1083: பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு - தெய்வப்புலவர் விளக்கம்: நமனை நான் கண்டறியேன். ஆனால் இவளது கூரிய பார்வையை கண்டபின்பே அறிந்தேன். பெண்ணுருவில் அவள் மயக்கும் கண்களால் என் உயிரை பறிக்காமல் பறிக்கும் பொழுது. - வை.மகேந்திரன் Explanation in English: I have never seen the god of death Yama. But now I'm seeing him by her attractive appearance that kills me without weapons but her sharpening eyes. - MAHENDIRAN V ------------------ குறள் 1084: கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண் - தெய்வப்புலவர் விளக்கம்: உருவத்தில் பெண்ணாக இருக்கிறாள். அவள் காணும் வியூகமோ உயிரை பறிப்பது போலுள்ளதே. என்ன ஒரு முரண்பாடு. - வை.மகேந்திரன் Explanation in English: She looks like a pretty woman but her style of eye sight seems to be killing me. What a state of controversy it is! - MAHENDIRAN V ------------------ குறள் 1085: கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: இவள் நமனா அல்லது கயல் விழியாலா அல்லது அழகு பதுமையா? குழப்பம் இல்லை. மூன்றும் தான். - வை.மகேந்திரன் Explanation in English: Is she the god of death or she who has the eyes like fish or a pretty angel? No more second thought... She is all of those. - MAHENDIRAN V ------------------ குறள் 1086: கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: அவளது புருவம் மீனைப்போல் வளைந்திருப்பதால் தான் வினை. அது வளையாமல் நேராக அமைந்திருந்தால் என்னை நேர் கொண்டு கொன்றிருந்திருக்கமாட்டாள்- வை.மகேந்திரன் Explanation in English: The problem is her eyebrows because they really kill me. It they weren't bowed and being straightened she would never kill me. - MAHENDIRAN V ------------------ குறள் 1087: கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் - தெய்வப்புலவர் விளக்கம்: அவளது நிமிர்ந்து நிற்கும் மார்பின் மேல் படர்ந்திருக்கும் பட்டாடை மதம் கொண்ட யானையின் முகப்படாம் போலுள்ளது. - வை.மகேந்திரன் Explanation in English: The cloths covered on her pretty boobs are looking like the cover-cloth of forehead of rutting elephant. - MAHENDIRAN V ------------------ குறள் 1088: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு - தெய்வப்புலவர் விளக்கம்: படைகளத்தில் பகைவர்களை அஞ்சவைக்கும் என்னை, அவளது நெற்றியின் அழகு என்னை தோற்கவைக்கிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Her prettiest forehead is defeating me who has scared almost all troops in the battle. - MAHENDIRAN V ------------------ குறள் 1089: பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து - தெய்வப்புலவர் விளக்கம்: அவளது பார்வையும் நாணமும் தான் விலையுயர்ந்த ஆபரணங்கள். செயற்கையாய் எதற்கு இவளுக்கு நகையலங்காரம்? - வை.மகேந்திரன் Explanation in English: Already she has worn the expensive ornaments such as her sharpened sight and shyness of her. Then why does she need to wear the artificial ornament namely jewels? - MAHENDIRAN V ------------------ குறள் 1090: உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று - தெய்வப்புலவர் விளக்கம்: உண்ட பின் தான் காய்ச்சிய கள் போதை தரும். கண்டாலே போதை தரும் மருந்து காதலைத் தவிர வேறென்ன? - வை.மகேந்திரன் Explanation in English: Liquor would lay one only after drinking it. But the love would lay down one just by the pretty sights. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள். அதிகாரம் 110. குறிப்பறிதல் CHAPTER 110. RECOGNISING THE SIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1091: இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: இவளது பார்வை இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று, ஏதோ ஒரு துன்பத்தை தர இருக்கிறாள். மற்றொன்று அத்துன்பத்தின் மூலம் இன்பம் என்கிற மருந்தை வழங்க இருக்கிறாள் - வை.மகேந்திரன் Explanation in English: Her sight is signalling two things. One is that she is to offer a misery. The another one is that she is to offer a medicine namely pleasance through such misery. - MAHENDIRAN V ------------------ குறள் 1092: கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது - தெய்வப்புலவர் விளக்கம்: அவளது அந்த கள்ளப் பார்வை நிச்சயம் காமத்தின் உச்சத்தை தராமல் பாதியில் நிறுத்துவதாக தெரியவில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: I predict that she would not stop in half of the way without offering the top most lust. Because her stealing sight is saying like that. - MAHENDIRAN V ------------------ குறள் 1093: நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் - தெய்வப்புலவர் விளக்கம்: என்னை பார்த்ததும் நாணம் வந்து தலைகவிழ்ந்தாள். இதற்கு என்ன அர்த்தம்? நிச்சயம் அது என் மீதான காதலுக்கு நீரூற்றுகிறாள். வேறென்ன? - வை.மகேந்திரன் Explanation in English: When she looks at me she gets shy and bowed her head. Surely it means that she is watering for loving me, doesn't it? - MAHENDIRAN V ------------------ குறள் 1094: யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும் - தெய்வப்புலவர் விளக்கம்: நான் பார்த்தால், நிலத்தை பார்க்கிறாள். பார்க்காத பொழுது என்னை நாணம் மிகுந்த நகைப்புடன் பார்த்து மகிழ்கிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: When I see her she looks at the land. She looks at me with a shyfull pleasant smile when I don't see her. - MAHENDIRAN V ------------------ குறள் 1095: குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - தெய்வப்புலவர் விளக்கம்: அவள் என்னை குறிவைத்து பார்க்காமல் ஆனால் நன்கு பார்த்து மகிழ்கிறாள் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: I clearly know that she flows her sight on me cheerfully but she pretends as if she doesn't see me as a target. - MAHENDIRAN V ------------------ குறள் 1096: உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: என்னிடம் அவள் பேசினாள். யாரோ எவரோ என்றாள். அது அவள் என் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்படைத்தன்மை என்பது மட்டும் நிச்சயம் தெரியும். - வை.மகேந்திரன் Explanation in English: She talked to me like a stranger. She said that she was somebody else to me. But I realise that it is a transparent signal for love. - MAHENDIRAN V ------------------ குறள் 1097: செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: அவளது பகை போன்ற பேச்சும் சினம் போன்ற பார்வையும் தோற்றத்திற்கு தான். உள்ளபடி அன்புக்காக ஏங்குகிறாள் என்பது தெரிகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Her eneminess talk and angered sight are just an attire. But it really seems that she is yearning for love from me. - MAHENDIRAN V ------------------ குறள் 1098: அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் - தெய்வப்புலவர் விளக்கம்: அயலார் போல் அவள் பேசினாலும் பார்த்தாலும் நான் மீண்டும் அவளை பார்க்கும்பொழுது அவளது அக சிரிப்பு புறத்தில் அழகூட்டுகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Even though she sees and talks like a stranger, when I see her again, her intensive smiling beautifies her full attire. - MAHENDIRAN V ------------------ குறள் 1099: ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள - தெய்வப்புலவர் விளக்கம்: அவள் என்னை அந்நியர் போல் பார்க்கும் தன்மை நாணமிகுதியால் ஏற்பட்டதாகும். நேர்மையான காதலின் வெளிப்பாடு இதுதான். - வை.மகேந்திரன் Explanation in English: The state of her strangerous looking style is caused of her shyness. In fact, this is the out put of the true love. - MAHENDIRAN V ------------------ குறள் 1100: கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - தெய்வப்புலவர் விளக்கம்: அவளும் நானும் கண்களாலேயே அனைத்தையும் பேசி முடித்துவிட்ட பிறகு வாய்ச் சொல் வார்த்தைகள் எதற்கு? - வை.மகேந்திரன் Explanation in English: While she and I have finished up all our communication over our eyes, Is it necessary to talk verbally? - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல் CHAPTER 111. THE PLEASANCE OF BED-GAME OF COUPLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1101: கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள - தெய்வப்புலவர் விளக்கம்: வளையல் அணிந்த இந்த பேரழகியிடம் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் வலிமை உண்டு. கேட்டு, பார்த்து, முகர்ந்து, உண்டு, தீண்டி மகிழும் இன்பம் இவளிடம் மட்டுமே உண்டு. - வை.மகேந்திரன் Explanation in English: Only spouse can offer pleasance to all five senses. Her man can enjoy with her by hearing her honey words, by seeing her beauty, by inhaling her fragrance, by licking her body and by hugging her wholly. - MAHENDIRAN V ------------------ குறள் 1102: பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: பல நோய்களுக்கு மருந்தில்லாமல் இருக்கலாம் ஆனால் இவள் தந்த இன்ப பிணிக்கு ஆபரணம் அணிந்த இவளே மருந்து. - வை.மகேந்திரன் Explanation in English: There may be unfound medicines for some diseases but she who has worn the ornaments is the medicine for the pleasant disease that was offered by her attire. - MAHENDIRAN V ------------------ குறள் 1103: தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு - தெய்வப்புலவர் விளக்கம்: துணைவியாரின் தோளில் சாய்ந்து உறங்கும் பொழுது ஒருவனுக்கு கிடைக்கும் இன்பம் தாமரையில் உறங்கும் கண்ணனுக்கு கூட கிடைத்தாது. - வை.மகேந்திரன் Explanation in English: Even the lord who sleeps on the lotus bed too can't get the pleasance like one can easily get it when he is sleeping on the arms of his spouse. - MAHENDIRAN V ------------------ குறள் 1104: நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் - தெய்வப்புலவர் விளக்கம்: விலகினால் சுடுகிறது நெருங்கினால் குளிர்கிறது இவ்வொரு இன்பப்பெருக்கை இவள் எங்ஙனம் பெற்றாளோ! - வை.மகேந்திரன் Explanation in English: When I'm leaving her, I feel heat more, when I near her I feel so cold. How did she obtain this miracle status with her to offer me? - MAHENDIRAN V ------------------ குறள் 1105: வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் - தெய்வப்புலவர் விளக்கம்: விரும்பும் பொருள் விரும்பிய நேரத்தில் கிடைப்பது எத்தகைய இன்பம்? அத்தனை இன்பம் தருவது யாதெனில், மலரணிந்த மனைவியான மங்கையவள் தோள் மீது சாயும் பொழுது கிடைப்பதே. - வை.மகேந்திரன் Explanation in English: Won't one be surprised if he gets things whenever he wishes to get them? The same pleasance can be offered when he lays on the arms of his spouse. - MAHENDIRAN V ------------------ குறள் 1106: உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள் - தெய்வப்புலவர் விளக்கம்: துணைவியை தழுவும் பொழுது துணைவனும் அவளும் கிளர்ந்தெழக் காரணம், அவளது தோள் பெற்றிருக்கும் அமிர்தத்தை தவிர வேறென்ன? - வை.மகேந்திரன் Explanation in English: The reason for getting stimulation for orgasm at the time of hugging state of couple is nothing but the elixir gotten by her on her arms. - MAHENDIRAN V ------------------ குறள் 1107: தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: இம் மாநிறப் பெண்ணை தழுவுவதால் கிடைக்கும் இன்பம், உழைப்பில் ஈட்டிய செல்வத்தை சுற்றத்துடன் வீட்டில் அமர்ந்து அனுபவிக்கும் இன்பத்திற்கு ஈடானது. - வை.மகேந்திரன் Explanation in English: The pleasance gotten during hugging this wheat colour angel is equallent to the pleasance gotten during eating and enjoying together with colleagues by one's own earning at home. - MAHENDIRAN V ------------------ குறள் 1108: வீழும் இருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: காற்றும் புக முடியா அளவு துணைவியை இறுக கட்டி அணைத்து பெரும் இன்பம் துணைவிக்கும் துணைவனுக்கும் பேராணந்த நிலையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Hugging spouse so tightly even no gape even for air would cause the upmost lust to both husband and wife. - MAHENDIRAN V ------------------ குறள் 1109: ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடலுக்கு பின் உடல்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு கிடைக்கும் காம நிலை அவ்வாறு செயல்பட்டோருக்கு கிடைத்த வரப்ரசாதம். - வை.மகேந்திரன் Explanation in English: The couple would surely be satisfied with upmost orgasm if they start to play the bed game after a playful quarrel. - MAHENDIRAN V ------------------ குறள் 1110: அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒவ்வொன்றையும் ஒருவர் அறிய அறிய, அவர் தான் அதை அத்தனை நாட்கள் அறியாமலிருந்ததை உணர்வார் அல்லவா? அது போல் துணைவியுடன் கூடும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொன்றை புதிதாய் அறிவார் ஒருவர். - வை.மகேந்திரன் Explanation in English: Doesn't one realise his unlearned state when he learns a thing newly? The same thing happens here. A couple would be learning every new thing everyday during their routine bed game. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 112. நலம் புனைந்து உரைத்தல் CHAPTER 112. TO ADDRESS BY GOOD WORDS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் - தெய்வப்புலவர் விளக்கம்: மென்மைக்கு புகழ் பெற்றது அனிச்சம் மலர் தான். யார் இல்லை என்றது. ஆனால் அதை விட மென்மையானவள் என்னை வீழ்த்திய என் அவள். - வை.மகேந்திரன் Explanation in English: The flower namely Aniccam is the icon for the softness. No more any second thought. But my woman is the softer than Aniccam. - MAHENDIRAN V ------------------ குறள் 1112: மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: மலர்களை கண்டு மயங்கும் இதயமே, பலரும் கண்டு வியக்கும் மலர்களுக்கு ஒப்புமையான என் அவளின் கண்களை விடவா மலர்கள் பெரிது? - வை.மகேந்திரன் Explanation in English: Oh the heart who is inspired because of your looking at flowers! Are you sure that the flowers are more beautiful than the eyes of my woman? - MAHENDIRAN V ------------------ குறள் 1113: முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு - தெய்வப்புலவர் விளக்கம்: என் அவள், மூங்கில் போன்ற தோள்களுடையாள்; அவள் மேனி மாந்தளிரை போன்றது; முத்துக்கள் போன்ற பற்களுடையாள்; இயற்கை மணமே அவள் நறுமணம்; வேலை போன்ற விழிகளுடையவள். - வை.மகேந்திரன் Explanation in English: She is the special. Her arms are like bamboo; her teeth are lined up like pearls; her structure looks like an infant mango plant; her nature smell is indeed a special fragrance; her eyes are of course like a lance. - MAHENDIRAN V ------------------ குறள் 1114: காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: குவளை மலர்கள் என் அவளின் கண்களை பார்க்க நேர்ந்தால், நிச்சயம் அவைகள் தோற்றுப்போனதால் தலைகவிழும். - வை.மகேந்திரன் Explanation in English: If a kind of flowers namely Kuvalai look at my angel's eyes, they would surely bow their heads to the land as if agreeing that they get failed. - MAHENDIRAN V ------------------ குறள் 1115: அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை - தெய்வப்புலவர் விளக்கம்: அவள் அணிச்சம் மலர்களை காம்பு நீக்காமல் அணிந்தது தான் தாமதம், அவளது மெல்லிய இடை ஒடிந்தது. பறை முழக்கம் இனிதாக இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: No sooner she has worn the Aniccam flowers with stems on her hair than her soft hib bowed. The rhythm too missed the pitch. - MAHENDIRAN V ------------------ குறள் 1116: மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன் - தெய்வப்புலவர் விளக்கம்: இவளது முகத்தையும் நிலவையும் ஒருங்கே கண்டு விண்மீன்கள் எது அசல் என்று இனம்காண முடியாமல் தவிக்கின்றன. - வை.மகேந்திரன் Explanation in English: All stars in the sky get confusion to realise which is real and unreal. Because those are simultaneously looking at the moon and my angel's face. - MAHENDIRAN V ------------------ குறள் 1117: அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து - தெய்வப்புலவர் விளக்கம்: நிலவோ தேயும் பின் வளரும். களங்கம் உண்டு நிலவுக்கு. என் தேவதையின் முகத்தில் அப்படியொரு களங்கம் என்றும் இருந்ததில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: There is waning and waxing occasions in the moon. It's a scratch to the moon. But there is no such a scratch to the face of my angel. So her face is greater than the moon. - MAHENDIRAN V ------------------ குறள் 1118: மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி - தெய்வப்புலவர் விளக்கம்: நிலவே நான் சொல்வதை கவனி. ஒளி வீசும் வித்தையில் என் அவளின் முகத்தை நீ வென்றாயானால், நீ என்னை காதலிக்கலாம். - வை.மகேந்திரன் Explanation in English: Oh the moon. Listen to my words. If you defeat the face of my angel in flashing bright light, you may start to love me. - MAHENDIRAN V ------------------ குறள் 1119: மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி - தெய்வப்புலவர் விளக்கம்: ஓ முழு நிலவே. மலர் போன்ற கண்களுடைய என் அவளின் முகத்தை பொலிவுப் போட்டியில் நீ வீழ்த்த வேண்டுமா? பலரும் காணும் வண்ணம் விண்ணில் நீ தோன்றுவதை நிறுத்தினால் மட்டுமே அது சாத்தியம். - வை.மகேந்திரன் Explanation in English: Oh my dear full moon, Do you want to defeat the face of my angel who has eyes like flowers in the competition for glittering? It is possible only when you stop your visibility to all persons' sight. - MAHENDIRAN V ------------------ குறள் 1120: அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் - தெய்வப்புலவர் விளக்கம்: அனிச்சம் மலரும் அன்னத்தின் இறகுகளும் மென்மையாயிருந்து என்ன பயன்? என் தேவதையில் மென்மையான பாதத்திற்கு அவைகள் நெருஞ்சி பழ முற்கள் போன்றவை. - வை.மகேந்திரன் Explanation in English: Nothing is gain even if the aniccam flower and the feathers of swam are so soft. Because they would stetch like thorn of tribulus terrestris to my angel's feet if she steps on them. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல் CHAPTER 113. ADDRESSING THE FEATURES OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர் - தெய்வப்புலவர் விளக்கம்: மென்மையாக பேசும் இவளது இதழ் சுரக்கும் அமுத நீர், பாலோடு தேன் கலந்தால் தரும் சுவையை விட சுவையானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The weter secretes from the mouth of this angel who speaks so softly is tastier than the combination of milk and honey. - MAHENDIRAN V ------------------ குறள் 1122: உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு பிண்ணிபிணைந்தது என்றால், அவளுக்கும் எனக்கும் உள்ள உறவும் அத்தகையதே. - வை.மகேந்திரன் Explanation in English: Is the relationship between body and soul spinned one or not? If it is spinned one, the love between me and her is also the same stand. - MAHENDIRAN V ------------------ குறள் 1123: கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற் கில்லை யிடம் - தெய்வப்புலவர் விளக்கம்: கண்மணிக்குள் ஒளிந்திருக்கும் பாவையே, நான் விருப்பும் அழகி வருகிறாள். நீ விலகிச்சென்று அவளுக்கு அங்கே இடம் தரலாமே. - வை.மகேந்திரன் Explanation in English: Oh the beautiful angel who has hidden yourself inside the eyeball of me! The more pretty angel whom I love very much is coming. Vacate the place and let her stay there. - MAHENDIRAN V ------------------ குறள் 1124: வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஆபரணம் நிறைந்த அழகு பதுமையான இவள் என்னை தழுவும்பொழுது என் உடம்புக்கு உயிர் தருகிறாள். நீங்கும்பொழுது என் உயிரையே எடுத்துச் சென்றுவிடுகிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: When this pretty who has worn ornaments hugs me, she offers soul to my body. When she leaves me, she has stolen my soul and gone. - MAHENDIRAN V ------------------ குறள் 1125: உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒளி நிறை விழிகள் கொண்ட என் வேல் விழியாளை நான் என்றும் மறவேன். மறந்தால் தானே நினைத்துப்பார்க்க வேண்டும்? - வை.மகேந்திரன் Explanation in English: I have never forgotten my glittering beautiful woman. Why need I remember her whereas I have never forgotten her, right? - MAHENDIRAN V ------------------ குறள் 1126: கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எம் காத லவர் - தெய்வப்புலவர் விளக்கம்: என் கண்ணைவிட்டு அகலா பிரியமானவர் எம் காதலர். கண்ணை மூடித் திறக்கும் தருணத்திலும் என் கண்ணின் உள்ளேயே மயங்கி கிடக்கும் மதிநுட்பக்காரர் அவர். - வை.மகேந்திரன் Explanation in English: My man won't go away from my eyes ever. The cleverest man would never leave even when I blink my eyes. He would always be sleeping inside of my eyes. - MAHENDIRAN V ------------------ குறள் 1127: கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து - தெய்வப்புலவர் விளக்கம்: என் கண்ணின் உள்ளேயே பரந்து கிடக்கும் என்னவர், நான் என் கண்களுக்கு மை தீட்டினால், மறைந்து போனால் என் செய்வேன்? என் விழியை அழகு செய்ய நான் மை தீட்டுவதில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: I wouldn't draw my eyebrows for beautifying my eyes because, if my man who is living in my eyes is suppressed due to such action, What would I do? - MAHENDIRAN V ------------------ குறள் 1128: நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து - தெய்வப்புலவர் விளக்கம்: சூடான உணவை நான் உண்ணுவதில்லை. என் அன்பிற்குரிய காதலர் என் நெஞ்சத்துள் வாழ்வதால், நெஞ்சம் வழிச்செல்லும் அச்சூடான உணவு அவரை சூடுபடுத்திவிட்டால் என் செய்வேன்? - வை.மகேந்திரன் Explanation in English: I don't use to take hot food, because my most loving man is dwelling inside my heart. If the hot food that goes near my heart burns him what would I do? - MAHENDIRAN V ------------------ குறள் 1129: இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னுமிவ் வூர் - தெய்வப்புலவர் விளக்கம்: என் காதலர் என் விழியினூடே இருப்பதால், நான் இமைத்தால் அவர் தோன்றமாட்டார் என்பதால் நான் விழி மூடுவதில்லை. விழி மூடா நிலையை அவர் எனக்கு தந்துவிட்டதனால், அவரை அன்பற்றவர் என்கிறது இச்சமூகம். - வை.மகேந்திரன் Explanation in English: Since my loving man is living in my eyes, if I blink my eyes he may not appear often. Hence I don't use to blink my eyes. Being so, the society blames him a loveless man as if he has made me not to blink my eyes! - MAHENDIRAN V ------------------ குறள் 1130: உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர் - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சத்துள் எம் காதலர் நீக்கமற நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது பிரிந்து வாழ்வதாக இச்சமூகம் கூறுவது தான் வியப்பு. - வை.மகேந்திரன் Explanation in English: While my man has permanently tended in my heart, what the society is criticising that we are separated is utter fault! - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் CHAPTER 114. CONDEMNING THE OPPOSERS OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி - தெய்வப்புலவர் விளக்கம்: காதலின் மிகுதியால், காதல் கைகூடாமல் போய் வருந்துபவர் துறவிபோல் சாம்பல் பூசித் திரிந்து தன் துயரத்தை போக்குவதைவிட வலிமையானச் செயல் வேறெதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Because of mad passion on love, there is no any other strong protest against opposers of love like the lover does the protest by applying ash on whole body and roaming here and there. - MAHENDIRAN V ------------------ குறள் 1132: நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து - தெய்வப்புலவர் விளக்கம்: காதலின் பிரிவின் துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாத இந்த உடலும் உயிரும் மடலேறும் நிலை அடைய துணிகின்றன. (குறிப்பு: மடலேறுதல் என்பது, காதலி தன்னை விரும்பியும்கூட, ஏதோ காரணத்தால் அவளை அடையமுடியாத சூழ்நிலையில், காதலன் பித்து பிடித்தவன் போல் உடலில் சாம்பலைப் பூசிக்கொண்டு கிரீடம் போல் பனை ஓலைகளை குதிரைகளின் தலையில் கட்டி அக்குதிரையில் அமர்ந்து அங்கும் இங்கும் சுற்றி வருவது. இது ஒரு விதமான எதிர்ப்பு. தன்னை வருத்தி கொள்வது) - வை.மகேந்திரன் Explanation in English: Because of not able to realise the grief of the separation of love, this body and soul dare to reach the level of maladaptation. (Note: MADALERUTHAL means, when a girl loves a man, but for some reason, the man is unable to reach her so he wraps his body in ashes like a mad and wraps palm leaves around the head of horse. He rides the horse around here and there. This is a kind of condemn activity. Self punishing act.) - MAHENDIRAN V ------------------ குறள் 1133: நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்று வெட்க்கமும் ஆண்மையும் உள்ள நல்ல ஆண்மகனாக இருந்தேன். இன்றோ காமப்பிடியில் அகப்பட்டு பட்டுணர்ந்து மடலேறும் நிலையை உணர்கிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: I was a good man with shame and masculinity that day. Today, I feel caught in a state of misery of love, and feel doing some mad act to retrieve my love. - MAHENDIRAN V ------------------ குறள் 1134: காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை - தெய்வப்புலவர் விளக்கம்: காதலின் உச்சக் கட்டம் வெள்ளம் போன்றது. அது வெட்க்கம் ஆண்மை ஆகிய படகுகளை விழுங்கிவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: The summit of love is like a flood. It will swallow the boats of shame and masculinity. - MAHENDIRAN V ------------------ குறள் 1135: தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர் - தெய்வப்புலவர் விளக்கம்: வளையல்கள் அணிந்த இந்த இளம் குமரி, காதல் எனும் நோயை பரிசாக தந்ததோடு மடல் ஏறும் நிலையையும் உருவாக்கி விட்டாள். - வை.மகேந்திரன் Explanation in English: The young lady who is wearing beautiful bangles has not only gifted me a disease of love but also made a situation that I have to protest with some mad acts. - MAHENDIRAN V ------------------ குறள் 1136: மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: இந்த அழகுப்பெண்ணின் காதலினால் தூக்கம் பறிபோய்விட்டது. மடலேறும் நினைவே அடிக்கடி வருகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: I lost my sleep due to the love of this pretty woman. Only the memory that I get sage attire and protesting comes up ofetn. - MAHENDIRAN V ------------------ குறள் 1137: கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் - தெய்வப்புலவர் விளக்கம்: காதல் நோய் அவளை வருத்தியும் கூட மடலேறும் முடிவை அவள் மேற்கொள்ளாததிலிருந்தே தெரிகிறது பெண்மை உறுதியானது பெருமைக்குரியது என்று! - வை.மகேந்திரன் Explanation in English: It comes to know that feminism is so strong and proud of, because even if she suffered a lot due to love, she hasn't decided to climb on sage status. - MAHENDIRAN V ------------------ குறள் 1138: நிறையரியர் மன்னளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலின் தாக்கம் விசித்திரமானது. ரகசியம் காக்கும் தன்மையை உடைத்துவிடும். இரக்கப்படவைத்து விடும். அனைவரும் அறியும் வண்ணம் செய்துவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: The impact of love is something different. It would break the secrecy. It would make one be pitied. It would make everyone know the secrecy. - MAHENDIRAN V ------------------ குறள் 1139: அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம் மறுகின் மறுகும் மருண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: அவள்பால் நான் கொண்டிருந்த காதலை இது நாள் வரை நான் மட்டுமே அறிந்திருந்தேன். (என் மடலேறும் நிலையால்) இப்பொழுது இவ்வூரே அறியப்போகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: So far, Only I have known about my love put on her. Because of my decision of protesting with mad attire, this town is going to know it. - MAHENDIRAN V ------------------ குறள் 1140: யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு - தெய்வப்புலவர் விளக்கம்: காதல்வயப்பட்டு காதலை அடைய முடியாமல் துன்பப்படுவோரை பார்த்து அத்தகைய துன்பத்தை அனுபவிக்காத அறிவிலிகளே ஏளனமாக நகைப்பர். - வை.மகேந்திரன் Explanation in English: Only the utter fool guys who haven't experienced with the misery of love would giggle at those who are suffering from love disease. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல் CHAPTER 115. RUMOUR POPULARISES THE LOVE MATTER 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் - தெய்வப்புலவர் விளக்கம்: மக்கள் எங்கள் காதலை அவதூறாக பேசுவதால் தான் எங்கள் காதல் நிலைத்து நிற்கிறது. பேசுபவர்களுக்கு இது தெரியாது என்பது என் பாக்யம். - வை.மகேந்திரன் Explanation in English: Only because of the rumourers, our love is getting strength. They aren't aware of it is my virtue of course. - MAHENDIRAN V ------------------ குறள் 1142: மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர் - தெய்வப்புலவர் விளக்கம்: மலர் போன்ற விழியுடைய என்னவளின் பெருமையறியாது எங்கள் காதலை அவதூறு பேசுவது ஒரு வகையில் எனக்கு நல்லதாய் போயிற்று. பேசப்பேசத்தானே காதல் வலுக்கும்! - வை.மகேந்திரன் Explanation in English: Anyway, the speech done by the backbiters without knowing the prides of my lover who hias eyes like flowers is my goodness, because the love would flame more and more due to this type of talk. - MAHENDIRAN V ------------------ குறள் 1143: உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து - தெய்வப்புலவர் விளக்கம்: எம் காதல் கதையை ஊரார் அசைபோடாமல் போனால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்காது. பேசட்டும், பெறமுடியா நன்மை பெற்றதுபோல் உணர்வை அது ஏற்படுத்தும். - வை.மகேந்திரன் Explanation in English: Surely I wouldn't get happiness if the society didn't chew our love story. I am letting them chew, because I can realise that I have gotten some good thing that is not so easy to get. - MAHENDIRAN V ------------------ குறள் 1144: கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஊராரின் அலரால் (தூற்றுதலால்) தான் எம் காதல் வளமடைகிறது. இல்லேல் எம் காதல் அதன் தனித்தன்மையை இழந்திருக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: My love is strengthened well and good only because of the rumour spread by people. Otherwise my love would have lost its dignity. - MAHENDIRAN V ------------------ குறள் 1145: களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: தூற்றுதலால் எம் காதல் மேலும் மேலும் வளமடைவது, கள்ளுண்போர் உண்டு உண்டு களிப்புற்று கள்ளையே காதலிப்பது போலுள்ளது. - வை.மகேந்திரன் Explanation in English: What my love is getting growth a lot due to rumours of people is like the drunkers are sinking on dizzy at most owing to continual drinking. - MAHENDIRAN V ------------------ குறள் 1146: கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று - தெய்வப்புலவர் விளக்கம்: காதலர்கள் கண்டதும் பேசியதும் ஒரு நாள் தான், ஆனால் மக்களின் பேச்சோ "நிலவதனை பாம்பு விழுங்கிற்று" என்று கிரஹணத்தை பற்றி பேசுவது போல் காட்டு தீ போல் பரவிற்று. - வை.மகேந்திரன் Explanation in English: In fact, the lovers met with each other only one day. But the rumour spread across the town like a talk of eclipse as if the snake has swallowed the Moon. - MAHENDIRAN V ------------------ குறள் 1147: ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊராரின் அலர் பேச்சு எருவாயிற்று. அன்னையின் கண்டிப்போ நீராயிற்று. எம் காதல் பயிர் நீண்டு வளர இவைதான் காரணம். - வை.மகேந்திரன் Explanation in English: The rumour spread by people has been like fertilizer; my mother's oppose has been like water. These are the cores for the strength of my love. - MAHENDIRAN V ------------------ குறள் 1148: நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊராரின் அலர் (தூற்று) பேச்சு எம் காதலை கட்டுப்படுத்தும் என்பது எப்படி இருக்கிறது என்றால், நெய்யினை ஊற்றி நெருப்பை அணைப்பது போலுள்ளது. - வை.மகேந்திரன் Explanation in English: People expect that their rumours would contoll our love. Do you know how it is ? It's like that the action of putting off fire by pouring Ghee a lot on fire. - MAHENDIRAN V ------------------ குறள் 1149: அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: தூற்றுபவர்கள் நாணும்படி என்னவர் என்னிடம் அஞ்சவேண்டாம் என்றுரைத்து சென்றிருக்கும்பொழுது, நான் எதற்கு ஊரார் முன் நாணவேண்டும்? - வை.மகேந்திரன் Explanation in English: While my lover had promised me by encouraging not to fear for anything as far as people have to shy, why should I shy for these people's talk? - MAHENDIRAN V ------------------ குறள் 1150: தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்குமிவ் வூர் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊராரின் தூற்றுப் பேச்சை நான் விரும்பும் பொழுது என்னவரும் விரும்பிவந்து எனை ஏற்றுக்கொள்வார். - வை.மகேந்திரன் Explanation in English: While I am not bothering the rumours of these people and I like that very much, my lover too would like to accept me and would bring me with him. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 116. பிரிவு ஆற்றாமை CHAPTER 116. WORRIES OF SEPARATION OF LOVE. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை - தெய்வப்புலவர் விளக்கம்: நீ என்னைவிட்டு பிரிவதில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். பிரிந்து போவதாக இருந்தால் நீ திரும்பிவரும்பொழுது உயிருடன் இருக்கும் இந்த மக்களிடம் சொல்லிவிட்டு செல். அது எனக்கான செய்தியல்ல. - வை.மகேந்திரன் Explanation in English: If you are assure that you would never leave me, you can say to me bye. If you leave me permanently, say your bye to these people who are going to be alive when you return. - MAHENDIRAN V ------------------ குறள் 1152: இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: முன்பெல்லாம் அவரை கண்டாலே இன்பம் பெருகும். பிரியப்போகிறோம் என்பதனால் இப்பொழுதெல்லாம் தழுவும்பொழுது கூட துன்பம் வாட்டுகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Earlier, I would feel so pleasant even if he pays his sight on me. But nowadays I am very much worried out even on his hugging because I notice that we are to leave with each other. - MAHENDIRAN V ------------------ குறள் 1153: அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலர்கள் பிரிவது என்பது இயல்பாம். எனவே அறிவு நிறை என்னவர் பிரியேன் எனச் சொல்வதை என்னால் உறுதி செய்ய இயலவில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: It is said that separation of lovers is usual. So I wouldn't be able to put on trust his saying that he wouldn't leave me alone. - MAHENDIRAN V ------------------ குறள் 1154: அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு - தெய்வப்புலவர் விளக்கம்: இணையும் பொழுது நமக்குள் பிரிவு என்பதே இல்லை அஞ்சாதே என கூறியவர், இப்பொழுது நாம் பிரிகிறோம் என்கிறார். அவர் பேச்சை நான் நம்பியது எப்படி என் குற்றம் ஆகும்? - வை.மகேந்திரன் Explanation in English: He had promised strongly when we fell on love that we would never leave with each other. He says now simply that we are to leave with each other. Is it my fault what I had believed his words? - MAHENDIRAN V ------------------ குறள் 1155: ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: அவர் எனை விட்டு பிரியாச் சூழ்நிலை எனக்கு ஏற்படவேண்டும். ஏனெனில், காதலர்கள் பிரிந்தால் கூடுவது அரிது எனும் சோகம் எனை வாட்டுகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: I need the state that I ought not to leave from him. Because, I am hearing if the lovers are separated they can't rejoin. I am worried a lot in this regard. - MAHENDIRAN V ------------------ குறள் 1156: பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிகிறேன் எனச் சொல்ல துணிந்த என்னவர், திரும்ப வந்து அதே அன்பை என்னிடம் காட்டுவார் என நம்புவது வீண் ஆவல். - வை.மகேந்திரன் Explanation in English: While he dared to saying frankly that he is leaving from my heart, how could I believe that he would come back to me and show the same kind of love? - MAHENDIRAN V ------------------ குறள் 1157: துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை - தெய்வப்புலவர் விளக்கம்: கழலாத என் வளையல்கள் அவர் பிரிவால் கழற்றப்பட்டு நாங்கள் பிரிந்த செய்தி ஊராரால் தூற்றப்படுமோ என அஞ்சுகிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: Really I am in misery deeply because the entire people would notice and giggle at me of our love-separation when my beautiful bangles would be removed from my hands on the time of our leaving with each other. - MAHENDIRAN V ------------------ குறள் 1158: இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும் இன்னா தினியார்ப் பிரிவு - தெய்வப்புலவர் விளக்கம்: அன்புமிக்க உறவினர்களை பிரிந்து வாழ்வது துன்பமானதுதான். துன்பத்திலும் துன்பமானது யாதெனில், காதலர்கள் பிரிவது. - வை.மகேந்திரன் Explanation in English: The deep misery is that leaving benevolent colleagues from us. The deepest misery is that lovers are leaving with each other (the separation of love). - MAHENDIRAN V ------------------ குறள் 1159: தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ - தெய்வப்புலவர் விளக்கம்: தீயை தொட்டால் தான் சுடும். தொடாவிடில் எப்படி சுடும்? காதல் பிரிவின் துயரமோ அனுதினமும் சுட்டுக்கொண்டிருக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: The fire would not burn us when we don't touch it. It would burn only when we touch it. But the evil state of separation of love would be burning at all time. - MAHENDIRAN V ------------------ குறள் 1160: அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர் - தெய்வப்புலவர் விளக்கம்: பிரியும்பொழுது மணம் ஒப்பாமல் பின் மணம் ஒப்பி, பிரிந்த துயரத்தை பொருத்துக்கொண்டு உயிர் வாழும் காதலர்கள் பலர் இருக்கிறார்கள் தான்! - வை.மகேந்திரன் Explanation in English: Anyway, although having a lot sadness because of separation of love, still many people are living on this earth passing out their miseries by agreeing the separation but unable to digest it earlier. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 117. படர்மெலிந் திரங்கல் CHAPTER 117. BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊற்று நீர் இறைக்க இறைக்க தானே மேலும் ஊறும். அது போல, எம் காதலை மறைக்க மறைக்க தான் அது மிகுதியாகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: As if water is secreted more and more in the well when the water is pulled out often, our love too gets strengthened more and more when it is suppressed strongly. - MAHENDIRAN V ------------------ குறள் 1162: கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலின் உக்கிரத்தை மறைக்க வழியும் தெரியவில்லை, அவரிடம் அதை கூற நான் முயலும்பொழுது எனக்கு வரும் நாணத்தை மீறவும் முடியவில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: I could neither find the way to hide my love on him nor I could dominate the shy that I get when I try to say this matter to him. - MAHENDIRAN V ------------------ குறள் 1163: காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென் நோனா உடம்பின் அகத்து - தெய்வப்புலவர் விளக்கம்: காதல் தரும் இன்ப வலியை எடுத்து கூற இயலாத துன்ப நிலை ஒரு புறம்; மறுபுறம் அதிக அளவு வெட்க்கம். என் இவ்வுடம்பின் அகஉயிர் ஒரு காவடி போல் அப்புறமும் இப்புறமும் ஆடுகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: My soul in this body is dangling here and there like a Cavadi-bar because I have weight on both side. I get shy one side because of love. I feel misery because of the same love. - MAHENDIRAN V ------------------ குறள் 1164: காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: எம் காதல்நோய் கடலினும் பெரிது. அதை கடக்க பாதுகாப்பான படகு என்னிடம் இல்லையென்பதே இங்கு செய்தி. - வை.மகேந்திரன் Explanation in English: The pleasant disease of our love is bigger than sea. The matter is that I couldn't avail a safety boat to cross that sea. - MAHENDIRAN V ------------------ குறள் 1165: துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: காதல்-இன்ப பயணத்தில் இனிமை என்கிற துன்பத்தை தரக்கூடிய என்னவர், பகை வந்தால் எனை காக்க என்ன செய்வாரென்று தெரியவில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: My man can bring a pleasant pain during our lush travel. But I am not sure what he would take decision if we meet eneminess. - MAHENDIRAN V ------------------ குறள் 1166: இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - தெய்வப்புலவர் விளக்கம்: காமத்தில் இணைந்து லயித்திருக்கும்பொழுது ஏற்படும் இன்பம் கடல் போன்றதாக உணர்கிறேன். அது ஏற்படுத்தும் துன்பத்தின் அளவோ அக்கடலை விட பெரிதானதாகும் என்பதும் எனக்கு தெரியும். - வை.மகேந்திரன் Explanation in English: I feel the pleasance like sea when we travel on lush. I know well that the misery caused by the same lush would be larger than the sea. - MAHENDIRAN V ------------------ குறள் 1167: காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் - தெய்வப்புலவர் விளக்கம்: காமக்கடலில் நீந்தி கரைகண்டவர் எவரும் இல்லை. அதனால் தான் இரவு முழுதும் விழித்திருக்கிறேனோ? - வை.மகேந்திரன் Explanation in English: None has found the shore on swimming on the lush sea. So that Am not I sleeping throughout the nights? - MAHENDIRAN V ------------------ குறள் 1168: மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை - தெய்வப்புலவர் விளக்கம்: எல்லோரையும் தூங்க வைத்துவிட்டு தான் மட்டும் விழித்திருக்கும் இந்த இரவு-க்கு நான் மட்டுமே துணை. - வை.மகேந்திரன் Explanation in English: Only I am the assistant to the Night that is not sleeping but it makes all sleep. - MAHENDIRAN V ------------------ குறள் 1169: கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா - தெய்வப்புலவர் விளக்கம்: இந்த இரவு என்கிற காலம், தான் எடுத்துக் கொள்ளும் நெடு நேர பயணம், காதலர்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் துன்பத்தை விட மோசமாக உள்ளதே? - வை.மகேந்திரன் Explanation in English: The very long time taken by the one namely Night is worse than the misery of separation of love. - MAHENDIRAN V ------------------ குறள் 1170: உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: என் மனம் சொல்வது போல் என்னவர் இருக்கும் இடத்தை தேடிச் சென்று நான் அவரை கண்டிருந்தால், என் கண்கள் வெள்ளமாய் நீரை கொட்டியிருக்காது! - வை.மகேந்திரன் Explanation in English: As my mind said if I had reached my lover's spot by meeting a deep search, my eyes wouldn't have sppilled out this amount of flood of tears. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்ப தெவன் - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பம் வரும் என அறியாது இன்பத்துடன் காதலில் வீழ்ந்த இந்த கண்கள் தன்னால் தான் இத்தனை துயரம் என்பதை உணராது துன்பம் கொள்வது நியாமாகுமா? - வை.மகேந்திரன் Explanation in English: The eyes that fell down in love without knowing that miseries would be caused due to the love is worried out of those miseries, how is it justicious? - MAHENDIRAN V ------------------ குறள் 1173: கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: முன்னேச் சென்று முதல் ஆளாய் நோக்கி காதல் செய்த இந்த கண்கள் அதே காதலை நினைத்து அழுவது நகைப்பிற்குரியது. - வை.மகேந்திரன் Explanation in English: What the eyes which had forwarded fast as the first person and fell down in love are crying due to the same love is laughable one. - MAHENDIRAN V ------------------ குறள் 1174: பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து - தெய்வப்புலவர் விளக்கம்: காதல் என்ற பெயரில் துயரம் தந்த என் கண்கள், என்னை தம்பிக்கவும் விடாமல் கண்ணீர் வற்றிப் போய் தானும் அழ முடியாமல் தவிக்கிறது. - வை.மகேந்திரன் Explanation in English: The eyes that had gifted me sadness a lot namely love is not providing me a way to escape and they are also unable to cry due to scarcity of tears. - MAHENDIRAN V ------------------ குறள் 1175: படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக் காமநோய் செய்தவென் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: கடலினும் பெரிதாம் காதல் எனக் கூறி துன்பத்தை வாங்கிய கண்கள் இன்று உறங்க முடியாமல் வருந்துகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: The eyes which got wantonly the misery by thinking that the love is greater than the ocean is saddening today due to not able to sleep. - MAHENDIRAN V ------------------ குறள் 1176: ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு வகையில் இனிதாய் நான் உணர்கிறேன் ஏனெனில், எனை இக்காதல்-துன்பத்தில் விழவைத்து துவளவைத்த என் கண்களும் துன்பப்பட்டு வருந்துகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Anyway I feel a bit happy because the eyes which made me to fall in this love misery for suffering a lot is also meeting out a big misery and crying. - MAHENDIRAN V ------------------ குறள் 1177: உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்று விரும்பி விரும்பி காதலித்து இன்புற்ற கண்களே இன்று அவரை பிரிந்து பிரிந்து பேதலித்து உன் கண்ணீர் வற்றி போகட்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Oh my eyes who was willingly loving deeply for being pleasant on that day, May you sink in the sadness by crying atmost till the tears dries out today! - MAHENDIRAN V ------------------ குறள் 1178: பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண் - தெய்வப்புலவர் விளக்கம்: உவந்து முகர்ந்து விரும்பாமல் வெறுமனே என்னை காதலித்த அவரை பிரிந்து என் கண்கள் நிலை கொள்ளாமல் உளதே ஏன்? - வை.மகேந்திரன் Explanation in English: Why do my eyes unnecessarily not in stable for this separation of love while my man had just merely loved me without showing any soulful benevolence in the past? - MAHENDIRAN V ------------------ குறள் 1179: வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் - தெய்வப்புலவர் விளக்கம்: வாரா சமயத்தில் எப்பொழுது வருவாரோ என கண்கள் தூங்காமல் காத்திருந்தன. வந்தவர் பிரித்து விடக்கூடாதே என கண்கள் விழித்திருக்கின்றன. இது தான் துன்பத்தில் ஒரு இன்பமோ? - வை.மகேந்திரன் Explanation in English: My eyes got stabled in the entrance to looking for his arrival without even a drop of sleep when he didn't visit often then days. Now the same eyes aren't sleeping due to a kind of fear that he should not leave from me. Is it the pleasance caused by the misery? - MAHENDIRAN V ------------------ குறள் 1180: மறைபெறல் ஊராக் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து - தெய்வப்புலவர் விளக்கம்: பறை ஒலியால் ஊர் விழிப்பதுபோல் என் கண்கள் அழுவதால் அவ்வொலி கேட்டு ஊரார் விழித்து எம் காதலை எளிதில் அறிந்து கொள்வர். - வை.மகேந்திரன் Explanation in English: The people are easily noticing the depth of my love due to my loud cry as if people are waking up owing to hearing the traditional drums sound. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 119. பசப்புறு பருவரல் CHAPTER 119. HER COLOUR BECOMES PALLID DUE TO SEPARATION OF LOVER 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற - தெய்வப்புலவர் விளக்கம்: அவரின் விருப்பப்படி பிரிவுக்கு சம்மதித்தேன். பிரிவால் என் மேனி பசலைக் காண்கிறதே (வெளிர்ந்து போகிறதே, எனது இயற்கை நிறம் மாறுகிறதே) அதை நான் யாரிடம் போய் சொல்வேன்? - வை.மகேந்திரன் Explanation in English: I consented when he had asked me for separation. Being so, My entire body gets a kind of PASALAI status. (PASALAI means that a kind of change of colour from normal to white or brownish on body or skin). Whom can I complain with for this error? - MAHENDIRAN V ------------------ குறள் 1182: அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: என் மேனியில் படரும் இந்த பசலை நிறம், உன்னவர் உனை பிரிந்ததால் வந்த பரிசு என என்னிடம் நகைத்துச் சொல்லி ஊர்ந்து படர்வதாக உணர்கிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: I feel that the PASAL itself blames me that this status is a gift for me because of the separation of our love, and it joyfully spreads over my body. - MAHENDIRAN V ------------------ குறள் 1183: சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து - தெய்வப்புலவர் விளக்கம்: அவரது பிரிவால் என் அழகையும் வெட்க்கத்தையும் இழந்து காதல் துன்பத்தையும் பசலை நிறத்தையும் தான் ஈடாகப் பெற்றேன். - வை.மகேந்திரன் Explanation in English: In fact, What I feel is that I got misery and this PASAL status as a compensation by losing my shyness and my beauty because of the separation of our love. - MAHENDIRAN V ------------------ குறள் 1184: உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: அவர் நினைவே எனக்கு. அவரது பெருமைப் பற்றிதான் தினமும் பேசுகிறேன். இருந்தும் என் மேனி பசலைநிறம் கண்டது எப்படி? வஞ்சனை அல்லது சாபமாக இருக்குமோ? - வை.மகேந்திரன் Explanation in English: Whereas I am always thinking and talking about the prides of my man, I'm surprised of my getting this PASAL disease on my body. I suspect whether it is a deception or curse done by anybody. - MAHENDIRAN V ------------------ குறள் 1185: உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென் மேனி பசப்பூர் வது - தெய்வப்புலவர் விளக்கம்: என் காதலர் பிரிந்து சென்றது தான் தாமதம், அதற்குள் என் மேனி முழுதும் பசலைநிறம் படர்ந்து போனது தான் ஆச்சரியம்! - வை.மகேந்திரன் Explanation in English: The big surprise is, No sooner my spouse left out from me than the PASAL disease started to spread over on my body! - MAHENDIRAN V ------------------ குறள் 1186: விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: விளக்கொளியை கண்டதும் இருள் உடனே விலகி ஓடுவிடுவதை போல, அவரது தழுவல் சற்று விலகியதும் என் மேனியில் பசலை நிறம் படர ஆரம்பித்து விடுகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: As if the dark would fly away as soon as getting light of enlightening the lamp, the PASAL would start to spread over my body when my man stops his hugging on me. - MAHENDIRAN V ------------------ குறள் 1187: புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: அவரைத் தழுவிக் கிடந்தேன் யாதொரு துன்பமும் இல்லை. கொஞ்சம் தள்ளி நகர்ந்தேன், என் மேனி எங்கும் பசலை படர்ந்தது. - வை.மகேந்திரன் Explanation in English: When I am hugging my man with love, no any misery is found to be. But when he or I leave out the hugging, PASAL starts to spread over my body. - MAHENDIRAN V ------------------ குறள் 1188: பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: பசலைப் படர்ந்தாள் இவள்- என்று எள்ளி நகையாடும் இந்த உலகம், இவளை விட்டு பிரிந்து இவளை துன்பத்தில் ஆழ்த்திவிட்டாரே - என்று கூறாதது தான் துயரம். - வை.மகேந்திரன் Explanation in English: What the big misery is, 'The world which is always ready to blame me as I got PASAL on my body would not ready to put sympathy on me for the separation of our love.' - MAHENDIRAN V ------------------ குறள் 1189: பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - தெய்வப்புலவர் விளக்கம்: எனை பிரிந்து, எனை அவர் துயரத்தில் ஆழ்த்தியது இருக்கட்டும். பிரிந்தவர் நலமுடன் இருக்கிறார் என்றாலே போதும். என் மேனி மேலும் பசலைக் கொண்டாலும் மகிழ்ச்சியே. - வை.மகேந்திரன் Explanation in English: What I am being worried of our separation of love is not a matter. If my man is healthy and well wherever he is, that is pleasant news to me. I would not bother about the PASAL being over my body. - MAHENDIRAN V ------------------ குறள் 1190: பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - தெய்வப்புலவர் விளக்கம்: எனை சம்மதிக்க வைத்து பிரிந்து சென்ற என் அவரை உலகம் தூற்றாமல் இருந்தாலே போதும். என் மேனியில் பசலைப் படர்ந்ததை இவ்வூர் மக்கள் ஏசுவதைக் கூட நான் பெரிதாக கருதமாட்டேன். - வை.மகேந்திரன் Explanation in English: If the world is not blaming or accusing my man as he leftover me, that's enough. I will never bother the giggling words of this world blaming me for my carrying PASAL over my body. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி CHAPTER 120. SOLITARY ANGUISH ( Worries due to being alone) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி - தெய்வப்புலவர் விளக்கம்: விரும்புபவராலேயே விரும்பப்பட்டு பெரும்பேறு பெற்ற காதலர், விதையிலா கனியை பெற்ற பெருமையும் பெறுகிறார். - வை.மகேந்திரன் Explanation in English: He who is loved by her whom he loves and so has gotten the great gift is also getting the pride as if getting seedless fruit. - MAHENDIRAN V ------------------ குறள் 1192: வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - தெய்வப்புலவர் விளக்கம்: விரும்புவரை விரும்பி ஏற்று வாழும் வாழ்க்கைநிலை என்பது உயிர் வாழும் ஜீவராசிகளுக்கு மேகமாக வந்து மழை தந்து உதவுவது போலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The love life tends by mutually loving both side is like a life of all living beings living cheerfully since getting rain as a gift from the clouds. - MAHENDIRAN V ------------------ குறள் 1193: வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: விரும்பும் துணையுடன் விரும்பி வாழும் வாழ்க்கையில் பிரிவு சிறிது வந்தாலும் கூட இணைந்தே இன்பமுடன் வாழ்வோம் என்ற செருக்கு உறுதியாய் இருக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if there is separation a bit between lovers, if they have love a lot with each other, there will be pride intensively on both that they will be living with pleasance in the future. - MAHENDIRAN V ------------------ குறள் 1194: வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின் - தெய்வப்புலவர் விளக்கம்: தான் விரும்பி, ஆனால் துணையால் விரும்பப்படாமல் ஒரு காதல் தொடர்ந்தால், உலகமே தன்னை விரும்பினாலும் தனக்கு துயர நிலையே. - வை.மகேந்திரன் Explanation in English: If she loves him very much while he doesn't do her, and If she resumes her love, she is of course in misery even though the entire world loves her. - MAHENDIRAN V ------------------ குறள் 1195: நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை - தெய்வப்புலவர் விளக்கம்: அவள் அவனை விரும்பியும் அவன் அவளை விரும்பாவிடில், காதலித்து அவனால் எந்த பயனும் அவளுக்கு வந்து விடப்போவதில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Whereas she loves him if he doesn't love her, she would never get any gain from him for her life. - MAHENDIRAN V ------------------ குறள் 1196: ஒருதலையான் இன்னாது காமங்காப் போல இருதலை யானும் இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு தலை காதலால் உபயோகம் ஏதும் இருக்காது. காவடியின் நடுத்தண்டில் இரு புறமும் பாரம் சீராய் இருப்பதுபோல் இருவரும் விரும்பும் காதலே இனிமையானது. - வை.மகேந்திரன் Explanation in English: No pleasance can be seen on the one-sided love. Only the love that is like a balanced dangling scale due to even weight would cause more pleasance in life. - MAHENDIRAN V ------------------ குறள் 1197: பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான் - தெய்வப்புலவர் விளக்கம்: காமம் அவள் புறம் மட்டும் நின்று செயல்பட்டு அவன் புறம் கல்லாய் நின்றால் அவள் மேனி நிறம் மாறி பசலை காண்பது திண்ணம். - வை.மகேந்திரன் Explanation in English: If only she has lust while he is standing like stone, she would surely get the PASALAI disease since the colour on her body changes. - MAHENDIRAN V ------------------ குறள் 1198: வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிந்த அவனிடமிருந்து யாதொரு இனிதான செய்தியும் வராத அவளின் வாழ்க்கையை போன்றதோர் கொடும் நிலை வேறெதுவும் இருக்க முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: There would never be a misery stance in the world as if the state of her life hasn't heard any good news from her man who has been separated. - MAHENDIRAN V ------------------ குறள் 1199: நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிந்த காதலர் அவள் மீது அன்பு காட்டாவிடினும் கூட பரவாயில்லை. அவனை பற்றிய புகழான வார்த்தைகளை கேட்பது அவளுக்கு இன்பத் தேன் போன்றதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if her man doesn't show even a bit of love on her, it's not a matter. If she hears any pride word about him from anybody, that is the most sweet word to her. - MAHENDIRAN V ------------------ குறள் 1200: உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சமே வாழ்க. உன் மீது அன்பு காட்டாதவரிடம் நீ ஏன் உன் துன்பத்தை சொல்லி அழ முயற்ச்சிக்கிறாய்? அதற்கு பதிலாக இந்த கடலை நீ துர்க்கலாம். அது உனக்கு எளிது. - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, best wishes to you. Why do you try to share your worries to him while he doesn't care about the love? Instead, it's better you fill in the ocean by sand. This is easier than that. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல் CHAPTER 121. LAMENTATION ABOUT THOUGHTS OF LOVE (SAD MEMORIES OF LOVE AFFAIRS) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: கள்ளுண்டு களிப்புறுவதை காட்டிலும், நினைத்தாலே இனிக்கக் கூடிய காதலால் வரும் இன்பமமே உயரியதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The Mirth caused through thinking the memories of love is greater than the mirth is caused of drinking liquor. - MAHENDIRAN V ------------------ குறள் 1202: எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில் - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிவிலும் கூட ஒரு வித இன்பத்தை தருவது காதல். ஆகையால் எவ்வகையிலும் காதலால் துன்பமேதுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Even the separation of love too is offering a kind of pleasance a lot. So there wouldn't be any misery from love. - MAHENDIRAN V ------------------ குறள் 1203: நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: தும்மல் வருவது போல் வந்து வராமல் போகிறதே.... காரணம், என்னை அவர் நினைக்க முயற்சித்து நினைக்காமல் விட்டாரோ? - வை.மகேந்திரன் Explanation in English: I feel sneezing but I don't sneeze. Is it reason because he started to think about me and then he stopped? - MAHENDIRAN V ------------------ குறள் 1204: யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ உளரே அவர் - தெய்வப்புலவர் விளக்கம்: என் இதயத்தில் அவர் குடிகாண்டுள்ளார். அவர் இதயத்தில் நான் இருக்கிறேனா என்பதை நான் அறியேன் - வை.மகேந்திரன் Explanation in English: I'm sure that he is dwelling in my heart but I am not sure whether he allows me or not to I dwell in his heart. - MAHENDIRAN V ------------------ குறள் 1205: தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல் - தெய்வப்புலவர் விளக்கம்: அவர் இதயத்தில் என்னை இருக்க விடாமல் செய்யும் அவருக்கு என் இதயத்தில் மட்டும் நிலைத்து நிற்பதற்கு வெட்கப்படாமல் இருப்பதன் காரணம் தான் தெரியவில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: I don't know why he doesn't shy to live in my heart stably while he restricts me to live in his heart. - MAHENDIRAN V ------------------ குறள் 1206: மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன் - தெய்வப்புலவர் விளக்கம்: அவருடன் நான் காதலில் திளைத்த நாட்களை நினைப்பதால் தான் நான் உயிர் வாழ்கிறேன். இல்லேல் நான் வாழ்வதில் அர்த்தமில்லாமல் போயிருக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Only because of our love memories blinking in my mind I am being alive. Otherwise what I am living here is meaningless. - MAHENDIRAN V ------------------ குறள் 1207: மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - தெய்வப்புலவர் விளக்கம்: அவரை நினைத்து நினைத்து உருகுவதால் என் நெஞ்சம் துன்பத்தில் கனக்கிறதே.. நினைக்காமல் போனால் என்னவாகும்...? - வை.மகேந்திரன் Explanation in English: While I feel so sad when I am thinking about him, if I don't think about him what will happen? - MAHENDIRAN V ------------------ குறள் 1208: எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நான் அவரை எவ்வளவு தான் நினைத்தாலும் என் மேல் சினம் கொள்ள மாட்டார். அதுவே அவர் என் மீது கொள்ளும் காதலின் அடையாளம். - வை.மகேந்திரன் Explanation in English: Even if I merge with him a lot about love thoughts though it seems to be a bit disturbance to him he wouldn't get anger. That's the witness that he is still loving me so much. - MAHENDIRAN V ------------------ குறள் 1209: விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - தெய்வப்புலவர் விளக்கம்: நம் ஈருயிரும் ஓருயிரே எனக் கூறிய என்னவர் இப்பொழுது என் மீது காதல் காட்டாமல் இருப்பதை நினைத்தால் என் உயிர் என்னை விட்டு பிரிவது போல் உணர்கிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: I feel that my live is passing away when my lover is not showing love on me while he has promised me earlier that our lives aren't two but merged as a single. - MAHENDIRAN V ------------------ குறள் 1210: விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி - தெய்வப்புலவர் விளக்கம்: மதியெனும் நிலவே நீ வாழ்க..... கண்ணில் படாமல் எங்கோ இருக்கும் என் அவரை கண்டுபிடித்து என்னிடம் சேர்க்கும் வரை நீ மறையாமல் இருக்கவேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: Oh the Moon, I praise you. You shouldn't vanish ever till you retrieve my lover wherever he is and handing over him to me. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 அதிகாரம் 122. கனவுநிலை உரைத்தல் CHAPTER 122. THE WORDS ABOUT DREAM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிவால் வருந்தி கிடந்த எனக்கு அவரிடமிருந்து தூது வருவது போல் வந்த கனவுக்கு என்ன விருந்து வைத்து நன்றி செய்வேன்? - வை.மகேந்திரன் Explanation in English: Oh! How would I treat back the messanger who brought the pleasant news about my lover to me who was worried out of separation, when I was dreaming? - MAHENDIRAN V ------------------ குறள் 1212: கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன் - தெய்வப்புலவர் விளக்கம்: என் கயல் கண்கள் விரும்புவது போல் எனக்கு தூக்கத்தில் கனவு வந்தால், என் காதலரை அக்கனவில் கண்டு நான் நலமுடன் இருப்பதைச் சொல்வேன். - வை.மகேந்திரன் Explanation in English: If I get dream as my fishing eyes wishes during my sweet sleep, I would convey to my lover on such dream that I am being well. - MAHENDIRAN V ------------------ குறள் 1213: நனவினான் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர் - தெய்வப்புலவர் விளக்கம்: நனவில் தான் அவரின் அன்பை பெறவில்லை. கனவில் அவருடன் களிப்புறுவதால் தான் என் உயிர் இன்னும் இருக்கிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Though I couldn't get the love words from my lover in person, I am getting them much during my dream.That is why I am alive. - MAHENDIRAN V ------------------ குறள் 1214: கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நனவில் கிடைக்காத அவரை கனவில் தேடிப் பிடித்து அழைத்து வந்து நான் செய்யும் காதல் அளப்பரியது. - வை.மகேந்திரன் Explanation in English: My lover whom I couldn't get in person is retrieved by me during my dream and I am loving him infinitely. - MAHENDIRAN V ------------------ குறள் 1215: நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: அன்று அவருடன் நனவில் கொண்ட காதலால் கிடைத்த இன்பமும் இன்று நான் கனவில் அவருடன் களிப்புறும் இன்பமும் ஒன்றானதாகவே உணர்கிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: I feel that the pleasance that I enjoyed with my lover in person and the pleasance that I enjoy now with him on dream are similar. - MAHENDIRAN V ------------------ குறள் 1216: நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன் - தெய்வப்புலவர் விளக்கம்: அவருடன் கனவில் நான் கலந்திருக்கும்பொழுது பாவியாம் அந்த நனவு வரவில்லையென்றால் அவர் என்னை விட்டு (கனவிலாவது) பிரிந்திருக்கமாட்டார். - வை.மகேந்திரன் Explanation in English: If I hadn't woken up suddenly when I was loving with my man on dreaming, he wouldn't have left out from me atleast on dream. - MAHENDIRAN V ------------------ குறள் 1217: நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது - தெய்வப்புலவர் விளக்கம்: நனவில் வந்து களிப்பு காட்டாத கொடிய என்னவர் கனவில் மட்டும் வந்து களிப்புற்று ஹிம்சிப்பது என்ன நியாயம்? - வை.மகேந்திரன் Explanation in English: What is justice herein...? My lover who doesn't show his love on me in person disturbs me by loving me so much only on dream. - MAHENDIRAN V ------------------ குறள் 1218: துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தார் ஆவர் விரைந்து - தெய்வப்புலவர் விளக்கம்: தூக்கத்தில் என் தோள் மீது சாய்ந்து கிடப்பவர், நான் விழித்ததும் விரைந்து போய் என் இதயத்தில் புகுந்து கொள்கிறார். ஓ... இது கனவா? - வை.மகேந்திரன் Explanation in English: My man who lays on my arms on sleeping is hiding himself by going inside of my heart when I wake up. Oh.. Is it dream? - MAHENDIRAN V ------------------ குறள் 1219: நனவினான் நல்காரை நோவர் கனவினான் காதலர்க் காணா தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: கனவில் காதலரை கண்டு களிப்புற தெரியாத மகளிர் தான் நனவில் அவர் வந்து அன்புகாட்டுவார் என ஏங்குகின்றனர். - வை.மகேந்திரன் Explanation in English: Only the women who don't love their lovers by dreaming are yearning that they would come in person to love. - MAHENDIRAN V ------------------ குறள் 1220: நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான் காணார்கொல் இவ்வூ ரவர் - தெய்வப்புலவர் விளக்கம்: நேரில் வரவில்லை என்று காதலரை தூற்றும் ஊரார், கனவு என்று ஒன்று உண்டு அதில் அவர் தினமும் வருவார் என்பதை அறியாதது ஏனோ? - வை.மகேந்திரன் Explanation in English: Why don't the ones who are scolding at the lover for his not coming in person know that there is one namely dream to meet him? - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 123. பொழுதுகண்டு இரங்கல் CHAPTER 123. LAMENTATIONS AT EVENING TIME 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது - தெய்வப்புலவர் விளக்கம்: மணந்து வாழ்ந்த நாங்கள் பிரிந்திருக்கும் இச்சூழலில் என் உயிரை வாங்கும் வேலாக வந்திருக்கும் மாலைப் பொழுதே நீர் வாழ்க. - வை.மகேந்திரன் Explanation in English: Oh my evening time, I praise you for your presence whereas I, who got married but live now alone, am losing my live of separation of love. - MAHENDIRAN V ------------------ குறள் 1222: புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: மருண்டு போய் இருளாய் மாறிக்கொண்டிருக்கும் மாலைப் பொழுதே, நீயும் என்னைப் போல் துணைவனை பிரிந்து வருந்துகிறாயோ? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my evening time who is becoming dark, you too are worried out like me because of parting from your lover? - MAHENDIRAN V ------------------ குறள் 1223: பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும் - தெய்வப்புலவர் விளக்கம்: முன்பு அவருடன் நான் இருந்த காலத்தில் எங்கள்பால் வந்து எனக்கு பசலை காண வைத்த மாலைப் பொழுதே, உனை நான் இப்பொழுது மீண்டும் காணும்கால் என் துன்பம் இன்னும் அதிகமாகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Oh my evening time, you had come then for making my colour dull (namely PASALAI) when we lived together, I feel that I am getting more misery now when I meet you once again. - MAHENDIRAN V ------------------ குறள் 1224: காதலர் இல்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலர் இலா சமயம் வரும் மாலைப்பொழுது, துணையிலா சமயம் ஒருவரை பகைவரவர் கொலை செய்ய வருவது போலானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The arrival of evening time to one when the one is living alone by parting from lover is like the arrival of enemy to kill one who is helpless. - MAHENDIRAN V ------------------ குறள் 1225: காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை - தெய்வப்புலவர் விளக்கம்: காலைப் பொழுதிற்கு நான் நிறைய நன்மை செய்தேனோ... அது துன்பம் தரவில்லையே! அது போல் இந்த மாலைப் பொழுதிற்கு என் மேல் ஏன் இத்தனை பகை... என்னை துன்புறுத்துகிறதே! - வை.மகேந்திரன் Explanation in English: Have I helped a lot to the morning time? Because it is not injuring me. Likewise, what is anger to this evening time on me? It is injuring me a lot. - MAHENDIRAN V ------------------ குறள் 1226: மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன் - தெய்வப்புலவர் விளக்கம்: மாலைப்பொழுது இத்தனை துன்பம் தரும் என்பதை என் காதலர் என்னுடன் இருந்தவரை நான் அறிந்ததே இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Really I am never aware of that the evening time would kill me who is parted until my lover is with me together. - MAHENDIRAN V ------------------ குறள் 1227: காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய் - தெய்வப்புலவர் விளக்கம்: காலையில் அரும்பி பகல் பொழுதெல்லாம் வளர்ந்து மாலைப் பொழுதில் மலர்வதே காதல் நோய் ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: The pain of love is that which forms in the morning and grows up over the day time and then blossoms in the evening. - MAHENDIRAN V ------------------ குறள் 1228: அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை - தெய்வப்புலவர் விளக்கம்: தீயாய் சுடும் இந்த மாலைப்பொழுதின் வருகையை உணர்த்துவதால் ஸ்ரீ கிருஷ்ணனின் இந்த இனிய புல்லாங்குழல் ஓசை கூட எனக்கு எனை கொல்ல வரும் படையின் சங்கு சப்தமாகவே கேட்கிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Since it signals the arrival of the fire-ful evening time, the sweet sound of fluet played by the Lord Sri Krishnan too is heard by me like a siren sound of troops who come to kill me. - MAHENDIRAN V ------------------ குறள் 1229: பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து - தெய்வப்புலவர் விளக்கம்: மாலைப் பொழுது வரும் பொழுது நான் மதியிழந்து போவது ஒரு புறம், மறுபுறம் இவ்வூராரும் துன்பம் கொல்வதாகவே நான் எண்ணுகிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: At the time of arrival of evening, not only I lose my mind but also the people too meet miseries is felt by me. - MAHENDIRAN V ------------------ குறள் 1230: பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயுமென் மாயா உயிர் - தெய்வப்புலவர் விளக்கம்: பொருள் ஈட்ட அவர் சென்றதால் ஏற்பட்ட பிரிவின் துயரம் தாங்கிக் கொள்ளக் கூடியது தான் என்றாலும் மாலைப்பொழுது வந்துவிட்டால் உயிர் போகும் வலியை உணர்கிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: The misery of parted is evitable since my lover has gone for earning, but at the time of evening I feel the pain as if my live is passing away. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 124. உறுப்புநலன் அழிதல் CHAPTER 124. ORGANS BECOME WEAK (WASTING AWAY) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலர் வெளிதேசம் வரை விலகிச் சென்றதால் சிறுமை துயரம் தாங்காது அழுத அவளின் கண்கள் பொலிவிழந்ததால் நறுமணம் கமழும் மலர்களை முன்பெல்லாம் வென்ற அக்கண்கள் இப்பொழுது தோற்று வெட்கி தலைகுனிந்தன. - வை.மகேந்திரன் Explanation in English: Because the lover is abroad by parting her, the glittering eyes of her have lost their prettiness due to loss of the lust. The eyes that had defeated fragrant flowers at once were defeated by the same flowers. - MAHENDIRAN V ------------------ குறள் 1232: நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிவால் துயர்ந்து உடல் நிறமும் வெளிரிப்போய் அழுத அவளது கண்கள் 'தான் விரும்பியவர் தன்னை விரும்பாத அவளது துயரநிலையை எளிதில் பிறர்க்கு சொல்லிவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: Due to parting of love, besides her having pasalai state on her body, her cried eyes too would easily convey the message to others that her lover whom she desires very much doesn't desire her. - MAHENDIRAN V ------------------ குறள் 1233: தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலருடன் இணைந்து வாழ்ந்தபொழுது விசாலமாக இருந்த அவளது தோள்கள், தற்பொழுது காதலரை பிரிந்ததால் மெலிந்துபோனதால் பிரிவை அவள் சொல்லாமலேயே அவளின் மெலிந்த அந்த தோள்கள் பிறர்க்கு சொல்லிவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: Her arms that were broad and pretty when she was with her lover has become lean now due to the parting of love. This stance would easily signal her status to others. - MAHENDIRAN V ------------------ குறள் 1234: பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலரை பிரிந்ததால் அழகையிழந்து மெலிந்துபோன அவளது தோள்களிலிருந்து (கை மணிக்கட்டுகளிலிருந்து) வளையல்கள் எளிதாய் கழன்று விழுகின்றன. - வை.மகேந்திரன் Explanation in English: The bangles too are falling down from her hands since her hands have become very lean due to parting of love. - MAHENDIRAN V ------------------ குறள் 1235: கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் - தெய்வப்புலவர் விளக்கம்: இருந்த அழகையும் இழந்து வளையல்கள் தானாய் விழும் வண்ணம் மெலிந்த அவளது தோள்கள் (கைகள்) தன் காதலர் தன்னை பிரிந்து வருத்தும் செய்தியை உலகுக்கு எளிதாக சொல்கின்றன. - வை.மகேந்திரன் Explanation in English: Her hands that have lost their beauty and having become lean as far as the bangles are falling down would easily bear the message of parting of love to others. - MAHENDIRAN V ------------------ குறள் 1236: தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக் கொடியார் எனக்கூறல் நொந்து - தெய்வப்புலவர் விளக்கம்: 'வளையல்கள் கழன்று விழும் அளவுக்கு தோள்கள் மெலிந்து போகும் நிலைக்கு ஆளாக்கின கொடியவன் இவள் காதலன்' என பிறர் தன் காதலனை இழிவாக பேசுவதைக் கேட்டு இன்னும் துன்பமடைகிறாள் அவள். - வை.மகேந்திரன் Explanation in English: When she hears the words of scolding her lover from others such as " Her lover is cruel because he has pushed her into misery that her hands have become very lean as far as the bangles too are falling down from her hands" her worries go to the toppest. - MAHENDIRAN V ------------------ குறள் 1237: பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சே! அவர் பிரிவின் கொடுமையால் தான் என் தோள்கள் மெலிந்து மோசமானது - என்கிற செய்தியை அவரிடம் போய் கூறி நீ புண்ணியம் தேடிக் கொள்வாயாக! - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart! Please visit my lover and earn more virtue by conveying the message of my hands and arms having become leaned due to his having made sin against me by parting of love. - MAHENDIRAN V ------------------ குறள் 1238: முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் - தெய்வப்புலவர் விளக்கம்: தழுவிய என் கைகள் சற்று தளர்ந்ததும் அணிகலன்கள் அணிந்த பொலிவான அவள் நெற்றி பசலைப் பூத்ததை நினைத்து பார்க்கிறேன். (இதே கருத்தில் முன்பே ஒரு குறள் உண்டு) - வை.மகேந்திரன் Explanation in English: Still I remember... No time I left my hugging her a bit, her beautiful forehead that had worn ornaments changed its colour. - MAHENDIRAN V ------------------ குறள் 1239: முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: தழுவலில் ஒரு சிறு இடைவெளிவிட்டதும் குளிர் காற்று உள்நுழைந்ததை கூட பொறுத்துக் கொள்ளாத அவளது அழகிய கண்கள் மழையாய் நீர் விட்டு நிறம் மாறிப்போனதை நினைத்துப் பார்க்கிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: Still I remember.. she teared like rain and her eyes became so red when I just left a gape from our tight hugging and when she felt the cool air passing through such gape. - MAHENDIRAN V ------------------ குறள் 1240: கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிவின் துயரத்தால் அவளின் அகன்ற நெற்றி நிறம் மாறி பசலைக் கண்டதை பார்த்து அவள் கண்களும் பசலைக் கண்டதுதான் துயரின் உச்சம். - வை.மகேந்திரன் Explanation in English: The big misery is that her eyes too changed the colour as soon as her broad forehead changed its colour due worries of parting of love. - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 125. நெஞ்சொடு கிளத்தல் CHAPTER 125. A CONVERSATION WITH THE HEART (LAMENTATION WITH HEART) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: எம்மருந்தும் தீர்க்கா நோயாம் காதல் நோய். நெஞ்சே, நீ நினைத்துப் பார்த்து ஏதேனும் மருந்திருந்தால் சொல்வாயா? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, I assume that this love pain is unrecoverable.. would you please prescribe a right remedy by your research? - MAHENDIRAN V ------------------ குறள் 1242: காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு என் நெஞ்சே! உன் பெருந்தன்மைக்காக உனை வாழ்த்துகிறேன். அவர் நம் மீது பாராமுகம் காட்டியும் அவர் நினைவாகவே நீ இருக்கிறாயே அதற்கு தான்! - வை.மகேந்திரன் Explanation in English: Although my lover is not bothering us still you are always thinking about him. Really I praise you due to that. - MAHENDIRAN V ------------------ குறள் 1243: இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சே, உன் போல் அவரிடம் கருணை உள்ளம் இல்லை. காதல் நோயில் எனை வெம்ப வைத்தவர். ஆகையால் நீ இங்கிருந்து அவர் நினைவாய் வாடுவதில் யாதொரு நியாயமும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, my lover doesn't have a mercy heart as you are. He is the man who is injuring me of love pain. So, what you think always about him is injustice. - MAHENDIRAN V ------------------ குறள் 1244: கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சே, அவரை நீ காணச் சென்றால் என் கண்களையும் அழைத்துச் சென்று அவரிடம் காட்டு. அவரைக் காணவேண்டுமென்று அவை என்னை தின்கின்றன! - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, if go out to meet my lover, just take my eyes too with you, and make them meet him because they are killing me to show him to them. - MAHENDIRAN V ------------------ குறள் 1245: செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சே, அவர் நம்மை வெறுத்து ஒதுக்குவதால் அவரை விரும்பி நினைத்து என்றும் உருகும் நாமும் அவரை வெறுப்பது நாகரிகமாகாது - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, Even though my lover pushes out us from his heart, what we show the hatred on him while we melt much more on him of love is not etiquette. - MAHENDIRAN V ------------------ குறள் 1246: கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: கூடி கலந்து ஊடலை கலையுங்கால் அவர் மீது பிணக்கேதும் காட்டாத என் நெஞ்சே, இப்பொழுது மட்டும் அவர் மேல் என்ன கோபம்? பொய்யான கோபம் தானே? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, while you hadn't shown your anger on my lover at the time of our being together after the playful quarrel, why are you angry on him now? It's fake one, isn't it? - MAHENDIRAN V ------------------ குறள் 1247: காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: நல்ல நெஞ்சமே, ஒன்று காதல் ஆசையை விட்டு விடு அல்லது நாணப்படுவதை விட்டு விடு. உனக்கு இரண்டும் வேண்டுமெனில் அதனால் துன்பப்படுவது நானல்லவோ! - வை.மகேந்திரன் Explanation in English: Oh my pretty heart, either you leave out the act of loving him or leave out the act of getting shy. If you carry the both activities together, only I get suffered, don't I? - MAHENDIRAN V ------------------ குறள் 1248: பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சமே, பிரிந்த துயரில் இரக்கம் காட்டியாவது வந்து அணைப்பார் என்றெண்ணி அவர் பின் நீ தொடர்வது பேதமையின் உச்சம். - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, It is of course innosent one what you are pursuing him by expecting that he would come and hug me atleast because of sympathy on me. - MAHENDIRAN V ------------------ குறள் 1249: உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: என் நெஞ்சமே, உள்ளத்தின் உள்ளே அவர் இங்கு உள்ள பொழுது நீ யாரை தேடி எங்கு செல்கிறாய்? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, whereas he is sitting in my heart intensively inside, where do you go and to look for whom? - MAHENDIRAN V ------------------ குறள் 1250: துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும் இழத்தும் கவின் - தெய்வப்புலவர் விளக்கம்: பிரியா காதலர் பிரிந்தெங்கோ சென்றாலும் உள்ளத்தின் உள்ளே அவர் வீற்றிருந்தும் என் அழகு மெலிந்து குறைவது தான் ஏனோ? - வை.மகேந்திரன் Explanation in English: Even though my lover who hasn't parted from me has gone somewhere by parting me, he is sitting permanently in my heart. Then why do I become leaned? - MAHENDIRAN V ------------------ Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com 📖📖📖📖📖📖📖📖 All rights of this Explanation and translation work are reserved. Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. Thanks. V.MAHENDIRAN M.A.,M.A., ELT., 📖📖📖📖📖📖📖📖 திருக்குறள் அதிகாரம் 126. நிறையழிதல் CHAPTER 126. INABILITY OF KEEPING RESTRAINT ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு - தெய்வப்புலவர் விளக்கம்: நிறை எனும் கதவு வெட்கம் எனும் தாழ்ப்பாளால் பூட்டப்பட்டிருந்தாலும் காமம் எனும் கோடரி அதை உடைத்தெறிந்துவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: Even though there is a big door namely shy to protect feminine, the axe namely lust would crack it easily. - MAHENDIRAN V ------------------------ குறள் 1252: காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - தெய்வப்புலவர் விளக்கம்: காமம் என்கிற தன்மைக்கு கண்களெல்லாம் இல்லையாதலால்தான் நடுஜாமத்திலும் என் நெஞ்சத்தை அலைபாயவைக்கிறது. - வை.மகேந்திரன் Explanation in English: There is no eyes to lust at any cost. That's why the mind flies here and there unbalanced at even midnight. - MAHENDIRAN V ------------------------ குறள் 1253: மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: குறிப்பில்லாமல் வரும் தும்மலை எப்படி அடக்க முடியாதோ அது போல் தான் காதலும். மறைக்க முயன்றாலும் என்னையும் அறியாமல் வெளிப்படுத்தி விடுகிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: As it is impossible to stop sneezing that is felt without indication, love too can't be suppressed even if I try to suppress it. - MAHENDIRAN V ------------------------ குறள் 1254: நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம் மறையிறந்து மன்று படும் - தெய்வப்புலவர் விளக்கம்: ரகசியம் காப்பதில் கைதேர்ந்தவள் நான் என்று தான் இது நாள் வரை எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது காதல் நோயை பிறரிடம் மறைக்க தெரியாத மக்கு நான் என்று ! - வை.மகேந்திரன் Explanation in English: I have been proud so far that I am strong to protect secrets. Only now I am realising that I am an utter fool since I couldn't suppress my love disease to others. - MAHENDIRAN V ------------------------ குறள் 1255: செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிந்த காதலனின் பின்தொடரா சூழலால் வரும் துயரத்தை தாங்கி நிற்கும் பெருந்தன்மையை காதல் நோய் பீடித்தவரே நன்கு அறிவர். - வை.மகேந்திரன் Explanation in English: Only the ones who have love disease would feel the real pain of the parted love and the status of being alone. - MAHENDIRAN V ------------------------ குறள் 1256: செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர் - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிந்து சென்றவரை வெறுக்காது அவரை பின்தொடர்ந்து அவருடனே செல்ல வேண்டும் என்று துடிக்க வைக்கும் இந்த காதல் நோய் உண்மையிலேயே கொடுமையானது. - வை.மகேந்திரன் Explanation in English: The state of mind thinking that to shamelessly follow the lover who parted without caring me is delivering the message that the love disease is crucial one. - MAHENDIRAN V ------------------------ குறள் 1257: நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலின் தாக்கத்தால் அவர் செய்த அன்புச் செயல்களை அதே காதல் தாக்கத்தால் தான் நான் வெட்கப்படாமல் அவற்றை ஏற்றுக்கொண்டேன். - வை.மகேந்திரன் Explanation in English: I accepted the all of his loving acts done by him due to the passion of love on me because of the same love affection on him. - MAHENDIRAN V ------------------------ குறள் 1258: பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை - தெய்வப்புலவர் விளக்கம்: பண்பிற்குரிய பெண்மையை உடைக்கும் வல்லமை காதலரின் கசிந்துருக்கும் கள்ள வார்த்தைகளுக்கு உண்டு என்பதை அறிந்தேன். - வை.மகேந்திரன் Explanation in English: I realised now that only the lusting words pronounced by him cracked the feminine of me protected by me so far days. - MAHENDIRAN V ------------------------ குறள் 1259: புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடல் கொண்டு விலகலாம் என்று வெளி மனம் நினைத்தாலும், உள் மனம் அவரை ஆரத்தழுவி அன்பு காட்டவேண்டும் என்று உள் மனம் உந்துகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Even if my outer thoughts desires to quarrel with him, my inner thoughts is infinitely eager to have tight hug with him. - MAHENDIRAN V ------------------------ குறள் 1260: நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் - தெய்வப்புலவர் விளக்கம்: தீயில் இட்ட கொழுப்பு உருகுவது போல் நிலை காமத்தில் ஈருடலுக்கும் இருக்கும்பொழுது, இணைந்து களித்து இன்பம் பெற்றபின் ஊடலுக்கு இடம் ஏது? - வை.மகேந்திரன் Explanation in English: While the two souls are melting at the time of lusting like meat is burnt on fire, is it meaningful quarrelling with each other after the end of lust? - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. V. MAHENDIRAN M.A., M.A., ELT., ------------------------------ அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல் Chapter 127. YEARNING OF HER FOR HIS ARRIVAL ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் - தெய்வப்புலவர் விளக்கம்: அவர் வருவார் என வழிமேல் விழிவைத்து கண்களும் ஒளி இழந்ததோடு அவர் வரும் நாளை சுவற்றில் குறித்து குறித்து விரல்களும் தேய்ந்தன. - வை.மகேந்திரன் Explanation in English: Not only my eyes have lost their light because of putting them on the way of his arrival, but also my fingers have worn-out due to marking the days of his arrival on the wall. - MAHENDIRAN V ------------------------ குறள் 1262: இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து - தெய்வப்புலவர் விளக்கம்: அவரை மறவாது இருந்து துயரம் கொள்ளும் நான் அவரை மறந்து துறந்தால், அணிகலன்கள் அதுவாய் கழன்று விழும் அளவிற்கு என் தோள்கள் இளைத்து போகுமடி என் தோழி. - வை.மகேந்திரன் Explanation in English: If I, who is worried out due to being unforgetting him, forget him, my arms will become so leaned as if my bangles would fall out easily. - MAHENDIRAN V ------------------------ குறள் 1263: உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊக்கம் அது துணையாக வெற்றி வேண்டி வெளிச்சென்ற என் அவர் திரும்பவும் எனை பார்க்க வருவார் என்றெண்ணியே உயிர்வாழ்கிறேன். - வை.மகேந்திரன் Explanation in English: Of course still I am alive only because my man who has gone out to get victory with his own energy as an assistance will come back surely to meet me. - MAHENDIRAN V ------------------------ குறள் 1264: கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: காதலும் களிப்புமாய் என்னுடன் இருந்து பிரிந்தவர் வருகிறார் என்பதறிந்ததும் என் மனம் மர உச்சி ஏறிச் சென்று அவரை காண விழைகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: My heart climbs up and sits on the branch of a tree and looking for his arrival as soon as I come to know that he who was being with me love and affection in the past days is coming to meet me. - MAHENDIRAN V ------------------------ குறள் 1265: காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்தோள் பசப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: என் அவர் வந்ததும் கண் நிறைய காண்பேன் நான் அவரை. கண்டதும் என் தோள்கள் பசலைப்பிணி நீங்கி குணம் பெறும். - வை.மகேந்திரன் Explanation in English: As soon as he arrives I will see him full of my eyes. Then, the PASALAI disease that I have due to parted of love will go away. - MAHENDIRAN V ------------------------ குறள் 1266: வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட - தெய்வப்புலவர் விளக்கம்: என் அவர் வருவார் ஒரு நாள் எனை அணைக்க. அணைத்ததும் தீருமாம் என் அனைத்து துன்பங்களும். - வை.மகேந்திரன் Explanation in English: One day my man will come and hug me. After that, all of miseries tending so far will fly away. - MAHENDIRAN V ------------------------ குறள் 1267: புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின் - தெய்வப்புலவர் விளக்கம்: என் கண்மணியான காதலர் என்னிடம் வந்தால், விட்டு சென்றதால் அவருடன் சண்டை செய்வேனா, பிரிந்த ஏக்கத்தில் அவரை கட்டித் தழுவுவேனா அல்லது இரண்டையும் செய்வேனா என்ன செய்வேன் என்று தெரியவில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Surely I am not aware of what I am going to do as soon as the arrival of my man who is equallent to my eyes. Whether I would quarrel with him or hug him affectionately or doing both. - MAHENDIRAN V ------------------------ குறள் 1268: வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: வேந்தன் அவன் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி பெறட்டும். அன்று இரவு பிரிந்தவர் வந்து மனையுடன் கலந்து உறவாடி விருந்துணணட்டும். - வை.மகேந்திரன் Explanation in English: May the king win in the battle with full of his efforts! Later, May the couple who have met after a long parted hug with each other as a feast in the night! - MAHENDIRAN V ------------------------ குறள் 1269: ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிந்தவர் வருவார் என்றெண்ணி வருந்தும் மனையாளுக்கு ஒரு நாள் கழிவது ஏழு நாள் கழிவது போன்ற உணர்வை தரும். - வை.மகேந்திரன் Explanation in English: The parted spouse would feel as passing one day is like passing seven days when she counts the days of the arrival of her man. - MAHENDIRAN V ------------------------ குறள் 1270: பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால் - தெய்வப்புலவர் விளக்கம்: காதலரை பிரிந்ததன் துயரத்தால் மனம் உடைந்து மதி போய் விட்டால், அவன் திரும்பி வந்து தான் என்ன பயன்? கூடி ஊடி இருந்து தான் ஏது பயன்? - வை.மகேந்திரன் Explanation in English: Nothing is gain of his arrival and hugging her if she becomes mad since she has lost her mind because of parted of love. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. V. MAHENDIRAN M.A., M.A., ELT., ------------------------------ தெய்வப்புலவரின் திருக்குறள் அதிகாரம் 128 . குறிப்பறிவுறுத்தல் CHAPTER 128. INDICATION OF SIGNS ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிவை விரும்பவில்லை என்பதை சொல்ல மறைக்க உன் மனம் முயன்றாலும் உன்விழிகள் அழகாய் சொல்லிவிடும் அதனை. - வை.மகேந்திரன் Explanation in English: Even if you try to suppress your unwilling the parting, your eyes would emit that beautifully. - MAHENDIRAN V ------------------------ குறள் 1272: கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது - தெய்வப்புலவர் விளக்கம்: அவள் அழகு நிறை கண்களும் மூங்கில் போன்ற தோள்களும் உடையவள். ஆதலால் அவளுக்கு பெண்ணியத்தின் பண்பு நிறைவாய் உண்டு. - வை.மகேந்திரன் Explanation in English: She has the most beautiful eyes, and arms like bamboo branches. So, she has the infinite femininity. - MAHENDIRAN V ------------------------ குறள் 1273: மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன் றுண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: மணிமாலையில் வெளிப்படும் நூலைப் போல அவளின் அழகினுள் உள்ள அற்புதம் ஒரு குறிப்பாக வெளிப்படும். - வை.மகேந்திரன் Explanation in English: The marvelness would be overflowing from her beauty as if the thread comes out from the garland of pearls. - MAHENDIRAN V ------------------------ குறள் 1274: முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: அவளின் புண்ணகை அறிவிக்கும் குறிப்பு, அரும்பு தோன்றும் பொழுது வெளிப்படும் நறுமனத்திற்கு ஒப்பானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Her beautiful smile is revealing as a signal as if an infant flower emits its fragrance. - MAHENDIRAN V ------------------------ குறள் 1275: செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன் றுடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: சிங்காரமாய் இருக்கும் என் அழகுப்பதுமையின் அந்த கள்ளப் பார்வை என் மீளாத் துயரத்தையும் போக்கவல்ல மருந்தாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Her fantastic sight delivered from the edge of her eyes will surely cure the disease of parting as the best medicine. - MAHENDIRAN V ------------------------ குறள் 1276: பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிந்து கூடியதால் அவர் என்னை அணைக்க விரும்புவது இன்பம் தந்தாலும் அது மீண்டும் அன்பிலா தன்மையுடன் அவர் என்னைப் பிரியப்போகிறார் என்பதற்கான அறிகுறியாகவே தெரிகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Though His beloved hugging causes a pleased chears a lot, it signs mildly that he is to be parted by letting me be alone. - MAHENDIRAN V ------------------------ குறள் 1277: தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை - தெய்வப்புலவர் விளக்கம்: குளிர் நீரைப் போன்ற என் காதலர் உடலால் என்னை பிணைந்திருந்தாலும் உள்ளளவில் என்னை பிரியப்போகிறார் என்பதை கழன்று விழும் என் வளையல்கள் சொல்கின்றன. - வை.மகேந்திரன் Explanation in English: Although my cool man is spinning me with love a lot, my bangles that are to come out are signifying that he is to be parted shortly. - MAHENDIRAN V ------------------------ குறள் 1278: நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து - தெய்வப்புலவர் விளக்கம்: அவர் என்னை பிரிந்தது நேற்று தான் என்றாலும், அது பல நாட்களுக்கு சமமானது என்று என் மேனியின் பசலை நிறம் சொல்கிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Though it is true that my man has left me last day, the PASALAI issue that shows on full of my skin says that it is long days. - MAHENDIRAN V ------------------------ குறள் 1279: தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது - தெய்வப்புலவர் விளக்கம்: காதலரை பிரிவதால் மனம் வாடிப்போய் அவள் கழன்று விழப்போகும் தன் வளையல்களையும் பார்க்கிறாள். மெலியப் போகும் தன் தோள்களையும் பார்க்கிறாள். இவற்றை தவிர்க்க அவரைப்பின்தொடர்ந்தால் என்ன என்பது போல் தன் பாதங்களையும் பார்க்கிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: What a beautiful sense it is! Because her man is to be parted, with worries a lot, She looks at her bangles that are to come out from her hands. She looks at her arms that become leaned. To avoid these, she looks at her feet that why she doesn't follow the way that her man walks out. - MAHENDIRAN V ------------------------ குறள் 1280: பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிவால் ஏற்படும் துயரம் தாங்கிக் கொள்ள முடியாதது என்பதை கண்களாலேயே அவள் தெரிவிக்கும் அந்த தன்மையே பெண்மையின் தலையாய இலக்கணமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Her significance showed through her eyes that the parting of love is misery one is the prime status of the femininity. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. V. MAHENDIRAN M.A., M.A., ELT., ------------------------------ தெய்வப்புலவரின் திருக்குறள். அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல் CHAPTER 129. DESIRE FOR COPULATION ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: நினைத்த மாத்திரத்தில் களிப்படையும் தன்மையும் கண்ணால் கண்டு இன்புறும் தன்மையும் கள்ளுக்கில்லை காமத்திற்கு தான் உண்டு. - வை.மகேந்திரன் Explanation in English: No even the liquor is causing exultation and pleasure as if the love causes the same even when just by thinking and looking at the lover. - MAHENDIRAN V ------------------------ குறள் 1282: தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் - தெய்வப்புலவர் விளக்கம்: துணையுடன் இணையும்கால் தினையளவும் பிணக்கு இல்லாமல் இருப்பின், காமம் பனை அளவு பெருகி ஓடும். - வை.மகேந்திரன் Explanation in English: If one doesn't clash even a bit with spouse during copulate an infinite pleasure would cause like flood. - MAHENDIRAN V ------------------------ குறள் 1283: பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண் - தெய்வப்புலவர் விளக்கம்: எனை விரும்பி ஏதும் செய்யா எதனையோ அவர் செய்தாலும் அவரைத் தான் என் கண்கள் காதலுடன் பார்க்கின்றன. - வை.மகேந்திரன் Explanation in English: Even if he doesn't care about me to love and concentrating at somewhere, my bloody eyes are zooming only on him. - MAHENDIRAN V ------------------------ குறள் 1284: ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென் னெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: அவருடன் தர்க்கம் செய்ய என் மனம் விழைந்தாலும் அவரைக் கண்டவுடன் பரவசம் கூடி வாரி அணைக்கவே மனம் துடிக்கிறதடி என் தோழி. - வை.மகேந்திரன் Explanation in English: She hisses to her friend that even if she wants to clash with her man her mind blows more and more to hug him tightly as soon as she sees him. - MAHENDIRAN V ------------------------ குறள் 1285: எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண் பழிகாணேன் கண்ட இடத்து - தெய்வப்புலவர் விளக்கம்: மை தீட்டும்பொழுது தீட்டும் கோல் காணாமல் போய் விடுவது போல் குற்ற நெஞ்சன் என் அவனை கண்டதும் அவன் மீதுள்ள கோபம் மறைந்துபோய் விடுகிறதே, என்ன மாயம்! - வை.மகேந்திரன் Explanation in English: As if the eyebrow pencil is missing when I need to draw eyebrow, the entire anger on my lover is flying away when I see him. Isn't it miracle? - MAHENDIRAN V ------------------------ குறள் 1286: காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை - தெய்வப்புலவர் விளக்கம்: காதலர் கண்ணருகில் இருக்கும்பொழுது அவர் செய்த தவறுகள் என் நினைவுக்கு வருவதில்லை. அவரை நான் காணாமல் இருக்கும் பொழுது அவர் செய்த தவறுகள் தவிர எதுவும் என் நினைவுக்கு வருவதில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: I am not bothering about his faults when he is being near me. Likewise I am not bothering anything except his faults when he is away from me. - MAHENDIRAN V ------------------------ குறள் 1287: உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து - தெய்வப்புலவர் விளக்கம்: வெள்ளம் இழுத்துப்போகும் என்று அறிந்தும் பாயத்துணியும் அவருக்கு என்னுடன் கூடலின் பொழுது நான் ஊடல் செய்வதால் என்ன பயன்? - வை.மகேந்திரன் Explanation in English: Nothing is gain even if I try to clash with him during our copulation whereas he can dare jump into water despite knowing that the flood would pull in. - MAHENDIRAN V ------------------------ குறள் 1288: இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு - தெய்வப்புலவர் விளக்கம்: கள்ளுண்டால் இழிவு வரும் என்று அறிந்தும் கள்ளின் மேல் தீரா காதல் வருகிறதே அது போல் தான் உன் படர்ந்த மார்பு, உன் மீது நான் கோபம் கொண்டாலும் எனை மயக்கி கள்வனாகிய உன் மீது விழவைக்கிறது. - வை.மகேந்திரன் Explanation in English: As if desiring liquor more and more despite knowing that it is devil one, even if I get anger on you, your broad chest interacts me and pulls me on it. - MAHENDIRAN V ------------------------ குறள் 1289: மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: மலரை விட மென்மையான இன்பச் செயலாம் காமம். அதை மென்மையாய் செய்து பன்மையாய் இன்பம் பெறத் தெரிந்தவர் மிகச்சிலரே. - வை.மகேந்திரன் Explanation in English: The lush and love is the softer than flower. Only a few knows to enjoy it infinitely by practicing so softly. - MAHENDIRAN V ------------------------ குறள் 1290: கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடல் என்ற பெயரில் கண்களால் கோபக்கணல் காட்டிய என் வீரமங்கை கூடலின் பொழுது எனையும் வீழ்த்தி விரைந்து வந்து அணைக்கிறாளே என்ன விந்தை! - வை.மகேந்திரன் Explanation in English: My brave woman who showed fired anger on me through eyes namely clash is hugging me lovingly faster than me. What a surprise one it is! - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. V. MAHENDIRAN M.A., M.A., ELT., ------------------------------ அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல் CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF) ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது - தெய்வப்புலவர் விளக்கம்: ஓ என் நெஞ்சே, அவர் நெஞ்சம் மட்டும் எனை நினையாது அவருக்கே துணையாய் நிற்கும்பொழுது, நீ மட்டும் எனை விலகி அவரையே நினைப்பது தான் ஏனோ? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, whereas his heart is out of my love, you would like to be with him as a safeguard, Is what you do think always about him right? - MAHENDIRAN V ------------------------ குறள் 1292: உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: என் நெஞ்சமே, அவருக்கு என் மீது அன்பு இல்லை என்பதை நீ அறிந்திருந்தும், கோபம் கொள்ளமாட்டார் என்ற துணிவில் அவரிடமே நீ செல்லத் துடிப்பது விந்தை! - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, though you know that he doesn't have love on me, what you dare to reach him believing that he wouldn't get anger on you is surprising! - MAHENDIRAN V ------------------------ குறள் 1293: கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் - தெய்வப்புலவர் விளக்கம்: என் நெஞ்சமே, நீயே விரும்பி அவரை நோக்கிச் செல்ல நீ விழைவது, துன்பத்தால் கெட்டார்க்கு துணை நிற்க யாரும் இருக்கமாட்டார்கள் என்ற நல்லெண்ணத்தில் தானே? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, the reason of your being eager to reach him is that you would like to stand for him because he is miserable without help, right? - MAHENDIRAN V ------------------------ குறள் 1294: இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று - தெய்வப்புலவர் விளக்கம்: நெஞ்சமே, ஊடல் ஒன்று செய்து பிறகு கூடினால் தான் சுவை என்பதை அறியாமல் கூடலுக்கு மட்டும் விழையும் உனக்கு இனிமேலும் அறிவுரை செய்து என்ன பயன்? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, without knowing the reunion is pleasant only after meeting out clash, what you like only for reunion is foolish. Even I try to advise you in this regard too is waste. - MAHENDIRAN V ------------------------ குறள் 1295: பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: அவர் பிரிந்திருக்கும் பொழுது அவர் இல்லா நிலையால் என் நெஞ்சம் வாடும். அதுபோன்று அவர் கூடவே இருந்தாலும் பிரியப்போகிறாரே என்ற துயரம் வாட்டும். என் நெஞ்சம் வாடி நிற்பது ஒரு தொடர்நிலையோ? - வை.மகேந்திரன் Explanation in English: My heart would be always worried out even if he is away from me or being near to me because of parting of love. Anyway I feel that my worries is infinite. - MAHENDIRAN V ------------------------ குறள் 1296: தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: காதலரின் அன்பின் அற்புதத்தை பிரிந்தபோதே அறிவர் என்பர். அவரை நான் பிரிந்திருந்து நினைக்கும்கால் என் நினைவுகளே என்னை கொல்கிறது. - வை.மகேந்திரன் Explanation in English: It is said that the feature of love would be known by both only when the lovers a அதிகாரம் 131. புலவி Chapter 131. THE PLEASANT CLASH ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடல் (பிணக்கு) செய்து அவரை தழுவாது இருப்பதால் அவர் படும் அந்த வேதனையை கண்டு ரசிப்பதும் ஒரு இன்பம் தான். - வை.மகேந்திரன் Explanation in English: Enjoying his sadness caused because of being without copulating him even after the pleasant clash is also a kind of pleasance. - MAHENDIRAN V ------------------------ குறள் 1302: உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: கூடலுக்கு முன் செய்யும் ஊடலின் அளவு உணவில் உப்பை சேர்ப்பது போன்றதாகும். அளவு கூடிப்போவதும் இல்லாமல் போவதும் உணவின் சுவையை கெடுக்கும். அது போல் தான் கலவியின் பொழுது காட்டும் ஊடல். - வை.மகேந்திரன் Explanation in English: The level of clashing with lover before copulating is like the level of adding salt on food. If the salt is more, the food would lose its taste. Likewise the pleasance of love might be collapsed if the clash overcomes. - MAHENDIRAN V ------------------------ குறள் 1303: அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: துணையிடம் பிணக்கு காட்டி ஏற்படுத்தும் துன்பத்தை விட பிணக்கு சரியாகி அனைத்துத்தழுவி கூடல் செய்யாமல் காட்டும் துன்பமே பெரியது. - வை.மகேந்திரன் Explanation in English: The sadness caused of pleasant clash is not a bigger one than the sadness caused of being mere without copulating after the clash. - MAHENDIRAN V ------------------------ குறள் 1304: ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடல் செய்து அவரை காயப்படுத்தி பின்பு கூடல் புரியா நிலை, முன்பே கொடிகள் காய்ந்து வாடிப் போனச் செடியை வேறோடு பிடுங்கி எறிதலுக்கு சமம். - வை.மகேந்திரன் Explanation in English: If you don't copulate with your spouse after the pleasant clash, it's equallent to plucking off the plant with root, that has already got dried out. - MAHENDIRAN V ------------------------ குறள் 1305: நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து - தெய்வப்புலவர் விளக்கம்: மலர் போன்ற கண்களுடைய துணைவியின் ஊடலை ரசிக்கும் பக்குவம் பெற்ற ஆண்மகனே சிறப்பிற்குரிய நெஞ்சமுடையவனாவான். - வை.மகேந்திரன் Explanation in English: The man who knows to enjoy the pleasant clash of his wife who has beautiful eyes is the man of having praised heart. - MAHENDIRAN V ------------------------ குறள் 1306: துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று - தெய்வப்புலவர் விளக்கம்: சிறிதும் பெரிதுமாக பிணக்கு இல்லாத காதலர்களின் காம வாழ்க்கை, முற்றியும் முற்றாத, பழுத்தும் பழுக்காத காய்கனிகளை போன்றதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The lush life of lovers without pleasant clashing is like a tree is yielding immatured and unripen fruits. - MAHENDIRAN V ------------------------ குறள் 1307: ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: தழுவி களிப்படையும் இன்பத்தின் கால அளவு கூடுமா குறையாதா எனும் அந்த ஊடல் துன்பம் தருவதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The pleasant clash happened between lovers due to an argument regarding the time of lasting copulation with each other is a bit saddened one. - MAHENDIRAN V ------------------------ குறள் 1308: நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி - தெய்வப்புலவர் விளக்கம்: இருக்கும் பொழுது ஊடல் செய்து மனம் வருந்த வைத்து விட்டு அவர் இல்லாதபொழுது அது நினைத்து மனம் வருந்தி என்ன பயன்? - வை.மகேந்திரன் Explanation in English: The stance of clashing with him when he was being near and making him saddened, but worrying about that incident when he was away is immatured one. - MAHENDIRAN V ------------------------ குறள் 1309: நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: நிழலுக்கருகில் இருக்கும் நீரும் அன்புக்குரியவர் காட்டும் ஊடலும் எப்பொழுதும் இனிமையானதாக இருக்கும். - வை.மகேந்திரன் Explanation in English: Both the water that is located inside the shadow and the pleasant clash showed by one who is kind hearted are always sweetest. - MAHENDIRAN V ------------------------ குறள் 1310: ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடல் செய்து மிகுதியாய் வருந்த வைத்தவருடன் கூடல் செய்ய மனம் துடிப்பதற்கு காரணம் வைராக்கியத்தையும் மிஞ்சிய காமம் கலந்த அன்பே. - வை.மகேந்திரன் Explanation in English: The reason of urging oneself to copulating though there was a big clash between lovers is the dominance of love and attraction over fanaticism. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. V. MAHENDIRAN M.A., M.A., ELT., ------------------------------ திருக்குறள் அதிகாரம் 132. புலவி நுணுக்கம் CHAPTER 132. TECHNIQUES OF PLEASANT CLASHES ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உனை பார்த்த பெண்ணினத்தார் வியந்து போய் உன் அகன்ற மார்புகளை கண்டு களிப்புற்றதனால் அவற்றை தழுவ என் மனம் தயங்குகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Sorry my dear, whereas all women surprisingly have gazed your broad boobs, I wouldn't like to hug you henceforth. - MAHENDIRAN V ------------------------ குறள் 1312: ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து - தெய்வப்புலவர் விளக்கம்: நான் அவருடன் ஊடலில் இருந்தபொழுது அவர் தும்மியதற்கு காரணம் நான் ஊடலை நிறுத்தி அவரை நீடூழி வாழ்க என வாழ்த்துவேன் என்பதற்காகத்தான் என்பதை நான் அறிவேன். - வை.மகேந்திரன் Explanation in English: I notice well that the reason of his sneezing during our clash is that he expect that I would stop the clash on him and I would greet him for his sneeze. - MAHENDIRAN V ------------------------ குறள் 1313: கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: கொடிகளில் பூத்தமலர்களை நான் அணிந்துவிட்டால் போதும், யாரோ ஒருத்திக்கு சைகை தெரிவிப்பதற்காக தான் நான் அப்படி செய்கிறேன் என்று ஊடல் செய்வாள். - வை.மகேந்திரன் Explanation in English: Even if I adore some flowers taken from plants, she would start a clash by means of that I am signalling to someone through such flowers. - MAHENDIRAN V ------------------------ குறள் 1314: யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: எக்காதலை காட்டிலும் நம் காதலே உயர்ந்தது என்று நான் சொன்னால், எனையல்லாது யாருடன் செய்த காதலை காட்டிலும்... யாருடன் செய்த காதலை காட்டிலும்... என்று ஊடலை ஆரம்பிக்கிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: If I say that only our love is better than any other, she starts a clash by asking with whose love I am comparing and for what. - MAHENDIRAN V ------------------------ குறள் 1315: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள் - தெய்வப்புலவர் விளக்கம்: இப்பிறவியில் நாம் பிரியவேமாட்டோம் என்று காதலுடன் அவளிடம் கூறினேன். ஒகோ.... அடுத்த பிறவியில் நாம் பிரிந்துவிடுவோம் என்கிறார்களா? என்று கூறி கண்ணீர்விட்டாள் அவள். - வை.மகேந்திரன் Explanation in English: When I say to her that we won't be parted in this birth, suddenly she tears whether I mean that we will be parted in the future birth! - MAHENDIRAN V ------------------------ குறள் 1316: உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள் - தெய்வப்புலவர் விளக்கம்: தழுவலின்பொழுது உனைத்தான் அனுதினமும் நினைக்கிறேன் என்று நான் கூறினால், ஓகோ.. மறந்ததினால் தானே எனை நினைக்கிறீர்கள்.... எனை உங்களால் மறக்கவும் முடிகிறதா? என தழுவலை விட்டு வம்புக்கிழுக்கிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: During love, if I say that I am always thinking her, suddenly she starts a clash by means of that I am forgetting her that's why I start to think her and she asks how I could forget her. - MAHENDIRAN V ------------------------ குறள் 1317: வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: தழுவலின் பொழுது தும்மினேன். ஆயுசு நூறு என்று வாழ்த்தினாள். சிறிது நேரத்தில், அது சரி.... நீங்கள் தும்மும் அளவுக்கு உங்களை நினைத்தது யார் என்று வம்பு செய்தாள். - வை.மகேந்திரன் Explanation in English: One day, I sneezed during hugging her. She greeted me that I would be living for hundred years. After a few minutes she asked me who did think me so that I sneezed. - MAHENDIRAN V ------------------------ குறள் 1318: தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று - தெய்வப்புலவர் விளக்கம்: தும்மினால் ஊடல் வருகிறதே என்றெண்ணி நான் தும்மலை அடக்க முயன்றால், யாரோ ஒருத்தி உங்களை நினைக்கிறாள் அதை நான் அறிந்துவிடக்கூடாது என்பதற்காகதான் தும்மலை அடக்குகிறீர்கள் என்று ஒரு புதுவித ஊடலை ஆரம்பிக்கிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: If I forcibly control my sneeze feeling due to avoiding the clash, suddenly she starts a new type of clash that I suppress my sneeze that is raised because some other woman has thought me that's what I feel sneezing and I control it that she should not know that matter! - MAHENDIRAN V ------------------------ குறள் 1319: தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடலை நிறுத்தி அவளை நான் அன்புடன் மகிழ்விக்க முயன்றாலும் இந்த கலையை நீங்கள் யாரிடம் கற்றுக்கொண்டீர் என்றொரு ஊடலை ஆரம்பிக்கிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: If I convince her for avoiding clash and lovingly start to hug her, she starts a clash by asking from whom I learnt this skill! - MAHENDIRAN V ------------------------ குறள் 1320: நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று - தெய்வப்புலவர் விளக்கம்: அவள் அழகைக் கண்டு வியந்து பொறுமையாக ரசித்தாலும், என் அழகை யாருடன் ஒப்பிட்டு அளவு பார்க்கிறீர் என்று புதுமையாய் ஒரு வம்பை செய்கிறாள். - வை.மகேந்திரன் Explanation in English: If I lovingly admire her beautiful structure by gazing her, suddenly she starts a new type of clash with whose structure I am comparing her and I am measuring! - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. V. MAHENDIRAN M.A., M.A., ELT., ------------------------------ திருக்குறள் அதிகாரம் 133. ஊடலுவகை CHAPTER 133. THE PLEASURES OF FEIGNED CLASHES BETWEEN LOVERS ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1321: இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு - தெய்வப்புலவர் விளக்கம்: காதலர்களிடத்தில் தவறே இல்லாவிடினும், ஒருவருக்கொருவர் ஊடல் செய்து இளைப்பாறுவது போன்று ஒரு சுகம் ஏதும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Even if there is no mistake on either of lovers, some kind of pleasant quarrel should be there. because, nothing could pay the most pleasure as if a kind of clash gives. - MAHENDIRAN V ------------------------ குறள் 1322: ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடல் சற்றே அன்பை வாடச் செய்து வருத்தம் தந்தாலும் காதலர்களுக்கு அது பெருமை தரக்கூடிய விஷயமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Of course, even if the pleasant clash between lovers causes a kind of pain, it is the most prideful to them. - MAHENDIRAN V ------------------------ குறள் 1323: புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து - தெய்வப்புலவர் விளக்கம்: நிலத்தில் நீர் ஒன்றியிருப்பதுபோல் இணைந்துள்ள காதலர்களிடத்தில் காணப்படும் ஊடலால் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது. - வை.மகேந்திரன் Explanation in English: The immeasurable pleasure caused of the pleasant-clash of the lovers who have merged as if the water is merged with the Earth can never be found even in the world of the lord. - MAHENDIRAN V ------------------------ குறள் 1324: புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை - தெய்வப்புலவர் விளக்கம்: அவரை தழுவி இன்பம் காணுவதற்கு காரணம் ஊடலே. சமயத்தில் அவ்வூடலில் தான் என் மன உறுதி வீழ்ந்து போகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: The reason of my availing the most amount of pleasure during our pleasant time is our pleasant clash we did earlier. I assume only that cracks the strength of my mind. - MAHENDIRAN V ------------------------ குறள் 1325: தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: தவறே இல்லாமல் போனாலும் அவளுடன் ஊடல் செய்து அவளை . தழுவாதிருப்பதும்கூட ஒருவித இன்பம் தான். - வை.மகேந்திரன் Explanation in English: Even if I haven't found any fault on her, being without hugging her by having a small clash is also the most pleasure. - MAHENDIRAN V ------------------------ குறள் 1326: உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது - தெய்வப்புலவர் விளக்கம்: புதிய உணவு உண்பதற்கு முன் முன்பு உண்ட உணவு செரிப்பதே இன்பம். அதுபோல காதலர்கள் கூடுவதில் காணும் இன்பத்தை விட ஊடுவதில் காணும் இன்பமே சுகம் தரும். - வை.மகேந்திரன் Explanation in English: It is healthy only if the past food is digested before eating new food. Likewise sometimes, the pleasant quarrel would offer more pleasure than an intercourse. - MAHENDIRAN V ------------------------ குறள் 1327: ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடலில் தோற்பவரே வெற்றிகண்டவராவார் என்கிற உண்மை ஊடலுக்கு பின்பு நடக்கும் கூடலின் பொழுது கிடைக்கும் இன்பத்தின்பொழுதுதான் விளங்கும். - வை.மகேந்திரன் Explanation in English: The fact of only the one (of the lovers) who gets failed during clash of talk is the winner would be known after getting the pleasure through the intercourse that is done after the clash. - MAHENDIRAN V ------------------------ குறள் 1328: ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: கூடி களித்து வியர்க்கும் அளவுக்கு கிடைக்கப்பெற்ற இன்பத்தை மீண்டும் பெறவேண்டுமாயின் அவளுடன் ஊடலொன்று செய்து பெறலாம். - வை.மகேந்திரன் Explanation in English: If wants to get the pleasure that was obtained as far as sweating a lot through the intercourse, again, the only way is that starting a pleasant clash with her. - MAHENDIRAN V ------------------------ குறள் 1329: ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா - தெய்வப்புலவர் விளக்கம்: ஒளி நிறைந்த என் அவளின் ஊடல் நீடிக்கட்டும்; அதை தணிக்க நான் இரங்கும் நிலையும் நீடிக்கட்டும்; இச்செயல்களால் இரவுப் பொழுதும் நீடித்து எங்களுக்கு இன்பம் தரட்டும்! - வை.மகேந்திரன் Explanation in English: May the pleasant clash of her lasting; May the stance of my tackling her too would be lasting; Due to that, May this night would be prolonging more, and would offer more pleasure to us! - MAHENDIRAN V ------------------------ குறள் 1330: ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடிக் களைப்படைந்து பின் கூடிக்களிப்படைந்தால் தான் காமத்தின் முழு உருவத்தை உணர முடியும். - வை.மகேந்திரன் Explanation in English: If the lovers doing intercourse after they meet out some pleasant quarrel with one and another, the perfect pleasure can be obtained. - MAHENDIRAN V ---------------------------------- Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com ---------------------------------- All rights of this work are reserved by me. Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited. Thanks. V. MAHENDIRAN M.A., M.A., ELT., ------------------------------

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS