திருக்குறள். அதிகாரம் 103. குடிசெயல் வகை CHAPTER 103. THE MAIN ACTIVITIES OF A FAMILY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 103.
குடிசெயல் வகை
CHAPTER 103.
THE MAIN ACTIVITIES OF A FAMILY 
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கருமமே கண்ணாயினும் என்ற நோக்கில் வீட்டையும் நாட்டையும் மேம்படுத்த வேண்டும் என்று செயல்படுவதை விட பெருமையான செயல் வேறெதுவும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no any other pride is equallent as one does very hard work to enhance his family and nation by taking an infinite effort.
- MAHENDIRAN V
------------------
குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடன் முயற்ச்சியும் கைகோர்த்து செய்யும் கடமையால் ஆகும் பயன் வீட்டையும் நாட்டையும் உயர வைக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The gain obtained during duty done with hard-work with a good knowledge would make one's home and his nation to high up.
- MAHENDIRAN V
------------------
குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வீட்டையும் நாட்டையும் உயர்த்த பகீரத பிரயத்தனம் செய்பவர்க்கு இறைவனும் வந்து துணை செய்வான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
God too would bless by standing nearby one who is hiking the quality of home and nation with full of his effort.
- MAHENDIRAN V
------------------
குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வீடும் நாடும் உயர உண்மையாய் நினைத்தாலே போதும். அதற்குறிய ஆற்றல் தானாக வரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one just thinks is enough to hike up his home and nation, surely all efforts and skills would cummulate around him itself.
- MAHENDIRAN V
------------------
குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குற்றமற்ற செயல்களால் வீட்டையும் நாட்டையும் முன்னேற்றிட முயல்பவனுக்கு சுற்றத்தார் சூழ்ந்து நின்று துணை நிற்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Friends and relatives would come and give their hands if one tries to hike his home and nation with crimeless activities.
- MAHENDIRAN V
------------------
குறள் 1026:
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்ததோர் ஆண்மை எதுவென்றால், தனது குடிமையை ஆளும் திறனை தனதாக்கி கொள்வதே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The best masculinity is what one should be eager and  possess himself to lead his home and nation to hike up.
- MAHENDIRAN V
------------------
குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போர்களத்தில் வரும் சிரமங்களை தாங்கி நின்று போரிடும் ஒரு வீரனின் வல்லமையை போன்றதே நாட்டையும் வீட்டையும் உயர்த்தப் பாடுபடும்  பொழுது ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்வது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
To meet out difficulties during protecting family is like the same type of difficulties met out by valiant during the war in the battle.
- MAHENDIRAN V
------------------
குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடும்பத்தையும் தேசத்தையும் உயர்த்த காலக்கெடு எதுவும் இல்லை. சோம்பல், தள்ளிப்போடுதல் ஆகியவவை நோய்களாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No time limit to do activities for hiking up family and nation. Laziness and postponing act are a kind of disease.
- MAHENDIRAN V
------------------
குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடும்பத்தை காப்பாற்ற அருப்பாடுபடும் ஒருவனுக்கு ஏற்படும் துன்பங்களை எண்ணுங்கால், அவன் துன்பத்தை சந்திப்பது இயற்கையின் நியதியோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
If you think about the miseries met out by a lead man of a family who works hard, is it a nature what he ought to meet out such miseries?
- MAHENDIRAN V
------------------
குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு குடியில், வரும் துன்பத்தை போக்கவல்ல திறம் நிறைந்தோர் அவ்விடம் இல்லாவிடில், குடியானது துன்ப வலையில் விழும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no proper effective persons as  guidance in a family to solute the issues when the family is hanging at a problem, it would be spinned by the net of misery.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS