எளிதாக அறிவோம் ஆங்கிலம். - வை.மகேந்திரன்

எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்) பகுதி 1 to 19 Author: MAHENDIRAN V Formerly Professor of English FOUNDER: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com [Copyright owned by Mahendiran V. முன்னுரை ஆங்கில மொழி சம்பந்தமாக என்னிடம் பலர் பல இடங்களில் கேட்ட சந்தேகங்களுக்கு, ஒரு கட்டுரை போல் அமைத்து பகுதிவாரியாக சில விளக்கங்களை தந்துள்ளேன்... நியாயமான சந்தேகங்கள் அவைகள். அவை என்னவென்றுதான் பாருங்களேன்..! MAHENDIRAN V - AUTHOR எளிதாக அறிவோம் ஆங்கிலம். பகுதி 1 ஆங்கிலம் பேச அடிப்படை தகுதி என்ன? என்னிடம் ஒருவர் கேட்டார். முகநூலில் எழுதுகிறேன் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இங்கும் அதை எழுதியுள்ளேன். அப்படி ஒரு கேள்வியை நீங்களும் வைத்திருந்தால் இதை படிக்கவும். யாதொரு தகுதியும் தேவையில்லை. ஆனால் முதலில் உங்கள் மொழியிலேயே ஒரு கருத்தை நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும். அடுத்தவரை பொருட்படுத்தக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பத்து பேர் முன்னிலையில் நீங்கள் எழுந்து நின்று ஒரு அரை...