திருக்குறள் அதிகாரம் 112. நலம் புனைந்து உரைத்தல் CHAPTER 112. TO ADDRESS BY GOOD WORDS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 112.
நலம் புனைந்து உரைத்தல்
CHAPTER 112.
TO ADDRESS BY GOOD WORDS.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மென்மைக்கு புகழ் பெற்றது அனிச்சம் மலர் தான். யார் இல்லை என்றது. ஆனால் அதை விட மென்மையானவள் என்னை வீழ்த்திய என் அவள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The flower namely Aniccam is the icon for the softness. No more any second thought. But my woman is the softer than Aniccam.
- MAHENDIRAN V
------------------
குறள் 1112:
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மலர்களை கண்டு மயங்கும் இதயமே, பலரும் கண்டு வியக்கும் மலர்களுக்கு ஒப்புமையான என் அவளின் கண்களை விடவா மலர்கள் பெரிது?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh the heart who is inspired because of your looking at flowers! Are you sure that the flowers are more beautiful than the eyes of my woman?
- MAHENDIRAN V
------------------
குறள் 1113:
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் அவள், மூங்கில் போன்ற தோள்களுடையாள்; அவள் மேனி மாந்தளிரை போன்றது; முத்துக்கள் போன்ற பற்களுடையாள்; இயற்கை மணமே அவள் நறுமணம்; வேலை போன்ற விழிகளுடையவள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She is the special. Her arms are like bamboo; her teeth are lined up like pearls; her structure looks like an infant mango plant; her nature smell is indeed a special fragrance; her eyes are of course like a lance.
- MAHENDIRAN V
------------------
குறள் 1114:
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குவளை மலர்கள் என் அவளின் கண்களை பார்க்க நேர்ந்தால், நிச்சயம் அவைகள் தோற்றுப்போனதால் தலைகவிழும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a kind of flowers namely Kuvalai look at my angel's eyes, they would surely bow their heads to the land as if agreeing that they get failed.
- MAHENDIRAN V
------------------
குறள் 1115:
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் அணிச்சம் மலர்களை காம்பு நீக்காமல் அணிந்தது தான் தாமதம், அவளது மெல்லிய இடை ஒடிந்தது. பறை முழக்கம் இனிதாக இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No sooner she has worn the Aniccam flowers with stems on her hair than her soft hib bowed. The rhythm too missed the pitch.
- MAHENDIRAN V
------------------
குறள் 1116:
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இவளது முகத்தையும் நிலவையும் ஒருங்கே கண்டு விண்மீன்கள் எது அசல் என்று இனம்காண முடியாமல் தவிக்கின்றன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
All stars in the sky get confusion to realise which is real and unreal. Because those are simultaneously looking at the moon and my angel's face.
- MAHENDIRAN V
------------------
குறள் 1117:
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலவோ தேயும் பின் வளரும். களங்கம் உண்டு நிலவுக்கு. என் தேவதையின் முகத்தில் அப்படியொரு களங்கம் என்றும் இருந்ததில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is waning and waxing occasions in the moon. It's a scratch to the moon. But there is no such a scratch to the face of my angel. So her face is greater than the moon.
- MAHENDIRAN V
------------------
குறள் 1118:
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலவே நான் சொல்வதை கவனி. ஒளி வீசும் வித்தையில் என் அவளின் முகத்தை நீ வென்றாயானால், நீ என்னை காதலிக்கலாம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh the moon. Listen to my words. If you defeat the face of my angel in flashing bright light, you may start to love me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1119:
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஓ முழு நிலவே. மலர் போன்ற கண்களுடைய என் அவளின் முகத்தை பொலிவுப் போட்டியில் நீ வீழ்த்த வேண்டுமா? பலரும் காணும் வண்ணம் விண்ணில் நீ தோன்றுவதை நிறுத்தினால் மட்டுமே அது சாத்தியம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my dear full moon, Do you want to defeat the face of my angel who has eyes like flowers in the competition for glittering? It is possible only when you stop your visibility to all persons' sight.
- MAHENDIRAN V
------------------
குறள் 1120:
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அனிச்சம் மலரும் அன்னத்தின் இறகுகளும் மென்மையாயிருந்து என்ன பயன்? என் தேவதையில் மென்மையான பாதத்திற்கு அவைகள் நெருஞ்சி பழ முற்கள் போன்றவை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing is gain even if the aniccam flower and the feathers of swam are so soft. Because they would stetch like thorn of  tribulus terrestris to my angel's feet if she steps on them.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS