அதிகாரம் 31 வெகுளாமை CHAPTER 31 STANCE OF NOT GETTING ANGER. (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 31 வெகுளாமை
CHAPTER 31  STANCE OF NOT GETTING ANGER.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-------------------------------------
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்

விளக்கம்:
தன் கோபம் பலித்துவிடும் என்கிற சூழ்நிலையில் அஞ்சி சினம் கொள்ளாதவனே புத்திசாலி. மற்ற இடங்களில் கோபம் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அது ஒரு பொருட்டாகாது.

Explanation in English:
If one controls himself by knowing that his anger would effect badly because of the situation, he is intelligent. Other types of anger is not considered as a matter.
-------------------------------------
குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற

விளக்கம்:
வலியோரிடத்தில் சினங்கொண்டால் தீமைதான் விளையும் அதுபோல எளியோரிடம் சினம் காட்டுதல் அறத்திற்கு புறம்பானது.

Explanation in English:
Angering on strong persons would cause to one numberless evils. Likewise angering on weak persons is against the Morality.
-------------------------------------
குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்

விளக்கம்:
எவரிடத்திலும் சினம் கொள்வதை மறப்பது நலம். இல்லேல் அந்த சினத்தாலேயே தீமைகள் வரும்.

Explanation in English:
It's better to forget angering on anyone from the root. Otherwise it would bring an infinite evils.
-------------------------------------
குறள் 304:
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற

விளக்கம்:
சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தரும் கோபத்தை விட ஒருவனுக்கு  பகை வேறொன்றுமில்லை.

Explanation in English:
No one is as a big enemy to one as an anger is, even if it may cause happiness and laugh.
-------------------------------------
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

விளக்கம்:
தன் சினமே ஒருவனை அழித்துவிடுமாகையால், தன்னை காபந்து செய்துகொள்ள வேண்டுமாயின் சினம்கொள்ளாமல் இருப்பது நலம்.

Explanation in English:
If one wants to protect himself, he ought not to getting anger on anyone because it would surely destroy him.
-------------------------------------
குறள் 306:
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்

விளக்கம்:
சினம் தன்னை மட்டுமின்றி, தன்னை காத்து நிற்கும் சுற்றத்தையும் அழித்துவிடும்.

Explanation in English:
Anger would destroy not only oneself but also all who are protecting him.
-------------------------------------
குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

விளக்கம்:
கைகளால் நிலத்தை அறைந்தால் கைகளுக்கு தான் கேடு அதுபோல சினம்தான் தன்னை காக்கும் கைப்பொருள் என்று நினைப்பனுக்கு கேடு தான் வரும்.

Explanation in English:
The act of slamming the land by hands would cause pain only to hands. Likewise if one thinks that his anger is a safeguard for him, he would surely meet evils.
-------------------------------------
குறள் 308:
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

விளக்கம்:
சுடும் நெருப்பைக் காட்டிலும் மோசமான துன்பத்தை தந்தவனாகினும் நாடி வருங்கால், பகையை நினைத்து சினம் கொள்ளுதல் கூடாது.

Explanation in English:
If one nears to one to make friendliness eventhough he had done infinite evils that are worst than burning fire, one should not get anger on him by thinking past events.
-------------------------------------
குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்

விளக்கம்:
உள்ளத்திலிருந்து சினம் எனும் குணத்தை அகற்றிவிட்டால், அனைத்து இன்பமும் அவனிடம் வந்துசேரும்.

Explanation in English:
If one removes the root of anger from his heart, all wealth would cummulate to him.
-------------------------------------
குறள் 310:
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

விளக்கம்:
சினம் எனும் குணம் கொண்டோர் இறந்தோர்க்கு சமமானவர்கள். சினத்தை தூக்கியெறிந்தோர் துறவிகளுளுக்கு ஒப்பானவர்கள்.

Explanation in English:
Angering guys are equallent to dead persons likewise, those who have given up their anger are parellel to sages.
-------------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS