Skip to main content

திருக்குறள் அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல் CHAPTER 111. THE PLEASANCE OF BED-GAME OF COUPLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 111.
புணர்ச்சி மகிழ்தல்
CHAPTER 111.
THE PLEASANCE OF BED-GAME OF COUPLE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1101:
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வளையல் அணிந்த இந்த பேரழகியிடம் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் வலிமை உண்டு. கேட்டு, பார்த்து, முகர்ந்து, உண்டு, தீண்டி மகிழும் இன்பம் இவளிடம் மட்டுமே உண்டு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only spouse can offer pleasance to all five senses. Her man can enjoy with her by hearing her honey words, by seeing her beauty, by inhaling her fragrance, by licking her body and by hugging her wholly.
- MAHENDIRAN V
------------------
குறள் 1102:
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பல நோய்களுக்கு மருந்தில்லாமல் இருக்கலாம் ஆனால் இவள் தந்த இன்ப பிணிக்கு ஆபரணம் அணிந்த இவளே மருந்து.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There may be unfound medicines for some diseases but she who has worn the ornaments is the medicine for the pleasant disease that was offered by her attire.
- MAHENDIRAN V
------------------
குறள் 1103:
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துணைவியாரின் தோளில் சாய்ந்து உறங்கும் பொழுது ஒருவனுக்கு கிடைக்கும் இன்பம் தாமரையில் உறங்கும் கண்ணனுக்கு கூட கிடைத்தாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even the lord who sleeps on the lotus bed too can't get the pleasance like one can easily get it when he is sleeping on the arms of his spouse.
- MAHENDIRAN V
------------------
குறள் 1104:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விலகினால் சுடுகிறது நெருங்கினால் குளிர்கிறது இவ்வொரு இன்பப்பெருக்கை இவள் எங்ஙனம் பெற்றாளோ!
- வை.மகேந்திரன்

Explanation in English:
When I'm leaving her, I feel heat more, when I near her I feel so cold. How did she obtain this miracle status with her to offer me?
- MAHENDIRAN V
------------------
குறள் 1105:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விரும்பும் பொருள் விரும்பிய நேரத்தில் கிடைப்பது எத்தகைய இன்பம்? அத்தனை இன்பம் தருவது யாதெனில், மலரணிந்த மனைவியான மங்கையவள் தோள் மீது சாயும் பொழுது கிடைப்பதே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Won't one be surprised if he gets things whenever he wishes to get them? The same pleasance can be offered when he lays on the arms of his spouse.
- MAHENDIRAN V
------------------
குறள் 1106:
உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துணைவியை தழுவும் பொழுது துணைவனும் அவளும் கிளர்ந்தெழக் காரணம், அவளது தோள் பெற்றிருக்கும் அமிர்தத்தை தவிர வேறென்ன?
- வை.மகேந்திரன்

Explanation in English:
The reason for getting stimulation for orgasm at the time of hugging state of couple  is nothing but the elixir gotten by her on her arms.
- MAHENDIRAN V
------------------
குறள் 1107:
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இம் மாநிறப் பெண்ணை  தழுவுவதால்  கிடைக்கும் இன்பம், உழைப்பில் ஈட்டிய செல்வத்தை சுற்றத்துடன் வீட்டில் அமர்ந்து அனுபவிக்கும் இன்பத்திற்கு ஈடானது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The pleasance gotten during hugging this wheat colour angel is equallent to the pleasance gotten during eating and enjoying together with colleagues by one's own earning at home.
- MAHENDIRAN V
------------------
குறள் 1108:
வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காற்றும் புக முடியா அளவு துணைவியை இறுக கட்டி அணைத்து பெரும் இன்பம் துணைவிக்கும் துணைவனுக்கும் பேராணந்த நிலையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Hugging spouse so tightly even no gape even for air would cause the upmost lust to both husband and wife.
- MAHENDIRAN V
------------------
குறள் 1109:
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடலுக்கு பின் உடல்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு கிடைக்கும் காம நிலை அவ்வாறு  செயல்பட்டோருக்கு கிடைத்த வரப்ரசாதம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The couple would surely be satisfied with upmost orgasm if they start to play the bed game after a playful quarrel. 
- MAHENDIRAN V
------------------
குறள் 1110:
அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒவ்வொன்றையும் ஒருவர் அறிய அறிய, அவர் தான் அதை அத்தனை நாட்கள் அறியாமலிருந்ததை உணர்வார் அல்லவா? அது போல் துணைவியுடன் கூடும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொன்றை புதிதாய் அறிவார் ஒருவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Doesn't one realise his unlearned state when he learns a thing newly? The same thing happens here. A couple would be learning every new thing everyday during their routine bed game.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?