திருக்குறள் அதிகாரம் 123. பொழுதுகண்டு இரங்கல் CHAPTER 123. LAMENTATIONS AT EVENING TIME 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 123.
பொழுதுகண்டு இரங்கல்
CHAPTER 123. LAMENTATIONS AT EVENING TIME
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1221:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மணந்து வாழ்ந்த நாங்கள் பிரிந்திருக்கும் இச்சூழலில் என் உயிரை வாங்கும் வேலாக வந்திருக்கும் மாலைப் பொழுதே நீர் வாழ்க.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my evening time, I praise you for your presence whereas I, who got married but live now alone, am losing my live of separation of love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1222:
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மருண்டு போய் இருளாய் மாறிக்கொண்டிருக்கும் மாலைப் பொழுதே, நீயும் என்னைப் போல் துணைவனை பிரிந்து வருந்துகிறாயோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my evening time who is becoming dark, you too are worried out like me because of parting from your lover?
- MAHENDIRAN V
------------------
குறள் 1223:
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முன்பு அவருடன் நான் இருந்த காலத்தில் எங்கள்பால் வந்து எனக்கு பசலை காண வைத்த மாலைப் பொழுதே, உனை நான் இப்பொழுது மீண்டும் காணும்கால் என் துன்பம் இன்னும் அதிகமாகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my evening time, you had come then for making my colour dull (namely PASALAI) when we lived together, I feel that I am getting more misery now when I meet you once again.
- MAHENDIRAN V
------------------
குறள் 1224:
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலர் இலா சமயம் வரும் மாலைப்பொழுது, துணையிலா சமயம் ஒருவரை பகைவரவர் கொலை செய்ய வருவது போலானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The arrival of evening time to one when the one is living alone by parting from lover is like the arrival of enemy to kill one who is helpless.
- MAHENDIRAN V
------------------
குறள் 1225:
காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காலைப் பொழுதிற்கு நான் நிறைய நன்மை செய்தேனோ... அது துன்பம் தரவில்லையே! அது போல் இந்த மாலைப் பொழுதிற்கு என் மேல் ஏன் இத்தனை பகை... என்னை துன்புறுத்துகிறதே!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Have I helped a lot to the morning time? Because it is not injuring me. Likewise, what is anger to this evening time on me? It is injuring me a lot.
- MAHENDIRAN V
------------------
குறள் 1226:
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மாலைப்பொழுது இத்தனை துன்பம் தரும் என்பதை என் காதலர் என்னுடன் இருந்தவரை நான் அறிந்ததே இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Really I am never aware of that the evening time would kill me who is parted until my lover is with me together.
- MAHENDIRAN V
------------------
குறள் 1227:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காலையில் அரும்பி பகல் பொழுதெல்லாம் வளர்ந்து மாலைப் பொழுதில் மலர்வதே காதல் நோய் ஆகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The pain of love is that which forms in the morning and grows up over the day time and then blossoms in the evening.
- MAHENDIRAN V
------------------
குறள் 1228:
அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தீயாய் சுடும் இந்த மாலைப்பொழுதின் வருகையை உணர்த்துவதால் ஸ்ரீ கிருஷ்ணனின் இந்த இனிய புல்லாங்குழல் ஓசை கூட எனக்கு எனை கொல்ல வரும் படையின் சங்கு சப்தமாகவே கேட்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Since it signals the arrival of the fire-ful evening time, the sweet sound of fluet played by the Lord Sri Krishnan too is heard by me like a siren sound of troops who come to kill me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1229:
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மாலைப் பொழுது வரும் பொழுது நான்  மதியிழந்து போவது ஒரு புறம், மறுபுறம் இவ்வூராரும் துன்பம் கொல்வதாகவே நான் எண்ணுகிறேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
At the time of arrival of evening, not only I lose my mind but also the people too meet miseries is felt by me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1230:
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருள் ஈட்ட அவர் சென்றதால் ஏற்பட்ட பிரிவின் துயரம் தாங்கிக் கொள்ளக் கூடியது தான் என்றாலும் மாலைப்பொழுது வந்துவிட்டால் உயிர் போகும் வலியை உணர்கிறேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The misery of parted is evitable since my lover has gone for earning, but at the time of evening I feel the pain as if my live is passing away.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS