திருக்குறள் அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல் CHAPTER 113. ADDRESSING THE FEATURES OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 113.
காதற் சிறப்புரைத்தல்
CHAPTER 113.
ADDRESSING THE FEATURES OF LOVE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மென்மையாக பேசும் இவளது இதழ் சுரக்கும் அமுத நீர், பாலோடு தேன் கலந்தால் தரும்  சுவையை விட சுவையானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The weter secretes from the mouth of this angel who speaks so softly is tastier than the combination of milk and honey.
- MAHENDIRAN V
------------------
குறள் 1122:
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு பிண்ணிபிணைந்தது என்றால், அவளுக்கும் எனக்கும் உள்ள உறவும் அத்தகையதே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Is the relationship between body and soul spinned one or not? If it is spinned one, the love between me and her is also the same stand.
- MAHENDIRAN V
------------------
குறள் 1123:
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்மணிக்குள் ஒளிந்திருக்கும் பாவையே, நான் விருப்பும் அழகி வருகிறாள். நீ விலகிச்சென்று அவளுக்கு அங்கே இடம் தரலாமே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh the beautiful angel who has hidden yourself inside the eyeball of me! The more pretty angel whom I love very much is coming. Vacate the place and let her stay there.
- MAHENDIRAN V
------------------

குறள் 1124:
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆபரணம் நிறைந்த அழகு பதுமையான இவள் என்னை தழுவும்பொழுது என் உடம்புக்கு உயிர் தருகிறாள். நீங்கும்பொழுது என் உயிரையே எடுத்துச் சென்றுவிடுகிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When this pretty who has worn ornaments hugs me, she offers soul to my body. When she leaves me, she has stolen my soul and gone.
- MAHENDIRAN V
------------------
குறள் 1125:
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒளி நிறை விழிகள் கொண்ட என் வேல் விழியாளை நான் என்றும் மறவேன். மறந்தால் தானே நினைத்துப்பார்க்க வேண்டும்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
I have never forgotten my glittering beautiful woman. Why need I remember her whereas I have never forgotten her, right?
- MAHENDIRAN V
------------------

குறள் 1126:
கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் கண்ணைவிட்டு அகலா பிரியமானவர் எம் காதலர். கண்ணை மூடித் திறக்கும் தருணத்திலும் என் கண்ணின் உள்ளேயே மயங்கி கிடக்கும் மதிநுட்பக்காரர் அவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
My man won't go away from my eyes ever. The cleverest man would never leave even when I blink my eyes. He would always be sleeping inside of my eyes.
- MAHENDIRAN V
------------------

குறள் 1127:
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் கண்ணின் உள்ளேயே பரந்து கிடக்கும் என்னவர், நான் என் கண்களுக்கு மை தீட்டினால், மறைந்து போனால் என் செய்வேன்? என் விழியை அழகு செய்ய நான் மை தீட்டுவதில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I wouldn't draw my eyebrows for beautifying my eyes because, if my man who is living in my eyes  is suppressed due to such action, What would I do?
- MAHENDIRAN V
------------------
குறள் 1128:
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூடான உணவை நான் உண்ணுவதில்லை. என் அன்பிற்குரிய காதலர் என் நெஞ்சத்துள் வாழ்வதால், நெஞ்சம் வழிச்செல்லும் அச்சூடான உணவு அவரை சூடுபடுத்திவிட்டால் என் செய்வேன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
I don't use to take hot food, because my most loving man is dwelling inside my heart. If the hot food that goes near my heart burns him what would I do?
- MAHENDIRAN V
------------------
குறள் 1129:
இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் காதலர் என் விழியினூடே இருப்பதால், நான் இமைத்தால் அவர் தோன்றமாட்டார் என்பதால் நான் விழி மூடுவதில்லை. விழி மூடா நிலையை அவர் எனக்கு தந்துவிட்டதனால், அவரை அன்பற்றவர் என்கிறது இச்சமூகம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Since my loving man is living in my eyes, if I blink my eyes he may not appear often. Hence I don't use to blink my eyes. Being so, the society blames him a loveless man as if he has made me not to blink my eyes!
- MAHENDIRAN V
------------------
குறள் 1130:
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சத்துள் எம் காதலர் நீக்கமற நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது பிரிந்து வாழ்வதாக இச்சமூகம் கூறுவது தான் வியப்பு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
While my man has permanently tended in my heart, what the society is criticising that we are separated is utter fault!
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS