அதிகாரம் 32 இன்னா செய்யாமை CHAPTER 32 Features of not doing evil 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 32
இன்னா செய்யாமை
CHAPTER 32
Features of not doing evil
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran
V Northpoigainallur)

📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-------------------------------------
குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விளக்கம்:
துன்பம் செய்தால் அளப்பறிய பணம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், மாசற்ற நன்மக்கள் பிறர்க்கு துன்பம் தர எண்ணமாட்டார்கள்.

Explanation in English:
Immaculate good people would never think to do evil even if they get an opportunity to get a plenty of money for doing evil.
-------------------------------------
குறள் 312:
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விளக்கம்:
கடுந்துன்பம் ஒருவர் தந்திருந்தாலும் அதற்கு பதிலடியாக துன்பம் தர நினைக்காததே மாசற்றவர்களின் கொள்கை.

Explanation in English:
The principle of immaculate people is not to reply evil to ones who had done severe evil to them.
-------------------------------------
குறள் 313:
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

விளக்கம்:
யாதொரு துன்பமும் தராத ஒருவருக்கு துன்பம் செய்யுங்கால், மீளா துன்பம் நிச்சயம் வந்துசேரும்.

Explanation in English:
If one does misery to one who had never done any misery to anyone, an insoluble big misery will reach to him.
-------------------------------------
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

விளக்கம்:
தீங்குசெய்தவருக்கு சரியான பதிலடி யாதெனில், அவர் வெட்க்கும்படி அவருக்கு நல்லது செய்துவிடுவதே.

Explanation in English:
The best reply to one who had done evil is that to do goodness as far as he is shying a lot.
-------------------------------------
குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை

விளக்கம்:
பிற உயிர்க்கு வரும் துன்பத்தை தன் துன்பம் போல் நினைக்காவிட்டால் அறிவு இருந்தும் என்ன பயன்?

Explanation in English:
If one doesn't feel that other's misery is like his own, what's else gain despite being wisdom?
-------------------------------------
குறள் 316:
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்

விளக்கம்:
துன்பநிலை என்னவென்று அறிந்தபின்பும் பிறர்க்கு துன்பம் செய்ய நினைப்பது தவறு.

Explanation in English:
It's a great fault if one does evil to others though he had known the sadness of evil.
-------------------------------------
குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

விளக்கம்:
யாருக்கும் எந்த காலத்திலும் ஒரு சிறு துன்பம் கூட தராமலிருப்பதே சிறப்பான குணம்.

Explanation in English:
The best character is that not doing even a bit evil to any one  at any circumstance.
-------------------------------------
குறள் 318:
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்

விளக்கம்:
தன்னுயிர்க்கு துன்பம் வந்தால் மனவலியால் துடிக்கும் ஒருவன் பிற உயிர்க்கு துன்பம் தர நினைப்பது என்ன நியாயம்?

Explanation in English:
While one who is getting suffering when he is getting evil, if he wants to do misery to others is not justice.
-------------------------------------
குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

விளக்கம்:
பிறர்க்கு துன்பம் தந்து இன்பம் அடைந்து கொண்டிருக்கும்பொழுதே துன்பம் அவனுக்கு துரிதமாக வந்து சேரும்.

Explanation in English:
Evil will reach to one in no time if he is cheerful for his having done evil to some other.
-------------------------------------
குறள் 320:
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

விளக்கம்:
பிறர்க்கு தீமை செய்தால் அத்தீமை தனக்கே வரும் என்ற உண்மையை அறிந்தவர்கள் பிறர்க்கு தீமை செய்ய விழையமாட்டார்.

Explanation in English:
Persons who know that an evil done to others will surely return to them will never dare to do evils.
-------------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS