Skip to main content

திருக்குறள் அதிகாரம் 124. உறுப்புநலன் அழிதல் CHAPTER 124. ORGANS BECOME WEAK (WASTING AWAY) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 124.
உறுப்புநலன் அழிதல்
CHAPTER 124.
ORGANS BECOME WEAK (WASTING AWAY)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலர் வெளிதேசம் வரை விலகிச் சென்றதால் சிறுமை துயரம் தாங்காது அழுத அவளின் கண்கள் பொலிவிழந்ததால் நறுமணம் கமழும் மலர்களை முன்பெல்லாம் வென்ற அக்கண்கள் இப்பொழுது தோற்று வெட்கி தலைகுனிந்தன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Because the lover is abroad by parting her, the glittering eyes of her have lost their prettiness due to loss of the lust. The eyes that had defeated fragrant flowers at once were defeated by the same flowers.
- MAHENDIRAN V
------------------
குறள் 1232:
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிவால் துயர்ந்து உடல் நிறமும் வெளிரிப்போய் அழுத அவளது கண்கள் 'தான் விரும்பியவர் தன்னை விரும்பாத அவளது துயரநிலையை எளிதில் பிறர்க்கு சொல்லிவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Due to parting of love, besides her having pasalai state on her body, her cried eyes too would easily convey the message to others that her lover whom she desires very much doesn't desire her.
- MAHENDIRAN V
------------------
குறள் 1233:
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலருடன் இணைந்து வாழ்ந்தபொழுது விசாலமாக இருந்த அவளது தோள்கள், தற்பொழுது காதலரை பிரிந்ததால் மெலிந்துபோனதால் பிரிவை அவள் சொல்லாமலேயே அவளின் மெலிந்த அந்த தோள்கள் பிறர்க்கு சொல்லிவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her arms that were broad and pretty when she was with her lover has become lean now due to the parting of love. This stance would easily signal her status to others.
- MAHENDIRAN V
------------------
குறள் 1234:
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலரை பிரிந்ததால் அழகையிழந்து மெலிந்துபோன அவளது தோள்களிலிருந்து (கை மணிக்கட்டுகளிலிருந்து) வளையல்கள் எளிதாய் கழன்று விழுகின்றன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The bangles too are falling down from her hands since her hands have become very lean due to parting of love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1235:
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இருந்த அழகையும் இழந்து வளையல்கள் தானாய் விழும் வண்ணம் மெலிந்த அவளது தோள்கள் (கைகள்) தன் காதலர் தன்னை பிரிந்து வருத்தும் செய்தியை உலகுக்கு எளிதாக சொல்கின்றன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her hands that have lost their beauty and having become lean as far as the bangles are falling down would easily bear the message of parting of love to others.
- MAHENDIRAN V
------------------
குறள் 1236:
தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
'வளையல்கள் கழன்று விழும் அளவுக்கு தோள்கள் மெலிந்து போகும் நிலைக்கு ஆளாக்கின கொடியவன் இவள் காதலன்' என பிறர் தன் காதலனை இழிவாக பேசுவதைக் கேட்டு இன்னும் துன்பமடைகிறாள் அவள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When she hears the words of scolding her lover  from others such as " Her lover is cruel because he has pushed her into misery that her hands have become very lean as far as the bangles too are falling down from her hands" her worries go to the toppest.
- MAHENDIRAN V
------------------
குறள் 1237:
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சே! அவர் பிரிவின் கொடுமையால் தான் என் தோள்கள் மெலிந்து மோசமானது - என்கிற செய்தியை அவரிடம் போய் கூறி நீ புண்ணியம் தேடிக் கொள்வாயாக!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart! Please visit my lover and earn more virtue by conveying the message of my hands and arms having become leaned due to his having made sin against me by parting of love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1238:
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தழுவிய என் கைகள் சற்று தளர்ந்ததும் அணிகலன்கள் அணிந்த பொலிவான அவள் நெற்றி பசலைப் பூத்ததை நினைத்து பார்க்கிறேன். (இதே கருத்தில் முன்பே ஒரு குறள் உண்டு)
- வை.மகேந்திரன்

Explanation in English:
Still I remember... No time I left my hugging her a bit, her beautiful forehead that had worn ornaments changed its colour.
- MAHENDIRAN V
------------------
குறள் 1239:
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தழுவலில் ஒரு சிறு இடைவெளிவிட்டதும் குளிர் காற்று உள்நுழைந்ததை கூட பொறுத்துக் கொள்ளாத அவளது அழகிய கண்கள் மழையாய் நீர் விட்டு நிறம் மாறிப்போனதை நினைத்துப் பார்க்கிறேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Still I remember.. she teared like rain and her eyes became so red when I just left a gape from our tight hugging and when she felt the cool air passing through such gape.
- MAHENDIRAN V
------------------
குறள் 1240:
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிவின் துயரத்தால் அவளின் அகன்ற நெற்றி நிறம் மாறி பசலைக் கண்டதை பார்த்து அவள் கண்களும் பசலைக் கண்டதுதான் துயரின் உச்சம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The big misery is that her eyes too changed the colour as soon as her broad forehead changed its colour due worries of parting of love.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்க...