திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு CHAPTER 105. POVERTY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 105. நல்குரவு
CHAPTER 105. POVERTY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1041:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லாமையை விட கொடியது இல்லாமை தானே தவிர வேறு எதுவுமிருக்க முடியாது ஆகையால் இல்லாமையை விட கொடியது இல்லாமை தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing is the most misery to one than the state of poverty. So that, it can be said that only the poverty is the bigger misery than the poverty.
- MAHENDIRAN V
------------------
குறள் 1042:
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமை எனப்படும் பாவி கொடுத்து வாங்கும் நிலையை கெடுப்பதால் இன்பம் தொலைந்துபோய் மறுமையிலும் வறுமையை தொடரவைக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Since the sinner namely poverty would spoil one's usual survival, the pleasance of one's life would vanish, also the state of poverty would remain in the future.
- MAHENDIRAN V
------------------
குறள் 1043:
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையே ஒருவருக்கு பழகிப் போய் அதில் விருப்பம் வந்து விட்டால், அது அவனது குடும்ப பெருமையையும் பண்பையும் கெடுத்து விடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the poverty habitually tends one's life and the one is pushed to be interested, it would collapse the one's family's honour and pride.
- MAHENDIRAN V
------------------
குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடியில் வறுமை வந்தால், அக்குடும்பத்தில் சோர்வை உண்டாக்கி இழிச்சொல் பேச வைத்து விடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the poverty tends on a highly traited family, laziness would raise in such family and would cause to speak illy talks.
- MAHENDIRAN V
------------------
குறள் 1045:
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையெனும் துன்பம், பற்பல துன்பங்கள் உருவாக வித்தாகிவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The big misery namely poverty would be a core that would generate more and more miseries.
- MAHENDIRAN V
------------------
குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பல நூல்கள் கற்றறிந்து பண்பட்ட மனிதாராக இருந்து, பல நல் சொற்கள் கூறினாலும், அவர் வறுமையானவர் என்றால், அனைத்தும் மதிப்பிழந்து நிற்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is very much literate by learning a numerous epics and being traited and preach to others good ones, if he is on poverty, all his skills would be invalid.
- MAHENDIRAN V
------------------
குறள் 1047:
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையில் இருப்பவர் இழிச் செயல் செய்ய நேர்ந்தால், பெற்ற தாயே அவரை இவர் யாரோ - என்று சொல்வாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one, who is on poverty, practices any evil acts, even the one's mother too would comment as 'who is this guy?'
- MAHENDIRAN V
------------------
குறள் 1048:
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நேற்று துன்பத்தை தந்து கொன்ற வறுமை இன்றும் தொடர்ந்தால், எப்படி நான் வாழ்வேனோ - என்று ஒருவரை கலங்கவைத்துவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the poverty that killed yesterday by causing a lot of miseries continues also today, the victim would cruelly be saddened by saying how he is going to live.
- MAHENDIRAN V
------------------
குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெருப்பினுடே கூட ஒருவர் துயில் கொள்வது சாத்தியப்படக்கூடும் ஆனால் வறுமையில் உழல்பவர் தூக்கத்தை துறப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It might be possible to sleep alongwith fire, but it is not possible to ones who are covered by poverty, to have a sleep.
- MAHENDIRAN V
------------------
குறள் 1050:
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்றாட தேவையான உணவு உடை இருப்பிடம் இல்லாமல் இல்லறம் துறவா நிலையிலிருப்போருக்கு கிடைக்கும் உப்பும் கஞ்சியும் ஒரு அற்ப சந்தோஷமே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Of course Getting gruel and salt  is trivial happiness to ones who are struggling for having usual commodities but willing for family life.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS